Author: Namadhu Arasu

அரசியல்அறிவியல்இந்தியாஉலகம்தமிழ்நாடு

இந்தியா – இஸ்ரேல் இடையே 17 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து 

இஸ்ரேலுக்கு பிரதமர் நரேந்திர மோடி பயணம் மேற்கொண்டு, அந்நாட்டு பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், இருதரப்புக்கும் இடையே பொருளாதாரம், பாதுகாப்பு, தூதரக உறவு உள்ளிட்ட துறைகளில் 17 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இருதரப்புக்கும் இடையே விரைவில் தாராள வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி இருநாட்கள் அரசுமுறைப் பயணமாக இஸ்ரேல் சென்றிருந்தார். கடந்த 9 ஆண்டுகளில் பிரதமர் மோடி இரண்டாவது முறையாக இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்ட நிலையில், அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த பயணத்தின் முதல் நாளான நேற்று முன்தினம் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவருக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இரவு விருந்து அளித்தும் உபசரித்திருந்தார்.
இந்நிலையில், இரண்டாம் நாளான நேற்று, ஜெருசலேமில் உள்ள யூதர்களின் யாத் வஷேம் நினைவிடத்திற்கு சென்றார். 2ஆம் உலகப்போரின்போது ஜெர்மனியை ஆட்சி செய்த ஹிட்லரின் நாஜி படைகளால் கொன்று குவிக்கப்பட்ட சுமார் 60 லட்சம் யூதர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள அந்த நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.அந்நாட்டு அதிபர் இசாக் ஹோர்சோக்கையும் சந்தித்த பிரதமர் மோடி, இரு தரப்பு உறவு குறித்து விவாதித்தார். அதனைத் தொடர்ந்து, பிரதமர் மோடி மற்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு முன்னிலையில் செயற்கை நுண்ணறிவு, பொருளாதாரம், விண்வெளி, பாதுகாப்பு, விவசாயம், கல்வி, கடல்சார் பாரம்பரியம், வணிகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 17 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
பின்னர் பேசிய நெதன்யாகு, இந்தியாவிற்கும் தனக்குமான பிணைப்பு குறித்து நினைவு கூர்ந்தார். இஸ்ரேலும், இந்தியாவும் புதுமைகளை நோக்கிய பயணத்தில் குறியாக உள்ளதாகவும் தெரிவித்தார். தனக்கு அளிக்கப்பட்ட இஸ்ரேலின் உயரிய விருதை இந்திய நாட்டு மக்களுக்கு அர்ப்பணிப்பதாக பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்தார். இஸ்ரேலில் யுபிஐ பயன்படுத்த ஒப்பந்தம் போட்டுள்ளது மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்தார். இரு தரப்பும் பரஸ்பரம் பயன்பெறும் வகையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்துக்கு விரைவில் முழு வடிவம் கொடுக்கப்படும் எனவும் பிரதமர் மோடி உறுதிகூறினார்.இதனைத் தொடர்ந்து, தனது பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியாவுக்கு புறப்பட்ட பிரதமர் மோடியை, தனது மனைவியுடன் விமான நிலையத்துக்கே வந்து பெஞ்சமின் நெதன்யாகு வழியனுப்பிவைத்தார்.

Read More
Uncategorizedஅரசியல்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்மாவட்டம்

கொளத்தூரில் 2007 பயனாளிகளுக்கு பட்டா வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்

கொளத்​தூர் தொகு​திக்கு உட்​பட்ட பகு​தி​களைச் சேர்ந்த 2007 பயனாளி​களுக்கு இலவச வீட்​டுமனைப் பட்டாக்களை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று வழங்​கி​னார். இதுகுறித்து, தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​ குறிப்​பு: சென்னை பெரம்​பூர் டான்​பாஸ்கோ பள்ளி வளாகத்​தில் நேற்று நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில், கொளத்​தூர் சட்​டப்​பேரவை தொகு​திக்கு உட்​பட்ட பகு​தி​களைச் சார்ந்த 2007 பயனாளி​களுக்கு இலவச வீட்​டுமனைப் பட்டாக்களை வழங்​கி​னார்.

மேலும், வடசென்னை வளர்ச்​சித் திட்​டத்​தின் கீழ், சிஎம்​டிஏ சார்​பில் ரூ.1.61 கோடி நவீன வசதி​களு​டன் கட்​டப்​பட்​டுள்ள குளிரூட்​டப்​பட்ட கொளத்​தூர் பேருந்து நிறுத்​தம் மற்​றும் சென்னை மாநக​ராட்சி சார்​பில் ரூ.40.59 லட்​சத்​தில் அமைக்​கப்​பட்​டுள்ள சாலை​யோரப் பூங்​கா, ரூ.70 லட்​சத்​தில் கட்​டப்​பட்​டுள்ள 2 அமுதம் நியாய விலைக் கடைகள், ரூ.40 லட்​சத்​தில் கட்​டப்​பட்​டுள்ள ஒருங்​கிணைந்த குழந்​தைகள் வளர்ச்சி மையம், ரூ.25 லட்​சம் செல​வில் அமைக்​கப்​பட்​டுள்ள நவீன பயணி​யர் நிழற்​குடை ஆகிய​வற்றை திறந்து வைத்​தார்.இதையடுத்​து, இந்து சமய அறநிலை​யத் துறை சார்​பில், கொளத்​தூர் கபாலீஸ்​வரர் கலை மற்​றும் அறி​வியல் கல்​லூரிக்கு ரூ.31.45 கோடி செல​வில் கட்​டப்​பட்​டுள்ள புதிய கட்​டிடங்​களைத் திறந்து வைத்​தார். அப்​போது, முதல்​வர் ஸ்டா​லின் பேசி​ய​தாவது: அறநிலை​யத் துறை சார்​பாக, கல்வி எனும் அறப்​பணிக்கு இந்​தக் கல்​லூரி ஒரு சாட்​சி​யாக இருக்​கிறது.

மாணவர்​களுக்கு நான் சொல்​லிக் கொள்​வது, கல்வி தான் கடவுள், கல்வி எனும் கடவுள் உங்​களுக்கு எல்​லா​வற்​றை​யும் வழங்​கும். படிப்​பு​தான் உங்​களை உயர்த்​தும். இன்று இந்​தியா முழு​வதும் பின்​பற்​றும் மாடலாக திரா​விட மாடல் இருக்​கிறது என்​றால், அந்த திரா​விட மாடல் அரசின் மாடல் தொகு​தி​யாக இருப்​பது கொளத்​தூர்.ஏதோ தேர்​தல் வரும்​போது மட்​டும் ஒன்​றிரண்டு திட்​டங்​களை திறந்து வைக்​க​வில்​லை. கடந்த 5 ஆண்​டு​களாக, ஒவ்​வொரு மாத​மும் வந்​து, உங்​களுக்​குத் தேவை​யான எல்​லா​வற்​றை​யும் செய்து கொண்​டிருக்​கிறோம். இந்​தக் கல்​லூரியை திறந்து சில ஆண்​டு​களி​லேயே 516 மாணவர்​கள் வளாக நேர்​காணலில் தேர்​வாகி பல்​வேறு வேலை​வாய்ப்​பு​கள் பெற்​றிருக்​கின்​றனர்.

இந்த எண்​ணிக்கை அதி​க​மாக வேண்​டும். இது கொளத்​தூருக்கு மட்​டுமல்ல. இதே​போல தமிழகம் முழு​வதும் ஒவ்​வொரு தொகு​தி​யிலும், ஒவ்​வொரு ஊரிலும், இது​வரை நடக்​காத அளவுக்கு முன்​னேற்​றப் பணி​களைச் செய்​திருக்​கிறோம். இந்​தி​யா​விலேயே எந்த மாநிலத்​தி​லும், எங்​கும் இல்​லாத வகை​யில் பல்​வேறு திட்​டங்​களை நிறைவேற்றி இருக்​கிறோம்.மக்​களை மையப்​படுத்​தி, மக்​களைத் தேடி வந்து சேவை​களை வழங்​கு​கின்ற மக்​களாட்​சி​யாக திரா​விட மாடல் பெயரெடுத்​திருக்​கிறது. இந்த நல்​லாட்சி தொடர, நம்​முடைய கொளத்​தூர் மேலும், மேலும் உயர, உங்​களு​டைய ஆதரவு என்​றும் எங்​களுக்கு இருக்​கும் என்று நம்​பு​கிறேன். இவ்​வாறு முதல்​வர் பேசி​னார்.

நிகழ்ச்​சி​யில், அமைச்​சர்​கள் கே.கே.எஸ்​.எஸ்​.ஆர்​.​ராமச்​சந்​திரன், சு.​முத்​து​சாமி, அர.சக்​கர​பாணி, பி.கே.சேகர்​பாபு, கோவி.செழியன், அன்​பில் மகேஸ், மேயர் ஆர்​.பிரி​யா, வரு​வாய்த் துறை செயலர் பெ.அ​மு​தா, வீட்​டு​வச​தித் துறை செயலர் காகர்லா உஷா, அறநிலை​யத் துறை செயலர் மணி​வாசன், பள்​ளிக்​கல்வி செயலர் சந்​திரமோகன், சிஎம்​டிஏ உறுப்​பினர் செயலர் கோ.பிர​காஷ், உயர்​கல்​வித் துறை செயலர் பொ.சங்கர், மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன், அறநிலையத் துறை ஆணையர் தர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Read More
இந்தியாஉலகம்தமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்

நாட்டின் முதல் அதிவேக நமோ பாரத் ரயில் சேவை தொடக்கம்.. மணிக்கு 120 கி.மீ., வேகம்.. 

நாட்டின் முதல் அதிவேக நமோ பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
இந்தியாவில் ரயில் போக்குவரத்தை நவீனப்படுத்தவும் துரிதப்படுத்தவும் மத்திய அரசு பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த 2024 ஆம் ஆண்டு குஜராத்தின் அகமதாபாத்-புஜ் நகரங்களுக்கு இடையே நமோ பாரத் விரைவு ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதன் அடுத்தக்கட்டமாக, டெல்லியில் இருந்து உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் வரை 82 கிலோ மீட்டர் தூரத்தை இணைக்கும் நாட்டின் முதல் மண்டல அதிவேக போக்குவரத்து அமைப்பான நமோ பாரத் மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.டெல்லியின் சராய் கலே கான் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 82 கிலோ மீட்டர் தூரத்தில் மீரட்டில் உள்ள மோடிபுரம் ரயில் நிலையத்தை இந்த அதிவேக ரயில் சேவையின் மூலம் 55 நிமிடங்களில் சென்றடைலாம். அதாவது நமோ பாரத் விரைவு ரயிலால் அதிகபட்சமாக மணிக்கு 180 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல முடியும். தற்போது, முதற்கட்டமாக நமோ பாரத் ரயில் மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படுகிறது
3 பெட்டிகள் கொண்ட இந்த ரயிலில் 173 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக 700 பேர் வரை ஒரே நேரத்தில் இந்த ரயிலில் பயணிக்க முடியும். ஏசி, மெத்தை போன்ற இருக்கைகள், சார்ஜிங் வசதி, கண்காணிப்பு கேமராக்கள் போன்ற வசதிகளும் நமோ பாரத் ரயிலில் இடம்பெற்றுள்ளன.
இதில் 70 கிலோ மீட்டர் தொலைவுக்கு மேல்மட்ட பாலத்திலும், 12 கிலோமீட்டர் தூரம் சுரங்கப் பாதையிலும் நமோ ரயில் பயணிக்கும். மொத்தம் 16 ரயில் நிலையங்கள் கொண்ட இந்த வழித்தடத்தில், சுமார் 22 மீட்டர் உயரத்துடன் மிகப்பெரிய ரயில் நிலையம் என்ற பெருமையை சராய் கலே கான் நிலையம் பெற்றுள்ளது.
இதன் மற்றொரு சிறப்பம்சம் மீரட் மெட்ரோ நிறுவனம், தனது தண்டவாளங்கள் மற்றும் உட்கட்டமைப்புகளை நமோ பாரத் ரயிலுடன் பகிர்ந்துக் கொள்கிறது. இதன் மூலம் மெட்ரோவில் பயணிப்பவர்கள் ரயில் நிலையத்தில் இருந்து வெளியேறாமல் அதே ரயில் நிலையத்தில் நமோ பாரத் ரயிலில் ஏற முடியும். இந்த ரயிலில் டிக்கெட் கட்டணம் 20 ரூபாயில் இருந்து 210 ரூபாய் வரை தூரத்திற்கு ஏற்ப வசூலிக்கப்படுகிறது. மேலும், பெரும்பாலானோர் பணிக்கு செல்லக்கூடிய பீக் ஹவர்ஸில் 5 முதல் 10 நிமிடங்களுக்கு ஒரு ரயிலும், சாதாரண நேரங்களில் 15 நிமிடங்களுக்கு ஒரு ரயிலும் இயக்கப்பட உள்ளன.
இத்தகைய சிறப்பம்சங்களை கொண்ட அதிவேக நமோ பாரத் ரயில் நாடு முழுவதும் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம், நாட்டின் அதிவேக மெட்ரோ ரயில் சேவையான மீரட் மெட்ரோவையும் பிரதமர் மோடி பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய இந்த ரயில் தான் மெட்ரோ கட்டமைப்பில் அதிவேக கொண்ட ரயிலாகும்.
நாட்டின் முதல் அதிவேக நமோ பாரத் ரயில் சேவை தொடக்கம்.. மணிக்கு 120 கி.மீ., வேகம்.. 3 பெட்டிகள் கொண்ட இந்த ரயிலில் 173 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக 700 பேர் வரை ஒரே நேரத்தில் இந்த ரயிலில் பயணிக்க முடியும். ஏசி, மெத்தை போன்ற இருக்கைகள், சார்ஜிங் வசதி, கண்காணிப்பு கேமராக்கள் போன்ற வசதிகளும் நமோ பாரத் ரயிலில் இடம்பெற்றுள்ளன.
இதில் 70 கிலோ மீட்டர் தொலைவுக்கு மேல்மட்ட பாலத்திலும், 12 கிலோமீட்டர் தூரம் சுரங்கப் பாதையிலும் நமோ ரயில் பயணிக்கும். மொத்தம் 16 ரயில் நிலையங்கள் கொண்ட இந்த வழித்தடத்தில், சுமார் 22 மீட்டர் உயரத்துடன் மிகப்பெரிய ரயில் நிலையம் என்ற பெருமையை சராய் கலே கான் நிலையம் பெற்றுள்ளது.

Read More
அரசியல்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்

சாலை வழியாக வேலூர் வரும் விஜய்…

வேலூர் மாவட்டம் அகரம்சேரியில், தமிழக வெற்றி கழகத் தலைவர் நடிகர் விஜய் பங்கேற்கும் வேலூர் மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று (பிப். 23) எழுச்சியுடன் நடைபெறுகிறது. இதற்காக முள்ளிகொண்டா அருகே 33 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட மைதானம் தயார் செய்யப்பட்டுள்ளது. சுமார் 4,900 நிர்வாகிகள் பங்கேற்கும் இந்நிகழ்வில், பாதுகாப்பை உறுதி செய்ய அனைவருக்கும் க்யூஆர் (QR) கோடுடன் கூடிய நுழைவுச் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. அடிப்படை வசதிகளாக 50 கழிப்பறைகள் மற்றும் குடிநீர் வசதிகள் கேலரி வாரியாக செய்யப்பட்டுள்ளன. மேலும், 25 மருத்துவர்கள், 10 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் 100 தன்னார்வலர்கள் அடங்கிய குழுவினர் அவசர சிகிச்சை மற்றும் ஒருங்கிணைப்பு பணிகளுக்காக மைதானத்தில் தயார் நிலையில் உள்ளனர். நடிகர் விஜய்யின் இந்த வருகை வேலூர் மாவட்ட தொண்டர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.அவசர கால தேவைகளுக்காக 25 மருத்துவர்கள் அடங்கிய மருத்துவக் குழு மற்றும் 10 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதுதவிர, கூட்டத்தை முறைப்படுத்தவும் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்ளவும் 100-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.இந்த சந்திப்பில் பங்கேற்க மொத்தம் 4,900 நிர்வாகிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அனைவருக்கும் பிரத்யேக ‘க்யூஆர் கோடு’ (QR Code) கொண்ட அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இதனை ஸ்கேன் செய்த பிறகே நிர்வாகிகள் மைதானத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.கடந்த முறை சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெப்பம் காரணமாக ஒருவர் உயிரிழந்த நிலையில், அதனை கருத்தில் கொண்டு வேலூர் கூட்டத்தில் நிர்வாகிகள் அமரும் பகுதி முழுவதும் மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், மைதானத்தில் 50 தனித்தனி கழிப்பறை வசதிகள் மற்றும் ஒவ்வொரு கேலரியிலும் தடையின்றி குடிநீர் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவேலூர் மாவட்டம் அகரம்சேரி பகுதியில் சுமார் 33 ஏக்கர் பரப்பளவில் இந்த சந்திப்பிற்கான பிரம்மாண்ட மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. இன்று (பிப். 23) நண்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த நிகழ்வு நடைபெற உள்ளது. தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் இந்த கூட்டத்திற்காக மேடை மற்றும் தடுப்புகள் தயார் நிலையில் உள்ளன.

Read More
இந்தியாஉலகம்நிகழ்ச்சிகள்வணிகம்

சீனா உள்ளிட்ட நாடுகள் மீது புதிதாக 10% வரி விதிப்பு அமல்படுத்திய டிரம்ப்!

தனக்கு எதிராக தீர்ப்பளித்த 6 நீதிபதிகளால் முற்றிலும் வெட்கப்படுவதாக தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டிர்மப், சீனா உள்ளிட்ட நாடுகள் மீது புதிதாக 10 சதவீத வரி விதிப்பை அமல்படுத்தி உள்ளார்.
சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த கூடுதல் வரிகளுக்கு அமெரிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்தை மீறி சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு எதிராக சர்வதேச அவசர பொருளாதார அதிகார சட்டத்தை பயன்படுத்தி அதிபர் டொனால்ட் டிரம்ப் கடும் வரி விதிப்புகளை அமல்படுத்தினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ப்பட்டது. இந்த மனுவை 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்த நிலையில் அதில் 6 நீதிபதிகள் டிரம்ப்பின் வரி விதிப்புக்கு எதிராகவும், 3 நீதிபதிகள் ஆதரவாகவும் கருத்து தெரிவித்தனர்.இறுதியில் 6-க்கு 3 என்ற வாக்குகளின் அடிப்படையில் அமெரிக்க அதிபர் டிரம்பின் வரி விதிப்புகளுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. மேலும் நாடாளுமன்றத்தை மீறி தனிச்சையாக வரி விதிக்க டிரம்புக்கு அதிகாரமில்லை எனவும், சர்வதேச அவசர பொருளாதார அதிகார சட்டத்தை டிரம்ப் சட்டவிரோதமாக பயன்படுத்தியதாகவும் நீதிமன்றம் குற்றஞ்சாட்டியது.அமெரிக்க நீதிமன்றத்தின் உத்தரவால் அந்நாட்டு பங்குச் சந்தைகள் மீண்டும் எழுச்சியடையத் தொடங்கின. எஃகு, அலுமினியம், தினசரி நுகர்வு உள்ளிட்ட பொருட்களின் விலையும் கணிசமாக குறையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Read More
தமிழ்நாடுநிகழ்ச்சிகள்மாவட்டம்வணிகம்

தமிழ்நாடு பட்ஜெட்-முக்கிய அறிவிப்புகள்….

சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள சூழலில், 2026-27 ஆம் ஆண்​டுக்கான இடைக்​கால பட்​ஜெட்டை நிதியமைச்​சர் தங்​கம் தென்​னரசு இன்று தாக்கல் செய்​தார். வரும் 20ஆம் தேதி 2026-27ஆம் நிதிஆண்​டுக்​கான முன்பண மானிய கோரிக்​கை​யும், 2025-26ம் ஆண்​டுக்​கான கூடு​தல் செல​வின மானிய கோரிக்​கை​யும் தாக்கல்* மதிப்பு கூட்டு பொருட்களுக்காக ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. * சோழவந்தான் வெற்றிலை, பண்ருட்டி பலாப்பழம் உள்ளிட்ட 9 பொருட்களுக்கு புவிசார் குறியீடு. * 496 பட்டதாரி இளைஞர்கள், வேளாண் சார்ந்த தொழில்கள் தொடங்க மானியம் வழங்கப்பட்டுள்ளது. 20 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சிறுதானியங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன186 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்
* விவசாயிகளிடம் 5 ஆண்டுகளில் 186 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.175 கோடி செலவில் 3.4 லட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவில் வெங்காய சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

* இலவச தென்னங்கன்று வழங்க ரூ.78.42 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆதி திராவிட விவசாயிகளுக்கு ரூ.62 கோடியில் திட்டங்கள். அரசின் திட்டங்களால் 17,035 ஆதி திராவிட விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

* 15 புதிய உழவர் சந்தைகள் அமைக்கப்பட்டுள்ளன. ரூ.27 கோடியில் குளிர்பதன கிடங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
கலைஞர் வேளாண் வளர்ச்சித் திட்டம் * அனைத்து கிராமங்களிலும் வேளாண் வளர்ச்சி அடையும் விதமாக, கலைஞர் வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டு இருக்கிறது. இதன்படி 10,000 சிறுபாசன குளங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. விரைவில் வேளாண் காடுகள் கொள்கை வெளியிடப்பட இருக்கிறது.ரூ.20 ஆயிரம் கோடி நிவாரணம் * பயிர் சேதங்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடி நிவாரணம் வழங்கப்பட்டு இருக்கிறது. பயிர் சேத நிவாரணத்தால் 25 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர் – அமைச்சர் பன்னீர்செல்வம்

ரூ.500 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு செமிகண்டக்டர் இயக்கம் நடைமுறைப்படுத்தப்படும்- தங்கம் தென்னரசு தரமணியில் மேம்பட்ட செமிகண்டக்டர் தொழில்நுட்ப மையம் அமைக்கப்படுகிறது-
8 லட்சம் வீடுகள் இலக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கூடுதலாக ஒரு லட்சம் வீடுகள் கட்டி தரப்படும். தற்போது வரை 1.71 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. அடுத்த 2030 ஆண்டுக்குள் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மாற்றுத் திறனாளிகள்,கனவரால் கைவிடப்பட்டோர், முதியோர் உதவித் தொகைக்காக ரூ.5,463 கோடி ஒதுக்கீடு தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் மூலம் இதுவரை 5,40,511 மாணவர்கள் ரூ.1000 பெறுகிறார்கள் புதுமைப்பெண் திட்டத்தில் 6,95,296 மாணவிகள் பயனடைந்து வருகிறார்கள் தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 38 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளன உயர் கல்வித் துறைக்கு ரூ.8,505 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

ரூ.902 கோடியில் நெல்லை, கோவை, திருச்சியில் நவீன நூலகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன – தங்கம் தென்னரசு பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.48,534 கோடிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

சோழர் அருங்காட்சியம், நவாய் அருங்காட்சியம், நொய்யல் அருங்காட்சியம் என மொத்தம் ரூ.285 கோடியில் அருங்காட்சியங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. உலகத் தரத்தில் கீழடி மற்றும் பொருநை அருங்காட்சியம் திறந்து வைக்கப்பட்டு பெரிய வரவேற்றை பெற்றுள்ளது.

ரூ.902 கோடியில் நெல்லை, கோவை, திருச்சியில் நவீன நூலகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன – தங்கம் தென்னரசு பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.48,534 கோடிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

1. பட்ஜெட்டில் வெளியிட்ட அறிவிப்பின்படி, கடந்த 01.01.2020 முதல் 31.12.2021 வரை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அகவிலைப்படி உயர்வை மீண்டும் வழங்கப்பட்டது.

2. அதே போன்று ஈட்டிய விடுப்பினை ஒப்படைப்பு செய்து பணமாகப் பெற்றுக்கொள்ளும் நடைமுறையை மீண்டும் செயல்படுத்தப்பட்டது.

3. அரசுப் பணியாளர்கள் விபத்தில் உயிரிழக்க நேர்ந்தால் ஒரு கோடி ரூபாயும், இயற்கை மரணமடைந்தால் பத்து இலட்சம் ரூபாயும், அவர்கள் குடும்பத்தினர் பெறும் வகையில் வங்கிகள் மூலம் ஆயுள் காப்பீடு செய்யப்பட்டுள்ளது.

4. பணியிடை மரணமடையும் அரசு அலுவலர்களின் குழந்தைகளுக்கு ஐந்து முதல் பத்து இலட்சம் ரூபாய் வரை திருமணச் செலவிற்கான நிதியுதவி வழங்கப்படுகிறது. உயர்கல்வி உதவியாக பத்து இலட்சம் ரூபாயும், 5. அரசு அலுவலர்களின் குழந்தைகளுக்கு தொழிற்கல்வி பயில முன்பணம் ஒரு இலட்சம் ரூபாயாகவும், கலை மற்றும் அறிவியல் கல்வி பயில முன்பணம் ஐம்பதாயிரம் ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது.

6. அரசுப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் திருமண முன்பணம் ஐந்து இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டது.

7. அரசுப் பணியாளர்களுக்கான பண்டிகை முன்பணத்தை இருபதாயிரம் ரூபாயாகவும், ஓய்வூதியதாரர்களுக்கான பண்டிகை முன்பணத்தை ஆறாயிரம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்பட்டது.

8. ஓய்வூதியதாரர்களுக்கான பொங்கல் பரிசுத் தொகையை ஆயிரமாக உயர்த்தி வழங்கப்பட்டது.

9. பெண் அரசு அலுவலர்களின் மகப்பேறு விடுப்பை 9 மாதத்திலிருந்து 12 மாதங்களாக உயர்த்தப்பட்டது.

10. இவை அனைத்திற்கும் மகுடமாய் அமையும் வகையில், அரசுப் பணியாளர்களின் இருபத்து இரண்டாண்டு கால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், அவர்களுக்கான ‘தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தினை’ இந்த அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், ஓய்வு பெறும் அரசுப் பணியாளர்கள், பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு நிகரான ஓய்வூதியப் பலன்களைப் பெறுவார்கள்.

11. அரசு அலுவலர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற இத்திட்டத்தில், கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட மாத ஓய்வூதியம், அரசு அலுவலர்களுக்கு வழங்கப்படுவதற்கு இணையான அகவிலைப்படி உயர்வு, குடும்ப ஓய்வூதியம், குறைந்தபட்ச ஓய்வூதியம், ஓய்வூதியத்தில் ஒரு பகுதியை மொத்தமாகப் பெறும் வசதி மற்றும் இறப்பு மற்றும் ஓய்வுக்காலப் பணிக்கொடை ஆகிய பலன்கள் அடங்கியுள்ளன.

12. இந்த இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் இத்திட்டத்தினைச் செயல்படுத்துவதற்கான அரசின் கூடுதல் பங்களிப்பிற்கென ஒட்டுமொத்தத் தொகையாக 11,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: தமிழக இடைக்கால பட்ஜெட் 2026: பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.48,534 ஒதுக்கீடு! மாணவர்களுக்கு ஜாக்பாட்..மற்றும் பல முக்கிய திட்டங்களை அறிவித்தார் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு

Read More
தமிழ்நாடுநிகழ்ச்சிகள்மாவட்டம்

இன்று இடைக்கால பட்ஜெட்டில்-மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000 ஆகுமா…

தமிழ்நாட்டில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள சூழலில், 2026-27 ஆம் ஆண்​டுக்கான இடைக்​கால பட்​ஜெட்டை நிதியமைச்​சர் தங்​கம் தென்​னரசு இன்று தாக்கல் செய்​கிறார். வரும் 20-ஆம் தேதி 2026-27ஆம் நிதி ஆண்​டுக்​கான முன்பண மானிய கோரிக்​கை​யும், 2025-26ம் ஆண்​டுக்​கான கூடு​தல் செல​வின மானிய கோரிக்கையும் தாக்கல் செய்​யப்​படு​கின்​றன.தற்போது குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் சில முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் எனத் தெரிகிறது. இந்தத் தொகை இரண்டாயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என ஏற்கெனவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதற்கான அறிவிப்பும், பயனாளிகளின் எண்ணிக்கையை உயர்த்துவது குறித்த அறிவிப்பும் இடைக்கால பட்ஜெட்டில் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் நேரமென்பதால் அரசு ஊழியர்களைக் கவரும் வகையில், தமிழ்நாடு அரசு அண்மையில் அறிவித்த உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் குறித்த குழுவின் அறிக்கை பற்றிய தகவல்கள் வெளியிடப்படலாம். கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு நிராகரித்த நிலையில், மாநில அரசே செயல்படுத்துவது குறித்தும், மகளிருக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டத்தை விரிவுபடுத்துதல், புதிய மின்சாரப் பேருந்துகளை அறிமுகப்படுத்துதல் ஆகியவை குறித்தும் அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் சாலை மற்றும் மேம்பாலப் பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என கூறப்படுகிறது. ‘உங்க கனவை சொல்லுங்க’ என்ற முதலமைச்சரின் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளித்து புதிய சலுகைகள் வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டத்தை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் முழுமையாக விரிவாக்கம் செய்வதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.தற்போது குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் சில முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் எனத் தெரிகிறது. இந்தத் தொகை இரண்டாயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என ஏற்கெனவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதற்கான அறிவிப்பும், பயனாளிகளின் எண்ணிக்கையை உயர்த்துவது குறித்த அறிவிப்பும் இடைக்கால பட்ஜெட்டில் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read More
தமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்மாவட்டம்

சர்வதேச தரத்தில் மெரினா கடற்கரை…

மெரினா கடற்கரையில் நடைபெற்றுவரும் 2-ம் கட்ட ‘ப்ளூ பிளாக்’ (Blue Flag) திட்டப் பணிகள் நிறைவடையும் நிலையில், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக பிப்.22-ம் தேதி இத்திட்டம் திறக்கப்பட உள்ளது. பிப்.17-ம் தேதி திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சில சிறிய பணிகள் நிலுவையில் உள்ளதால் திறப்பு விழா சற்று தள்ளி வைக்கப்பட்டுள்ளது.”குழந்தைகளுக்கான விளையாட்டுப் பகுதி அமைக்கும் பணி இன்னும் முழுமையடையவில்லை. ஆரம்பத்தில் 2 விளையாட்டுப் பகுதிகள் அமைக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. மாநகராட்சி ஆணையரின் அறிவுறுத்தலின்பேரில், தற்போது அது 4 விளையாட்டுப் பகுதிகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

விவேகானந்தர் இல்லத்திற்கு எதிரே உள்ள கடற்கரைப் பகுதியில், சர்வதேச ‘ப்ளூ பிளாக்’ தரநிலைகளை எட்டும் நோக்கில், சுமார் ரூ.7 கோடி மதிப்பீட்டில் இந்த 2-ம் கட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கட்டம்-1ஐ விட, இந்த பகுதியில் மணற்பரப்பு அகலமாகத் தக்கவைக்கப்பட்டு, கடற்கரை காட்சியை ரசிக்கும் வகையிலும், பார்வையாளர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் கூடுதலாகச் செய்யப்பட்டுள்ள வசதிகளானவை; 60 மூங்கில் இருக்கைகள் மற்றும் 30 மூங்கில் குடைகள், 4 கண்காணிப்பு கோபுரங்கள் மற்றும் 4 குழந்தைகள் விளையாட்டுப் பகுதிகள், 2 படிப்பகங்கள் (Study zones) மற்றும் 2 செல்பி புள்ளிகள் உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட்டுள்ளன.

பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்கும் நடவடிக்கையாக மூங்கில் குப்பைக் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், பெண்கள் மற்றும் ஆண்களுக்கென தனித்தனியான, உள்ளடக்கிய கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், கல்வி முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், மாநில பள்ளிக்கல்வித் துறை சார்பில் சிலை அமைப்பதற்கான அடித்தளப் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

Read More
IPL - 2020இந்தியாதமிழ்நாடுநிகழ்ச்சிகள்விளையாட்டு

பாகிஸ்தானை பந்தாடிய இந்திய அணி; 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

இன்றைய போட்டியில் டாஸ் போடும் போது இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ்வும், பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகாவும் கைகுலுக்கவில்லை. ஆசியக் கோப்பையிலும் இந்திய – பாகிஸ்தான் கேப்டன்கள் கைகுலுக்கவில்லை. இது டி20 உலகக்கோப்பையில் தொடர்கிறது.

டி20 உலகக் கோப்பையில் உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா, பாகிஸ்தான் போட்டி கொழும்பு பிரேமதேச மைதானத்தில் தொடங்கியுள்ளது. டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா தங்கள் அணி முதலில் பவுலிங் செய்யும் என அறிவித்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

யாரும் எதிர்பார்க்காத வகையில் சல்மான் ஆகா முதல் ஓவரை வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தில் அபிஷேக் சர்மா ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். அடுத்து இஷான் கிஷன் உடன் திலக் வர்மா ஜோடி சேர்ந்தார். திலக் வர்மா நிதானமாக விளையாட, இஷான் கிஷன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் இந்தியா பவர்பிளேயில் 1 விக்கெட் இழப்பிற்கு 52 ரன்கள் எடுத்தது.

7-வது ஓவரை அப்ரார் வீசினார். இந்த ஓவரின் முதல் 2 பந்துகளை பவுண்டரிக்கு விரட்டி 27 பந்தில் அரைசதம் விளாசினார் இஷான் கிஷன். அத்துடன் அடுத்த பந்தை பவுண்டரி தூக்கினார். அவர் 2 சிக்ஸ், 7 பவுண்டரியுடன் அரைசதம் விளாசினார். 9-வது ஓவரை சயீம் ஆயுப் வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தில் பவுண்டரி அடித்த இஷான் கிஷன் அடுத்த பந்தில் க்ளீன் போல்டானார். அவர் 40 பந்தில் 77 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். அப்போது இந்தியா 8.4 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 88 ரன்கள் எடுத்திருந்தது.

3-வது விக்கெட்டுக்கு திலக் வர்மா உடன் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். 12-வது ஓவரை முகமது நவாஸ் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை திலக் வர்மா சிக்சருக்கு தூக்கினார். இதன் மூலம் இந்தியா 11.1 ஓவரில் 100 ரன்களை கடந்தது. 11.1 ஓவரில் 100 ரன்னைக் கடந்த இந்தியா 14 ஓவரில் 125 ரன்னைத் தொட்டது. 15-வது ஓவரை சயீம் ஆயுப் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் திலக் வர்மா ஆட்டமிழந்தார். அவர் 24 பந்தில் 25 ரன்கள் எடுத்தார். 4-வது விக்கெட்டுக்கு சூர்யகுமார் யாதவ் உடன் ஹர்திக் பாண்ட்யா ஜோடி சேர்ந்தார். ஹர்திக் பாண்ட்யா முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். இந்தியா அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதனால் இந்தியா 14.3 ஓவரில் 126 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுக்களை இழந்தது.

19-வது ஓவரை உஸ்மான் தாரீக் வீசினார். இந்த ஓவரின் 5-வது பந்தில் சூர்யகுமார் யாதவ் ஆட்டமிழந்தார். இவர் 29 பந்தில் 32 ரன்கள் எடுத்தார். அப்போது இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்திருந்தது. 19-வது ஓவரில் தாரீக் 5 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். கடைசி ஓவரை ஷாஹீன் அப்ரிடி வீசினார். முதல் பந்தை ஷிவம் துபே பவுண்டரிக்கு விரட்டினார். 2-வது பந்தில் ஒரு ரன் எடுத்தார். 3-வது பந்தை ரிங்கு சிங் பவுண்டரிக்கு விரட்டினார். 4-வது பந்தை சிக்கருக்கு தூக்கினார். 5-வது பந்தில் 2-வது ரன்னுக்கு ஓட முயன்றபோது ஷிவம் துபே ரன்அவுட் ஆனார். கடைசி பந்தை அக்சர் படேல் சந்தித்தார். அதில் ஆட்டமிழந்தார். இதனால் இந்தியா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் குவித்தது.

பின்னர் 176 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணியின் சகிப்சதா ஃபர்ஹான், சயீம் ஆயுப் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை ஹர்திக் பாண்ட்யா வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தில் ஃபர்ஹான் ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

அடுத்து சல்மான் ஆகா களம் இறங்கினார். 2-வது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை ஆயுப் சிக்சருக்கு தூக்கினார். 2-வது பந்தில் எல்.பி.பி.டபிள்யூ ஆனார். 5-வது பந்தில் பவுண்டரி அடித்த சல்மான் ஆகா, கடைசி பந்தில் ஹர்திக் பாண்ட்யாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதனால் பாகிஸ்தான் 13 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. அடுத்த வந்த பாபர் அசாம் 5 ரன்னில் அக்சர் படேல் பந்தில் வெளியேறினார்.

விக்கெட் கீப்பர் உஸ்மான் கான் சிறப்பாக விளையாடி 34 பந்தில் 44 ரன்கள் எடுத்து அக்சர் படேல் பந்தில் ஸ்டம்பிங் ஆனார். அதன்பின் பாகிஸ்தான விக்கெட்டுகள மளமளவென சரிந்தது. இதனால் பாகிஸ்தான் 18 ஓவரில் 114 ரன்களில் ஆல்அவுட் ஆகி 61 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. பும்ரா, அக்சர் படேல், வருண் சக்ரவர்த்தி, ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் இந்தியா 3 போட்டிகளில் வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. தொடக்கம் முதலே துல்லியமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்கரவர்த்தி மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோரின் பங்களிப்பால் இந்தியா இந்த வெற்றியை வசப்படுத்தியுள்ளது. இந்திய அணியின் வெற்றியை நாடு முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

பிளேயிங் லெவன் வீரர்கள் பட்டியல்:

இந்தியா: சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், திலக் வர்மா, சூரியகுமார் யாதவ் (கேப்டன்), ஷிவம் துபே, ஹர்திக் பாண்டியா, ரின்கு சிங், அக்சர் படேல், வருண் சகரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங்.

பாகிஸ்தான்: சைம் அயூப், சாஹிப்சாதா ஃபர்ஹான், சல்மான் ஆகா (கேப்டன்), பாபர் அசாம், உஸ்மான் கான் (விக்கெட் கீப்பர்), ஷதாப் கான், முகமது நவாஸ், ஃபஹீம் அஷ்ரஃப், ஷஹீன் அப்ரிடி, உஸ்மான் தாரிக், அப்ரார் அகமது.61 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி
டி20 உலகக் கோப்பையின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆட்டத்தில், இந்திய அணி பாகிஸ்தானை 61 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது. ஆட்டத்தின் இறுதிவரை ஆதிக்கம் செலுத்திய இந்தியப் பந்துவீச்சாளர்கள், பாகிஸ்தான் அணியை 114 ரன்களுக்குச் சுருட்டினர்.

Read More
தமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்மாவட்டம்

மகளிரின் வங்கிக் கணக்குகளில் தலா ரூ.5,000 …

ஒரு கோடியே 31 லட்சம் மகளிரின் வங்கிக் கணக்குகளில் தலா 5 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படுவதாகவும், அடுத்த 3 மாத உரிமைத் தொகையாக மூவாயிரம் ரூபாயும், கோடைக்கால சிறப்பு தொகுப்பாக 2 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்புக்கு திமுக கூட்டணி கட்சியினர் உள்ளிட்டோர் வரவேற்பு தெரிவித்திருந்தாலும் எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பை பதிவுசெய்துவருகின்றனர். இந்நிலையில் ரூ.5,000 முன்பே வரவு வைக்கப்பட்டது ஏன்? என்பது குறித்து அரசு தரப்பு விளக்கமளித்துள்ளது. அதன்படி மே மாதம் வரை மட்டுமே இந்த ஆட்சிக்கான அதிகாரம் என்பதால் அடுத்த 3 மாதங்களுக்கு வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும், இலவசங்கள் தொடர்பான வழக்கு மார்ச் மாதம் முதல் வாரத்தில் விசாரணைக்கு வருவதால் முன்கூட்டியே வரவு வைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் இந்த திடீர் நடவடிக்கை துணை முதலமைச்சர் உதயநிதி, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் முக்கிய அதிகாரிகள் உள்பட 7 பேரை தவிர்த்து மற்ற யாரும் அறிந்திருக்கவில்லை எனக் கூறப்படுகிறது. ஏன், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் உள்பட இரண்டாம் கட்ட அமைச்சர்கள், அரசின் முக்கியத் துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் அறிந்திருக்கவில்லை எனத் தெரியவந்துள்ளது.
வங்கிகளின் அலுவல் நேரம் தொடங்குவதற்கு முன்பாகவே மகளிரின் வங்கிக் கணக்குகளில் பணம் வரவு வைக்கப்பட்ட நிலையில், அதற்காக 8 தேசிய வங்கிகளுக்கு முதல் நாளே அலர்ட் கொடுக்கப்பட்டு 750 பேட்ஜ்களாக பணம் வரவு வைக்கப்பட்டது தெரியவந்துள்ளது. காலை 6 மணி முதல் 11 மணிக்குள் மகளிரின் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்ட நிலையில், வீடியோ வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின், திமுக மீண்டும் ஆட்சி அமைத்தால் மகளிர் உரிமைத் தொகையை 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என மற்றொரு இன்ப அதிர்ச்சியை மகளிருக்கு வாக்குறுதியாக அளித்தார்.
முதலமைச்சரின் அந்த வீடியோவும் யாரும் அறிந்திராத வண்ணம் ரகசியமாக பதிவு செய்யப்பட்டு வெளியிடப்பட்டதாக தெரிய வந்துள்ளது. பிகாரில் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு தொழில்முனைவோருக்கான திட்டங்களை அறிவித்து, மகளிரின் வங்கி கணக்கில் 10 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டது. ஆனால், மகாராஷ்ட்ராவில் உள்ளாட்சி தேர்தலை காரணம் காட்டி, மகளிருக்கு மாதந்தோறும் வழங்கப்படும் ஆயிரத்து 500 ரூபாயை முன்கூட்டியே வழங்க தேர்தல் ஆணையம் தடை விதித்தது.வழக்கமாக மாதந்தோறும் 15ஆம் தேதிக்குள் மகளிர் உரிமைத் தொகை வரவு வைக்கப்படும் நிலையில், பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் 15 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையாகவும் அதற்கு முதல் நாளான இரண்டாவது சனிக்கிழமை வங்கி விடுமுறை என்பதையும் கருத்தில் கொண்டு இரண்டு நாட்களுக்கு முன்பே பணத்தை வரவு வைத்து தனது அரசியல் சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை வெற்றிகரமாக முதலமைச்சர் ஸ்டாலின் செயல்படுத்தியுள்ளார்.

Read More