us

இந்தியாஉலகம்நிகழ்ச்சிகள்வணிகம்

சீனா உள்ளிட்ட நாடுகள் மீது புதிதாக 10% வரி விதிப்பு அமல்படுத்திய டிரம்ப்!

தனக்கு எதிராக தீர்ப்பளித்த 6 நீதிபதிகளால் முற்றிலும் வெட்கப்படுவதாக தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டிர்மப், சீனா உள்ளிட்ட நாடுகள் மீது புதிதாக 10 சதவீத வரி விதிப்பை அமல்படுத்தி உள்ளார்.
சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த கூடுதல் வரிகளுக்கு அமெரிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்தை மீறி சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு எதிராக சர்வதேச அவசர பொருளாதார அதிகார சட்டத்தை பயன்படுத்தி அதிபர் டொனால்ட் டிரம்ப் கடும் வரி விதிப்புகளை அமல்படுத்தினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ப்பட்டது. இந்த மனுவை 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்த நிலையில் அதில் 6 நீதிபதிகள் டிரம்ப்பின் வரி விதிப்புக்கு எதிராகவும், 3 நீதிபதிகள் ஆதரவாகவும் கருத்து தெரிவித்தனர்.இறுதியில் 6-க்கு 3 என்ற வாக்குகளின் அடிப்படையில் அமெரிக்க அதிபர் டிரம்பின் வரி விதிப்புகளுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. மேலும் நாடாளுமன்றத்தை மீறி தனிச்சையாக வரி விதிக்க டிரம்புக்கு அதிகாரமில்லை எனவும், சர்வதேச அவசர பொருளாதார அதிகார சட்டத்தை டிரம்ப் சட்டவிரோதமாக பயன்படுத்தியதாகவும் நீதிமன்றம் குற்றஞ்சாட்டியது.அமெரிக்க நீதிமன்றத்தின் உத்தரவால் அந்நாட்டு பங்குச் சந்தைகள் மீண்டும் எழுச்சியடையத் தொடங்கின. எஃகு, அலுமினியம், தினசரி நுகர்வு உள்ளிட்ட பொருட்களின் விலையும் கணிசமாக குறையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Read More
இந்தியாஉலகம்நிகழ்ச்சிகள்வணிகம்

சீனா மீதான வரி 10% குறைப்பு.. அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு!

தென்கொரியாவில் உள்ள புசான் (BUSAN) நகரில் சீன அதிபர் ஷி ஜின்பிங் – அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோர் சந்தித்துக் கொண்டனர். இந்த சந்திப்பு ஒரு மணி நேரம் 40 நிமிடம் நடைபெற்றது.
அதிபர் ஷி ஜின்பிங் உடனான சந்திப்புக்குப் பிறகு சீனப் பொருட்கள் மீதான வரி 10 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற டிரம்ப், பல்வேறு நாடுகளின் மீது வரி விதிப்பை மேற்கொண்டார். இது உலக நாடுகளின் வர்த்தகத்தை பெரிதும் பாதித்தது.
இந்த நிலையில், தென்கொரியாவில் உள்ள புசான் (BUSAN) நகரில் சீன அதிபர் ஷி ஜின்பிங் – அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோர் சந்தித்துக் கொண்டனர். இந்த சந்திப்பு ஒரு மணி நேரம் 40 நிமிடம் நடைபெற்றது.
வரி விதிப்பு, ஏற்றுமதி கட்டுப்பாடுகள் உள்ளிட்டவற்றால் இருநாடுகள் இடையே நிலவிய வர்த்தகப் போரின் பதற்றத்தைத் தணிக்க இருநாட்டுத் தலைவர்களும் சந்தித்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
இந்த சந்திப்பிற்குப் பிறகு, சீனப் பொருட்கள் மீதான வரி 10 சதவிகிதம் குறைப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். இது உடனே நடைமுறைக்கு வருவதாகவும் கூறினார். இதற்கு முன்பாக, சீனப் பொருட்களுக்கு 57 சதவிகிதம் வரி விதிக்கப்பட்டு வந்தது. அது தற்போது 10 சதவிகிதம் குறைக்கப்பட்டு 47 சதவிகிதமாக உள்ளது.

Read More
அரசியல்இந்தியாஉலகம்வணிகம்

வர்த்தக ஒப்பந்தம் செய்யாவிட்டால் 155% வரி’…டிரம்ப் எச்சரிக்கை

சீன அதிபர் ஜி ஜின்பிங் அமெரிக்காவுடன் ஒரு நியாயமான வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டால் , சீனா 155% வரை வரிகளை எதிர்கொள்ள நேரிடும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப், சீனாவுடன் ஒரு “நியாயமான வர்த்தக ஒப்பந்தம்” எட்டப்படாவிட்டால், அந்நாட்டு பொருட்கள் மீது 155% வரை வரி விதிக்க நேரிடும் என்று பகிரங்கமாக எச்சரித்துள்ளார். வர்த்தகப் பேச்சுவார்த்தை மேசையில் தீர்க்கப்பட வேண்டிய தனது முக்கியக் கோரிக்கைகளான அரிதான கனிமங்கள், ஃபெண்டானில் மற்றும் சோயாபீன்ஸ் ஆகியவற்றை அவர் பட்டியலிட்டார்.
அமெரிக்க வெள்ளை மாளிகையில் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் உடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, அதிபர் டிரம்ப் கூறியதாவது: சீனா மீது அமெரிக்கா மிகவும் மரியாதையுடன் நடந்து கொண்டது. ஆனால் தனது நிர்வாகம் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளை பொறுத்துக்கொள்ளாது. சீனா எங்களை மிகவும் மதிக்கிறது என்று நான் நினைக்கிறேன்.
அவர்கள் 55% வரி செலுத்துகிறார்கள் என்பது உங்களுக்கு தெரியும். இது நிறைய பணம். தற்போது அவர்களுக்கு புதிய வரிகளை விதிக்கலாம். அதிபர் ஜி ஜின்பிங் அமெரிக்காவுடன் ஒரு நியாயமான வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டால், நவம்பர் 1ம் தேதி முதல் சீனா 155% வரை வரிகளை எதிர்கொள்ள நேரிடும். அமெரிக்கா புதிய ஏற்றுமதி தடைகளை விதிக்கும் என்றார் டிரம்ப்.

பல நாடுகள் முன்பு அமெரிக்காவை சாதகமாகப் பயன்படுத்தின, ஆனால் அந்த சகாப்தம் முடிந்துவிட்டது. அவர்களால் இனி சாதகமாகப் பயன்படுத்த முடியாது. வாஷிங்டன் தனது வர்த்தகப் பங்காளிகளுடன் வர்த்தக ஒப்பந்தங்கள் மேற்கொண்ட பிறகு இப்போது யாரும் சாதகமாகப் பயன்படுத்துவதில்லை என்றும் டிரம்ப் குறிப்பிட்டார். சீன அதிபர் ஜி ஜின்பிங்கைச் சந்திக்கத் தயாராக இருப்பதாக குறிப்பிட்ட டிரம்ப், “எங்களுக்கு மிக சிறந்த உறவு உள்ளது இன்னும் 2 வாரங்களில் தென் கொரியாவில் நாங்க சந்திப்போம்” என்றார்.
வரவிருக்கும் ஜி ஜின்பிங்குடனான சந்திப்பு குறித்து நம்பிக்கை தெரிவித்த டிரம்ப், “எங்களிடம் எல்லாவற்றிலும் சிறந்தது உள்ளது, யாரும் அதைச் சீர்குலைக்கப் போவதில்லை… நாங்கள் மிகவும் வலுவான வர்த்தக ஒப்பந்தத்துடன் முடிப்போம் என்று நினைக்கிறேன். இருவருமே மகிழ்ச்சியாக இருப்போம்,” என்று மேலும் கூறினார்.

டிரம்ப் வெள்ளை மாளிகையில் இந்தக் கருத்துக்களை வெளியிட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, உலக வர்த்தக அமைப்பிற்கான (WTO) நிரந்தரப் பிரதிநிதியாக இருந்த முக்கிய வர்த்தகப் பேச்சுவார்த்தையாளர் லி செங்காங்கை நீக்கிவிட்டதாக சீனா உறுதிப்படுத்தியது. அவருக்குப் பதிலாக லி யோங்ஜி நியமிக்கப்பட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

Read More
அரசியல்இந்தியாஉலகம்தமிழ்நாடுதொழில்நுட்பம்

H1B visa பிரச்னை ஆபத்தில் ஐ.டி சட்டப்பூர்வ குடியேற்றத்தை பாதுகாக்க இந்தியா வலியுறுத்தல்..

அமெரிக்கா முதலில்’ என்ற கொள்கைக் காலத்தில், H-1B விசாக்களுக்கு எதிராக அமெரிக்கா மிகக் கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ள போதிலும், இந்தியா தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. திறமையான தொழிலாளர்கள் மட்டுமின்றி, ஒட்டுமொத்த சட்டப்பூர்வ குடியேற்றத்தையும் பாதுகாக்கும் விதமாக, தெற்காசிய நாடான இந்தியா தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளது. குறிப்பாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், குடியேற்றம் சாராத இந்தப் பணி விசா பிரிவை கடுமையாக மாற்றி அமைத்ததற்கும், கடுமையான விதிமுறைகளைக் கொண்டு வந்ததற்கும் எதிராக இந்தியா பேசியுள்ளது.
புது டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரண்தீர் ஜெய்ஸ்வால், H-1B விசாக்கள் மூலம் திறமையான பணியாளர்கள் வந்து செல்வதால், இந்திய மற்றும் அமெரிக்கப் பொருளாதாரம் நீண்ட காலமாகப் பலன் அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், “திறமையானவர்களின் நடமாட்டமும் பரிமாற்றங்களும் அமெரிக்காவிலும் இந்தியாவிலும் தொழில்நுட்ப வளர்ச்சி, புதுமை, பொருளாதார வளர்ச்சி, போட்டித்தன்மை மற்றும் செல்வத்தை உருவாக்குதல் ஆகியவற்றில் மகத்தான பங்களிப்பை அளித்துள்ளன,” என்று குறிப்பிட்டார். டிரம்ப் நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்ட புதிய H-1B மாற்றங்கள் குறித்த கேள்விக்கு, “இது இன்னும் வளர்ந்து வரும் ஒரு சூழ்நிலை. நாங்கள் பல்வேறு மட்டங்களில் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம்,” என்று பதிலளித்தார்.
ரஷ்யா-உக்ரைன் போருக்கு மத்தியில் இரு நாடுகளும் வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்த அதே வாரத்தில், வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் அமெரிக்காவில் “ஆக்கபூர்வமான சந்திப்புகள்” நடந்த சமயத்தில் இந்தக் கருத்து வெளிவந்துள்ளது. மேலும், அமெரிக்க அதிபர் புதிய H-1B விண்ணப்பங்களுக்கு 100,000 டாலர் கட்டணத்தை விதிக்கும் பிரகடனத்தில் கையெழுத்திட்ட சில நாட்களுக்குப் பிறகு இந்தக் கருத்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க அதிபரின் இந்த முடிவால், கடந்த ஆண்டு H-1B விசா பெற்றவர்களில் 70%-க்கும் அதிகமானோர் இந்திய நாட்டவர்கள் என்பதால், வேறு எந்தக் குழுவையும் விட இந்தியர்கள் மிக அதிகமாகப் பாதிக்கப்படுவார்கள். இந்தியாவின் தொழில்நுட்பத் துறைக்கு 280 டாலர் பில்லியன் ஆதரவு இருக்கும் நிலையில், அமெரிக்க அரசு அமெரிக்கப் பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்க விரும்புவதால், ஆயிரக்கணக்கான வேலைகள் இப்போது ஆபத்தான சூழலில் உள்ளன. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஆட்குறைப்பு மற்றும் பணிநீக்கங்கள் நடந்து வரும் நிலையில், இந்த விசா மாற்றங்கள் மேலும் ஒரு பின்னடைவாக அமையுமோ என்று ஊழியர்கள் அஞ்சுகின்றனர்.
பல அமெரிக்கச் சட்டமியற்றுபவர்கள் சமூக ஊடகங்களில் திறமையானவர்களுக்கான இந்த விசா வகையைப் பற்றித் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். சிலர் H-1B விசா துஷ்பிரயோகம் என்றும், சிலர் அமெரிக்க வல்லுநர்களுக்கான வாய்ப்புகளைப் பறிக்கும் மோசமான செயல் என்றும் குறிப்பிடுகின்றனர்.

குடியரசுக் கட்சியின் அமெரிக்க செனட்டர் எரிக் ஷிமிட் இந்த மாத தொடக்கத்தில், “அமெரிக்காவை ‘போட்டித்தன்மை’ மிக்கதாக வைத்திருக்க H-1B விசா விற்கப்பட்டது. அதற்குப் பதிலாக, அது அமெரிக்கத் தொழிலாளர்களை மாற்றுவதற்காக மில்லியன் கணக்கான வெளிநாட்டினரை இறக்குமதி செய்துள்ளது. மேலும், முழுத் தொழில்களையும் வெளிநாட்டு லாபியிஸ்ட்டுகளின் கைகளில் ஒப்படைத்துள்ளது,” என்று சட்டப்பூர்வ குடியேற்றத்தையும் குறை கூறினார்.

விசா மாற்றத்தின் அதிர்வலைகள் வேலைவாய்ப்புச் சூழலில் தாக்கத்தை ஏற்படுத்துவதன் அறிகுறிகள் இப்போதே தெரிய ஆரம்பித்துவிட்டன. H-1B கட்டணம் அவற்றின் வருவாயைப் பாதித்துள்ளதால், இந்தியாவில் உள்ள மென்பொருள் ஏற்றுமதியாளர்கள் ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு மிக மோசமான வாரத்திற்குத் தயாராகி வருவதாக ப்ளூம்பெர்க் இந்த வாரம் செய்தி வெளியிட்டுள்ளது. தேசிய பங்குச் சந்தையில் (NSE) பட்டியலிடப்பட்ட பல தகவல் தொழில்நுட்பப் பங்குகள் இந்த வாரம் வியாழக்கிழமை வரை 5.6% சரிந்து, கிட்டத்தட்ட ஆறு மாதங்களில் மிக முக்கியமான வீழ்ச்சியைக் குறித்தது. ஒட்டுமொத்தமாக, நிஃப்டி ஐடி குறியீட்டில் உள்ள பத்து உறுப்பினர்களும் இந்த வாரம் மட்டும் 21 டாலர் மில்லியனுக்கும் அதிகமான சந்தை மதிப்பை இழந்துள்ளனர். டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் லிமிடெட் (TCS) மற்றும் இன்போசிஸ் லிமிடெட் ஆகியவை இந்தச் சரிவில் பெரும்பங்கு வகித்தன.

Read More
அரசியல்இந்தியாஉலகம்நிகழ்ச்சிகள்

இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள அபராத வரி ரத்து? – பொருளாதார ஆலோசகர்…

இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள அபராத வரி அடுத்த மாதம் ரத்து செய்யப்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ள தலைமை பொருளாதார ஆலோசகர் ஆனந்த நாகேஸ்வரன், இறக்குமதி வரி 10 முதல் 15 சதவிகிதமாக குறையும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்திய பொருட்கள் மீது 25 விழுக்காடு வரி விதித்த அமெரிக்கா, ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மேலும் 25 சதவிகித வரியை அபராதமாக விதித்துள்ளது. இது தொடர்பாக, கடந்த திங்கட்கிழமை, டெல்லியில் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க வர்த்தக துணை பிரதிநிதி பிரெண்ட் லின்ச் தலைமையிலான குழுவினர், இந்திய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்திய பொருட்கள் மீதான 25 சதவிகித அபராத வரி நவம்பர் இறுதிக்குள் நீக்கப்படும் என நம்பிக்கை.

இந்திய பொருட்கள் மீதான வரி 10 முதல் 15 சதவிகிதமாக குறையும் என பொருளாதார ஆலோசகர் தெரிவித்தார்.

இந்தியா-அமெரிக்கா இடையிலான வரி பிரச்னைக்கு 8 முதல் 10 வாரங்களில் தீர்வு காணப்படும் என நம்பிக்கை.
கொல்கத்தாவில் நடைபெற்ற வர்த்தக கூட்டமைப்பு நிகழ்ச்சியில் பேசிய இந்திய தலைமை பொருளாதார ஆலோசகர் ஆனந்த நாகேஸ்வரன், இந்தியா மீது அமெரிக்கா விதித்த 25 விழுக்காடு அபராத வரி, நவம்பர் மாத இறுதிக்குள் நீக்கப்படும் என்று கூறினார். மேலும், இந்திய பொருட்கள் மீதான வரி 10 முதல் 15 சதவிகிதமாக குறையும் என்றும் ஆனந்த நாகேஸ்வரன் நம்பிக்கை தெரிவித்தார்.
அமெரிக்க வரி தொடர்பான பிரச்னைக்கு 8 முதல் 10 வாரங்களில் தீர்வு காணப்படும் என்று கூறிய ஆனந்த நாகேஸ்வரன், இது அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை என்றும் விளக்கம் அளித்தார். இந்தியா-அமெரிக்கா இடையிலான பேச்சுவார்த்தையின் அடிப்படையில், தனது உள்ளுணர்வின் வெளிப்பாடு இது என்றும் ஆனந்த நாகேஸ்வரன் குறிப்பிட்டார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப், தான் இந்தியாவுக்கு நெருக்கமானவர் என்றும், பிரதமர் மோடிக்கு மிக நெருக்கமானவர் என்று மீண்டும் தெரிவித்துள்ளார். இந்திய இறக்குமதிப் பொருட்களுக்கு அமெரிக்க அரசு 50 சதவீதம் வரி விதித்தது இருநாடுகளுக்கும் இடையேயான உறவில் விரிசலை ஏற்படுத்தியது. இதையடுத்து பிரதமர் மோடியை அடிக்கடி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பாராட்டி பேசிவந்தார். இச்சூழலில் பிரதமர் நரேந்திர மோடியின் 75வது பிறந்தநாளுக்கு தொலைபேசி வாயிலாகவும் சமூக வலைதளங்கள் மூலமாகவும் டிரம்ப் வாழ்த்து தெரிவித்தார்.

Read More
இந்தியாஉலகம்தமிழ்நாடுவணிகம்

அமெரிக்காவின் 50% சதவீத வரி விதிப்பால் இந்தியாவின் பொருளாதாரம் எந்த அளவில் பாதிக்கப்படும்….

இன்று முதல் இந்தியப் பொருள்கள் மீது அமெரிக்கா 50% இறக்குமதி வரி விதிப்பு அமலுக்கு வந்தது, இந்திய பொருளாதாரத்திற்கு பெரும் தாக்கம்.
எந்த உடன்பாடும் எட்டப்படாத நிலையில், இந்தியப் பொருள்கள் மீது 25 சதவிகித வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்தார். மேலும் கடந்த 7 ஆம் தேதி முதல் இந்தியப் பொருள்கள் மீதான 25 சதவிகித வரி அமலுக்கு வந்தது. அது மட்டுமின்றி, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதால், இந்தியாவிற்கு அபராதமாக, கூடுதலாக 25 விழுக்காடு வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்தார்.
உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து புதின் உடன் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், இந்தியா மீதான அபராத வரி நிறுத்தி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், டிரம்ப் அறிவித்தபடி, இந்திய நேரப்படி இன்று காலை 9.30 மணி முதல், இந்தியப் பொருள்கள் மீதான 50 சதவிகித இறக்குமதி வரி அமலுக்கு வந்தது.
இறக்குமதி வரி செலுத்தும் நிறுவனம், அதன் செலவை ஈடு செய்யும் வகையில், பொருள்களின் விலையை உயர்த்தி அதனை முழுதாகவோ அல்லது பகுதியாகவோ வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலிக்கும். இதனால், பொருள்களின் விலை அதிகரிக்கும்.
அதிக வரி விதிப்பதன் மூலம், தானாக பொருள்களின் விலை அதிகரிக்கும். இதன் காரணமாக வாடிக்கையாளர்கள் அந்தப் பொருளை அதிக விலை கொடுத்து வாங்குவதைத் தவிர்ப்பார்கள். இதனால், உற்பத்தியாளர்கள் தங்கள் பொருள்களை வியாபாரம் செய்ய முடியாமல் நட்டத்தைச் சந்திப்பார்கள்.
நிறுவனம் நட்டத்தைச் சந்திக்கும் போது முதல் படியாக அதனைச் சமாளிக்க தனது ஊழியர்களின் அளவைக் குறைக்கும். அந்த வேலையை நம்பியிருந்த குடும்பத்தின் பொருளாதாரம் கேள்விக்குறியாகும்.
ஒரு நாட்டின் மீது அதிக வரிவிதிக்கப்பட்டு, வாடிக்கையாளர்களும் அதனை அதிக விலை கொடுத்து வாங்க முன்வராமல் போக, இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் அதே பொருள்களை குறைந்த வரி கொண்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும். இதன் மூலம், போட்டி நாடுகள் தங்கள் பொருள்களை அந்த நாட்டிற்கு அதிகமாக ஏற்றுமதி செய்து லாபம் அடையும்.
பொதுவாக ஒருநாட்டின் செல்வம் அதன் ஏற்றுமதியின் மூலம் அதிகரிக்கும். எந்த நாடு அதிக ஏற்றுமதி செய்கிறதோ அந்த நாட்டின் செல்வம் அதிகரிக்கும். அதே ஏற்றுமதி குறையும்போது, நாட்டின் வருமானமும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு அந்த நாட்டின் பொருளாதாரத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்.

Read More
அரசியல்இந்தியாஉலகம்தமிழ்நாடு

இந்தியா மீது வரி விதிப்பு ரஷ்யாவுக்கு நெருக்கடி கொடுக்க-ஜே.டி.வான்ஸ்

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கியதற்காக இந்தியா மீது விதிக்கப்பட்ட 25% கூடுதல் வரி, உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுப்பதற்கான ஒரு முயற்சி என அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தெரிவித்துள்ளார்
ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர, ரஷ்யாவின் மீது அழுத்தம் கொடுக்கவே இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது மறைமுக வரி விதிக்கப்பட்டதாக அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் எண்ணெய் வணிகத்திற்கு கடினமான சூழலை உருவாக்கவே, இந்த ‘பொருளாதார நெருக்கடி’ மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.
அமெரிக்காவின் என்.பி.சி. நியூஸ் தொலைகாட்சியில் ஒளிபரப்பான ‘மீட் தி பிரஸ்’ நிகழ்ச்சியில் உக்ரைன் போர் தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கையில் ஜே.டி வான்ஸ் இவ்வாறு தெரிவித்தார். ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த வான்ஸ், “ரஷ்யாவை உக்ரைனில் குண்டுவீசுவதை நிறுத்தவைக்க, டிரம்ப் ‘ஆக்ரோஷமான பொருளாதார நெம்புகோல்’ (aggressive economic leverage) முறையைப் பயன்படுத்தியுள்ளார். இதில், இந்தியாவின் மீது விதிக்கப்பட்ட மறைமுக வரி விதிப்புகளும் அடங்கும்,” என்று கூறினார்.
ரஷ்ய கச்சா எண்ணெயை இந்தியா கொள்முதல் செய்ததால், அதன் மீது 25% கூடுதல் வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்த 3 நாட்களுக்குப் பிறகு இந்த கருத்து வெளியாகி உள்ளது. இந்த வரி விதிப்புடன் சேர்த்து, இந்திய தயாரிப்புகளுக்கு அமெரிக்காவில் விதிக்கப்படும் மொத்த வரி 50% ஆக உயர்ந்துள்ளது. இது உலக அளவில் எந்தவொரு நாட்டிற்கும் விதிக்கப்பட்ட அதிகபட்ச வரியாகும்.

அமெரிக்காவின் இந்நடவடிக்கையை, ‘நியாயமற்றது’ என்று வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் கூறுகையில், “இந்த வரிவிதிப்பு ஒரு தவறான கண்ணோட்டத்தில் எண்ணெய் விவகாரமாக சித்தரிக்கப்படுகிறது” என்றார்.
ரஷ்ய கச்சா எண்ணெயை அதிகளவில் இறக்குமதி செய்யும் சீனா, ஐரோப்பிய நாடுகளுக்கு இந்த வரி விதிக்கப்படாத நிலையில், இந்தியா மீது மட்டும் இந்த வரி விதிக்கப்பட்டது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பினார். “எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பொருட்களை இந்தியாவில் இருந்து வாங்குவதில் உங்களுக்கு சிக்கல் இருந்தால், அதை வாங்க வேண்டாம். யாரும் உங்களை கட்டாயப்படுத்தவில்லை. ஆனால், ஐரோப்பா அமெரிக்காவும் வாங்குகின்றன” என ஜெய்சங்கர் கூறியிருந்தார்.

இதனிடையே, ரஷ்ய அதிபர் புதின் உடன் அலாஸ்காவில் நடைபெற்ற சந்திப்புக்குப் பிறகு, உக்ரைன் போரை முடிவுக்குக்கொண்டு வருவதற்கான மத்தியஸ்தம் செய்ய முடியும் என அமெரிக்கா நம்புவதாக வான்ஸ் தெரிவித்தார். ரஷ்யா போரை நிறுத்தினால், மீண்டும் உலக பொருளாதாரத்தில் இணைக்கப்படும் என்ற செய்தியை டிரம்ப் தெளிவுபடுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ரஷ்ய எண்ணெய் கொள்முதல் தொடர்பாக இந்தியா மீது விதிக்கப்பட்ட அமெரிக்க வரி அழுத்தங்கள், இந்தியா-ரஷ்யா இடையிலான கூட்டாண்மையை பாதிக்காது என்பதை இரு நாடுகளும் மாஸ்கோவில் நடைபெற்ற சந்திப்பில் உறுதி செய்தன. அதிபர் புதின் இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவுக்கு வருகை தர உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More
அரசியல்இந்தியாஉலகம்

டிரம்ப்பின் பரஸ்பர வதிவிதிப்பால் அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சியடையும், விலைவாசி உயரும் என்றும் பெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவல் எச்சரித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் அண்மையில் அறிவித்த பரஸ்பர இறக்குமதி வரிகள் பெடரல் ரிசர்வ் எதிர்பார்த்ததை விட அதிகமுள்ளது. மேலும் கட்டண விகிதங்கள் அதன் மதிப்பீடுகளை விட அதிகமாக உள்ளன என்று தலைவர் பவல் பிபிசியிடம் தெரிவித்தார்.
வர்த்தக கட்டணங்கள் குறித்த நிச்சயமற்ற தன்மை மற்றும் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே அதிகரித்து வரும் வர்த்தகப் போர் காரணமாக உலக நிதிச் சந்தைகளில் தாக்கங்களுக்கு மத்தியில் பவலின் கருத்துகள் வந்துள்ளன.

வீடுகள் மற்றும் வணிகங்களின் கணக்கெடுப்புகள், முக்கியமாக கட்டணங்கள் காரணமாக அமெரிக்க பொருளாதாரத்தின் நிதி ஆரோக்யம் குறித்த அவர்களின் உணர்வில் சரிவு ஏற்பட்டதாக தெரிவித்தன என்று பவல் மேலும் கூறினார். இவை மிக அடிப்படையான கொள்கை மாற்றங்கள். இதைப் பற்றி எவ்வாறு சிந்திப்பது என்பதற்கான நவீன அனுபவம் இல்லை” என்று பவல் சிகாகோவின் பொருளாதார கிளப் நடத்திய ஒரு நிகழ்ச்சியில் கூறினார், சி.என்.என் தெரிவித்துள்ளது.
“இதுவரை அறிவிக்கப்பட்ட கட்டண உயர்வுகளின் அளவு எதிர்பார்த்ததை விட கணிசமாக அதிகமாக உள்ளது. அதிக பணவீக்கம் மற்றும் மெதுவான வளர்ச்சி உள்ளிட்ட பொருளாதார விளைவுகளுக்கும் பொருந்தும்” என்று பவல் பிபிசியிடம் தெரிவித்தார்.

பரஸ்பர கட்டணங்கள் நாட்டில் உற்பத்தியை அதிகரிக்கும் மற்றும் வேலைகளை உருவாக்கும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்தார். பங்குச் சந்தை இப்போது வரை மாற்றங்களைக் கண்டுள்ளது. டிரில்லியன் கணக்கான டாலர் முதலீட்டாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

வர்த்தகம் மற்றும் குடியேற்றம், நிதிக்கொள்கை மற்றும் அமெரிக்க பொருளாதாரத்தின் மீதான ஒழுங்குமுறை ஆகியவற்றில் கொள்கை மாற்றங்கள் காரணமாக ஏற்பட்ட நிச்சயமற்ற தன்மைகளைப் பற்றி பவல் பேசியபோது, டவ் 700 புள்ளிகள் அல்லது 1.7% சரிந்தன, S&P 500 2.5% சரிந்தது, நாஸ்டாக் கம்போசிட் 3.5% சரிந்தது.
டிரம்ப்பின் பரஸ்பர வதிவிதிப்பால் அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சியடையும், விலைவாசி உயரும் என்றும் பெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவல் எச்சரித்துள்ளார்.

Read More