Author: Namadhu Arasu

அரசியல்இந்தியாதமிழ்நாடுதொழில்நுட்பம்

வாக்காளர் அட்டை-ஆதார் இணைக்க நடவடிக்கை: தலைமை தேர்தல் ஆணையம் தகவல்

புதுடெல்லி: வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையுடன் (இபிஐசி) ஆதாரை இணைப்பது தொடர்பாக யுஐடிஏஐ-யின் சிஇஓ, உள்துறை செயலர், சட்ட செயலர், தலைமை தேர்தல் ஆணையர் ஆகியோர் அடங்கிய ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், இபிஐசி-ஐ ஆதாருடன் இணைப்பதற்கான மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப் பிரிவு 326 மற்றும் இது தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையின் கீழ் இந்த நடவடிக்கையை எடுப்பதென முடிவு செய்யப்பட்டது. வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைப்பு என்பது தன்னார்வ நடவடிக்கையாகவே இருக்கும். ஏற்கெனவே, இதனை 65 கோடி பேர் செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் கருத்து: மகாராஷ்டிராவில் மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களில் வாக்காளர் பட்டியலில் நடைபெற்ற ஏராளமான குளறுபடிகள் குறித்து தேர்தல் ஆணையத்திடம் ஏற்கெனவே பலமுறை புகார் அளிக்கப்பட்டுள்ளது. இரண்டு பட்டியலில் இருந்த வாக்களார் எண்ணிக்கை ஒத்துப்போகவில்லை.
காங்கிரஸ் கட்சியின் தொடர்ச்சியான புகாரால்தான் தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. ஆனாலும், தகுதியான ஒரு இந்திய குடிமகன்கூட வாக்களிக்கும் உரிமை மறுக்கப்படாமல் இருப்பதை தேர்தல் ஆணையம் உறுதி செய்திட வேண்டும். அதேநேரம், எந்தவொரு குடிமகனின் தனியுரிமையும் மீறப்படக்கூடாது என தேர்தல் ஆணையத்தை காங்கிரஸ் கட்சி எச்சரித்துள்ளது.

எல்லை மாவட்டங்களில் உள்ள மக்களின் அடையாளங்களை கண்டறிவதில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வு காணவும், உண்மையான வாக்காளர்களை கண்டறிந்து அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்கவும் மத்திய உள்துறை அமைச்சகத்துடன் இணைந்து செயல்பட உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

யுஐடிஏஐ மற்றும் தேர்தல் ஆணையத்தின் நிபுணர்களிடையே இபிஐசி-ஆதார் இணைப்புக்கான தொழில்நுட்ப ஆலோசனை விரைவில் தொடங்கப்பட உள்ளது.

Read More
சினிமாதமிழ்நாடு

தனுஷின் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ ஓடிடி ரிலீஸ் …

தனுஷ் இயக்கத்தில் உருவான ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ எப்போது ஓடிடியில் வெளியாகும் என்பது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
‘ராயன்’ படத்துக்குப் பிறகு தனுஷ் இயக்கியிருக்கும் படம் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’. இந்தப் படத்தில் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமாகிறார். மலையாள நடிகர் மாத்யூ தாமஸ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், வெங்கடேஷ் மேனன் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். மேலும் படத்தை தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படம் கடந்த பிப்ரவரி 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. 2கே கிட்ஸ்களின் காதல் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவான இப்படம் கலவையான விமர்சனங்களைப்பெற்றது.
பாடல்கள் ஹிட்டான நிலையில், பாக்ஸ் ஆஃபீஸில் படம் பெரிய அளவில் வசூல் குவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. ரூ.15 கோடி பட்ஜெட்டில் உருவானதாகக் கூறப்படும் இப்படம் மொத்தமாக ரூ.10 கோடியை வசூலித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இந்தப் படம் வரும் மார்ச் 21-ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More
தமிழ்நாடுநிகழ்ச்சிகள்

சென்னை மக்களே.. புது மாதாந்திர பாஸ் அறிமுகம்.. பேருந்து பயணிகளுக்காக புதிய திட்டம் தொடக்கம்!

சென்னையில் பேருந்து பயணிகளுக்காக புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
சென்னையில் குளிர்சாதனப் பேருந்துகள் உட்பட அனைத்து வகையான பேருந்துகளிலும் மாதந்தோறும் இரண்டாயிரம் ரூபாயில், பயணம் செய்யும் திட்டத்தை போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.

சென்னையில் ஏற்கெனவே, மாநகர பேருந்துகளில் பயணிக்க, ஆயிரம் ரூபாயில் மாதாந்திர பாஸ் விநியோகம் செய்யப்படுகிறது. இதன் அடுத்தகட்டமாக, ஏ.சி. பேருந்துகளிலும் பயணிக்கும் வகையில், இரண்டாயிரம் ரூபாய் மாதாந்திர பாஸ் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தை சென்னை மந்தைவெளியில் தொடங்கி வைத்த போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், இரண்டாயிரம் ரூபாய் பாஸ் மூலம், மாதம் முழுவதும் இரவு நேரம் உட்பட அனைத்து நேரங்களிலும் கட்டணம் செலுத்தாமல் ஏ.சி. பேருந்துகளிலும் பயணிக்கலாம் என்று கூறினார்.

Read More
குற்றம்தமிழ்நாடு

நெல்லை ஜாகிர் உசேன் படுகொலை வழக்கு – முக்கிய குற்றவாளியை சுட்டு பிடித்த காவல்துறை

நெல்லையில் ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர் ஜாகிர் உசேன் படுகொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியை காவல்துறையினர் சுட்டுப் பிடித்தனர்.
நெல்லை மாநகர் டவுன் பகுதியில் நேற்று முன் தினம் காலையில் தொழுகை முடித்து வீடு திரும்பி கொண்டிருந்த ஓய்வு பெற்ற உதவி காவல் ஆய்வாளர் ஜாகிர் உசேன் பிஜிலி நான்கு பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

வக்ஃபு நிலத்தகராறு காரணமாக தனக்கு கொலை மிரட்டல்கள் வருவதாக கொல்லப்படுவதற்கு முன்பு ஜாகிர் உசேன் பேசிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கொலை மிரட்டல்கள் குறித்து காவல் நிலையத்தில் ஜாகிர் உசேன் புகார் அளித்த போது, உதவி ஆணையராக இருந்த செந்தில்குமார், ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என ஜாகிர் உசேனின் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டி உடலை வாங்க மறுத்தனர்.
நெல்லையில் ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர் ஜாகிர் உசேன் படுகொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியை காவல்துறையினர் சுட்டுப் பிடித்தனர்.
நெல்லை மாநகர் டவுன் பகுதியில் நேற்று முன் தினம் காலையில் தொழுகை முடித்து வீடு திரும்பி கொண்டிருந்த ஓய்வு பெற்ற உதவி காவல் ஆய்வாளர் ஜாகிர் உசேன் பிஜிலி நான்கு பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

வக்ஃபு நிலத்தகராறு காரணமாக தனக்கு கொலை மிரட்டல்கள் வருவதாக கொல்லப்படுவதற்கு முன்பு ஜாகிர் உசேன் பேசிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கொலை மிரட்டல்கள் குறித்து காவல் நிலையத்தில் ஜாகிர் உசேன் புகார் அளித்த போது, உதவி ஆணையராக இருந்த செந்தில்குமார், ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என ஜாகிர் உசேனின் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டி உடலை வாங்க மறுத்தனர்.
இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த வழக்கில் குற்றவாளிகள் அனைவரும் கைதுசெய்யப்படுவார்கள் என்று உறுதியளித்தார். மேலும் நிலப்பிரச்னை தொடர்பான இந்த கொலை சம்பவத்தில் காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த இருவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

இதற்கிடையே ஜாகிர் உசேன் குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்திய காவல் துறையினர், கொலை மிரட்டல் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்காத நெல்லை நகர காவல் நிலைய காவல் ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக தெரிவித்தனர். மேலும், தற்போது கோவை நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையராக உள்ள செந்தில் குமார் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் எடுத்துரைத்தனர். இதனை ஏற்றுக்கொண்ட குடும்பத்தினர் ஜாகிர் உசேனின் உடலை பெற்றுக்கொண்டனர். ஜாகிர் உசேன் உடலுக்கு அவரது குடும்பத்தினர் சிறப்புத் தொழுகை நடத்தி நல்லடக்கம் செய்தனர்.

Read More
தமிழ்நாடுநிகழ்ச்சிகள்

மீட்டர் கட்டணத்தை உயர்த்த கோரி சென்னையில் ஆட்டோ ஓட்டுநர்கள் இன்று வேலைநிறுத்தம்

சென்னை: மீட்டர் கட்டண உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் இன்று ஆட்டோ தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.

இது தொடர்பாக தொழிற்சங்க நிர்வாகிகள் கூறியதாவது: 2013-ம் ஆண்டுக்குப் பிறகு ஆட்டோவுக்கான மீட்டர் கட்டணம் மாற்றியமைக்கப்படவில்லை. இது தொடர்பான கோப்பு முதல்வர் மேஜையில் இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர். வாடகை வாகனங்களுக்கான கார்ப்பரேட் நிறுவனங்கள் சட்டவிரோதமாக 1.8 கி.மீ.க்கு ரூ.76 வசூலிக்கின்றன.
அத்தகைய நிறுவனங்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க மறுக்கிறது. ரூ.100-க்கு ரூ.30 வரை கமிஷன் எடுக்கின்றன. எனவே, ஆட்டோக்களுக்கான செயலியை அரசே தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். இதுவும் நிலுவையில் இருக்கிறது.
நாடாளுமன்றத்தில் மோட்டார் வாகன திருத்தச் சட்டத்தை எதிர்த்துவிட்டு, தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. பயணிகள் பாதுகாப்பு உள்ளிட்ட புகார்களை பெற க்யூ-ஆர் கோடு ஸ்டிக்கரை ஆட்டோக்களில் ஒட்டும் திட்டத்தில் முன்வைக்கப்பட்ட ஆட்சேபனைகளை காவல் துறை பரிசீலிக்காமல் அமல்படுத்தியுள்ளது.

காலை 6 முதல் மாலை 6 வரை: இதுபோன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு சங்கங்கள் சார்பில் காலை 6 மணிமுதல் மாலை 6 மணிவரை வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம். சென்னை நகரில் இயங்கும் சுமார் ஒரு லட்சம் ஆட்டோக்களில் 60 சதவீதம் ஆட்டோக்கள் போராட்டத்தில் பங்கேற்க உள்ளன. ஆட்சியர் அலுவலகம், ராஜரத்தினம் அரங்கம் உள்ளிட்ட இடங்களில் ஆர்ப்பாட்டமும் நடைபெறும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Read More
அரசியல்சினிமாதமிழ்நாடு

‘வணக்கம் பெரியண்ணா!’ – மாநிலங்களவையில் இளையராஜாவை நெகிழ வைத்த ஜெயாபச்சன் 

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு மாநிலங்களவையில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் புகழாரம் சூட்டினார். அப்போது, நடிகையும் எம்.பி.யுமான ஜெயாபச்சன், இளையராஜாவுக்கு தமிழில் வணக்கம் கூறினார்.
டெல்லியில் பிரதமர் மோடியை, இசையமைப்பாளர் இளையராஜா சந்தித்து வாழ்த்து பெற்றார். இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, “இசைஞானியான அவரது மேதைமை நமது இசை மற்றும் கலாச்சாரத்தில் மகத்தான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது” என்றார்.

மேலும், எல்லா வகையிலும் முன்னோடியாக இருக்கும் இளையராஜா, சில நாட்களுக்கு முன் லண்டனில் தனது முதலாவது மேற்கத்திய செவ்வியல் சிம்பொனியான ‘வேலியண்ட்டை’ வழங்கியதன் மூலம் மீண்டும் வரலாறு படைத்துள்ளதாகவும் பிரதமர் பாராட்டினார்.
மாநிலங்களவையில் இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்த குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், “நாட்டிற்கே அவரால் பெருமை” என்றார். அப்போது, நடிகையும் எம்.பி.யுமான ஜெயாபச்சன், இளையராஜாவுக்கு தமிழில் வணக்கம் கூறினார். இளையராஜாவுடன் பல முறை பேச வாய்ப்பு கிடைத்ததாக ஜெயாபச்சன் மகிழ்ச்சியுடன் கூறினார்.

Read More
தமிழ்நாடுநிகழ்ச்சிகள்

அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் ஊதியம் கிடையாது – தமிழக அரசு எச்சரிக்கை

அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் ஊதியம் கிடையாது – தமிழக அரசு எச்சரிக்கை
அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ள நிலையில், மருத்துவ விடுப்பைத் தவிர சாதாரண விடுப்போ, மற்ற விடுப்போ அரசு ஊழியர்கள் எடுக்கக் கூடாது என தமிழக அரசு எச்சரிக்கை.

காலை 10.15 மணிக்குள் பணிக்கு வராதவர்கள் விவரங்களை சேகரிக்கவும், இந்த விவரங்களை மனித வள மேலாண்மை துறைக்கு அனுப்பவும் தமிழ்நாடு அரசு உத்தரவு

Read More
அரசியல்உலகம்

ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக புதின் – ட்ரம்ப் இன்று முக்கிய பேச்சுவார்த்தை

உக்ரைன் மீதான போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இன்று தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இந்த தகவலை ரஷ்ய அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.

கடந்த 2022 பிப்ரவரி மாதம் உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்தது. உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்ததுடன், ஆயுத உதவியும் வழங்கின. இதற்கிடையே, இந்த போரை நிறுத்த பிரதமர் மோடி தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார். கடந்த ஜனவரியில் அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்டு ட்ரம்பும், போரை நிறுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறார்.
இதுதொடர்பாக சவுதி அரேபிய தலைநகர் ரியாத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. கடந்த 11-ம் தேதி நடந்த பேச்சுவார்த்தையின்போது 30 நாள் போர் நிறுத்த திட்டத்தை அமெரிக்கா முன்மொழிந்தது. இதை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஏற்றுக் கொண்டார். ஆனால் ரஷ்யா உடனடியாக ஏற்றுக்கொள்ளவில்லை. ரஷ்யா போர் நிறுத்தத்தை ஏற்காவிட்டால், பொருளாதார தடை விரிவுபடுத்தப்படும் என்று அமெரிக்கா மற்றும் ஜி7 நாடுகள் கடந்த 14-ம் தேதி எச்சரிக்கை விடுத்திருந்தன.
இந்நிலையில், உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும், அமெரிக்க அதிபர் ட்ரம்பும் இன்று (மார்ச் 18) தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக ரஷ்ய அதிபர் மாளிகை செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் நேற்று தெரிவித்தார். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடந்த 16-ம் தேதி இரவு செய்தியாளர்களிடம் பேசும்போது, “போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்யா, உக்ரைனுடன் பேசி வருகிறோம். 18-ம் தேதிக்குள் முக்கிய அறிவிப்பு வெளியாகும். அன்று புதினுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளேன்” என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

Read More
அரசியல்தமிழ்நாடு

“இனி தேதியை தெரிவிக்காமல் பாஜக போராட்டம் நடத்தும்” – அண்ணாமலை பேட்டி!

சென்னையில் டாஸ்மாக் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக அறிவித்த பாஜகவினர் கைது செய்யப்பட்ட நிலையில், மாலை 6 மணியை தாண்டியும் தங்களை விடுவிக்காததால் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
டாஸ்மாக் விற்பனையில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை கூறிய நிலையில் தமிழ்நாடு பாஜக சார்பில் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த போராட்டத்திற்காக புறப்பட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அக்கட்சியின் முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோர் பல்வேறு இடங்களில் கைதுசெய்யப்பட்டு தனியார் மண்டபங்களில் தங்கவைக்கப்பட்டனர்.

மாலை 6 மணியாகியும் தங்களை ஏன் விடுவிக்கவில்லை எனக் கூறி அண்ணாமலை போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சாலிகிராமத்தில் கைது செய்யப்பட்ட தமிழிசையும் தன்னை விடுவிக்காததை கண்டித்து கட்சி நிர்வாகிகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது தமிழிசையுடன் இருந்த பெண் ஒருவர் திடீரென மயங்கி விழுந்ததால் அனைவரும் பதட்டமடைந்தனர். கட்சியின் மூத்தத் தலைவர் தனக்கே இந்த நிலையா என்றும் தமிழிசை ஆதங்கப்பட்டார்.
பின்னர் கைது செய்யப்பட்ட பாஜகவினர் விடுவிக்கப்பட்டனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, இனி தேதியை தெரிவிக்காமல் தான் பாஜக போராட்டம் நடத்தும் என்றார். தொடர்ந்து பேசிய அவர், பாஜக தனது போராட்டத்தை தீவிரப்படுத்த உள்ளதாக கூறினார். டாஸ்மாக் ஊழல் புகார் தொடர்பாக பேட்டியளித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ஊழல் நடந்திருக்கலாம் எனக் கூறும் அமலாக்கத்துறை ஆதாரத்தை வெளியிட்டுள்ளதா என கேள்வி எழுப்பினார்.
முன்னதாக, ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருக்கலாம் என அமலாக்கத்துறை கூறினாலும், இந்த ஆட்சி தொடங்கியது முதல் 40 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடத்திருப்பதாக தனக்கு தகவல் வந்துள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டினார்.

Read More
இந்தியாஉலகம்

 இன்று பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் – நாசா அறிவிப்பு!

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து சுனிதா வில்லியம்ஸ் இன்று பூமிக்கு திரும்புகிறார்.
சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து ஏறத்தாழ 17 மணி நேர பயணத்திற்குப் பின் இந்திய நேரப்படி புதன்கிழமை அதிகாலை சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்புவார் என நாசா அறிவித்துள்ளது. விண்வெளியில் 9 மாதங்களை கழித்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோரை பூமிக்கு அழைத்து வர ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் டிராகன் விண்கலத்தில் விண்வெளி வீரர்கள் குழு சர்வதேச விண்வெளி மையத்திற்குச் சென்றது.

டிராகன் விண்கலத்தில் அமெரிக்கா, ரஷ்யாவைச் சேர்ந்த 4 விண்வெளி வீரர்கள் அடங்கிய க்ரூவ்-10 குழுவினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தைச் சென்றடைந்தது. இதனையடுத்து, சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் டிராகன் விண்கலத்தில் அமெரிக்க மற்றும் ரஷ்ய விண்வெளி வீரர்களுடன் பூமிக்குத் திரும்புகின்றனர். இந்திய நேரப்படி இன்று காலை 10.15 மணி அளவில் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து டிராகன் விண்கலம் புறப்பட உள்ளதாக நாசா அறிவித்துள்ளது.
ஏறத்தாழ 17 மணி நேர பயணத்திற்குப் பின் புதன்கிழமை அதிகாலை 3.27 மணி அளவில் குழு பூமியை வந்தடையும் என நாசா கூறியுள்ளது. அதேநேரம் வானிலை சூழலைப் பொறுத்து இந்த பயணத் திட்டத்தில் மாற்றம் ஏற்படலாம் என நாசா அறிவித்துள்ளது.

Read More