ifthar

அரசியல்தமிழ்நாடு

விஜய் இஃப்தார் நோன்பு… – பிரியாணி பை முதல் திறந்த வேன் வரை!

தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சி தொடங்கிய பின்னர் முதல்முறை இஃப்தார் நோன்பு நிகழ்வில் விஜய் இன்று கலந்து கொண்டார். இதையொட்டி ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ அரங்கில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. விஜய் கலந்து கொள்கிறார் என்ற விஷயத்தை கேள்விப்பட்டதும் ஏராளமான இஸ்லாமியர்கள் குவியத் தொடங்கினர். குறிப்பாக ஒய்.எம்.சி.ஏ அரங்கில் சுமார் 1,500க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திணறிய ராயப்பேட்டை
அழைப்பிதழ் அனுப்பப்பட்ட நபர்கள் மட்டுமே நிகழ்ச்சி அரங்கிற்குள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் பவுன்சர்கள் திணறினர். நோன்பு அரங்கில் கட்டுக்கடங்காமல் உள்ளே செல்ல முயற்சித்ததால் கண்ணாடி கதவுகள் உடைந்து சிதறின. இந்நிலையில் விஜய் வருகை புரிந்ததும் இஃப்தார் நோன்பு களைகட்டியது. வெள்ளை சட்டை, வெள்ளை வேஷ்டி மற்றும் தலையில் குல்லா அணிந்து வந்திருந்தார்.
இஸ்லாமியர்கள் இஃப்தார் நோன்பு
இந்த வித்தியாசமான லுக்கை பார்த்து பலரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். பின்னர் இஸ்லாமியர்கள் உடன் அமர்ந்து தொழுகை செய்தார். இதையடுத்து நோன்பு திறந்தார். நோன்பு கஞ்சி குடித்து தனது அன்பை வெளிப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து அங்கு திரண்டிருந்த இஸ்லாமியர்கள் முன்னிலையில் மைக்கில் பேசினார். அதாவது, எனது அன்பான இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் எனது வணக்கம்.
விஜய் பங்கேற்பு
மாமனிதர் நபிகள் நாயகம் அவர்களின் வாழ்க்கையை பின்பற்றி மனித நேயத்தையும், சகோதரத்துவத்தையும் பின்பற்றி வரும் இஸ்லாமிய சகோதரர்கள், எனது அன்பான கோரிக்கையை ஏற்று வருகை புரிந்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி. மிக்க மிக்க மகிழ்ச்சி என்று பேசிவிட்டு புறப்பட்டு சென்றார்.

Read More