Chennai

தமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்மாவட்டம்

சர்வதேச தரத்தில் மெரினா கடற்கரை…

மெரினா கடற்கரையில் நடைபெற்றுவரும் 2-ம் கட்ட ‘ப்ளூ பிளாக்’ (Blue Flag) திட்டப் பணிகள் நிறைவடையும் நிலையில், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக பிப்.22-ம் தேதி இத்திட்டம் திறக்கப்பட உள்ளது. பிப்.17-ம் தேதி திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சில சிறிய பணிகள் நிலுவையில் உள்ளதால் திறப்பு விழா சற்று தள்ளி வைக்கப்பட்டுள்ளது.”குழந்தைகளுக்கான விளையாட்டுப் பகுதி அமைக்கும் பணி இன்னும் முழுமையடையவில்லை. ஆரம்பத்தில் 2 விளையாட்டுப் பகுதிகள் அமைக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. மாநகராட்சி ஆணையரின் அறிவுறுத்தலின்பேரில், தற்போது அது 4 விளையாட்டுப் பகுதிகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

விவேகானந்தர் இல்லத்திற்கு எதிரே உள்ள கடற்கரைப் பகுதியில், சர்வதேச ‘ப்ளூ பிளாக்’ தரநிலைகளை எட்டும் நோக்கில், சுமார் ரூ.7 கோடி மதிப்பீட்டில் இந்த 2-ம் கட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கட்டம்-1ஐ விட, இந்த பகுதியில் மணற்பரப்பு அகலமாகத் தக்கவைக்கப்பட்டு, கடற்கரை காட்சியை ரசிக்கும் வகையிலும், பார்வையாளர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் கூடுதலாகச் செய்யப்பட்டுள்ள வசதிகளானவை; 60 மூங்கில் இருக்கைகள் மற்றும் 30 மூங்கில் குடைகள், 4 கண்காணிப்பு கோபுரங்கள் மற்றும் 4 குழந்தைகள் விளையாட்டுப் பகுதிகள், 2 படிப்பகங்கள் (Study zones) மற்றும் 2 செல்பி புள்ளிகள் உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட்டுள்ளன.

பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்கும் நடவடிக்கையாக மூங்கில் குப்பைக் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், பெண்கள் மற்றும் ஆண்களுக்கென தனித்தனியான, உள்ளடக்கிய கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், கல்வி முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், மாநில பள்ளிக்கல்வித் துறை சார்பில் சிலை அமைப்பதற்கான அடித்தளப் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

Read More
குற்றம்தமிழ்நாடு

சென்னையில் ரவுடியை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீசார்

பிரபல ரவுடி தூத்துக்குடி ஹைகோர்ட் மகாராஜா. இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. போலீசார் தீவிர வலைவீசி தேடி வந்தனர். இவர் மதுரை எஸ். எஸ்., காலனியில் ரூ.10 கோடி கேட்டு பள்ளி மாணவனை கடத்திய வழக்கில் தொடர்புடையவர். கிண்டியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அங்கு சென்று ரவுடியை கைது செய்ய போலீசார் முயற்சி செய்தனர். அப்போது போலீசார் மீது ரவுடி மகாராஜா தாக்குதல் நடத்திவிட்டு தப்பி ஓடினார். பின்னர் போலீசார் அவரை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். காயத்துக்கு சிகிச்சை அளித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மகாராஜா என்ற பிரபல ரவுடியை கிண்டி அருகே துப்பாக்கியால் காலில் சுட்டு போலீசார் பிடித்தனர்.

வேளச்சேரி ஆதம்பாக்கம் அருகே நகைக்கடை அதிபரை கடத்தி கொலை செய்ய முயன்ற வழக்கில் ரவுடி கைது செய்யப்பட்டார். போலிசாரை தாக்கி விட்டு தப்பி ஓட முயன்றதால் ரவுடியை காலில் சுட்டதாக காவல்துறை தகவல். ரவுடி தூத்துக்குடி மகாராஜாவிடம் இருந்து துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Read More
தமிழ்நாடுநிகழ்ச்சிகள்

சென்னை மக்களே.. புது மாதாந்திர பாஸ் அறிமுகம்.. பேருந்து பயணிகளுக்காக புதிய திட்டம் தொடக்கம்!

சென்னையில் பேருந்து பயணிகளுக்காக புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
சென்னையில் குளிர்சாதனப் பேருந்துகள் உட்பட அனைத்து வகையான பேருந்துகளிலும் மாதந்தோறும் இரண்டாயிரம் ரூபாயில், பயணம் செய்யும் திட்டத்தை போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.

சென்னையில் ஏற்கெனவே, மாநகர பேருந்துகளில் பயணிக்க, ஆயிரம் ரூபாயில் மாதாந்திர பாஸ் விநியோகம் செய்யப்படுகிறது. இதன் அடுத்தகட்டமாக, ஏ.சி. பேருந்துகளிலும் பயணிக்கும் வகையில், இரண்டாயிரம் ரூபாய் மாதாந்திர பாஸ் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தை சென்னை மந்தைவெளியில் தொடங்கி வைத்த போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், இரண்டாயிரம் ரூபாய் பாஸ் மூலம், மாதம் முழுவதும் இரவு நேரம் உட்பட அனைத்து நேரங்களிலும் கட்டணம் செலுத்தாமல் ஏ.சி. பேருந்துகளிலும் பயணிக்கலாம் என்று கூறினார்.

Read More
தமிழ்நாடு

எண்ணூரில் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட 2,301 குடும்பங்களுக்கு தலா ரூ.12,500 நிவாரணம் – மீன்வளத்துறை அறிவிப்பு

சென்னை எண்ணூர் முகத்துவாரத்தில் எண்ணெய் கசிவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 2,301 குடும்பங்களுக்கு தலா ரூ.12,500 நிவாரணம் வழங்கப்படும் என மீன்வளத்துறை அறிவித்துள்ளது. எண்ணூர் கழிமுகத்தில் கடந்த 4.12.2023

Read More
குற்றம்தமிழ்நாடு

சென்னையில் கேரளாவை சேர்ந்த நர்சிங் மாணவி கொலை..!!

தாம்பரம்: கேரள மாநிலத்தைச் சேர்ந்த பக்ருதீன் என்பவரின் மகள் பவுசியா (20). இவர், குரோம்பேட்டை பகுதியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங் 2-ம் ஆண்டு

Read More
தமிழ்நாடு

சென்னையில் 18 சதவீதம் கொரோனா தொற்று அதிகமாக பரவுகிறது!

நாடு முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. அதிலும் முக்கியமாக மகாராஷ்டிரா, தமிழ்நாடு, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனை

Read More
தமிழ்நாடு

ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை பெயர் மாற்றம் – மு.க ஸ்டாலின் கண்டனம்!

சென்னை பூவிருந்தவல்லி நெடுஞ்சாலைக்கு பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை இருந்த பெயரை கிராண்ட் வெஸ்டர் ட்ரங்க் ரோடு என மாற்றப்பட்டதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 1979ஆம்

Read More
தமிழ்நாடு

யுகாதி, தமிழ் புத்தாண்டு முன்னிட்டு 50 சதவீதம் தள்ளுபடி – மெட்ரோ அட்டகாசம்!

யுகாதி, தமிழ் புத்தாண்டு முன்னிட்டு 50 சதவீதம் கட்டண சலுகை வழங்கப்படுகிறது என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் சேவையில் அரசு விடுமுறை,

Read More