EPS

அரசியல்தமிழ்நாடு

‘எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்க அதிமுக தவம் கிடந்ததில்லை’ – இபிஎஸ்

சென்னை: எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்க அதிமுக தவம் கிடந்ததில்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அரசியல் கட்சிகள் மத்தியில் தேர்தல் ஜுரம் பரவி வருகிறது. தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில், மறைமுகமாக இப்போதே தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டனர். திமுக, அதிமுக போன்ற பிரதான கட்சிகளில் இப்போதே உத்தேச வேட்பாளர் பட்டியலையும் தயாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்சி சார்பில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அரசியல் தலைவர்கள் மைக்கை பிடித்தாலே தேர்தல், கூட்டணி தொடர்பாகவே பேசி வருகின்றனர். இதனால் தமிழகத்தில் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது.
இந்நிலையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, நேற்று கோவையில் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘பாஜக தீண்டத்தகாத கட்சி, நோட்டா கட்சி, கூட்டணியில் பாஜக இருந்ததால்தான் தோற்றோம், பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டடோம் என்றெல்லாம் கூறியவர்கள் இன்று பாஜகவுடன் கூட்டணி வைக்க தவம் கிடக்கிறார்கள். அவ்வாறு தவம் இருக்க வேண்டிய சூழ்நிலையை பாஜக தொண்டர்கள் ஏற்படுத்தியுள்ளனர்” என்று தெரிவித்தார்.
இது தொடர்பாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மகளிரணி சார்பில் இன்று நடைபெற்ற மகளிர் தின விழாவில் பங்கேற்ற கட்சியின் பொதுச்செயலாளரிடம் கேட்டபோது முதலில், “தவறாகப் பேசாதீர்கள். அதிமுக என்று அண்ணாமலை குறிப்பிட்டுச் சொன்னாரா? தேவையில்லாமல் அவதூறு பரப்ப வேண்டாம்.” என்றார். அதனைத் தொடர்ந்து, “அதிமுகவை பொறுத்தவரை கட்சி தொடங்கியதில் இருந்து இன்று வரை, எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்க தவம் கிடந்த சரித்திரம் கிடையாது. அதிமுகவை பொறுத்தவரை பலம் பொருந்திய கட்சி. அதிமுகவை தோற்றுவித்ததில் இருந்து இன்று வரை கூட்டணி வைக்க தவம் கிடந்தது கிடையாது.” என்றார்.

‘கையெழுத்து இயக்கம் தொடக்கம்’ – சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, அதிமுக மகளிர் அணியின் சார்பில், சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் இன்று (சனிக் கிழமை), நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

பின்னர், தலைமைக் கழக வளாகத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது சிலைகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பலூன்களைப் பறக்கவிட்டார். தொடர்ந்து, வெண்புறாக்களையும் பறக்கவிட்டார்.

அதனைத் தொடர்ந்து, 77 கிலோ எடை கொண்ட கேக்கினை வெட்டி, கழக மகளிர் அணி நிர்வாகிகளுக்கும், வீராங்கனைகளுக்கும். பத்திரிகையாளர்களுக்கும் வழங்கினார். முன்னதாக, மகளிர் அணிச் செயலாளர் பா. வளர்மதி தலைமையில், எடப்பாடி பழனிசாமிக்கு, மகளிர் அணியினர் சாக்லேட் மாலை அணிவித்தனர். பின்னர், உலக மகளிர் தின சிறப்புப் பாடல் அடங்கிய குருந்தகடினை வெளியிட்டார் ஏழை, எளிய மகளிர் பயன்பெறும் வகையில், உதவிகளை வழங்கினார்.

நிறைவாக, ‘மகளிர் நலன் காக்க மாற்றம் வேண்டும்’ என கையெழுத்து இயக்கத்தைத் தொடக்கிவைத்து தானும் கையெழுத்திட்டார்.

Read More
அரசியல்தமிழ்நாடு

அதிமுக உள்கட்சி விவகாரங்களை தேர்தல் ஆணையம் விசாரிக்கும் – ஈபிஎஸ் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்

அதிமுக உள்கட்சி விவகாரங்களை தேர்தல் ஆணையம் விசாரிக்கும் – ஈபிஎஸ் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்
அதிமுக பொதுச்செயலாளர் பதவி, இரட்டை இலை சின்னம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பான தேர்தல் ஆணையத்தின் விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கிய சென்னை உயர் நீதிமன்றம், தேர்தல் ஆணைய விசாரணைக்கு தடை விதிக்க கோரி எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்ந்தெடுத்தது உள்ளிட்ட அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்கக் கூடாது எனவும், உரிமையியல் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை கட்சிக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க கூடாது எனவும் கோரிக்கை விடுத்து அனுப்பப்பட்ட மனுக்களை தேர்தல் ஆணையம் விசாரிக்க தடை விதிக்க கோரி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், தேர்தல் ஆணைய விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்த தடையை நீக்க கோரி முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தின் மகனும், முன்னாள் எம்.பி.யுமான ரவீந்திரநாத், புகழேந்தி, கே.சி.பழனிச்சாமி உள்ளிட்டோர் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் ஆர் சுப்பிரமணியன் மற்றும் ஜி அருள்முருகன் அடங்கிய அமர்வு, தேர்தல் ஆணைய விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிட்டது.

தேர்தல் ஆணையம், சின்ன ஒதுக்கீட்டு விதிகளின் அடிப்படையில் விசாரணையை தொடர அனுமதித்த நீதிபதிகள், மனுக்களை விசாரிக்க அதிகாரம் உள்ளதா என்பது குறித்து திருப்தியடைந்த பிறகே விசாரணையை துவங்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டனர்.

Read More
அரசியல்குற்றம்தமிழ்நாடு

கனிமவளக் கொள்ளையை தட்டி கேட்ட சமூக ஆர்வலர் ஜெகபர் அலி படுகொலை: இபிஎஸ் கண்டனம்!

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினரும், சமூக ஆர்வலருமான ஜெகபர் அலி சமூக விரோதிகளால் லாரி ஏற்றி படு கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த வழக்கில் உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “புதுக்கோட்டை தெற்கு மாவட்டம் திருமயம் தெற்கு ஒன்றிய சிறுபான்மை பிரிவு செயலாளரும், முன்னாள் அஇஅதிமுக ஒன்றிய குழு உறுப்பினர், புதுக்கோட்டை மாவட்ட அமைச்சூர் கபடி கழக செயலாளரும், சமூக ஆர்வலருமான ஜெபகர் அலி அவர்கள் , சமூக விரோதிகளால் லாரி ஏற்றிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது
கனிமவளக் கொள்ளை தொடர்பாக, திருமயம் வட்டாட்சியரைச் சந்தித்து புகார் செய்து, 15 நாட்களுக்கும் மேலாக ஆகியும், மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் பலமுறை புகார் செய்தும், மாவட்ட ஆட்சியரிடமே புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், தற்போது அவரைப் சமூக விரோதிகள் லாரி ஏற்று படு கொலை செய்திருக்கிறார்கள் என்ற செய்தி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இந்தக் கொலைக் குற்றத்தின் பின்னணியில் உள்ள உண்மையான குற்றவாளிகள், கனிமவளக் கொள்ளையர்களை விட்டுவிட்டு, லாரி டிரைவர் உள்ளிட்டவர்களை மட்டும் கைது செய்து வழக்கை திசை திருப்பி வருகிறது
கனிமவளக் கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், புகார் அளித்தவரைக் காட்டிக் கொடுத்து, மிக மிக மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறது
திரு. ஜெகபர் அலி அவர்கள் இறப்புக்கு நீதி வேண்டும். கனிமவளக் கொள்ளையர்கள் மட்டுமின்றி, அவர் கொடுத்த புகார்களின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்த அனைத்து அதிகாரிகளும் அவரது மரணத்திற்குப் பொறுப்பு. உரிய விசாரணை நடத்தி, அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Read More