குட் பேட் அக்லி ட்ரைலர் ரிலீஸ் பற்றி அப்டேட்..!
அஜித் குமார் நடிப்பில் உருவான திரைப்படம் தான் குட் பேட் அக்லி. இப்படத்திற்கு உச்சகட்ட எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது. ஆதிக் ரவிச்சந்திரனுடன் முதல் முறையாக அஜித் இப்படத்தின் மூலம் கூட்டணி அமைத்துள்ளார். மார்க் ஆண்டனி என்ற படத்திற்கு பிறகு ஆதிக் ரவிச்சந்திரன் அடுத்தகட்டத்துக்கு நகர்ந்திருக்கின்றார். அவருக்கு அஜித்தை இயக்கும் வாய்ப்பு குட் பேட் அக்லி படத்தின் மூலம் கிடைத்துள்ளது.
இந்த மிகப்பெரிய வாய்ப்பை மிகச்சரியாக பயன்படுத்த வேண்டும் என்ற முனைப்போடு ஆதிக் உருவாக்கியிருக்கும் திரைப்படம் தான் குட் பேட் அக்லி. இதையெல்லாம் தாண்டி ஆதிக் தீவிரமான அஜித் ரசிகர். எனவே இப்படத்தில் ஒவ்வொரு காட்சியிலும் அஜித்தை பார்த்து பார்த்து செத்துக்கியிருப்பார் என்பது இப்படத்தின் டீசரை பார்க்கும்போதே தெரிகின்றது.
சில தினங்களுக்கு முன்பு வெளியான குட் பேட் அக்லி திரைப்படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. டீசரில் அஜித் மாஸாகவும் அதே சமயம் பல கெட்டப்களிலும் தோன்றினார். குறிப்பாக அவரின் பல கெட்டப்கள் டீசரில் ஹைலைட்டான விஷயமாக இருந்தது.
இதன் மூலமே இப்படம் அஜித் ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக அமையும் என உறுதியாகியுள்ளது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் டீசர் வெளியான நிலையில் தற்போது ரசிகர்கள் அனைவரும் இப்படத்தின் ட்ரைலர் எப்போது வெளியாகும் என ஆவலாக காத்துகொண்டு இருக்கின்றனர்.
