NIA

தமிழ்நாடு

 சீர்காழியில் களம் இறங்கிய என்.ஐ.ஏ.! 20 இடங்களில் திடீர் சோதனை

சென்னை மற்றும் சீர்காழியில் 20 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா திருமுல்லைவாசல் கிராமத்தில் 15 இடங்களில் தேசிய புலனாய்வு முகமையான (என்.ஐ.ஏ,) சோதனை நடைபெறுகிறது. அதிகாலை 3 மணிக்கு காரில் வந்த என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
பல குழுக்களாக அவர்கள் பிரிந்து திருமுல்லைவாசல் மெயின் ரோடு, நடுத்தெரு, எம்ஜிஆர் நகர், எல்லைக்கட்டி இருப்பு தெரு பகுதிகளில் வசிக்கும் அமிர், நபின், பாசித், பைசல், இம்ரான், பைசர் அலி உள்ளிட்ட 15 வீடுகளில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பழைய வழக்கு விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

இதனை முன்னிட்டு அப்பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சோதனை எதற்காக என்பது பற்றிய எந்த தகவல்களும் வெளியிடப்படவில்லை.

முழுமையான சோதனைக்கு பின்னரே அதுபற்றிய விவரங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல சென்னையில் 5 இடங்களில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனையில் இறங்கி இருக்கின்றனர்.

Read More
குற்றம்தமிழ்நாடு

மதுரையில் NIA அதிரடி…சிக்கிய ஆவணங்கள்

மதுரையில் 4 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவாகவும், மத நல்லிணத்திற்கு எதிராகவும் மதுரையில் இருந்து சமூக ஊடகங்களில்

Read More