சீனாவில் பரவும் வைரஸால் இந்தியாவுக்கு ஆபத்தா..? மத்திய அரசு விளக்கம்.!
சீனாவில் பரவி வரும் புதிய வகை வைரஸ், உலக நாடுகளை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. 2019ஆம் ஆண்டு பரவிய கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் தாக்கம், உலக மக்களிடையே சற்றே குறைந்திருந்தாலும் இன்னும் முழுமையாக நீங்கவில்லை.
இந்நிலையில், சீனாவில் புதிதாக ஒரு வைரஸ் வேகமாக பரவி வருவதாக வெளியாகியிருக்கும் தகவல் மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹியூமன் மெடப்னியுமோவைரஸ் (human metapneumovirus) என்று பெயரிடப்பட்டுள்ள அது, சுருக்கமாக ஹெச்.எம்.பி.வி என அழைக்கப்படுகிறது. சீனாவில் வேகமாக பரவி வரும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு ஏராளமான மக்கள் மருத்துவமனைகளுக்குப் படையெடுத்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
2020ல் சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் உலகம் முழுக்க பரவியது. இந்த வைரஸ் காரணமாக மில்லியன் கணக்கான மக்கள் இறந்தனர். பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் உலகை பெரிய அளவில் அச்சுறுத்தியது. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அதன் தாக்கமும் வீரியமும் குறைந்து உலகம் இயல்பு நிலைக்கு திரும்பியது.
தற்போது மீண்டும் சீனாவில் HMPV புதுவகை வைரஸ் அதிகளவில் பரவிவருவதாக செய்திகள் வருகின்றன.
இந்த வைரஸ் என்ன, இது மனிதர்களுக்கு எவ்வளவு ஆபத்தானது என டெல்லியில் மருத்துவர் சரத் ஜோஷி விளக்கியுள்ளார். அவர் தெரிவித்திருப்பதாவது, “HMPV புது வகை வைரஸ் கிடையாது. அதேசமயம், இதன் மாறுபாடு கொண்டது தற்போது சீனாவில் வந்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.
Read More