Author: Namadhu Arasu

Uncategorizedஅரசியல்தமிழ்நாடு

சென்னையில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் ஈ.டி ரெய்டு; அமைச்சர் நேருவின் மகன், சகோதரர் இடங்களில் சோதனை

சென்னையில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் ஈ.டி ரெய்டு; அமைச்சர் நேருவின் மகன், சகோதரர் இடங்களில் சோதனை
கே.என்.நேருவின் மகன் வீட்டிலும் அமலாக்கத் துறை சோதனை
ஆழ்வார்பேட்டையில் உள்ள அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More
சினிமாதமிழ்நாடு

இந்தியன் 3..கமல் – ஷங்கர்- பிரமாண்டம்

2017 ஆம் ஆண்டு ஷங்கர் மற்றும் கமல் கூட்டணியில் இந்தியன் 2 திரைப்படம் உருவாகவிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு படப்பிடிப்பு துவங்கிய நிலையில் பல தடங்கல்கள், பல பிரச்சனைகள் மற்றும் சர்ச்சைகளால் இப்படம் கிடப்பில் போடப்பட்டது. மீண்டும் ஒரு சில வருடங்களுக்கு பிறகு விக்ரம் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கமலின் முயற்சியால் மீண்டும் இந்தியன் 2 தூசிதட்டப்பட்டு கடந்தாண்டு வெளியிடப்பட்டது. ஆறு வருடங்கள் கழித்து இப்படம் வெளியானாலும் ரசிகர்கள் இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால் படம் வெளியான பிறகு நேர்மறையான விமர்சனங்களே வந்தது. கடுமையாக இந்தியன் 2 விமர்சிக்கப்பட்டது. இதுவரை தோல்வியே கண்டிராத ஷங்கர் இந்தியன் 2 மூலம் முதன் முதலில் சறுக்கினார். மிகப்பெரிய தோல்வியையும் விமர்சனத்தையும் இப்படம் சந்தித்தது.தொடர்ந்து வெளியாவதாக இருந்த இந்தியன் 3 சொன்னபடி ரிலீஸாகுமா ? என்ற சந்தேகமும் உண்டானது. ஒரு தோல்வி படத்தின் அடுத்த பாகத்தை யாரும் உருவாக்கமாட்டார்கள். எனவே இந்தியன் 3 கண்டிப்பாக வெளியாகாது என்றே பெரும்பாலானோர் கூறினார்கள். ஆனால் ஷங்கர் கண்டிப்பாக இந்தியன் 3 ரிலீசாகும், அதுவும் திரையில் தான் ரிலீசாகும் என்றார்.
இப்படத்தின் வேலைகள் விரைவில் துவங்கவுள்ளதாம். இந்தியன் 2 படத்தின் விழாவில் கமல், இந்தியன் 3 மீது தான் மிகப்பெரிய நம்பிக்கை உள்ளது என்றார். அந்த நம்பிக்கை சங்கருக்கும் இருக்கின்றதாம். கண்டிப்பாக இந்தியன் 3 ரசிகர்களை திருப்திப்படுத்தும் என்ற மாபெரும் நம்பிக்கை ஷங்கர் மற்றும் கமலுக்கு உள்ளதாம். எனவே அவர்களின் நம்பிக்கைக்கு ஏற்ப இந்தியன் 3 வெற்றிபெறும் பட்சத்தில் இப்படம் சரித்திரத்தில் இடம்பெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
எந்த ஒரு தோல்வி படத்தின் அடுத்த பாகமும் இதுவரை வெளியானது இல்லை. அப்படியே வெளியானாலும் அது வெற்றிபெற்றதில்லை. அப்படி இந்தியன் 3 ரிலீசாகி வெற்றிபெற்றால் கண்டிப்பாக இப்படம் புதியதொரு சாதனையை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Read More
இந்தியாதமிழ்நாடுநிகழ்ச்சிகள்

புதிய பாம்பன் ரயில் பாலம் இன்று திறப்பு..! பிரதமர் மோடியின் பயணத்திட்டம்

535 கோடி ரூபாய் மதிப்பில் நவீன தொழில்நுட்பத்தோடு கட்டப்பட்ட புதிய பாம்பன் பாலம் இன்று திறந்து வைக்கப்பட உள்ளது.
தனுஷ்கோடி நிலப்பகுதியையும், ராமேஸ்வரம் தீவையும் இணைக்கும் வகையில், ஆங்கிலேயர் ஆட்சியில் கட்டப்பட்டு கடந்த, 1914-ஆம் ஆண்டு முதல் ரயில் சேவை நடைபெற்று வந்த பாம்பன் பாலத்தில் 2022-க்கு பிறகு ரயில் சேவை நிறுத்தப்பட்டது. தற்போது நவீன தொழில்நுட்பங்களோடு கட்டப்பட்டுள்ள புதிய பாம்பன் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்க உள்ளார்.

இதற்காக, இலங்கை சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு, அனுராதபுரம் விமான தளத்தில் இருந்து காலை 10.40 மணியளவில் ராணுவ ஹெலிகாப்டரில் புறப்படும் பிரதமர் மோடி, காலை 11.45 மணியளவில் ராமேஸ்வரம் மண்டபம் பகுதியில் உள்ள பொதுப்பணித்துறையின் ஹெலிபேட் தளத்திற்கு வந்து இறங்குகிறார்.
தொடர்ந்து, நண்பகல் 12 மணியளவில் இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு பாலத்துடன் கூடிய, புதிய பாம்பன் பாலத்தை நாட்டுக்கு அர்ப்பணித்து, ராமேஸ்வரம் – தாம்பரம் இடையேயான முதல் ரயில் சேவையையும் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளார்.

மேலும் இன்று ராமநவமி என்பதால், பகல் 12.40 மணிக்கு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு செல்லும் பிரதமர் அங்கு சாமி தரிசனம் செய்கிறார். பின்னர், ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே நடக்கும் நிகழ்ச்சிக்கு 1.30 மணிக்கு செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, ரூ.8,300 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்து உரையாற்ற உள்ளார்.
நிகழ்ச்சி முடிந்த பிறகு சாலை மார்க்கமாக மீண்டும் மண்டபம் ஹெலிபேட் தளத்திற்கு சென்று அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டரில் 3.00 மணிக்கு மதுரை புறப்படுகிறார். பின்னர், 03.50 மணிக்கு மதுரை விமான நிலையம் சென்று அங்கிருந்து டெல்லி செல்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் வருகையையொட்டி, ராமேஸ்வரம் முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில், ராமேஸ்வரம் கடல் பகுதியில் இந்திய கடலோர பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். இதனிடையே, பிரதமர் சாமி தரிசனம் செய்யவுள்ள ராமநாதசுவாமி கோயிலில், காலை 8 மணி முதல் நண்பகல் 1 மணி வரை பக்தர்கள் கோயிலில் தரிசனம் செய்யவும், கடலில் நீராடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட இடங்களில் இருந்து நாளை வரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க படகுகளில் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Read More
அரசியல்இந்தியாஉலகம்தமிழ்நாடுதொழில்நுட்பம்

இந்திய தொழில்துறை எதிர்கொள்ள உள்ள சவால்கள்- டிரம்பின் பரஸ்பர வரி

இந்தியப் பொருட்கள் மீதான இறக்குமதி வரியை 26 சதவீதமாக உயர்த்தி பதிலுக்கு பதில் வரியை அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்து உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவின் அதிரடி அறிவிப்பால் இந்திய தொழில்துறை எதிர்கொள்ள உள்ள சவால்கள் என்னென்ன என்பது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவில் கடும் வர்த்தக வரிகளை அமெரிக்கா விதித்துள்ளது. உலக வர்த்தகத்தில் அமெரிக்காவின் வரி உயர்வு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா, சீனா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், பிரிட்டன், ஐரோப்பிய நாடுகள் என நீண்டு கொண்டே போகிறது அமெரிக்காவின் வரி உயர்வு படலம். அமெரிக்காவின் திடீர் வரி உயர்வால் இந்திய தொழில்துறை கடும் பின்னடைவை எதிர்கொள்ளும் அபாயம் நிலவுவதாக கருதப்பட்ட நிலையில், அதற்கு மாற்றாக நிபுணர்களின் கருத்துகள் வெளியாகி உள்ளன.
இந்தியாவில் குறைவான பாதிப்புகளே இருக்கும் என பெரும்பாலான பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். ஏனென்றால், சீனா, ஜப்பான், வியட்நாம், இலங்கை போன்று ஏற்றுமதியை சார்ந்து இந்தியா இல்லை என்பது நிபுணர்களின் கருத்தாக உள்ளது. அமெரிக்காவின் திடீர் வரி உயர்வால் இந்திய ஜவுளித்துறைக்கு சாதகமான சூழல் நிலவுவதாக திருப்பூர் ஏற்றுமதி மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் முத்துரத்தினம் தெரிவித்துள்ளார்.
அதேபோல், அமெரிக்காவின் வரி விதிப்பை பயன்படுத்திக் கொண்டு மேக் இன் இந்தியா, ஆத்ம நிர்பார் திட்டங்களின் கொள்கையை வலுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
பின்னலாடைத் துறையில் சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த அமெரிக்காவின் வரி உயர்வு உதவியாக இருக்கும் என இந்திய ஜவுளி கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரபு தாமோதரன் கூறுகிறார்.
அமெரிக்காவின் வரி விதிப்பால் உருவாகும் பணவீக்கத்தால் அந்நாட்டு மக்களே பெரிய அளவில் பாதிக்கப்பட உள்ளதாக தணிக்கையாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். பெரும்பாலான பொருளாதார வல்லுநர்களின் கருத்துகள், இந்திய தொழில்துறைக்கு ஆதரவாக உள்ள நிலையில், வரி உயர்வு குறித்து அமெரிக்காவுடன் உலக நாடுகள் பேச்சுவார்த்தை நடத்தும் என்பதால் விரைவில் பெரிய அளவில் மாற்றம் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read More
அரசியல்இந்தியாதமிழ்நாடு

மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் நிறைவேறிய வக்ஃபு சட்டத்திருத்த மசோதா… 128 ஆதரவு, 95 எதிர்ப்பு

மாநிலங்களவையில் வக்ஃபு மசோதாவுக்கு ஆதரவாக 128 பேரும், எதிராக 95 பேரும் வாக்களித்தனர்.
மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதா காரசார விவாதத்திற்குப் பிறகு நிறைவேறியது. வக்ஃபு வாரிய சொத்துகளை நிர்வகிப்பது தொடர்பான சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நேற்று முன் தினம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் மாநிலங்களவையில் இந்த மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டது. மசோதாவை தாக்கல் செய்து பேசிய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, மக்களை தவறாக வழிநடத்த எதிர்க்கட்சிகள் முயற்சி செய்வதாக சாடினார். தொடர்ந்து பேசிய திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் மசோதாவை கடுமையாக எதிர்த்தன.
வக்ஃபு வாரிய மசோதா மீதான விவாதத்தில் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசும்போது, வக்ஃபு வாரிய மசோதாவை வைத்து இஸ்லாமியர்களை அடக்குவதன் மூலம் மத்திய அரசு மோதலுக்கு வழிவகுப்பதாக குற்றஞ்சாட்டினார். நாட்டில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை சீர்குலைக்க வேண்டாம் என்றும் மல்லிகார்ஜூன கேட்டுக் கொண்டார்.

திமுக எம்.பி திருச்சி சிவா பேசும்போது, “வக்ஃபு நிர்வாகத்தை கைப்பற்றுவதற்குதான் வக்ஃபு வாரிய மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்திருப்பதாக” குற்றஞ்சாட்டினார். இந்த மசோதாவில் குறைபாடுகள் உள்ளதாகவும், இதனை முற்றிலும் நிராகரிப்பதாகவும் அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அதிமுக எம்.பி. தம்பிதுரை, “இஸ்லாமியர்கள் நலன் பாதுகாக்கப்பட வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா பேசும்போது, இந்தோனேஷியா, சவுதி அரேபியா உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள் வக்ஃபு வாரிய சட்டத்தை சீரமைத்த நிலையில், இந்தியா அதனை சீரமைக்கக் கூடாதா என்று கேள்வியெழுப்பினார். தற்போதைய வக்ஃபு சட்டத்தை தவறாக பயன்படுத்தி, 5 ஆயிரத்து 970 அரசு சொத்துகள், வக்ஃபு சொத்துகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், மசோதா மீதான விவாதத்தில் இருந்து திசைதிருப்ப எதிர்க்கட்சிகள் முயற்சி செய்வதாகவும் குற்றஞ்சாட்டினார்.
விவாதத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசும்போது, தமிழ்நாட்டின் திருச்செந்துறை கிராமத்தில் நடந்த நிகழ்வை மேற்கோள் காட்டி பேசினார்.

ஏழை இஸ்லாமியர்களை இந்த மசோதா பாதுகாக்கும் என்று முன்னாள் பிரதமரும், மதசார்பற்ற ஜனதாதள கட்சியின் மூத்த தலைவருமான தேவ கவுடா தெரிவித்தார்.

128 ஆதரவு ; 95 எதிர்ப்பு

தொடர்ந்து 12 மணி நேர காரசார விவாதத்திற்குப் பிறகு நள்ளிரவு 2 மணியளவில் மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. நள்ளிரவு 2.45 மணியளவில் 128 உறுப்பினர்கள் ஆதரவுடன் மசோதா நிறைவேறியது. மசோதாவிற்கு எதிராக 95 பேர் வாக்களித்தனர்.

Read More
அரசியல்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்

கட்சத் தீவை மீட்பதே நிரந்தத் தீர்வு – ஸ்டாலின்

கட்சத் தீவை மீட்பதே நிரந்தத் தீர்வு – ஸ்டாலின்
கட்சத்தீவை மீட்பதே தமிழக மீனவர்களுக்கான நிரந்தத் தீர்வாக அமையும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இலங்கையில் ஆட்சி மாறினாலும் தமிழக மீனவர்களின் நிலை மாறவில்லை என்றும் அவர் தெரிவித்தார். முற்றுப்புள்ளி வைக்க முடியாத தொடர் பேரழிவாக இது அமைந்திருக்கிறது.

Read More
சினிமாதமிழ்நாடு

எம்புரான் படத்திற்கு எதிர்ப்பு…வருத்தம் தெரிவித்த மேகான்லால்..சில காட்சிகள் நீக்கம்

நடிகர் மோகன்லால் கதாநாயகனாக நடித்துள்ள எம்புரான் திரைப்படம் கடந்த 27-ம் தேதி வெளியான நிலையில் அப்படத்தில் குஜராத் கலவரம் குறித்து காட்சிகள் இடம்பெற்றது சலசலப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து படத்தில் காட்டப்பட்டுள்ள காட்சிக்கு வருத்தம் தெரிவிப்பதாக நடிகர் மோகன்லால் அறிவித்தார். இத்திரைப்படத்தை ஆர்.எஸ்.எஸ்., பாஜக, உள்ளிட்ட வலதுசாரி அமைப்புகள் எதிர்க்க என்ன காரணம் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
நடிகர் மோகன்லால், ப்ரித்திவி ராஜ், டொவினோ தாமஸ், மஞ்சு வாரியார் உள்ளிட்டோர் நடித்த லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமான எம்புரான், கடந்த 27ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இப்படத்தில் 2002 குஜராத் கலவரம், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் காட்சிபடுத்தப்பட்டது விவாதப் பொருளானது. குறிப்பாக, குஜராத் கலவரத்தின் மூளையாக செயல்பட்டு, ஆயுள் தண்டனை பெற்ற பஜ்ரங்தள் அமைப்பை சேர்ந்த பாபு பஜ்ரங்கியின் பெயர், படத்தின் வில்லன் பெயருக்கு பொருந்தி போனது.
நடிகர் மோகன்லால் கதாநாயகனாக நடித்துள்ள எம்புரான் திரைப்படம் கடந்த 27-ம் தேதி வெளியான நிலையில் அப்படத்தில் குஜராத் கலவரம் குறித்து காட்சிகள் இடம்பெற்றது சலசலப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து படத்தில் காட்டப்பட்டுள்ள காட்சிக்கு வருத்தம் தெரிவிப்பதாக நடிகர் மோகன்லால் அறிவித்தார். இத்திரைப்படத்தை ஆர்.எஸ்.எஸ்., பாஜக, உள்ளிட்ட வலதுசாரி அமைப்புகள் எதிர்க்க என்ன காரணம் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
நடிகர் மோகன்லால், ப்ரித்திவி ராஜ், டொவினோ தாமஸ், மஞ்சு வாரியார் உள்ளிட்டோர் நடித்த லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமான எம்புரான், கடந்த 27ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இப்படத்தில் 2002 குஜராத் கலவரம், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் காட்சிபடுத்தப்பட்டது விவாதப் பொருளானது. குறிப்பாக, குஜராத் கலவரத்தின் மூளையாக செயல்பட்டு, ஆயுள் தண்டனை பெற்ற பஜ்ரங்தள் அமைப்பை சேர்ந்த பாபு பஜ்ரங்கியின் பெயர், படத்தின் வில்லன் பெயருக்கு பொருந்தி போனது.
இதனிடையே, இப்படத்தை தனது குடும்பத்தினருடன் பார்த்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், எம்புரான் திரைப்படம் மலையாள சினிமாவின் மைல்கல் என்று பாராட்டினார். அரசியல் மோதலாக எம்புரான் படம் மாறியதை அடுத்து, அதில் இருந்த 17 காட்சிகளை நீக்க மத்திய திரைப்பட தணிக்கை குழு படக்குழுவினருக்கு உத்தரவிட்டது. குறிப்பாக, குஜராத் கலவரம் தொடர்பான காட்சிகளை நீக்க மத்திய திரைப்பட தணிக்கை ஆணையிட்டது. இதனை ஏற்றுக் கொண்ட படத்தயாரிப்பாளர் கோகுலன் கோபாலன், 17 காட்சிகளை நீக்குவதாக அறிவித்தார்.

Read More
தமிழ்நாடுநிகழ்ச்சிகள்

வங்கிகளுக்கு இன்று விடுமுறை இல்லை… வழக்கம் போல் செயல்படும் – ஆர்பிஐ அறிவிப்பு

ரம்ஜான் பண்டிகையையொட்டி வங்கிகளுக்கு அரசு விடுமுறை என ரிசர்வ வங்கியின் வருடாந்திர காலண்டரில் அறிவித்திருந்த நிலையில், இன்று நாடு முழுவதும் வங்கிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இன்றுடன் 2024-25 நிதியாண்டு முடிவுக்கு வரவுள்ளதால் கணக்குகளை முடிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நடப்பு நிதி ஆண்டின் இறுதி நாளான இன்று வரி செலுத்துபவர்களுக்கு உதவும் வகையிலும் சுமுகமான நிதி பரிவர்த்தனையை உறுதி செய்யும் விதமாகவும் வங்கிகள் இயங்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ள ரிசர்வ் வங்கி, குறிப்பாக அரசு ரசீதுகள் மற்றும் நிதிகளை கையாளும் வங்கிகள், வழக்கமாக செயல்படும் நேரத்தில் கட்டாயம் செயல்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.இதேபோல் வருமானவரித்துறை தொடர்பான பணிகள் இடையூறின்றி செயல்படவும் நாடு முழுவதும் வருமான வரித்துறை அலுவலகங்களும் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More
இந்தியாதமிழ்நாடுவிளையாட்டு

ராஜஸ்தானிடம் சென்னை அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பவுலிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து பேட்டிங்கை தொடர்ந்த ராஜஸ்தான் அணி ஓபனிங் பேட்ஸ்மேன்கள் சுமாரான தொடக்கத்தை கொடுத்தனர். யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4 ரன்களும், சஞ்சு சாம்சன் 20 ரன்னும் எடுத்து வெளியேறினர். அடுத்து இணைந்த கேப்டன் ரியான் பராக் – நிதிஷ் ரானா இணை பொறுப்புடன் விளையாடி ரன்கள் சேர்த்தது.
ராஜஸ்தான் அணிக்கு எதிராக தோல்வி அடைந்ததற்கான காரணங்களை சென்னை அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் விளக்கியுள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீழ்த்தியது. இதன்மூலம் ஐபிஎல் லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து இரண்டாவது தோல்வியை சந்தித்துள்ளது. அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்ற ஐபிஎல்லின் 11 ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸை எதிர்கொண்டது. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தானை முதலில் பேட்டிங் ஆட அழைத்தது.
அதன்படி களம் இறங்கிய ராஜஸ்தான் வீரர்கள், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தனர். ராஜஸ்தானில் அதிரடியாக விளையாடிய நிதிஷ் ராணா, 5 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 83 ரன்களை குவித்து அசத்தினார். 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, முதல் ஓவரிலேயே விக்கெட்டை பறி கொடுத்து தடுமாறியது.

Read More
இந்தியாதமிழ்நாடுநிகழ்ச்சிகள்

நாடு முழுவதும் ரமலான் பண்டிகை இன்று கோலகல கொண்டாட்டம்

புனித ரமலானை நாடு முழுவதும் இஸ்லாமியர் கோலகலமாக கொண்டாடி வருகின்றனர். புத்தாடை, உணவுப் பொருட்கள் உள்ளிட்டவற்றை வாங்குவதற்கு இஸ்லாமியர்கள் திரண்டனர்.
இஸ்லாமிய நாட்காட்டியின் அடிப்படையில், ஷவ்வால் மாதம் தொடங்கியதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமியர்களில் ஒரு சாரார் ரமலான் பண்டிகையை கொண்டாடினர். கடந்த 1ஆம் தேதி தொடங்கிய நிலையில், கடந்த ஒரு மாதமாக இஸ்லாமியர்கள் நோன்பு கடைபிடித்தனர்.

இந்நிலையில், நேற்று மாலை ஷவ்வால் மாத பிறை சென்னையிலும் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களிலும் தெரிந்ததாக அரசு தலைமை ஹாஜி சலாஹூதின் முகமது அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். பிறை தெரிந்ததால், இன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

Read More