சீமான் வீட்டு பாதுகாவலர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு.. காவல்துறையினர் நடவடிக்கை
சீமான் வீட்டு பாதுகாவலர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு.. காவல்துறையினர் நடவடிக்கை
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நாளை காலை 11 மணியளவில் சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்பதை கூற வளசரவாக்கம் போலீசார் நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டிற்கு வந்தனர். அப்போது சீமான் வீட்டில் இல்லாததால் வீட்டின் முன்பு கேட்டில் சம்மனை போலீசார் ஒட்டிச் சென்றனர். போலீசார் சம்மனை ஒட்டிய சில நிமிடங்களில் சீமான் வீட்டு காவலாளியும், சீமானின் ஆதரவாளரும் சம்மனை கிழித்து எறிந்தனர்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தகவல் அறிந்த நீலாங்கரை ஆய்வாளர் பிரவின் ராஜேஷ் சீமான் வீட்டிற்கு சென்று கைது செய்ய முயன்றபோது வீட்டில் இருந்த பாதுகாவலர் முன்னாள் ஓய்வுபெற்ற இராணுவ வீரர் அமல்ராஜ் என்பவர் ஆய்வாளரை தடுத்து நிறுத்தியதால் ஆய்வாளருக்கும் பாதுகாவலருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பின்னர் அமல்ராஜ் கைது செய்து காவல்துறை வாகனத்தில் ஏற்ற முயன்றபோதும் இருவருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் காவல்துறை வாகனத்தில் ஏற்றியதும் பாதுகாவலர் துப்பாக்கி வைத்துள்ள நிலையில் அதை பார்த்ததும் போலீசார் அதை பறிமுதல் செய்ய முற்பட்டபோது கடும் போராட்டம் ஏற்பட்டது. பின்னர் அவரை காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
Read More