vidamuyarchi

சினிமாதமிழ்நாடு

அஜித்தின் ‘விடாமுயற்சி’ … விமர்சனம் 

அஜித்தின் ‘விடாமுயற்சி’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை பார்த்த பின், பலரும் தங்கள் கருத்துகளை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டு வருகின்றனர்.
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள படம் ‘விடாமுயற்சி’. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில், த்ரிஷா, அர்ஜூன், ஆரவ், ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.

படம் பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு பின்னர் தேதி மாற்றப்பட்டது. இந்நிலையில் இன்று ‘விடாமுயற்சி’ திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
அஜித்குமாரின் இன்ட்ரோ சிறப்பாக இருப்பதாகவும், அனிருத் இசை ஓகே என்றும், படம் பெரிய அளவில் ஈர்க்கவில்லை என்றும் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
’விடாமுயற்சி’ நல்ல முயற்சி என நெட்டிசன் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
படம் எங்கேஜிங்காகவும், த்ரில்லிங்காகவும் இருப்பதாக நெட்டிசன் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

Read More
சினிமாதமிழ்நாடு

தள்ளிப்போகிறதா அஜித்தின் ‘விடாமுயற்சி’ ரிலீஸ் தேதி?

நடிகர் அஜித்குமார் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிப்போக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ திரைப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. பல்வேறு காரணங்களால் இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
நாளை வெளியாகிறது விடாமுயற்சி படத்தின் டிரைலர்… ரிலீஸ் தேதி குறித்து வெளியான அப்டேட்!

Read More