gold

இந்தியாதமிழ்நாடுதொழில்நுட்பம்வணிகம்

பட்ஜெட்டிற்கு பிறகு தலைகீழாக சரிந்த தங்கம் விலை…

இன்று பிப்ரவரி 2ஆம் தேதி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு மட்டுமே ரூ.950 குறைந்து ஒரு கிராம் ரூ.13,950க்கும் சவரனுக்கு ரூ.7,600 குறைந்து ஒரு சவரன் ரூ.1,11,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.800 குறைந்து ஒரு கிராம் ரூ.12,000க்கும், சவரனுக்கு ரூ.6,400 குறைந்து ஒரு சவரன் ரூ.96,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.300க்கும், கிலோவுக்கு ரூ.20,000 குறைந்து ஒரு கிலோ ரூ.3,00,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
பட்ஜெட்டிற்கு பிறகு தலைகீழாக சரிந்த தங்கம் விலை..இந்த நிலையில் பட்ஜெட்டிற்கு பிறகும், பிப்ரவரி மாத தொடக்கத்திலும் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Read More
இந்தியாதமிழ்நாடு

வெளிநாட்டில் இருந்து விமானத்தில் எவ்வளவு நகை, பணம் கொண்டு வரலாம்? – சுங்க விதிகள் என்ன ….

வெளிநாட்டிலிருந்து 14 கிலோ தங்கம் கடத்தியதாக தமிழ் திரைப்பட நடிகை ரன்யா ராவ் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒரு வருடமாக ஒரே மாதிரியான ஆடைகளை அணிந்துகொண்டு ஒவ்வொரு பயணத்திலும் கிலோ கணக்கில் தங்கத்தை ரன்யா ராவ் கொண்டு வந்ததாக அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன. தங்கக் கடத்தலில் ஈடுபட்டதாக நடிகை கைதாகியுள்ள விவகாரம் இந்திய அளவில் பேசுபொருளாகியுள்ள நிலையில், இந்திய சுங்க விதிகளின்படி உள்நாட்டு, வெளிநாட்டு விமானங்களில் எவ்வளவு தங்கம், ரொக்கப் பணம் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுகிறது என்பதைப் பற்றி பார்க்கலாம்.
இந்திய சுங்கச் சட்டம்

1962ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இந்திய சுங்கச் சட்டம், இந்தியாவில் பொருட்களின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதியை நிர்வகிக்கும் ஒரு அடிப்படைச் சட்டமாகும். இது கடத்தலைத் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தச் சட்டம் நிதி அமைச்சகத்தின் ஒரு பகுதியாக இருக்கும் மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தால் (CBIC) நடைமுறைப்படுத்தப்படுகிறது.இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் மீதான வரி, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி மீதான தடை, கிடங்கு மற்றும் அபராதங்கள் போன்ற சுங்க விதிமுறைகளின் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய 1962ஆம் ஆண்டு சுங்கச் சட்டம் 17 அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் நோக்கம், சட்டப்பூர்வ வர்த்தகத்தை எளிதாக்குவதும், கடத்தல் போன்ற அங்கீகரிக்கப்படாத நடவடிக்கைகளைத் தடுப்பதும் ஆகும்.
இந்தியாவிற்குள் நுழையும் அனைத்து பயணிகளும் சுங்க சோதனைகளில் தேர்ச்சி பெற வேண்டும் என்பது கட்டாயமாகும். மேலும் வரி விதிக்கக்கூடிய பொருட்களை எடுத்துச் சென்றால் பயணிகள் சுங்க அறிவிப்புப் படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டி வரும். இதற்காக பிரத்யேகமாக “ATITHI” மொபைல் செயலி உள்ளது. இதன்மூலம் விமானத்தில் ஏறும் முன்பாகவே, வரி விதிக்கக்கூடிய பொருட்கள் பற்றிய விவரங்களையும் தாங்கள் கொண்டுவரும் வெளிநாட்டு பணத்தை பற்றிய விவரங்களையும் தெரிவிக்க வசதி உள்ளது. 5,000 டாலருக்கு அதிமாக வெளிநாட்டு பணம் எடுத்துச் செல்லும் பட்சத்தில் அதனைக் கட்டாயமாக அறிவிப்பது அவசியம்.
பயணிகளுக்கான சலுகைகள்

உள்நாட்டு விமானங்கள்: உள்நாட்டு விமானங்களில் பயணிக்கும் பயணிகளுக்கு பொதுவாக சுங்கக் கட்டுப்பாடுகளோ, சலுகைகளோ எதுவும் இல்லை. பயணிகள் சர்வதேச எல்லைகளைக் கடக்காததால் இந்த விலக்கு உள்ளது. எனினும், பயணிகள் தடைசெய்யப்பட்ட பொருட்கள் தொடர்பான விமான விதிமுறைகளுக்கு இணங்க வேண்டும்.

சர்வதேச விமானங்கள்: சர்வதேச நாடுகளில் இருந்து விமானங்கள் மூலம் இந்தியாவிற்கு வரும் பயணிகளுக்கு சில சலுகைகள் உள்ளன. பயன்படுத்தப்பட்ட தனிப்பட்ட பொருட்கள் (மொபைல் போன்றவை) மற்றும் பயண நினைவுப் பொருட்கள் ஆகியவை வரி இல்லாமல் அனுமதிக்கப்படுகின்றன. மேலும், சர்வதேச பயணிகள் ரூ.50,000 வரை மதிப்புள்ள பொருட்களை வரியின்றி கொண்டு வரலாம். ஆனால், அவை தடைசெய்யப்பட்ட பொருட்களாக இருக்கக் கூடாது. இதுதவிர, 18 வயது மேற்பட்டோர் ஒரு லேப்டாப் எடுத்துவர அனுமதி உண்டு. 2 லிட்டர் வரை மதுபானம் எடுத்துவர முடியும். 100 சிகரெட்டுகள் அல்லது 25 சுருட்டுகள் அல்லது 125 கிராம் புகையிலை வரை வரி விலக்கு உடன் கொண்டுவர முடியும். இவை இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே இந்த சலுகைகள். அதுவே, வெளிநாட்டு வம்சாவளியைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் என்றால் பயன்படுத்தப்பட்ட தனிப்பட்ட பொருட்கள் மற்றும் பயண நினைவுப் பொருட்கள் மற்றும் ரூ.15,000 வரை மதிப்புள்ள பொருட்களை மட்டுமே கொண்டுவர முடியும்.

வெளிநாட்டு பணம் என்றால், 5,000 டாலர் வரை எந்தவித அறிவிப்பும் இல்லாமல் எடுத்துவரலாம். அதனைத் தாண்டிய மதிப்பு என்றால் கட்டாயம் அதனை அறிவிக்க வேண்டும். அதுவே இந்திய ரூபாய் என்றால் ரூ.25,000 வரை எடுத்து வரலாம்.
1962 ஆம் ஆண்டு சுங்கச் சட்டத்தின் கீழ் கடத்தல் ஒரு கடுமையான குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடத்தல்காரர்கள் குற்றத்தின் கடுமையைப் பொறுத்து மூன்று முதல் ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையை எதிர்கொள்ள நேரிடும். சிறைத்தண்டனைக்கு கூடுதலாக, கடத்தல்காரர்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம். பெரும்பாலும் அபராதத் தொகை சம்பந்தப்பட்ட பொருட்களின் மதிப்பை விட மூன்று மடங்கு அதிகமாக இருக்கும். மேலும், கடத்தப்பட்ட பொருட்கள் சுங்க அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்படலாம்.

Read More
சினிமாவணிகம்

உயர்ந்த தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன தெரியுமா?

நவம்பர் மாதம் தொடங்கியது முதல் தங்கம் விலை சற்று ஏற்ற இறக்கத்துடன் இருந்துவரும் நிலையில், தொடர்ந்து ஐந்தாவது நாளாக தங்கம் விலை அதிகரித்துள்ளது.

நேற்று (நவம்பர் 21ஆம் தேதி) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.30 அதிகரித்து, ரூ.7,145-க்கும், ஒரு சவரன் ரூ.240 அதிகரித்து ரூ.57,160-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று (நவம்பர் 22ஆம் தேதி) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.80 அதிகரித்து, ரூ.7,225-க்கும், ஒரு சவரன் ரூ.640 அதிகரித்து ரூ.57,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Read More