2klovestory

சினிமாதமிழ்நாடு

“2K லவ்ஸ்டோரி” டிரெய்லர் வெளியீட்டு விழா !!

“2K லவ்ஸ்டோரி” டிரெய்லர் வெளியீட்டு விழா !!

இயக்குநர் சுசீந்திரனின் “2K லவ்ஸ்டோரி” திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா !!

City light pictures தயாரிப்பில், தமிழ் திரையுலகின் பெருமை மிகு படைப்பாளியான இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, ரொமான்ஸ் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் “2K லவ்ஸ்டோரி”. Creative Entertainers சார்பில் தனஞ்செயன் இப்படத்தை வெளியிடுகிறார்.

வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வினில்…

தயாரிப்பாளர் விக்னேஷ் சுப்ரமணியன் பேசியதாவது…
இது எங்கள் முதல் படம். தனஞ்செயன் சார் எங்கள் படத்தைப் பார்த்து விட்டு, நானே ரிலீஸ் செய்கிறேன் என எடுத்துக்கொண்டார். மகிழ்ச்சி. சுசி சார் அவரில்லாமல் இந்தப்படம் இல்லை, மிக அட்டகாசமாகப் படத்தை எடுத்துள்ளார். இமான் சார் படத்தை முழுதாக தாங்கியிருக்கிறார். நண்பன் ஜெகவீர் நாயகனாக அறிமுகமாகிறார், மீனாட்சி நன்றாக நடித்துள்ளார். சரவணன் பிரதர் நன்றாக நடித்துள்ளார். ஜேபி சார், சிங்கம் புலி சார் எல்லோரும் அருமையாக நடித்துள்ளார்கள். படம் மிக அருமையாக வந்துள்ளது. இது எல்லோருடைய உழைப்பு. கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் படம் பிடிக்கும் நன்றி.

பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா பேசியதாவது…
சுசீந்திரன் அண்ணாவின் முதல் படத்தில் பாடல் எழுதினேன். இடையில் பல காலம் எழுதவில்லை, இப்போது இப்படத்தில் பாடல் எழுதியுள்ளேன். எத்தனை இடைஞ்சல்கள் வந்தாலும் மிகத் தன்மையான மனிதனாக இமான் இருக்கிறார். இதில் எல்லாப்பாடல்களும் நான் எழுதியுள்ளேன், ஒரு பாடல் மட்டும் யுகபாரதி எழுதியுள்ளார். மனித மனங்களின் உணர்வுகளை மிக ஆழமாகப் பேசுகிறது இந்த டிரெய்லர். படத்தில் உழைத்த அனைவருக்கும் இப்படம் வெற்றிப்படமாக அமையட்டும் வாழ்த்துக்கள்.

நடிகை லத்திகா பேசியதாவது…
இப்படம் உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும், நீங்கள் டிக்கெட் எடுத்த காசு வீணாகாது. நான் இந்தப்படத்தில் மிக நல்ல ரோலில் நடித்துள்ளேன். இந்த வாய்ப்பைத் தந்த இயக்குநர் சுசீந்திரன் சாருக்கு நன்றி. என்னை அழகாகக் காட்டிய ஆனந்த் சாருக்கு நன்றி. எனக்கு ஊக்கம் தந்த அம்மா அப்பாவுக்கு நன்றி. படம் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.

நடிகை வினோதினி வைத்தியநாதன் பேசியதாவது..,
இது நன்றி தெரிவிக்கும் மேடை, அறிமுக தயாரிப்பாளர் விக்னேஷ், இந்த வயதில் இப்படி ஒரு கதையைத் தயாரிக்க நினைத்த விக்னேஷ் அவர்களுக்கு நன்றி. இப்படத்தை முன்னெடுத்துச் செல்லும் தனஞ்செயன் சாருக்கு நன்றி. ஈஸ்வரன் படத்திற்குப் பிறகு, சுசீந்திரன் சாரின் கம்பெனி ஆர்டிஸ்டாக நான் மாறிவிட்டேன். இந்தப்படத்தில் சின்ன கதாப்பாத்திரம் என்றாலும் மிக நல்ல கதாப்பாத்திரம். சுசீந்திரன் சார், காதலைக் கையாள்வதைப் பார்க்கப் பிரமிப்பாக இருக்கும். இளமையாக இனிமையாக இப்படத்தில் காதலைக் காட்டியுள்ளார். என்னுடன் இப்படத்தில் பயணித்த திரைக்கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. இமான் இசை, கார்த்திக் நேத்தா வரிகளில் பாடல்கள் இந்தக்கால இளைஞர்களைக் கவரும். பிப்ரவரி 14 இப்படம் திரைக்கு வருகிறது. கண்டிப்பாக இந்தப்படம் பெரிய வெற்றி பெறும். நன்றி.

நடிகர் முருகானந்தம் பேசியதாவது..,
2K லவ் ஸ்டோரியில் எனக்கென்ன வேலை எனக் கிண்டல் பண்ணினார்கள். ஆனால் எல்லாம் சுசி சாரின் வேலை தான். இமான் சார் இசையில் படம் இயக்க நினைத்தேன், நான் நடித்த காட்சிக்கு இசையமைத்துள்ளார் என்பது பெருமை. இப்போது ஜாலியாக இருக்கலாம் ஆனால், வெண்ணிலா கபடிக்குழு படத்தில் சுசி சார் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார் என தெரிகிறது. கண்டிப்பாக இந்தப்படம் அவர் மனதுக்காகப் பெரிய வெற்றி பெறும். அனைவருக்கும் நன்றி.

இயக்குநர் நடிகர் பாக்யராஜ் கண்ணன் பேசியதாவது..,
2K கிட்ஸ் படத்தில், நான் 90 கிட்ஸாக நடித்துள்ளேன். சுசி சார் போன் செய்து பிரதர் ஃப்ரீயா எனக்கேட்டார், நடிக்க வரலாமே என்றார். என்னை நம்பி கூப்பிடுகிறாரே என உடனே நடிக்கப் போய் விட்டேன். அவ்வளவு அழகாகப் படத்தை எடுத்துள்ளார். இந்த படத்திற்கு ஆபிஸே போடவில்லை, என்னை ஜூடியோவிற்கு கூப்பிட்டு, அங்கு தான் டெஸ்ட் எடுத்தார் இயக்குநர். படம் முழுக்க ஃபன்னாக இருந்தது. விக்னேஷ் பிரதர் இவ்வளவு பெரிய படத்தை, நல்ல கதையை நம்பி எடுத்துள்ளார். நன்றி. இந்தப்படம் தனஞ்செயன் சார் கைக்குப் போய் விட்டது என்றவுடன் மகிழ்ச்சியாக இருந்தது. சுசி சார் எதோ குளத்து வேலைக்கு ஆள் பிடிப்பது போல்,காட்சி அமைப்பு, மீதம் திரையில் காணுங்க

Read More