Author: Namadhu Arasu

தமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்

யூடியூப் சேனல் தொடங்குவது குறித்து பயிற்சி அளிக்கும் தமிழக அரசு; 

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் யூடியூப் சேனல் உருவாக்குதல் தொடர்பான பயிற்சி வழங்கப்பட உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இது தொடர்பாக தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது;

“சென்னையில் சொந்தமாக யூடியூப் (YouTube) சேனலை உருவாக்குதல் தொடர்பான பயிற்சியானது 22.04.2025 முதல் 24.04.2025 வரை மூன்று நாட்கள் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன வளாகத்தில் நடைபெற உள்ளது.

சொந்தமாக யூடியூப் சேனலை உருவாக்குதல், வீடியோ மற்றும் ஸ்லைடு ஷோ உருவாக்கம், சமூக ஊடக சந்தைப்படுத்தல், சமூக ஊடகங்களை இணைத்தல், வாடிக்கையாளர் வலையமைப்பை எவ்வாறு அதிகரிப்பது, பயனுள்ள சந்தைப்படுத்தல் மற்றும் ஊக்குவிப்பு – ஆன்லைன் மார்க்கெட்டிங் – டொமைன் பெயர் & ஹோஸ்டிங் – இணையதள வடிவமைப்பு நுட்பங்கள் ஆகியவை தலைப்புகளின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இப்பயிற்சியில் கலந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் (ஆண் / பெண்/ திருநங்கைகள்) 18 வயதிற்கு மேற்பட்ட, குறைந்தப்பட்ச கல்வித் தகுதியாக 10-ம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சியில் பங்குப் பெறும் ஆண் / பெண்/ திருநங்கைகள் தங்கிப் பயில்வதற்கு ஏதுவாக குறைந்த கட்டண வாடகையில் குளிரூட்டப்பட்ட தங்கும் விடுதி உள்ளது. தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்து முன்பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும், இப்பயிற்சிப் பற்றிய விவரங்களை அறிய / பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்துக் கொள்ளலாம். அலுவலக வேலை நாட்களில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை தொடர்பு கொள்ளலாம். முகவரி தொலைபேசி / கைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, இ.டி.ஐ.ஐ அலுவலக சாலை, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை -600 032. தொலைபேசி எண்: 9360221280 / 9543773337. முன்பதிவு அவசியம். பயிற்சியின் முடிவில் அரசு சான்றிதழ் வழங்கப்படும்.” இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More
இந்தியாநிகழ்ச்சிகள்

மியான்மர் நிலநடுக்கம் – உயிரிழப்பு 704ஆக உயர்வு

மியான்மர் நிலநடுக்கம் – உயிரிழப்பு 704ஆக உயர்வு
மியான்மர், தாய்லாந்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. உருக்குலைந்த கட்டிடங்கள்; ஆயிரக்கணக்கானோர் பலி?
மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்திருக்கலாம் என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கு மிகவும் நெருக்கமான நாடான மியான்மரை வெள்ளிக்கிழமை பகல் 12.50 மணிக்கு மிக சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் உலுக்கின.
மியான்மர், தாய்லாந்து ஆகிய நாடுகளில் நேற்று அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தியாவுக்கு மிகவும் நெருக்கமான நாடான மியான்மரை வெள்ளிக்கிழமை பகல் 12.50 மணிக்கு மிக சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் உலுக்கின. 7.7 மற்றும் 6.4 என்ற ரிக்டர் அளவில் பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. மியான்மரின் 2-வது பெரிய நகரமான மண்டலேயில் இருந்து 17.2 கி.மீ. தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்தது.
மியான்மரில் 144 பேர் உயிரைப் பறித்த நிலநடுக்கம்; 732 பேர் படுகாயங்களுடன் மீட்பு
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடியாக தெரிவிக்கப்படவில்லை என்றாலும், இந்த நிலநடுக்கம் 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.
மியான்மர் நிலநடுக்கம்: மத்திய மியான்மரில் இன்று (மார்ச் 28) 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் பதற்றமடைந்த பொதுமக்கள் பாங்காக் நகர வீதிகளில் உயிர் பயத்தில் ஓடியதாக கண்காணிப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடியாக தெரிவிக்கப்படவில்லை என்றாலும், இந்த நிலநடுக்கம் 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. இதன் கூற்றுப்படி, 1.2 மில்லியன் மக்கள் வசிக்கும் மாண்டலே நகரத்திலிருந்து 17.2 கிமீ தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.

இதன் காரணமாக பதற்றமடைந்த மக்கள் பாங்காக் வீதிகளில் ஓடிய காட்சிகளை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் பதிவிட்டுள்ளது. மேலும், நீச்சல் குளங்களில் இருந்து தண்ணீரும் வெளியேறியது.

நிலநடுக்கம் மற்றும் மீட்பு பணிகள் குறித்து மியான்மர் தீயணைப்பு சேவைகள் அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டார். “விபத்து நடந்த உடன் தேடுதல் மற்றும் மீட்பு பணிகளை தொடங்கி விட்டோம். யாங்கூன் முழுவதும் சென்று உயிரிழப்புகள் ஏதேனும் நிகழ்ந்துள்ளதா என்றும், சேதங்கள் குறித்தும் பார்வையிட்டோம். தற்போது, இது குறித்த விவரங்கள் எங்களிடம் இல்லை” என்று அவர் தெரிவித்தார்.

மியான்மரின் பண்டைய அரச தலைநகரான மாண்டலேயில் இருந்து வந்த சமூக ஊடகப் பதிவுகள் மூலமாக நிலநடுக்கத்தின் பாதிப்புகள் குறித்து அறிந்து கொள்ள முடிகிறது. அதன் பௌத்த மையப்பகுதியின் கட்டடங்கள் இடிந்து விழுந்து கிடப்பதை போன்ற வீடியோக்கள் ஏராளமாக பதிவிடப்பட்டுள்ளன. எனினும், இதன் உண்மைத் தன்மை குறித்து ராய்ட்டர்ஸ் உடனடியாக சரிபார்க்க முடியவில்லை.

“வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் அசைந்து விழத் தொடங்கிய உடன், நாங்கள் வெளியே ஓடி வந்து விட்டோம். 5 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததை நான் பார்த்தேன். மீண்டும் கட்டடங்களுக்குள் செல்ல மக்கள் தயாராக இல்லை” என அப்பகுதியில் வசிக்கும் நபர் ஒருவர் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்.

பெரும்பாலும் நட்சத்திர விடுதிகளில் இருந்து வெளியேறிய மக்களின் காட்சிகள் அதில் பதிவு செய்யப்பட்டிருந்தன. அவர்கள் நீச்சல் உடையில் பதற்றமாக காட்சியளித்தனர்.

பாங்காக் நகரத்தில் உள்ள உயரமான அலுவலகக் கட்டடம் ஒன்று, குறைந்தது இரண்டு நிமிடங்களுக்கு அங்கும் இங்குமாக அசைந்தது என்றும், கதவுகள் மற்றும் ஜன்னல்கள் மிகுந்த சத்தம் எழுப்பின என்றும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். நூற்றுக்கணக்கான ஊழியர்கள் அவசர கால படிக்கட்டுகள் வழியாக வெளியேறினர். பல தொழிலாளர்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றனர். கட்டடம் அசையும் போது பலத்த அலறல் சத்தம் கேட்டது.

இந்த சூழலில் மியான்மரில் மட்டும் 144 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர சுமார் 730-க்கும் மேற்பட்டவர்கள் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டனர். பாதிப்பு ஏற்பட்ட பல்வேறு பகுதிகளில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

Read More
அரசியல்தமிழ்நாடு

விஜய் பேச்சு குறித்து அண்ணாமலை-”யாருக்கு யார் எதிரி …

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் தொடங்கியுள்ளது. இதில், 17 தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டது. தேர்தலில் முடிவெடுக்க தவெக தலைவர் விஜய்க்கு முழு அதிகாரம், டாஸ்மாக் ஊழல் தொடர்பாகவும், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்சினை, தொகுதி மறுவரையறையை எதிர்த்தும், இரு மொழி கொள்கையை ஆதரித்து என பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதன் பின் பேசிய தவெக தலைவர் விஜய், “மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் அவர்களே.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே.. பெயரை மட்டும் வீரப்பா சொன்னா பத்தாது. செயலிலும் ஆட்சியிலும் காட்ட வேண்டும். பாஜக ஆட்சியை பாசிச ஆட்சி என்று சொல்லிவிட்டு நீங்கள் செய்யும் ஆட்சி என்ன?. அதற்கு கொஞ்சம் கூட குறையாத பாசிச ஆட்சித்தானே.

அடுத்த வருடம் தமிழ்நாடு இதுவரை சந்திக்காத வித்தியாசமான தேர்தலை சந்திக்கும். இரண்டு பேருக்கு இடையே தான் போட்டியே. அது தவெக மற்றும் திமுக இடையே தான்” எனத் தெரிவித்திருந்தார்.
டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை, “கட்சி ஆரம்பித்த ஒன்றரை வருடத்தில் மூன்று முறை வெளியே வருவது ஒருவித அரசியல். இந்த அரசியலை மக்கள் பார்ப்பார்கள்.

விஜய் உட்பட யாராக இருந்தாலும் பேசுவதற்கு உரிமை இருக்கிறது. ஆனால், களத்தில் யாருக்கு யார் எதிரி என வாக்காளர்கள் முடிவு செய்வார்கள். திமுக தவறுகளை சுட்டிக்காட்டுவதிலும், மக்கள் மன்றத்தில் சொல்வதிலும், திருத்துவதிலும், போராடுவதிலும், தீர்வு வழங்குவதிலும் பாஜக தான் முதன்மையான கட்சி.இன்று அரசியலில் இன்று சக்திவாய்ந்தவராக இருப்பவரை பற்றி பேசினால் மைலேஜ் கிடைக்கும் அதனால் பிரதமரை விமர்சித்து பேசுகிறார்” எனத் தெரிவித்தார்.

Read More
IPL 2025தமிழ்நாடுவிளையாட்டு

17 ஆண்டுக்கு பிறகு சென்னையில் சிஎஸ்கேவை வீழ்த்திய ஆர்சிபி..! சென்னை ரசிகர்கள் ஏமாற்றம்

கஜினி முகமது போல 17 ஆண்டுக்கு பிறகு சென்னையில் சிஎஸ்கேவை வீழ்த்திய ஆர்சிபி..! சென்னை ரசிகர்கள் ஏமாற்றம்
சென்னை சேப்பாக்கத்தில் தோனியையும் கோலியையும் ஒரே போட்டியில் பார்ப்பதற்காகவே பல ஆயிரம் பேர் ஆன்லைனில் டிக்கெட் எடுத்துக்கொண்டு மைதானத்தை நோக்கி நேற்று மாலை படையெடுத்தனர்.

நம் ஆசை நாயகர்களை ஒரு முறையாவது பார்த்துவிட வேண்டும் என்ற ஆவலில் பல ஆயிரங்களை செலவு செய்து ரசிகர்கள் சென்ற நிலையில் சென்னை அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.
முதலில் சுமாராக ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள், ஒரு கட்டத்தில் RCB கேப்டன் ரஜத் படிதாரின் 3 கேட்ச்களை கோட்டை விட்டதால் பெரிய விலை கொடுக்க வேண்டியதாகிவிட்டது. பந்துவீச்சு ஓரளவு சுமாராக இருந்த போதிலும் வழக்கம் போல 43 வயது இளம் வீரர் தோனி மின்னல் வேக ஸ்டம்பிங்கில் ரசிகர்களை வாய்பிளக்க வைத்தார்.
19 ஆவது ஓவரில் ரன் ஏதும் விட்டுக்கொடுக்காத குட்டி மலிங்கா பதிரானா, 2 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆர்சிபிக்கு அதிர்ச்சி அளித்தார். அதேபோல் கடைசி ஓவரை சுட்டிக்குழந்தை சாம் கரன் வீசியபோது, இறக்கமே இல்லாமல் ஹாட்ரிக் சிக்சர் விளாசி அணியின் ஸ்கோரை 196-ல் கொண்டு சென்று விட்டார், டிம் டேவிட்.

197 ரன்கள் என்ற இலக்கை விரட்டிப் பிடிக்க முயன்ற சிஎஸ்கே வீரர்களுக்கு தொடக்கத்திலேயே காத்திருந்தது அதிர்ச்சி, 10 ரன்களுக்கு உள்ளாகவே கேப்டன் கெயிக்வாட், ராகுல் திரிபாதி ஆகியோர் நடையை கட்ட, சென்னை அணியின் ஆரம்பமே ஆட்டம் கண்டது.
ஒரு கட்டத்தில் ஆட்டத்தின் போக்கை ஷிவம் துபே மாற்றியதும் சென்னை ரசிகர்களுக்கு நம்பிக்கை பிறக்க, அவரும் பாதியில் கிளம்பிவிட்டார். வழக்கம்போல கடைசி பிரம்மாஸ்திரமாக களமிறங்கிய தோனி, அணியை மீட்க போராடியதுடன், வந்திருக்கும் ரசிகர்களை குஷி படுத்த 2 சிக்சர்களை பறக்கவிட்டார். 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 146 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. இதனால் ரசிகர்கள் மிகவும் ஏமாற்றமடைந்தனர்.
ஆர்சிபி 17 ஆண்டுகளுக்கு பிறகு சேப்பாக்கத்தில் சென்னை அணியை வீழ்த்தி வரலாறு படைத்ததால் அதன் ரசிகர்கள் குஷியடைந்தனர்.

Read More
அரசியல்தமிழ்நாடு

விஜயின் பொதுக்குழு பேச்சு..! அரசியல் தலைவர்கள் கொடுத்த ரியாக்‌ஷன்..!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சி தலைவர் விஜய் பேசியது அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக அரசு மீதும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீதும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை பகிரங்கமாக முன்வைத்த விஜய், அடுத்த தேர்தலில் தவெக – திமுக இடையே தான் போட்டி என்றும் குறிப்பிட்டார். இந்நிலையில், திமுகவுக்கு போட்டியும் இல்லை, முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு எதிராக களத்தில் எந்த தலைவரும் இல்லை என்றும் திமுக எம்பி கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார்.
பாஜக, திமுக கட்சித் தலைவர்களை தவெக தலைவர் விஜய் கடுமையாக விமர்சனம் செய்ததும், அதற்கு அக்கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் பதிலடி கொடுத்திருப்பதும் அரசியல் வட்டாரத்தில் ஹாட்டாப்பிக்காக மாறியுள்ளது.
அரசியலில் யார் சக்தி வாய்ந்தவர்களாக இருக்கிறார்களோ, அவர்களைப் பற்றி பேசினால் தான் மைலேஜ் கிடைக்கும் என்றும், அதனால் தான் பிரதமர் மோடியின் பெயரை விஜய் உச்சரித்து இருப்பதாகவும் பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்தார்.
திமுகவுக்கு எதிரான வாக்குகளை தன் பக்கம் திருப்ப முயற்சிக்கும் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த அதிமுக செய்தித் தொடர்பாளர் கோவை சத்யன், அதிமுக – தவெக இணைய வேண்டும் என்பது மக்களிடம் பேசுபொருளாக இருப்பதாகவும் கூறினார். அதே வேளையில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கவில்லை என்றும் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் வாக்குகளை சிதறடிக்க பாஜக-வுடன் விஜய் மறைமுக கூட்டணி வைத்திருக்கிறாரோ என அச்சம் நிலவுவதாக விசிக எம்எல்ஏ சிந்தனைச் செல்வன் கருத்து கூறினார்.
பாஜக, திமுகவை எதிர்க்கும் ஒரே கட்சி என்ற பிம்பத்தை உருவாக்குவதற்காக, அக்கட்சி தலைவர்கள் பெயரை நேரடியாக குறிப்பிட்டு குற்றச்சாட்டை முன்வைக்க விஜய் தொடங்கிவிட்டதாக தெரிகிறது

Read More
அரசியல்இந்தியாதமிழ்நாடு

ஆன்லைன் விளையாட்டுக்கு தடை: அமைச்சர் அஸ்வினி விளக்கம்

புதுடெல்லி: ஆன்லைன் விளையாட்டு, பந்தயம் ஆகியவற்றுக்கு தடை விதிக்க மாநிலங்கள் சட்ட இயற்றலாம் என மக்களவையில் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

மக்களவையில் கேள்வி நேரத்தின் போது, திமுக எம்.பி. தயாநிதி மாறன் பேசுகையில், ‘‘ஆன்லைன் விளையாட்டுக்கு தடைவிதிக்கும் தார்மீக கடமையிலிருந்து மத்திய அரசு விலகி செல்கிறதா? அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளுக்கும் தடை விதிக்க தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துக்கு எவ்வளவு காலம் ஆகும்? ஆன்லைன் விளையாட்டுக்கு தமிழகம் தடைவிதித்துள்ளது’’ என்றார்.
இதற்கு பதில் அளித்த மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், ‘‘ மத்திய அரசின் தார்மீக உரிமை குறித்து கேள்வி எழுப்ப தயாநிதி மாறனுக்கு உரிமை இல்லை. அரசியல்சாசனத்தில் உள்ள கூட்டாட்சி தத்துவத்தின்படி நாடு செயல்படுகிறது. ஆன்லைன் விளையாட்டு, பந்தயம் போன்றவற்றுக்கு தடை விதிப்பது மாநில அரசு சம்பந்தப்பட்ட விஷயங்களின் கீழ் வருகிறது. இவற்றுக்கு தடை விதிக்க மாநிலங்கள் சட்டம் இயற்றலாம். புகார்கள் அடிப்படையில் 1,410 ஆன்லைன் விளையாட்டு இணையதளங்களுக்கு ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. இவற்றின் மீது பாரதிய நியாய் சன்கிதா சட்டத்தின் 112-வது பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும்.இவ்வாறு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

Read More
சினிமாதமிழ்நாடு

‘மூக்குத்தி அம்மன் 2’ குறித்து இணையத்தில் பரவும் வதந்தி: குஷ்பு விளக்கம்

சுந்தர்.சி இயக்கத்தில் நயன்தாரா, ரெஜினா கஸண்ட்ரா, மீனா உட்பட பலர் நடிக்கும் படம், ‘மூக்குத்தி அம்மன் 2’. இதன் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் தொடங்கியது. படப்பிடிப்பில் நயன்தாராவுக்கும் இயக்குநர் சுந்தர்.சி-க்கும் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரச்சினை ஏற்பட்டதாகச் செய்திகள் வெளியானது.

இந்நிலையில் இதை மறுத்து நடிகை குஷ்பு எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “மூக்குத்தி அம்மன் 2 பற்றி பல தேவையற்ற வதந்திகள் இணையத்தில் உலவி வருகின்றன. அது உண்மையில்லை. படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடைபெற்று வருகிறது.
சுந்தர். சி எப்படிப்பட்ட இயக்குநர் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். அதேபோல, நயன்தாரா, திறமையான நடிகை என்பதை நிரூபித்துள்ளார். கடந்த காலத்தில் அவர் நடித்த ஒரு கதாபாத்திரத்தில், மீண்டும் நடித்து வருகிறார். இணையத்தில் பரவும் இந்த வதந்திகள் ‘திருஷ்டி எடுத்த மாதிரி’. நடப்பதெல்லாம் நன்மைக்கே. உங்களின் ஆசீர்வாதம் மற்றும் அன்பை மட்டுமே நாங்கள் நம்புகிறோம்” என பதிவிட்டுள்ளார்.

Read More
அரசியல்தமிழ்நாடு

TASMAC | அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிராக டாஸ்மாக் தொடர்ந்த வழக்கு : நீதிபதிகள் விலகல்

டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியதற்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த வழக்குகளின் விசாரணையில் இருந்து நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் செந்தில் குமார் அமர்வு விலகுவதாக அறிவித்துள்ளது.
டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த 6-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை சோதனை நடத்திய அமலாக்கத் துறை, டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்தது, பார் உரிமம் வழங்கியது, மதுபானங்களை மதுபானக் கடைகளுக்கு கொண்டு செல்வதற்கான போக்குவரத்துக்கு டெண்டர் வழங்கியது உள்ளிட்டவற்றில் 1,000 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக அறிக்கை வெளியிட்டது.

அமலாக்கத் துறையின் இந்த சோதனையை அரசியலமைப்புச் சட்டத்தின் கூட்டாட்சிக் கட்டமைப்புக்கு விரோதமானது என அறிவிக்கக் கோரியும், அரசு அனுமதியின்றி நடத்தப்பட்ட சோதனையை சட்டவிரோதனானது என அறிவிக்கக் கோரியும், விசாரணை என்ற பெயரில் டாஸ்மாக் அதிகாரிகளைத் துன்புறுத்தக் கூடாது என அமலாக்கத் துறைக்கு உத்தரவிடக் கோரி தமிழக உள்துறை செயலாளரும், டாஸ்மாக் நிர்வாக இயக்குனரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியதற்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த வழக்குகளின் விசாரணையில் இருந்து நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் செந்தில் குமார் அமர்வு விலகுவதாக அறிவித்துள்ளது.
டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த 6-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை சோதனை நடத்திய அமலாக்கத் துறை, டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்தது, பார் உரிமம் வழங்கியது, மதுபானங்களை மதுபானக் கடைகளுக்கு கொண்டு செல்வதற்கான போக்குவரத்துக்கு டெண்டர் வழங்கியது உள்ளிட்டவற்றில் 1,000 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக அறிக்கை வெளியிட்டது.

அமலாக்கத் துறையின் இந்த சோதனையை அரசியலமைப்புச் சட்டத்தின் கூட்டாட்சிக் கட்டமைப்புக்கு விரோதமானது என அறிவிக்கக் கோரியும், அரசு அனுமதியின்றி நடத்தப்பட்ட சோதனையை சட்டவிரோதனானது என அறிவிக்கக் கோரியும், விசாரணை என்ற பெயரில் டாஸ்மாக் அதிகாரிகளைத் துன்புறுத்தக் கூடாது என அமலாக்கத் துறைக்கு உத்தரவிடக் கோரி தமிழக உள்துறை செயலாளரும், டாஸ்மாக் நிர்வாக இயக்குனரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, காரணங்கள் எதையும் குறிப்பிடாத நீதிபதிகள், இந்த வழக்கின் விசாரணையில் இருந்து இருவரும் விலகுவதாக அறிவித்தனர். மேலும், இந்த வழக்கை வேறொரு அமர்வுக்கு மாற்றக் கோரி தலைமை நீதிபதிக்கும் பரிந்துரைத்தனர்.

Read More
சமையல் சமையல்நிகழ்ச்சிகள்

சென்னையில் ஒரு புதிய Veg.Restaurant திறப்பு விழா,@Shenoynagar

சென்னையில் ஒரு புதிய Restaurant திறப்பு விழா, ஷெனாய்நகர் வெஸ்ட் பார்க் ரோட்டில் “Hotel Apoorva” என்ற புதிய restaurant நேற்று திறக்கப்பட்டுள்ளது , நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அண்ணாநகர் தொகுதி MLA திரு மோகன் அவர்கள் restaurant திறந்து வைத்து பேசினார்,கூட ஹோட்டல் நிர்வாகத்தினரும் இருந்தனர்

Read More
தமிழ்நாடு

சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு…ஏப்ரல் 1 முதல் அமல்

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் தமிழகம் முழுவதும் உள்ள 40 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் ரூ.5 முதல் ரூ.25 வரை கட்டணம் உயர்த்தப்பட உள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணங்களுக்கான புதிய கொள்கையை அரசாங்கம் விரைவில் அறிவிக்கும் என்றும், இந்த கொள்கை நுகர்வோருக்கு நியாயமான சலுகைகளை வழங்கும் என்றும் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி மார்ச் 19 தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த இரண்டு நிதியாண்டுகளில் திறக்கப்பட்ட 12 கட்டண சுங்கச்சாவடிகள் உட்பட தமிழகத்தில் மொத்தம் 78 சுங்கச்சாவடிகள் செயல்பாட்டில் உள்ளன. 78 டோல்களில் 40 டோல்கேட்டுகளில் ஏப்ரல் 1 ஆம் தேதி பயனர் கட்டணம் திருத்தப்படும், மீதமுள்ளவற்றிற்கான கட்டணம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 1 ஆம் தேதி திருத்தப்படும். தேசிய நெடுஞ்சாலை கட்டணம் (விகிதங்களை தீர்மானித்தல் மற்றும் வசூலித்தல் ) விதிகள், 2008 இன் விதிகளின் கீழ் மொத்த விலைக் குறியீட்டின் அடிப்படையில் சுங்கக் கட்டணம் திருத்தப்படுகிறது.

சென்னை புறவழிச்சாலையில் வானகரம் மற்றும் சூரப்பட்டு ஆகிய இடங்களில் உள்ள சுங்கச்சாவடிகள், சென்னை -கொல்கத்தா நெடுஞ்சாலையில் நல்லூர், தாம்பரம்-திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆத்தூர் மற்றும் பரனூர் ஆகிய இடங்களில் உள்ள சுங்கச்சாவடிகளுக்கு கட்டண திருத்தம் செய்யப்படும்.
கோயம்பேடு காய்கறி சந்தையின் மொத்த வியாபாரி ஒருவர் கூறுகையில், சுங்கச்சாவடி கட்டண உயர்வு சரக்கு கட்டண உயர்வுக்கு வழிவகுக்கும். இதையொட்டி பொருட்களின் விலை உயர்வை பாதிக்கும். டீசலுக்கு அடுத்தபடியாக லாரி உரிமையாளர்கள் அதிக செலவு செய்வது சுங்கச்சாவடி கட்டணம்தான். மகாராஷ்டிராவில் இருந்து சென்னைக்கு லாரியை இயக்கினால், சுங்கச்சாவடி கட்டணமாக மட்டும் ரூ.1,000 அல்லது அதற்கு மேல் செலுத்த வேண்டியிருக்கும்.

சுங்கச்சாவடிகளை மூடுவது குறித்து மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் கட்கரி, தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கட்டண பிளாசாக்களில் பயனர் கட்டணம் நிரந்தரமாக வசூலிக்கப்படுகிறது என்று திட்டவட்டமாகக் கூறியிருந்தார்.

பொது நிதியுதவி திட்டங்களுக்கு, தேசிய நெடுஞ்சாலை, பாலம், சுரங்கப்பாதை அல்லது புறவழிச்சாலையின் அத்தகைய பிரிவுகளுக்கு விதிக்கப்பட வேண்டிய கட்டணம் இந்த விதிகளால் ஆண்டுதோறும் திருத்தப்பட வேண்டும்.

Read More