Author: Namadhu Arasu

இந்தியாசினிமா

 இந்தியா சினிமாவின் புகழ்பெற்ற இயக்குநர் சியாம் பெனகல் மறைவு – பிரபலங்கள் இரங்கல்

இந்திய சினிமாவின் புகழ்பெற்ற இயக்குநரும் எழுத்தாளருமான சியாம் பெனகல் மும்பையில் காலமானார்.
இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகத் திறமை கொண்ட சியாம் பெனகல், எ சைல்ட் ஆப் தி ஸ்ட்ரீட்ஸ், ஜவஹர்லால் நேரு, சத்யஜித் ரே உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கி உள்ளார்.

வங்கதேசத்தின் முதல் அதிபர் முஜிபுர் ரஹ்மானின் வாழ்க்கையை Mujib The Making of a Nation என்ற பெயரில் கடந்த 2023-ஆம் ஆண்டு படமாக எடுத்தார். பெரிய அளவில் இந்தப் படம் பேசப்பட்டு கவனத்தை ஈர்த்தது.

Read More
அரசியல்தமிழ்நாடு

வாக்கு அரசியலுக்காக அதிமுக நடிக்கிறது” – கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் ஸ்டாலின்

சிறுபான்மை மக்களுக்கு துரோகம் செய்துவிட்டு, வாக்கு அரசியலுக்காக அதிமுக நடிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
திமுக சார்பில் சென்னை கொளத்தூர் டான் பாஸ்கோ பள்ளியில் கிறிஸ்துமஸ் பெருவிழா கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “இந்த மேடையில் கிறிஸ்துமஸ் தின விழாவில் பேராயர் உடன் பேரூர் ஆதினமும் கலந்துகொண்டுள்ளார். இந்த விழாவை நடத்துபவர் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு. இதுதான் சமத்துவ விழா. சமத்துவத்தை போற்றுவதும் பாதுகாப்பதும்தான் திராவிட மாடல்” என்று திராவிட மாடல் என்றால் என்னவென்று கேட்பவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் கொடுத்தார்.

Read More
தமிழ்நாடு

சென்னையில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உணவுத் திருவிழாவை தொடங்கி வைத்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், உணவுத் திருவிழாவில் அனைத்து மாவட்டங்களின் பிரபல உணவு வகைகளும் கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மகளிர் சுயஉதவிக் குழுக்களின் உணவுத் திருவிழா சென்னை மெரினா கடற்கரையில் நேற்று தொடங்கியது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்து பார்வையிட்டார். அப்போது சுய உதவிக் குழுவினரால் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளையும் உண்டு மகிழ்ந்தார்.
இந்த உணவு திருவிழாவானது டிச.24-ம் தேதி வரை நடைபெறுகிறது. பார்வையாளர் கள் மதியம் 12.30 முதல் இரவு 8.30 வரை அனுமதிக்கப்படுகின்றனர். அனுமதி இலவசம். உணவுத் திருவிழாவில் 65 சுய உதவிக்குழுக்களை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட மகளிர் மூலம் மொத்தம் 35 உணவு அரங்குகள், 7 தயார் நிலை உணவு அரங்குகள் அமைக்கப்பட்டு 100 வகையான உணவுகள் வழங்கப்படுகின்றன.
உணவுப் பட்டியலை ஆங்காங்கே வைக்கப்பட்டிருக்கும் ‘க்யூ-ஆர்’ கோடுகளை ஸ்கேன் செய்து தெரிந்து கொள்ளலாம். பார்வையாளர்கள் பணம் செலுத்துவதற்காக அமைக்கப்பட்டிருக்கும் கவுன்ட்டர்களில் ‘க்யூ-ஆர்’ கார்டுகளை ‘டாப்-அப்’ செய்து அரங்குகளில் இருக்கும் உணவுகளை பெற்றுக்கொள்ளலாம்.

வாகன நிறுத்தம் வசதி: இதுதவிர 3 அரங்குகளில் சுய உதவிக் குழுக்களின் 45 வகையான தயாரிப்பு பொருட்களும் விற்பனைக்காக இடம்பெற்றுள்ளன.

இத்துடன் மக்களை கவர இசை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின் றன. மெரினா கடற்கரை அருகே உள்ள சென்னை பல்கலைக்கழகம், ராணி மேரி கல்லூரி, லேடி வெலிங்டன் கல்லூரி வளாகங்களில் வாகன நிறுத்தங்களுக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

உணவுத் திருவிழா குறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் முதல்முறையாக சென்னையில் உணவுத் திருவிழாடுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த மகளிரை தொழில் முனைவோராக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் இது நடத்தப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்தி லும் அங்கு பிரபலமாகக் கருதப்படும் உணவு வகைகள் உணவுத் திருவிழாவில் இடம்பெற்றுள்ளன. குறைந்த விலையில், தரமாக உணவுகள் வழங்கப்படும். இந்த உணவுத் திருவிழா மூலம் தமிழக அரசுக்கு ரூ.2 கோடி வரை வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை மக்கள் உணவுத் திருவிழாவில் கலந்து கொண்டு, உணவுகளை ருசிக்க வேண்டும். உணவுத் திருவிழாவுக்கு கிடைக்கும் ஆதர வின் அடிப்படையில் அடுத்தடுத்த ஆண்டுகளில் நடத்தப் படுவது குறித்து பரிசீலிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Read More
Uncategorized

வெற்றிமாறனின் விடுதலை 2 படம் எப்படி ? ரிவ்யூ இதோ..!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக இருக்கும் வெற்றிமாறன் சூரியை கதாநாயகனாக வைத்து “விடுதலை” என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் வசூல் ரீதியிலும், விமர்சன ரீதியிலும் வெற்றி பெற்றது. இந்த படத்தில் விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்து பாராட்டைப் பெற்றார். இளையராஜாவின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்த்தன. “விடுதலை” படத்தை தொடர்ந்து அதன் 2ம் பாகம் வெளியாகும் என முன்னரே பட குழுவினர் அறிவித்திருந்தனர். அதன் பின்னர் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு தொடங்கியது.
இந்த 2ம் பாகத்தில், நடிகை மஞ்சு வாரியர், அனுராக் கஷ்யப் மற்றும் கிஷோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். முதல் பாகத்தின் முடிவில் குமரேசனால் (சூரி) வாத்தியார் (விஜய் சேதுபதி) கைது செய்யப்படும் நிலையில், அதன் தொடர்ச்சியாக 2ம் பாகம் உருவாகியுள்ளது. 2ம் பாகத்தில் விஜய் சேதுபதி வாத்தியாராக மாறுவதற்கு பின்னால் என்ன நடந்தது? சிறையில் இருந்து எவ்வாறு தப்பித்தார்? போன்ற பிளாஷ்பேக் காட்சிகளை பிரதானமாக கொண்டு உருவாகியுள்ளது. மேலும் மஞ்சு வாரியர், விஜய் சேதுபதிக்கு இடையேயான முக்கிய காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.
ரசிகர்களின் உச்சகட்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் நடந்த “விடுதலை 2” படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் 9 மணிக்கு சிறப்பு காட்சி திரையிடப்பட்டுள்ளது. படம் குறித்து ரசிகர்களின் ட்விட்டர் ரெவ்யூ சொல்லுவதுதென்ன..
வெற்றிமாறன் தனக்கு கிடைத்த இரண்டரை மணி நேரத்துக்குள் இந்த சமூகத்தில் நடந்த, நடக்கின்ற, சமூக அநீதிகள் அனைத்தையும் ஒன்று விடாமல் சொல்லிவிட எத்தனிக்கிறார். இது படத்தின் வேகத்தைக் குறைப்பது போன்ற தோற்றத்தை உருவாக்கி விடுகிறது. குறிப்பாக, முதல் பாதியில், ஆங்காங்கே பிரச்சார நெடி அடிக்கிறது. அதை தவிர்த்திருக்கலாம். ஆனால், அதேநேரம், “நிலம், இனம், மொழின்னு மக்கள ஒன்னு சேர்க்குற வேலைய நாங்க செய்ய ஆரம்பிச்சப்போ, நீங்க கட்டமைச்ச சாதி, மதம், பிரிவினை வாதத்தால அரசியல் பண்ண முடியாம போச்சு”, “வன்முறை எங்க மொழியில்ல, ஆனா எங்களுக்கு அந்த மொழியும் பேசத் தெரியும்”, “தத்துவம் இல்லாத தலைவர்கள் ரசிகர்களை மட்டும் தான் உருவாக்குவார்கள், அது முன்னேற்றத்துக்கு உதவாது” உள்ளிட்ட அவரது அழம் செறிந்த வசனங்கள், ஆணிவேர் வரை சென்று அடித்தூறை ஆட்டம் காணச் செய்திருக்கிறது.
வணிக வீதிகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், பொது இடங்கள், பூங்காக்கள், அதிகமாக மக்கள் கூடும் இடங்களில் கம்யூனிஸ்ட் இயக்க கொடிகளுடன் உண்டியல் ஏந்தி வருபவர்களை பார்த்திருப்போம். அவர்கள் துண்டு பிரசுரங்களைக் கொடுத்து எதற்காக நிதி வசூலிக்கிறோம் என்பதை விளக்கி நிதி வசூலிப்பார்கள். அந்த பிரசுரங்களில் அரசப் பயங்கரவாதம், ஏகாதிப்பத்தியம், எதேச்சதிகாரம், வர்க்கம், முதலாளித்துவம், சர்வாதிகாரம், அடக்குமுறை, ஓடுக்குமுறை, ஜனநாயகம், சோஷலிசம், புரட்சியென நம் அன்றாட வாழ்க்கையில் அடிக்கொரு முறை பேசாத வார்த்தைகள் இடம்பெற்றிருக்கும். இவை எல்லாம் என்ன? எதை அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்? என்பதற்கான தேடலின் தொடக்கம் தான் இந்த ‘விடுதலை பாகம்-2’!

Read More
அரசியல்தமிழ்நாடு

கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைது.. 

கருப்பு தின பேரணியில் ஊர்வலமாகச் செல்ல முயன்றனர். ஆனால் காவல்துறையினர் அவர்கள் செல்ல அனுமதி மறுத்துத் தடுத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. இதனைத் தொடர்ந்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் அவருடன் வந்தவர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர். சிறிதுநேரத்தில் வானதி சீனிவாசன் உள்ளிட்டோரும் கைதாகினர்.
அதன்பின் சில மணிநேரங்களில் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். அண்ணாமலை உள்ளிட்டோர் கைதால், கோவையில் பரபரப்பு காணப்பட்டது.

Read More
தமிழ்நாடு

நான் முதல்வன் திட்டம்: கோவையில் திறன் பயிற்சி மையம் – திறந்து வைத்த உதயநிதி ஸ்டாலின்

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (டிசம்பர் 18) கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் திறன் மற்றும் வேலைவாய்ப்பு மையங்களை தொடங்கி வைத்தார்.

அப்போது உரையாற்றிய அவர், “முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, சட்டப்பேரவையில் நாம் வெளியிட்ட அறிவிப்பின் அடிப்படையில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ், 31 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடெங்கும் 29 திறன் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு மையங்கள் – Placement Centres-ஐ இன்று கோவையில் இருந்து திறந்து வைப்பதில் நான் மிகுந்த பெருமை அடைகின்றேன், மகிழ்ச்சி அடைகிறேன்.
அதே போல, முதலமைச்சரின் கனவுத் திட்டமான நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கடந்த சில மாதங்களில் நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாம்களின் மூலமாக பணி வாய்ப்பினைப் பெற்றுள்ள 3 ஆயிரத்து 700 பேரில், 30 மாணவர்களுக்கு இங்கே பணி நியமன ஆணைகளையும் வழங்க இருக்கின்றோம். இதன் மூலம், ஆண்டுக்கு 3 லட்சம் முதல் 42 லட்சம் ரூபாய் வரையிலான ஆண்டு ஊதியத்தில் (Annual Salary) பணி நியமனம் பெற்றுள்ள உங்களுடைய அத்தனை பேருக்கும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.
இந்த நிகழ்ச்சியின் மூலம் Tamil Nadu Skill Development Corporation சார்பாக, கோவை அரசு பாலிடெக்னிக் கல்லூரி உட்பட 6 பாலிடெக்னிக் கல்லூரிகளில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில், Schneider (ஸ்னெய்டர்) Electric World Skill Academy உடன் இணைந்து Smart Manufacturing Technology Centres-யும் இன்று திறந்து வைத்திருக்கின்றோம்.

Read More
அரசியல்இந்தியாதமிழ்நாடு

அம்பேத்கர் பற்றி நான் அப்படி பேசவில்லை: அமித் ஷா மறுப்பு!

அம்பேத்கருக்கு எதிராக தன்னால் எப்போதும் பேச முடியாது என்று அமித் ஷா கூறியுள்ளார்.

மாநிலங்களவையில் அமித் ஷா இன்று (டிசம்பர் 18 ) பேசியது சர்ச்சையை கிளப்பியது. இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டு 75 ஆண்டுகள் ஆகிய நிலையில் அதைக் கொண்டாடும் விதமாக நாடாளுமன்றத்தில் இரண்டு நாட்கள் சிறப்பு விவாதம் நடைபெற்றது. பல்வேறு அரசியல் கட்சி உறுப்பினர்களும் உரையாற்றினர்.
இறுதி நாளான இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உரை நிகழ்த்தினார். அப்போது, அவர், “அண்மை காலமாக அம்பேத்கர், அம்பேத்கர் என்று பேசுவது பேஷனாகி விட்டது. அதற்கு பதிலாக கடவுளின் பெயரை உச்சரித்து வந்திருந்தால் சொர்க்கத்தில் இடம் கிடைத்திருக்கும்” என்று கூறினார்.
அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் அமித் ஷா பேசியதாக எதிர்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக முதல்வர் ஸ்டாலின், கர்நாடக முதல்வர் சித்தராமையா உள்ளிட்ட பலரும் அமித் ஷா கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
நாடாளுமன்றத்தில் பேசிய கருத்துக்களை காங்கிரஸ் கட்சி திரித்து கூறிய விதம் கண்டிக்கத்தக்கது. காங்கிரஸ் கட்சி அம்பேத்கருக்கு எதிரானது, இடஒதுக்கீட்டுக்கு எதிரானது, அரசியலமைப்புக்கு எதிரானது. காங்கிரஸ் அரசு அம்பேத்கருக்காக ஒரு போதும் மணிமண்டபம் கட்டியதில்லை. அம்பேத்கருடன் தொடர்புடைய பல இடங்களை கட்டியது பாஜக அரசுகள் தான். அவரது பாரம்பரியத்தை போற்றும் படி அரசியலமைப்பு தினத்தை அறிவித்தது மோடி அரசுதான்.
நாடாளுமன்றத்தில் பேசிய பாஜகவினர், நாங்கள் ஆட்சியில் இருந்த போதெல்லாம் எவ்வாறு அரசியலமைப்பு சட்டத்தினை பாதுகாத்தோம் என்பதனை பட்டியலிட்டனர். இது காங்கிரஸ் கட்சி, அம்பேத்கருக்கு எதிரானது, இடஒதுக்கீடு, அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்பதைக் காட்டுகிறது. காங்கிரஸ் வீர் சாவர்கரை அவமதித்தது, அவசரநிலையை கொண்டுவந்ததன் மூலம் அரசியலமைப்பை அவமதித்தது” என்று தெரிவித்தார்.

Read More
தமிழ்நாடு

தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை- வானிலை முன்னெச்சரிக்கை!

வடகடலோர தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யும். அதன் தொடர்ச்சியாக 20 மற்றும் 21ஆம் தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More
இந்தியா

இந்தியர்களுக்கு வந்த ஆபத்து.. மொத்தம் 18000 பேர்.. வாடகை விமானங்கள் மூலம் நாடு கடத்த தயாரான டிரம்ப்!

அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்றது. இதில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் ட்ரம்ப் தன்னை எதிர்த்து போட்டியிட்ட கமலா ஹாரிஸை விட அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதையடுத்து டொனால்ட் ட்ரம்ப் வரும் ஜனவரி மாதம் அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ளார்.

இந்நிலையில் டொனால்ட் டிரம்ப் , அடுத்த ஆண்டு ஜனவரி 20 ஆம் தேதி பதவியேற்றவுடன், அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய நாடுகடத்தலை மேற்கொள்வதாக உறுதியளித்துள்ளார். இதற்குத் தயாராகும் வகையில், அமெரிக்க குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கத்துறை (ICE) அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கியிருக்கும் சுமார் 15 லட்சம் பேரின் பட்டியலை தயாரித்துள்ளது.
அவர்களில் சுமார் 18,000 இந்திய குடிமக்கள் ஆவணங்கள் எதுவும் இல்லாமல் அமெரிக்க அரசாங்கத்தால் தயாரிக்கப்பட்ட பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். அவர்கள் அனைவரும் தற்போது இந்தியாவுக்கு நாடு கடத்தப்படும் ஆபத்தில் உள்ளனர். கடந்த நவம்பர் மாதம் வெளியிடப்பட்ட தரவுகளின்படி நாடு கடத்தப்படும் இறுதி பட்டியலில் 15 லட்சம் பேரில் 17,940 இந்தியர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பியூ ஆராய்ச்சி மையத்தின் தரவுகளின்படி, மெக்ஸிகோ மற்றும் எல் சால்வடாருக்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரிய மக்கள்தொகையாக அமெரிக்காவில் சுமார் 725,000 இந்தியர்கள் குடியேறியுள்ளனர். அக்டோபரில், இந்தத் தரவுகள் வெளியிடப்படுவதற்கு முன்பு, அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்தியர்களை அந்நாட்டு அரசு விமானம் மூலம் இந்தியாவுக்கு நாடு கடத்தியது.
அக்டோபர் 22 ஆம் தேதி இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட விமானம், இந்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களை வாடகை விமானம் மூலம் வரும் ஜனவரி மாதம் முதல் நாடு கடத்த அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள ஆயிரக்கணக்கான ஆவணமற்ற இந்தியர்கள் தங்கள் குடியுரிமையை சட்டப்பூர்வமாக்க போராடி வருகின்றனர். கடந்த மூன்று நிதியாண்டுகளில் சராசரியாக 90,000 இந்தியர்கள் அமெரிக்க எல்லைகளை சட்டவிரோதமாக கடக்க முயன்றதாக பிடிபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More
ஆன்மீகம்தமிழ்நாடு

மகாபாக்ய யோகம்… இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் தான்!

வேத ஜோதிடத்தின்படி, சந்திரன் மட்டுமே வேகமாக நகரும் கிரகமாக உள்ளது. சந்திரன் இரண்டரை நாட்கள் மட்டுமே ஒரு ராசியில் இருப்பார். இதன் காரணமாக பல கிரகங்களுடன் இணைந்து சந்திரன் சேர்க்கையை உருவாக்குகிறது. சந்திரனின் இந்த சேர்க்கையால் சுப, அசுப யோகங்கள் உருவாகும்.

வேத சாஸ்திரத்தின்படி, இன்று (டிசம்பர் 17) மாலை 6.47 மணிக்கு சந்திரன் கடக ராசிக்குள் நுழைந்து வரும் டிசம்பர் 20-ம் தேதி வரை அங்கேயே இருக்கும். ஏற்கனவே செவ்வாய் கிரகமானது கடக ராசியில் பிற்போக்கு நிலையில் இருக்கிறது. இத்தகைய சூழலில், இந்த செவ்வாய்-சந்திர சேர்க்கை சிலருக்கு பயனுள்ளதாக இருக்கும். டிசம்பர் மாதத்தில் செவ்வாய், சந்திரன் சேர்க்கை ஏற்படுவதால் மகாபாக்யம் என்ற ராஜயோகம் உருவாகிறது. இது செவ்வாய்-சந்திரன் இணைப்பு என்றும் அழைக்கப்படுகிறது. இந்த யோகம் அமைவதால், மக்கள் நிதி ஆதாயத்துடன் அனைத்து துறைகளிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளது. மகாபாக்ய யோகத்தினால் பலன் பெறப்போகும் ராசிகள் எவை என்பதை தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்: குடும்பம் மற்றும் நண்பர்களுடன் தரமான நேரத்தை செலவிட முடியும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் இப்போது முடிவுக்கு வரலாம். இந்த காலகட்டத்தில் நிதி நிலை நன்றாக இருக்கும். வசதிகள் பெருகும். கனவுகளும் லட்சியங்களும் நனவாகும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் திறக்க வாய்ப்புள்ளது.

சிம்மம்: செவ்வாய் மற்றும் சந்திரனின் சேர்க்கை ஒன்பதாம் வீட்டில் நடக்கும். இந்த நேரத்தில் பல புதிய வேலை வாய்ப்புகளைப் பெறலாம். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெற முடியும். நிறைய பணம் சம்பாதிப்பதில் வெற்றி பெறலாம். வியாபாரத்தில் செய்யும் திட்டங்களின் மூலம் அதிக லாபம் சம்பாதிக்கலாம். குருவின் முழு ஆதரவையும் பெறுவார்கள்.
கன்னி: செவ்வாய் மற்றும் சந்திரனின் சேர்க்கை பதினொன்றாம் வீட்டில் நடைபெறும். இத்தகைய சூழலில் இந்த ராசிக்காரர்களுக்கு மகாபாக்ய யோகம் மிகவும் சிறப்பாக அமையப் போகிறது. நீண்ட கால ஆசைகள் நிறைவேறும். கடின உழைப்பின் பலனை இப்போது நீங்கள் அறுவடை செய்வார்கள். வாழ்க்கைத் துணையுடனான உறவு சிறப்பாகவும், இனிமையாகவும் இருக்கும்.

Read More