Author: Namadhu Arasu

IPL 2025இந்தியாதமிழ்நாடுவிளையாட்டு

தோனி… ஃபினிஷ் செய்த ரச்சின்… மும்பையை வீழ்த்தி சி.எஸ்.கே வெற்றி!

இந்த ஐ.பி.எல் தொடரில் இன்று (23.03.2025) 2 லீக் ஆட்டங்கள் நடைபெற்றது. ராஜஸ்தான் ராயல்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் இடையே ஐதராபாத்தில் நடைபெற்ற முதல் போட்டியில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையே இன்று (23.03.2025) இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்கியது. இரண்டு அணிகளும் பலம் வாய்ந்த அணிகள் என்பதால் எந்த அணி வெற்றி பெறும் என்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா மற்றும் ரிக்கில்டன் களமிறங்கினர். ரோஹித் சர்மா டக் அவுட் ஆனார். சி.எஸ்.கே-வின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாத மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்ததால், அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 155 ரன்கள் எடுத்தது.

156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சி.எஸ்.கே அணியில், ரச்சி ரவீந்திரா மற்றும் ராகுல் திரிபாதி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். 2வது ஓவரிலேயே ராகுல் திரிபாதி அவுட் ஆனதால், அடுத்து வந்த கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் அதிரடியாக விளையாடி 26 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த பேட்டர்கள் பெரிய அளவில் ரன் குவிக்காமல் விக்கெட்டுகளை இழந்தாலும் மறுமுனையில் ரச்சின் ரவீந்திரா நிதானமாக விளையாடி அரை சதம் அடித்தார். கடைசியில் 7வது விக்கெட்டுக்கு தோனி களமிறங்கினார். 2 பந்துகளை மட்டும் சந்தித்து ரன் எதுவும் எடுக்கவில்லை. ரச்சின் ரவீந்திரா சிக்ஸ் அடித்து ஃபினிஷ் செய்தார். சி.எஸ்.கே அணி 19.1 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்து மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம், சி.எஸ்.கே இந்த தொடரில் முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விவரம்:

ருதுராஜ் கெய்க்வாட், ஆண்ட்ரே சித்தார்த், டெவான் கான்வே, ராகுல் திரிபாதி, ஷேக் ரஷீத், எம்.எஸ் தோனி, ரச்சின் ரவீந்திரா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், சாம் கர்ரன், சிவம் துபே, ராமகிருஷ்ணா கோஷ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மும்பை இந்தியன்ஸ் அணி விவரம்:

ருதுராஜ் கெய்க்வாட்(கேப்டன்), ரச்சின் ரவீந்திரா, தீபக் ஹூடா, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, சாம் குர்ரான், எம்.எஸ் தோனி(விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், நூர் அகமது, நாதன் எல்லிஸ், கலீல் அகமது.
கடைசியாக வந்த தோனி… சிக்ஸ் அடித்து ஃபினிஷ் செய்த ரச்சின்… மும்பையை வீழ்த்தி சி.எஸ்.கே வெற்றி!
19வது ஓவரில் 4வது பந்தில் ரவீந்திர ஜடேஜா ரன் அவுட் ஆனார். அவருக்கு அடுத்து, தோனி களமிறங்கினார். 2 பந்துகளை மட்டுமே தோனி சந்தித்தார். மறுமுனையில் இருந்த ரச்சின் ரவீந்திரா ஒரு சிக்ஸ் அடித்து ஆட்டத்தை முடித்து வைத்தார். இதன் மூலம், சி.எஸ்.கே அணி 19.1 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்து மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரச்சின் ரவீந்திரா தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி 45 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கடைசியாக வந்த தோனி 2 பந்துகளை மட்டுமே சந்தித்து ரன் எதுவும் எடுக்கவில்லை.

Read More
தமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்

சுயதொழில் தொடங்க விரும்பும் பெண்ணா நீங்கள்? ரூ. 1.25 லட்சம் வரை கடன்; இந்த திட்டம் உங்களுக்கானது

சொந்தமாக தொழில் தொடங்க விரும்பும் பெண்களுக்கு சுய உதவிக் குழு மூலமாக தமிழ்நாடு அரசு வழங்கும் சிறப்பு கடன் உதவி திட்டம் குறித்து இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.
தற்போதைய சூழலில் பெரும்பாலான பெண்கள் வேலைக்கு செல்ல வேண்டும் என்று நினைப்பதை விட, சுய தொழில் தொடங்க வேண்டும் என்று விருப்பப்படுகின்றனர். இதற்காக பெண்களுக்கு உதவி செய்யும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பிரத்தியேகமான திட்டங்களை அறிமுகம் செய்துள்ளன.
அதனடிப்படையில், தமிழ்நாடு அரசு சார்பில் எளிமையான ஒரு திட்டம் நடைமுறையில் உள்ளது. அதன்படி, புதிய குழுக்கடன் வழங்குவதற்கான திட்டத்தை தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேபாட்டுக் கழகம் செயல்படுத்தியுள்ளது. இந்தக் குழுக்கடன்கள், சுய உதவிக் குழு சார்பாக வழங்கப்படுகிறது. அந்த வகையில் சுய உதவிக் குழுவில் உறுப்பினராக இருக்கும் ஒரு நபருக்கு தலா, ரூ. 1.25 லட்சம் கடனாக வழங்கப்படும். இந்த கடனுக்கு 6 சதவீதம் வட்டி வசூலிக்கப்படுகிறது. இந்தக் கடன் தொகை இரண்டரை ஆண்டுகளுக்குள் திருப்பி செலுத்தப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை பெறுவதற்கு சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியம் ஆகும். சுய உதவிக் குழுவில் உறுப்பினராக இருக்கும் நபர்களுக்கு மட்டுமே தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலமாக இந்தக் கடன் வழங்கப்படும். அதிலும், சம்பந்தப்பட்ட சுய உதவிக் குழு தொடங்கி 6 மாதங்களை கட்டாயமாக பூர்த்தி செய்திருக்க வேண்டும். இந்தக் குழுவில் அதிகபட்சமாக 20 உறுப்பினர்கள் வரை இருக்கலாம்.

கடன் பெற விரும்பும் நபரின் வயது 18 முதல் 60 வரை இருத்தல் அவசியம், மேலும், அவர்களது ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்திற்கு அதிகமாக இருக்கக் கூடாது. இந்த திட்டத்தின் கீழ் பிற்படுத்தப்பட்டோர்/மிகவும் பிற்படுத்தப்பட்டோர்/சீர்மரபினர் குடும்பத்தில் உள்ள ஒருவர் மட்டுமே கடன் பெற முடியும். இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், www.tabcedco.tn.gov.in இணையதளத்தில் ஆதார் அட்டை, ஸ்மார்ட் கார்டு, பிறப்பிடச் சான்றிதழ், ஓட்டுநர் உரிமம் போன்ற ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். இது தவிர சிறுபான்மையினர் நல அலுவலர் மற்றும் அனைத்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் அலுவலகங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.

Read More
தமிழ்நாடுவணிகம்வணிகம்

எஃப்.டி-யை விட நல்ல ரிட்டர்ன்; ரிஸ்க் இல்லாத முதலீடு… இந்த போஸ்ட் ஆபீஸ் ஸ்கீம் செக் பண்ணுங்க!
போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் திட்டம் 7.50 சதவீத வட்டி விகிதம் வழங்குகிறது. இந்த திட்டத்திற்கு வெவ்வேறு முதிர்வு காலங்கள் உள்ளது. நீங்கள் உங்களுக்கு விருப்பமான திட்டத்தை தேர்வு செய்து கொள்ளலாம்.
இந்திய அரசு ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு பலனளிக்கும் பல்வேறு அஞ்சல் அலுவலக திட்டங்களை வழங்குகிறது. அஞ்சல் அலுவலகத் திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு அதிக வட்டி விகிதம் மட்டுமில்லாமல், வரிச் சலுகைகள் உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் கிடைக்கிறது.

அந்த வகையில், அஞ்சல் அலுவலகங்களில் வழங்கப்படும் ஒரு சிறந்த திட்டம் தான் போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் ஆகும். போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் திட்டம் ரிஸ்க் குறைவான முதலீட்டு திட்டம். மியூச்சுவல் பண்ட் திட்டங்களைப் போல அல்லாமல் இந்த திட்டம் பாதுகாப்பான வருமானத்தை வழங்குகிறது.

போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் திட்டம் 7.50 சதவீத வட்டி விகிதம் வழங்குகிறது. இந்த திட்டத்திற்கு வெவ்வேறு முதிர்வு காலங்கள் உள்ளது. நீங்கள் உங்களுக்கு விருப்பமான திட்டத்தை தேர்வு செய்து கொள்ளலாம். இந்த போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் திட்டத்திற்கு 5 வருட டெபாசிட் முதலீட்டிற்கு மட்டும் பிரிவு 80சி-யின் கீழ் ரூ.1.50 லட்சம் வரையிலான வரிச் சலுகைகள் வழங்கப்படுகிறது.
இந்த போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் திட்டத்தில், காலாண்டுக்கு ஒரு முறை வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இந்த டைம் டெபாசிட் திட்டத்தில் குறைந்த பட்சம் 1,000 ரூபாய் முதல் கணக்கு தொடங்கலாம். இதில் அதிகபட்ச வரம்பு இல்லை. நீங்கள் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் முதலீடு செய்ய முடியும். அனைத்து அரசு மற்றும் குறிப்பிட்ட தனியார் (ஆக்சிஸ், ஐசிஐசிஐ, ஹெச்.டி.எஃப்.சி) வங்கிகளிலும் இந்த திட்டத்தில் சேர்ந்து கொள்ளலாம்.

இந்த திட்டங்களில் குறைந்தபட்சம் 1,000 ரூபாய் முதல் முதலீடு செய்யலாம். அதன் பின் 100-இன் மடங்குகளில் எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். இதற்கான உச்சவரம்பு என்று எதுவும் இல்லை.

போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் திட்டத்தில், முதலீட்டாளர்கள் முழுத் தொகையையும் ஒரே நேரத்தில் டெபாசிட் செய்ய வேண்டும். இந்தத் திட்டத்தில் மொத்தமாக முதலீடு செய்ய வேண்டும். பிக்சட் டெபாசிட்களைப் போலவே ஒரு முறை தான் முதலீடு செய்ய முடியும். அதன் பிறகு காலாண்டுக்கு ஒரு முறை வட்டி வருமானம் வழங்கப்படும். 5 வருட முதிர்வுக் காலம் முடிந்ததும் வட்டி மற்றும் அசல் ஆகியவற்றை சேர்த்து பெற்றுக் கொள்ளலாம்.

இந்த போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் திட்டத்தில், 4 வகைகள் உள்ளன.

அதாவது, 1 வருட டைம் டெபாசிட் முதலீட்டுக்கு 6.9 % வட்டி வழங்கப்படுகிறது. 2 வருட டைம் டெபாசிட் முதலீட்டுக்கு 7.0 % வட்டி வழங்கப்படுகிறது.3 வருட டைம் டெபாசிட் முதலீட்டுக்கு 7.1 % வட்டி வழங்கப்படுகிறது. 5 வருட டைம் டெபாசிட் முதலீட்டில் அதிகபட்சமாக 7.5 % வட்டி வழங்கப்படுகிறது.

7.50 சதவீத வட்டி விகிதத்தில் 5 ஆண்டுகளுக்கு ரூ.1 லட்ச ரூபாயை முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்படியானால் மொத்த முதலீட்டு காலத்திற்கும் வட்டி வருமானமாக 44,995 ரூபாய் கிடைக்கும். இதன் மூலம் மொத்த முதிர்வுத் தொகை 1,44,995 ரூபாயாக இருக்கும்.

இந்த போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் திட்டத்தில், 18 வயதிற்கு மேற்பட்ட யார் வேண்டுமானாலும் கணக்கைத் தொடக்கலாம். இளம் முதலீட்டாளர்களுக்கு TD (டி.டி) சிறந்த தேர்வாக இருக்கும். மேலும், பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் சார்பாக தங்கள் குழந்தைகளின் பெயரிலும் கணக்குகளைத் தொடங்கலாம்.

நீங்கள் போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் திட்டத்தில் விண்ணப்பிக்க முடிவு செய்துவிட்டீர்கள் என்றால், அருகில் உள்ள போஸ்ட் ஆபீஸ்-க்கு சென்று படிவத்தைப் பூர்த்தி செய்து ஆதார் மற்றும் பான் கார்டு ஆவணங்களை இணைத்து, நீங்கள் முதலீடு செய்ய விரும்பும் தொகையையும் சேர்த்து கொடுங்கள், உங்கள் கணக்கு தொடங்கப்பட்டுவிடும் அவ்வளவுதான்.

Read More
அரசியல்ஆன்மீகம்தமிழ்நாடு

திருப்பதி கோயிலில் இந்துக்களுக்கு மட்டுமே பணி: சந்திரபாபு நாயுடு பேச்சு

திருப்பதி கோயிலில் இந்துக்களுக்கு மட்டுமே பணி: சந்திரபாபு நாயுடு பேச்சு
திருமலையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரர் கோவிலில் இந்துக்கள் மட்டுமே பணியமர்த்தப்பட வேண்டும் என்றும், பிற மத ஊழியர்கள் இடமாற்றம் செய்யப்படுவார்கள் என்றும் ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
தனது பேரனின் பிறந்தநாளை முன்னிட்டு குடும்பத்துடன் திருப்பதி திருமலையில் உள்ள வெங்கடேஸ்வர சுவாமி கோயிலுக்கு ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு சென்றார். அங்கு நடந்த தரிசனத்துக்குப் பிறகு தரிகொண்டாவில் உள்ள வெங்கமாம்பா அன்னதான விடுதியில் ஒரு நாள் பிரசாதம் விநியோகத்துக்காக ரூ. 44 லட்சத்தை நன்கொடையாக வழங்கினார். மேலும், குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து பக்தர்களுக்கு பிரசாதம் பரிமாறினார்.

இதனையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய சந்திரபாபு நாயுடு, “திருமலை கோயிலில் இந்துக்கள் மட்டுமே பணியமர்த்தப்பட வேண்டும். தற்போது பிற மதங்களைச் சேர்ந்த நபர்கள் அங்கு பணிபுரிந்தால், அவர்களின் உணர்வுகளைப் புண்படுத்தாமல் வேறு இடங்களுக்கு மாற்றப்படுவார்கள். நாட்டின் அனைத்து மாநிலத் தலைநகரங்களிலும் வெங்கடேஸ்வர சுவாமி கோயில்கள் கட்டப்படும். வெளிநாடுகளிலும் வெங்கடேஸ்வர சுவாமியின் கோயில்கள் நிறுவப்பட வேண்டும் என பல பக்தர்கள் விரும்புகிறார்கள்.
ஏழு மலை பகுதிக்கு அருகில் வணிகமயமாக்கல் கூடாது. இந்தப் பகுதியை ஒட்டி மும்தாஜ் ஹோட்டலுக்கு முன்னர் அனுமதி வழங்கப்பட்டது. 35.32 ஏக்கர் நிலப்பரப்பில் கட்ட திட்டமிடப்பட்ட ஹோட்டலுக்கான ஒப்புதலை ரத்து செய்ய அரசாங்கம் இப்போது முடிவு செய்துள்ளது. ஹோட்டல் நிர்வாகம் சைவ உணவு மட்டுமே வழங்க முன்மொழிந்திருந்தாலும், இந்தப் பகுதியில் எந்தவொரு தனி நபருக்கும் அனுமதி வழங்கப்படாது என்று அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

24 கிளேமோர் கண்ணிவெடிகளால் நான் குறிவைக்கப்பட்டேன். அத்தகைய தாக்குதலில் இருந்து தப்பிப்பது சாத்தியமற்றது. ஆனால், நான் வெங்கடேஸ்வரரின் தெய்வீக அருளால் மட்டுமே உயிர் பிழைத்தேன். இவ்வளவு பெரிய குண்டுவெடிப்பில் இருந்து நான் தப்பித்தேன் என்பது இறைவனின் மகத்தான சக்தியை நிரூபிக்கிறது” என்று அவர் கூறினார்.

Read More
அரசியல்தமிழ்நாடு

தீர்மானத்தை மோடியை நேரில் சந்தித்து வழங்குவோம்: கனிமொழி பேச்சு

தீர்மானத்தை மோடியை நேரில் சந்தித்து வழங்குவோம்: கனிமொழி பேச்சு
“இன்றைய கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை பிரதமரை நேரில் சந்தித்து வழங்குவோம். தொகுதி மறுசீரமைப்பை வெளிப்படை தன்மையுடன் மத்திய அரசு, 1971ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்” என்று கனிமொழி எம்.பி கூறினார்.
இந்த ஆலோசனைக்கூட்டம் முடிந்தபிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய எம்.பி கனிமொழி, “இந்திய அரசியல் வரலாற்றில் இந்த கூட்டம் ஒரு மைல்கல். இந்த கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் ஒத்த கருத்தை வலியுறுத்தியுள்ளனர். நியாயமான தொகுதி மறுசீரமைப்பை வலியுறுத்தி ஓரணியில் அனைவரும் திரண்டுள்ளனர்.

தொகுதி மறுவரையறை வேண்டாம் என்று நாங்கள் சொல்லவில்லை. மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி வரையறைகளை செய்து தென் மாநிலங்களின் எம்.பி தொகுதிகளைக் குறைக்க வேண்டாம் என்றே வலியுறுத்துகிறோம். அது தென் மாநிலங்களின் அரசியல் அதிகாரத்திற்கு ஆபத்தானது. அதற்காகத்தான் அனைவரும் ஒன்று திரண்டு நிற்கிறோம். தொகுதி மறுசீரமைப்பு குறித்து வெளிப்படைத் தன்மையுடன் தெளிவுபடுத்த வேண்டும் ஒன்றிய பா.ஜ.க அரசு.

தொகுதி மறுசீரமைப்பை 25 ஆண்டுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று கூட்டத்தில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வழங்குவோம்.

Read More
IPL - 2020IPL 2025இந்தியாதமிழ்நாடுவிளையாட்டு

ஐபிஎல் தொடரின் எல்-கிளாசிகோ..! இன்று மோதுகிறது சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் 

ஐபிஎல் தொடரில் எல்-கிளாசிகோ என்று அழைக்கப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணி இன்று பலப்பரீட்சை நடத்த உள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் போட்டியில், ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சிஎஸ்கே அணியும், சூர்யகுமார் யாதவ் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.

சர்வதேச அளவில் இந்தியா- பாகிஸ்தான் போட்டி போல, ஐபிஎல்-இல் சிஎஸ்கே – மும்பை இந்தியன்ஸ் ஆட்டத்தில் அனல் தெறிக்கும் என்பதால் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
43 வயதான தோனி, நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக வயதுடைய வீரராக களமிறங்குகிறார். “தல” தோனி அணியில் இருக்கிறார் என்பதையே சிஎஸ்கேவும், சிஎஸ்கே ரசிகர்களும் பலமாக பார்க்கின்றனர்.
கேப்டன் ருதுராஜ், கான்வே, ரச்சின் ரவீந்திரா, ஷிவம் துபே என்ற வலுவான பேட்டிங் வரிசையுடனும், ஆல்ரவுண்டர்களான ஜடேஜா, சாம் கரன், வேகத்திற்கு பதிரனா, கலீல் அகமது என சிஎஸ்கே அணி மிகவும் பலமாக உள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின், பத்து ஆண்டுகளுக்குப் பிறகு சிஎஸ்கேவுக்கு திரும்பியிருப்பது ரசிகர்களின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது.

இதே போல, ரோகித் சர்மா, கேப்டன் சூர்யகுமார் யாதவ், ரிக்கல்டன், திலக் வர்மா என மும்பையின் பேட்டிங் படையும் வலுவாகவே உள்ளது. ஹர்திக் பாண்டியா, பும்ரா இல்லாதது மும்பை அணிக்கு சற்று பலவீனமே என்றாலும், சாண்ட்னர், பவுல்ட், தீபக் சஹார் என மும்பையின் வேக கூட்டணி மிரட்டும் வகையில் உள்ளது.
பரபரப்புக்கு பஞ்சமில்லாத இந்த போட்டிக்கு முன்னதாக இசையமைப்பாளர் அனிருத்தின் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்த போட்டிக்கு மேலும் கொண்டாட்டத்தை சேர்த்துள்ளது.

Read More
சினிமாதமிழ்நாடு

விக்ரமின் மாஸ் ஆக்‌ஷன் அவதாரம் – ‘வீர தீர சூரன் – பார்ட்…

அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ‘வீர தீர சூரன்-பார்ட் 2’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

ட்ரெய்லர் எப்படி? – விக்ரமை கொல்ல ஒன்றுக்கும் மேற்பட்ட குழுக்கள் தேடிக் கொண்டிருப்பதுடன் ட்ரெய்லர் தொடங்குகிறது. ஒரே இரவில் நடக்கும் கதை என்பதை ட்ரெய்லரில் வரும் வசனங்கள், காட்சிகள் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. அனல் பறக்கும் ஆக்‌ஷன் காட்சிகள், ஜி.வி.பிரகாஷின் வெறியூட்டும் பின்னணி இசை எதிர்பார்ப்பை தூண்டுகின்றன. முழு மாஸ் ஆக்‌ஷன் அவதாரம் விக்ரமுக்கு சிறந்த கம்பேக் ஆக இருக்கும் என்று நம்பலாம். ‘வீர தீர சூரன்-பார்ட் 2’ ட்ரெய்லர் வீடியோ:
விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம், ‘வீர தீர சூரன்-பார்ட் 2’. அருண்குமார் இயக்கியுள்ளார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ஆக்‌ஷன் திரில்லர் படமாகத் தயாராகியுள்ள இந்தப் படத்தை ஹெச்.ஆர். பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு தயாரிக்கிறார். இப்படம் வரும் வரும் மார்ச் 27 வெளியாகிறது.
https://youtu.be/vHPae4sZbu8?si=mFYNz20dfrk0kHem

Read More
தமிழ்நாடுதொழில்நுட்பம்

டிரைவர் இல்லா மெட்ரோ ரயில் முதல் சோதனை ஓட்டம் வெற்றி

சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்தில் இயக்கப்பட உள்ள டிரைவர் இல்லா மெட்ரோ ரயிலின் முதல் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், 2ம் கட்ட திட்டத்தில் டிரைவர் இல்லாமல் இயக்கப்படும் மெட்ரோ ரயில்களை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்கென தலா 3 ரயில் பெட்டிகளை கொண்ட 70 மெட்ரோ ரயில்கள் தயாரிக்கப்படுகின்றன. இதற்கான ஒப்பந்தம் BEML நிறுவனத்திற்கு ரூ.3,657.53 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ள
இதையொட்டி, டிரைவர் இல்லாத ரயிலின் சோதனை ஓட்டத்தை மெட்ரோ ரயில் நிறுவனம் துவங்கி உள்ளது. இதற்கென மூன்று பெட்டிகள் கொண்ட டிரைவர் இல்லாத ரயில், அக்டோபர் மாதம் பூந்தமல்லி டெப்போவிற்கு தனித்தனியாக கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில் பூந்தமல்லி பணிமனை மெட்ரோ நிலையம் முதல் முல்லை தோட்டம் மெட்ரோ நிலையம் வரை சோதனை ஓட்டத்தை துவங்கி உள்ளது. டிரைவர் இல்லாமல் இயக்கப்பட்ட இந்த மெட்ரோ ரயிலின் முதல் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. 3 கி.மீ., தூரம் 25 கி.மீ., வேகத்தில் டிரைவர் இல்லா மெட்ரோ ரயிலை இயக்கி சோதனை நடந்துள்ளது. இது தொடர்பாக வீடியோவை மெட்ரோ ரயில் நிர்வாகம் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது.

Read More
குற்றம்தமிழ்நாடு

சென்னையில் ரவுடியை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீசார்

பிரபல ரவுடி தூத்துக்குடி ஹைகோர்ட் மகாராஜா. இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. போலீசார் தீவிர வலைவீசி தேடி வந்தனர். இவர் மதுரை எஸ். எஸ்., காலனியில் ரூ.10 கோடி கேட்டு பள்ளி மாணவனை கடத்திய வழக்கில் தொடர்புடையவர். கிண்டியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அங்கு சென்று ரவுடியை கைது செய்ய போலீசார் முயற்சி செய்தனர். அப்போது போலீசார் மீது ரவுடி மகாராஜா தாக்குதல் நடத்திவிட்டு தப்பி ஓடினார். பின்னர் போலீசார் அவரை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். காயத்துக்கு சிகிச்சை அளித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மகாராஜா என்ற பிரபல ரவுடியை கிண்டி அருகே துப்பாக்கியால் காலில் சுட்டு போலீசார் பிடித்தனர்.

வேளச்சேரி ஆதம்பாக்கம் அருகே நகைக்கடை அதிபரை கடத்தி கொலை செய்ய முயன்ற வழக்கில் ரவுடி கைது செய்யப்பட்டார். போலிசாரை தாக்கி விட்டு தப்பி ஓட முயன்றதால் ரவுடியை காலில் சுட்டதாக காவல்துறை தகவல். ரவுடி தூத்துக்குடி மகாராஜாவிடம் இருந்து துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Read More