kalpananayak

தமிழ்நாடு

ஏடிஜிபி கல்பனா நாயக்கை கொல்ல முயற்சி? டிஜிபி அலுவலகம் தந்த விளக்கம்

ஏடிஜிபி கல்பனா நாயக்கின் அறையில் ஏற்பட்ட தீ விபத்து திட்டமிட்டு நடந்த சதி அல்ல. மின் கசிவு காரணமாக ஏற்பட்டது என டிஜிபி அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.
சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைமை அலுவலகத்தில் ஏடிஜிபி அறையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. முதற்கட்ட விசாரணையில் ஏசி மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தீ விபத்து சம்பவத்தைச் சுட்டிக்காட்டி தன்னை கொலை செய்ய சதி நடந்ததாக சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் ஏடிஜிபியாக இருந்த கல்பனா நாயக், டிஜிபி, உள்துறை செயலாளர் மற்றும் தலைமைச் செயலாளருக்கு புகார் அளித்ததாக தகவல் வெளியாகியது.

சம்பவத்தன்று தேர்வாணைய தலைமை அலுவலகத்திற்கு வந்து கொண்டிருக்கும்போது மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தன்னை தொடர்பு கொண்டு தீ விபத்து குறித்து தகவல் அளித்ததாகவும், தனது அலுவலகத்திற்கு சென்று பார்த்தபோது தனது இருக்கை முழுவதுமாக எரிந்து கிடந்ததாகவும் புகாரில் தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் உதவி ஆய்வாளர் தேர்வில் இட ஒதுக்கீடு வழங்கியதில் முரண்பாடு இருப்பதாக தான் புகார் தெரிவித்த நிலையில், இந்த தீ விபத்து நடந்ததாகவும் ஏடிஜிபி கல்பனா நாயக் சந்தேகம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது. கடந்த ஆண்டு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் ஏடிஜிபியாக இருந்த கல்பனா நாயக், தற்போது சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் ஏடிஜிபியாகப் பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து டிஜிபி அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது. அந்த விளக்கத்தில், ஏடிஜிபி கல்பனா நாயக்கின் அறையில் ஏற்பட்ட தீ விபத்து திட்டமிட்டு நடந்த சதி அல்ல. மின் கசிவு காரணமாக ஏற்பட்டது என அந்த விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், தேர்வாணையத்தில் முறைகேடு என கல்பனா நாயக் வைத்த குற்றச்சாட்டிற்கு சீருடைப்பணியாளர் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள சீருடைப் பணியாளர் தேர்வாணையம், ஏடிஜிபி கல்பனா நாயக் கூறியதுபோல் பணி நியமனங்களில் குளறுபடி இல்லை.

Read More