trump

அரசியல்இந்தியாஉலகம்தமிழ்நாடுதொழில்நுட்பம்

இந்திய தொழில்துறை எதிர்கொள்ள உள்ள சவால்கள்- டிரம்பின் பரஸ்பர வரி

இந்தியப் பொருட்கள் மீதான இறக்குமதி வரியை 26 சதவீதமாக உயர்த்தி பதிலுக்கு பதில் வரியை அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்து உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவின் அதிரடி அறிவிப்பால் இந்திய தொழில்துறை எதிர்கொள்ள உள்ள சவால்கள் என்னென்ன என்பது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவில் கடும் வர்த்தக வரிகளை அமெரிக்கா விதித்துள்ளது. உலக வர்த்தகத்தில் அமெரிக்காவின் வரி உயர்வு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா, சீனா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், பிரிட்டன், ஐரோப்பிய நாடுகள் என நீண்டு கொண்டே போகிறது அமெரிக்காவின் வரி உயர்வு படலம். அமெரிக்காவின் திடீர் வரி உயர்வால் இந்திய தொழில்துறை கடும் பின்னடைவை எதிர்கொள்ளும் அபாயம் நிலவுவதாக கருதப்பட்ட நிலையில், அதற்கு மாற்றாக நிபுணர்களின் கருத்துகள் வெளியாகி உள்ளன.
இந்தியாவில் குறைவான பாதிப்புகளே இருக்கும் என பெரும்பாலான பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். ஏனென்றால், சீனா, ஜப்பான், வியட்நாம், இலங்கை போன்று ஏற்றுமதியை சார்ந்து இந்தியா இல்லை என்பது நிபுணர்களின் கருத்தாக உள்ளது. அமெரிக்காவின் திடீர் வரி உயர்வால் இந்திய ஜவுளித்துறைக்கு சாதகமான சூழல் நிலவுவதாக திருப்பூர் ஏற்றுமதி மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் முத்துரத்தினம் தெரிவித்துள்ளார்.
அதேபோல், அமெரிக்காவின் வரி விதிப்பை பயன்படுத்திக் கொண்டு மேக் இன் இந்தியா, ஆத்ம நிர்பார் திட்டங்களின் கொள்கையை வலுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
பின்னலாடைத் துறையில் சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த அமெரிக்காவின் வரி உயர்வு உதவியாக இருக்கும் என இந்திய ஜவுளி கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரபு தாமோதரன் கூறுகிறார்.
அமெரிக்காவின் வரி விதிப்பால் உருவாகும் பணவீக்கத்தால் அந்நாட்டு மக்களே பெரிய அளவில் பாதிக்கப்பட உள்ளதாக தணிக்கையாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். பெரும்பாலான பொருளாதார வல்லுநர்களின் கருத்துகள், இந்திய தொழில்துறைக்கு ஆதரவாக உள்ள நிலையில், வரி உயர்வு குறித்து அமெரிக்காவுடன் உலக நாடுகள் பேச்சுவார்த்தை நடத்தும் என்பதால் விரைவில் பெரிய அளவில் மாற்றம் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read More
அரசியல்உலகம்

ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக புதின் – ட்ரம்ப் இன்று முக்கிய பேச்சுவார்த்தை

உக்ரைன் மீதான போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இன்று தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இந்த தகவலை ரஷ்ய அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.

கடந்த 2022 பிப்ரவரி மாதம் உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்தது. உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்ததுடன், ஆயுத உதவியும் வழங்கின. இதற்கிடையே, இந்த போரை நிறுத்த பிரதமர் மோடி தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார். கடந்த ஜனவரியில் அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்டு ட்ரம்பும், போரை நிறுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறார்.
இதுதொடர்பாக சவுதி அரேபிய தலைநகர் ரியாத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. கடந்த 11-ம் தேதி நடந்த பேச்சுவார்த்தையின்போது 30 நாள் போர் நிறுத்த திட்டத்தை அமெரிக்கா முன்மொழிந்தது. இதை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஏற்றுக் கொண்டார். ஆனால் ரஷ்யா உடனடியாக ஏற்றுக்கொள்ளவில்லை. ரஷ்யா போர் நிறுத்தத்தை ஏற்காவிட்டால், பொருளாதார தடை விரிவுபடுத்தப்படும் என்று அமெரிக்கா மற்றும் ஜி7 நாடுகள் கடந்த 14-ம் தேதி எச்சரிக்கை விடுத்திருந்தன.
இந்நிலையில், உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும், அமெரிக்க அதிபர் ட்ரம்பும் இன்று (மார்ச் 18) தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக ரஷ்ய அதிபர் மாளிகை செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் நேற்று தெரிவித்தார். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடந்த 16-ம் தேதி இரவு செய்தியாளர்களிடம் பேசும்போது, “போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்யா, உக்ரைனுடன் பேசி வருகிறோம். 18-ம் தேதிக்குள் முக்கிய அறிவிப்பு வெளியாகும். அன்று புதினுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளேன்” என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

Read More
இந்தியாஉலகம்

கனடா, மெக்சிகோ நாடுகளின் இறக்குமதிக்கு கூடுதல் வரி.. முடிவை மாற்றிய டிரம்ப்.. இதுதான் காரணமா?

அண்டை நாடுகளுக்கு அதிர்ச்சி அளிக்க எடுத்த அதிரடி முடிவை அமெரிக்க அதிபர் டிரம்ப் நிறுத்தி வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மெக்சிகோ, கனடா பொருட்கள் மீதான இறக்குமதி வரி விதிப்பு திட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைக்கும் கோப்பில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு புதிய வரி விதிப்பு கொள்கைகளை அமல்படுத்தி வருகிறார். அதன்படி, செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் சீனா, கனடா, மெக்சிகோ நாடுகளின் இறக்குமதிக்கு கூடுதல் வரி விதிக்கும் நடைமுறை அமலுக்கு வந்தது. இதேபோன்று சீனாவுக்கு கூடுதலாக 10 சதவீதம் வரி விதிக்கப்படும் என்றும் டிரம்ப் தெரிவித்தார்.
இதற்கு பதிலடியாக தங்கள் நாட்டில் இறக்குமதியாகும் அமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என்று சீனா மற்றும் கனடா நாடுகள் அறிவித்தன. இதனால், அமெரிக்க பொருளாதாரம் ஆட்டம் காணலாம் என்று அச்சம் எழுந்தது. இந்நிலையில், கனடா, மெக்சிகோ நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான வரி விதிப்பை ஏப்ரல் இரண்டாம் தேதி வரை ஒத்திவைப்பதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்கா-கனடா-மெக்சிகோ வர்த்தக ஒப்பந்தப்படி இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார். புதிய வரி விதிப்பு கொள்கையை தொடர்ந்து அமெரிக்க பங்குச் சந்தை கடும் வீழ்ச்சியை சந்தித்து வந்த நிலையில், பங்குச்சந்தை வீழ்ச்சிக்கும் வரி விதிப்பு ஒத்திவைக்கப்பட்டிருப்பதற்கும் சம்பந்தம் இல்லை என்று டிரம்ப் தெரிவித்தார்.

Read More