marina

தமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்மாவட்டம்

சர்வதேச தரத்தில் மெரினா கடற்கரை…

மெரினா கடற்கரையில் நடைபெற்றுவரும் 2-ம் கட்ட ‘ப்ளூ பிளாக்’ (Blue Flag) திட்டப் பணிகள் நிறைவடையும் நிலையில், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக பிப்.22-ம் தேதி இத்திட்டம் திறக்கப்பட உள்ளது. பிப்.17-ம் தேதி திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சில சிறிய பணிகள் நிலுவையில் உள்ளதால் திறப்பு விழா சற்று தள்ளி வைக்கப்பட்டுள்ளது.”குழந்தைகளுக்கான விளையாட்டுப் பகுதி அமைக்கும் பணி இன்னும் முழுமையடையவில்லை. ஆரம்பத்தில் 2 விளையாட்டுப் பகுதிகள் அமைக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. மாநகராட்சி ஆணையரின் அறிவுறுத்தலின்பேரில், தற்போது அது 4 விளையாட்டுப் பகுதிகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

விவேகானந்தர் இல்லத்திற்கு எதிரே உள்ள கடற்கரைப் பகுதியில், சர்வதேச ‘ப்ளூ பிளாக்’ தரநிலைகளை எட்டும் நோக்கில், சுமார் ரூ.7 கோடி மதிப்பீட்டில் இந்த 2-ம் கட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கட்டம்-1ஐ விட, இந்த பகுதியில் மணற்பரப்பு அகலமாகத் தக்கவைக்கப்பட்டு, கடற்கரை காட்சியை ரசிக்கும் வகையிலும், பார்வையாளர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் கூடுதலாகச் செய்யப்பட்டுள்ள வசதிகளானவை; 60 மூங்கில் இருக்கைகள் மற்றும் 30 மூங்கில் குடைகள், 4 கண்காணிப்பு கோபுரங்கள் மற்றும் 4 குழந்தைகள் விளையாட்டுப் பகுதிகள், 2 படிப்பகங்கள் (Study zones) மற்றும் 2 செல்பி புள்ளிகள் உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட்டுள்ளன.

பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்கும் நடவடிக்கையாக மூங்கில் குப்பைக் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், பெண்கள் மற்றும் ஆண்களுக்கென தனித்தனியான, உள்ளடக்கிய கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், கல்வி முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், மாநில பள்ளிக்கல்வித் துறை சார்பில் சிலை அமைப்பதற்கான அடித்தளப் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

Read More
தமிழ்நாடுநிகழ்ச்சிகள்

மெரினா கடற்கரை செல்ல கட்டணம் வசூலிக்கப்படும் என செய்திகள் வெளியான நிலையில் சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் விளக்கம் அளித்துள்ளார்.

மெரினா கடற்கரை செல்ல கட்டணம் வசூலிக்கப்படும் என செய்திகள் வெளியான நிலையில் சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் விளக்கம் அளித்துள்ளார்.
மேலும், நீல கொடி கடற்கரை திட்டத்தின் கீழ் எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது. பராமரிப்பு பணிகளுக்கான கட்டணத்தை மாநகராட்சியே ஈடு செய்யும் என மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

சென்னை மெரினா கடற்கரை தலைநகரின் முக்கியமான அடையாளம். வெளிமாவட்டங்களில் இருந்து சென்னை வருபவர்கள் எல்லாம் மெரினாவைப் பார்க்காமல் செல்வதில்லை. சென்னை மக்களுக்கு மட்டுமல்லாமல், சென்னைக்கு வருகிறவர்களுக்கு சுற்றுலாத் தளமாகவும் இளைப்பாறும் இடமாகவும் மெரினா கடற்கரை திகழ்கிறது.

மெரினா கடற்கரையில் பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் பல ஆயிரக் கணக்கான மக்கள் வந்து கடல் அலைகளைப் பார்த்து கடற்கரையில் காற்று வாங்கி மகிழ்கின்றனர். மிக நீளமான அழகான கடற்கரையான மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் வந்து செல்ல கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை.

Read More