Author: Namadhu Arasu

அரசியல்தமிழ்நாடு

அண்ணா பல்கலைக்கழகம், அண்ணா நகர் சிறுமி விவகாரம் – சட்டப்பேரவையில் பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில், யார் அந்த ‘சார்’ என கேள்வி எழுப்பும் எதிர்க்கட்சிகள், அதற்கான ஆதாரம் இருந்தால், விசாரணை குழுவிடம் தெரிவிக்கலாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பான, கவன ஈர்ப்பு தீர்மானத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் பதிலுரை அளித்தார்.
நடந்துவரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து, பல்வேறு அரசியல் கட்சிகள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தன. இதற்கு பதில் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பல்கலைக்கழகத்தின் பெயரைச் சொல்லி, அப்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த விரும்பவில்லை என தனது உரையை தொடங்கினார். மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை பட்டியலிட்ட முதலமைச்சர், இவ்விவகாரத்தில் வேறு யாரேனும் குற்றவாளிகள் இருப்பது தெரியவந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதிஅளித்தார்.தொடர்ந்து பேசிய முதலமைச்சர், ‘யார் அந்த சார்’ என கேள்வி எழுப்பும் எதிர்க்கட்சிகள் தங்களிடம் தகுந்த ஆதாரம் இருந்தால், விசாரணை குழுவிடம் ஒப்படைக்கவும் என வலியுறுத்தினார். கடந்த ஆட்சியில், சிபிஐ விசாரணையில் தான் பொள்ளாச்சி சம்பவம் அதிமுக பிரமுகர்களால் நடத்தப்பட்டது என்பது அம்பலமானதாக முதலமைச்சர் குற்றம்சாட்டினார்.
இதற்கு அதிமுகவினர் கடும் அமளி மூலம் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். தொடர்ந்து பேசிய முதலமைச்சர், இது போன்ற 100 ‘சார்’ கேள்விகளை அதிமுகவைப் பார்த்து தன்னால் கேட்க முடியும் என்று கூறினார். மேலும், இது தொடர்பாக, பாஜகவினரின் கதைகளை எல்லாம் சொல்லி, அவையின் மாண்பைத் தான் குறைக்க விரும்பவில்லை என முதலமைச்சர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர், அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், அதிமுக நிர்வாகி கைது செய்யப்பட்டதை சுட்டிக்காட்டினார். அதே சமயம், பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவர் திமுக அனுதாபியே தவிர, திமுக உறுப்பினர் அல்ல என்றும் தெளிவுப்படுத்தினார். குற்றவாளி திமுககாரராகவே இருந்தாலும் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
திமுக அரசுக்கு களங்கம் ஏற்படுத்துவதாக நினைத்துக் கொண்டு, உயர்கல்வி கற்க வரும் மாணவிகளை அச்சுறுத்தி, அவர்களின் கல்வியை கெடுத்து விடாதீர்கள் என்று முதலமைச்சர் வலியுறுத்தினார்.

Read More
அரசியல்இந்தியா

ஒரே நாடு ஒரே தேர்தல்; இன்று கூடுகிறது முதல் பார்லி கூட்டுக்குழு; முக்கிய முடிவு எடுக்க வாய்ப்பு

ஒரே நாடு ஒரே தேர்தல்; இன்று கூடுகிறது முதல் பார்லி கூட்டுக்குழு; முக்கிய முடிவு எடுக்க வாய்ப்பு
லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த ஏதுவாக அரசியலமைப்பு 129வது திருத்த மசோதா டிச.17ம் தேதி லோக்சபாவில் தாக்கலானது. யூனியன் பிரதேச சட்டத்திருத்த மசோதாவும் அன்றே தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டு மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த மசோதா பார்லி. கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்பட்டது.
மொத்தம் 39 உறுப்பினர்கள் கொண்ட பார்லி. கூட்டுக்குழு இன்று (ஜன.,08) முதல் ஆலோசனை கூட்டத்தை நடத்துகிறது. கூட்டம் காலை 10.30 மணிக்கு கூடும் என தகவல் வெளியாகி உள்ளது.

கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்க வாய்ப்புள்ளது. கூட்டத்தில் சட்டத்துறை செயலாளர்கள் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா குறித்தும், அதனால் நாட்டுக்கும், மக்களுக்கும் கிடைக்ககூடிய பலன்கள் குறித்தும் உறுப்பினர்களுக்கு விரிவாக விளக்க உள்ளனர்.

பார்லி. கூட்டுக்குழுவில் 12 ராஜ்யசபா உறுப்பினர்கள், 27 லோக்சபா உறுப்பினர்கள் என மொத்தம் 39 பேர் உள்ளனர். காங்கிரஸ் எம்.பி., பிரியங்கா குழுவின் உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More
அறிவியல்இந்தியா

இஸ்ரோ புதிய தலைவர் நியமனம்; குமரியைச் சேர்ந்த வி.நாராயணன் ஜன. 14 பதவியேற்பு

இஸ்ரோ புதிய தலைவர் நியமனம்; குமரியைச் சேர்ந்த வி.நாராயணன் ஜன. 14 பதவியேற்பு
இஸ்ரோவின் தலைவராக உள்ள சோம்நாத்தின் பதவிக்காலம் அடுத்த வாரத்துடன் நிறைவடைய உள்ள நிலையில், புதிய தலைவராக வி. நாராயணனை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

Read More
சினிமாதமிழ்நாடு

அனைத்து ரெக்கார்டுகளையும் உடைத்த ‘புஷ்பா 2’  வசூல்

அல்லு அர்ஜுன் நடித்துள்ள ‘புஷ்பா 2’ படம் வசூலில் புதிய சாதனையை படைத்துள்ளது. தெலுங்கில் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. ஆனால், இந்திய அளவில் முக்கியமான படத்தின் சாதனையை இன்னும் முறியடிக்கவில்லை என கூறப்படுகிறது.
சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான படம் ‘புஷ்பா’. இந்தப் படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்தனர். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்தார்.

இந்தப் படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக இந்தி பேசும் மாநிலங்களில் படம் வசூல் குவித்தது. இந்த வெற்றியின் தொடர்ச்சியாக இப்படத்தின் 2வது பாகம் கடந்த டிசம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

Read More
தமிழ்நாடு

தமிழ்நாட்டிலும் நுழைந்த HMPV வைரஸ்.. அறிகுறிகள்; தடுக்கும் வழி என்ன? – மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்?

தமிழ்நாட்டிலும் நுழைந்த HMPV வைரஸின் அறிகுறிகள் என்ன?… இதனை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
சீனாவில் வேகமாக பரவி வரும் ‘ஹியூமன் மெட்டா நியுமோ வைரஸ்’ தற்போது இந்தியாவிலும் நுழைந்துவிட்டது. கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களை தொடர்ந்து, தமிழ்நாட்டிலும் எச்எம்பிவி பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்த HMP வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூக்கடைப்பு, மூக்கில் நீர் வடிதல், இருமல், மூச்சுவிடுவதில் சிரமம், மூச்சுத் திணறல், தொண்டை கரகரப்பு, காய்ச்சல், தோல் தடிமன் போன்ற அறிகுறிகள் இருக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மருத்துவர் சுரேந்தர் கூறுகையில், “நார்மலாக காய்ச்சல், உடல்வலி, தொண்டையில் எரிச்சல் உணர்வு இருப்பது, இருமல், மூச்சுவிடுவதில் சிரமம் போன்ற அறிகுறிகள் இருந்தால், HMPV வைரஸ் இருக்கிறதா என மருத்துவர்களிடம் சோதிப்பது நல்லது. எனினும், அனைவருக்கும் இந்த வைரஸ் சோதனை நடத்த வேண்டிய அவசியம் இல்லை.” என்று தெரிவித்துள்ளார்.

Read More
அரசியல்தமிழ்நாடு

டெல்லி சென்றது ஏன்..? – விளக்கம் கொடுத்த அமைச்சர் துரைமுருகன்

“அமலாக்கத்துறை சோதனைக்கும், நான் டெல்லி சென்றதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை” சோதனைகள் வழக்கமான ஒன்றுதான். புதிது அல்ல என டெல்லியில் இருந்து திரும்பிய அமைச்சர் துரைமுருகன், சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்துள்ளார்.

Read More
சினிமாதமிழ்நாடு

கை நடுக்கம், பேச்சில் தடுமாற்றம்’ – நடிகர் விஷாலுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி வீடியோவால் ரசிகர்கள் கேள்வி

மதகஜராஜா’ ரிலீஸை முன்னிட்டு நடந்த ப்ரீ ரிலீஸ் விழாவில் நடிகர் விஷால் கை நடுக்கத்துடன், தடுமாற்றத்துடன் பேசும் வீடியோ வைரலாகி வருகிறது. அவருக்கு என்ன ஆயிற்று என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
கடந்த 2012-ம் ஆண்டு சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிப்பதாக அறிவிக்கப்பட்ட ‘மதகஜராஜா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு அதே வேகத்தில் முடிந்தது. அதே ஆண்டு படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வெளியாகவில்லை. இந்தப் படத்தில் விஷால், சந்தானம், வரலட்சுமி, சதீஷ், நிதின் சத்யா, சோனுசூட், அஞ்சலி, மறைந்த நடிகர்கள் மணிவண்ணன், மனோபாலா, மயில்சாமி, சிட்டிபாபு என பலரும் நடித்துள்ளனர். ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் நிறுவனம் ‘மதகஜராஜா’வை தயாரித்தது.

படத்துக்கு விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார். ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆர்யா கெஸ்ட் ரோலிலும், சதா ஒரு பாடலுக்கும் ஆடியுள்ளனர். ‘மதகஜராஜா’வை சுருக்கமாக ‘எம்.ஜி.ஆர்’ என்று அழைத்து வந்தனர். இப்போது வரும், அப்போது வரும் என எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாவதில் பல சிக்கல்கள் இருந்தன.

Read More
அரசியல்தமிழ்நாடு

பரபரப்பான அரசியல் சூழலில் இன்று கூடும் தமிழ்நாடு சட்டப்பேரவை… ஆளுநர் உரை எப்படி இருக்கும்?

பரபரப்பான அரசியல் சூழலுக்கு இடையே தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று கூடுகிறது. ஆளுநர் உரையுடன் தொடங்கவிருப்பதால், எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கவுள்ளது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்குவது மரபு என்பதால், இன்று காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவையில் ஆளுநர் உரை நிகழ்த்தவுள்ளார். 2023-இல் ஆளுநர் உரைக்குப் பின்னர் ஆர்.என்.ரவி பாதியில் வெளியேறியது விவாதமான நிலையில், கடந்த ஆண்டு ஆளுநர் உரையை முழுமையாகப் படிக்காமல், 4 நிமிடங்களில் முடித்தார்.

இதனால், இன்றைய ஆளுநர் உரை எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும், அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தை சட்டப்பேரவையில் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதால், அவை நடவடிக்கைகள் காரசாரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read More
வணிகம்வணிகம்

பொருளாதார சுதந்திரம் என்பது அனைவருக்கும் முக்கியமானதாக கருதப்படுகிறது. எனவே பெண்களுக்கு பொருளாதார சுதந்திரத்தை வழங்குவது சம்பந்தமாக அரசு பல்வேறு விதமான முயற்சிகளை எடுத்துள்ளது. அதேபோல் தனியார் மற்றும் அரசு வங்கிகள் பெண்களுக்காக பிரத்தியேகமாக ஒரு சில கடன்களை வழங்கி வருகின்றனர். பெண்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ள பர்சனல் லோன்கள் குறைவான வட்டி விகிதத்தில் எளிமையான திருப்பி செலுத்தும் திட்டத்தோடு கொடுக்கப்படுகிறது. சிறிய தொழில் துவங்குவது முதல் வீட்டை புதுப்பிப்பது போன்ற பல்வேறு விஷயங்களுக்கு பெண்கள் இந்த கடன்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.
வயது : இந்த கடனுக்கு விண்ணப்பிக்கும் பெண்ணின் வயது 21 முதல் 65 வயது வரை இருக்கலாம்.
வேலை : விண்ணப்பதாரர் மாத வருமானம் பெறுபவர் அல்லது சுய தொழில் செய்பவராக இருக்க வேண்டும்.
பணி அனுபவம் : விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் 2 வருட பணி அனுபவம் மற்றும் தற்போதைய வேலையில் குறைந்தபட்சம் ஒரு வருட அனுபவம் இருத்தல் அவசியம்.
கடன் பெறுபவர் : இந்திய குடிமக்களாக இருக்க வேண்டும். வயது மற்றும் வேலை அனுபவமானது கடன் வழங்குனரின் பாலிசிகளை பொறுத்து மாறுபடலாம்.
Also Read: Tamil Nadu Gold Rate Jan 3: தொடர்ந்து உயரும் தங்கம் விலை… அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்! – இன்றைய நிலவரம் என்ன?

பெண்களுக்கான பர்சனல் லோன்களுக்கு தேவைப்படும் டாக்குமென்ட்கள்:

சமீபத்தில் எடுத்த பாஸ்போர்ட் சைஸ் போட்டோ.
அடையாள சான்றிதழாக PAN கார்டு.
முகவரி சான்றிதழுக்கு ஆதார் அட்டை அல்லது ஓட்டுனர் உரிமம்.
வேலை அல்லது பிசினஸ் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு சமீபத்திய பேங்க் ஸ்டேட்மென்ட் (வழக்கமாக கடந்த 6 முதல் 12 மாதங்களுக்குள்).
ஒருவேளை நீங்கள் ஆன்லைன் அல்லது டிஜிட்டல் லெண்டிங் பிளாட்பார்ம் மூலமாக கடன் வாங்குகிறீர்கள் என்றால் நீங்கள் எந்த ஒரு ஆவணத்தையும் நேரடியாக வழங்க தேவையில்லை. இதற்கான செயல்முறை 100% ஆன்லைனில் நிறைவு செய்து தரப்படும்.

பெண்களுக்கான பர்சனல் லோன் விண்ணப்ப செயல்முறை:
பல இன்ஸ்டன்ட் லோன் அப்ளிகேஷன்கள் விண்ணப்ப செயல்முறையை விரைவாகவும் எந்த ஒரு தொந்தரவு இல்லாமலும் பெண்களுக்கு செய்து கொடுப்பதற்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு சில அடிப்படை ஆவணங்களை ஆன்லைனில் சமர்ப்பித்து, பெண்கள் இந்த கடனை எளிமையாக பெற்றுக் கொள்ளலாம். உங்களுடைய விண்ணப்பத்தை நீங்கள் சமர்ப்பித்தவுடன் கடன் வழங்குனர் அதனை ஆய்வு செய்து, அப்ரூவலுக்காக அதனை ப்ராசஸ் செய்வார். பர்சனல் லோனுக்கான அங்கீகரிப்பு நேரம் என்பது ஒரு சில நிமிடங்கள் முதல் 4 மணி நேரம் வரை ஆகும்.
பெண்களுக்கான பர்சனல் லோன்: வட்டி விகிதங்கள்:

பெண்களுக்கு பொதுவாக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் குறைவான வட்டி விகிதத்தை வழங்குகின்றன. எனினும் வட்டி விகிதமானது கடன் பெறுநரின் கிரெடிட் ஸ்கோர், வேலை, வயது, லோன் தொகை மற்றும் லோன் கால அளவு போன்ற காரணிகளின் அடிப்படையில் மாறுபடலாம்.
பெண்களுக்கான பர்சனல் லோன்: கருத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

லோனுக்கு விண்ணப்பிக்கும் முன்பு உங்களுக்கு எவ்வளவு கடன் தேவைப்படுகிறது என்பதை நீங்கள் முடிவு செய்து கொள்ள வேண்டும்.
உங்களுக்கு தேவையான தொகையை முடிவு செய்த பிறகு உங்களுடைய சேமிப்பு மற்றும் செலவுகள் போக எவ்வளவு தொகையை EMI ஆக செலுத்த முடியும் என்பதையும் முடிவு செய்து கொள்ளுங்கள்.
கடனுக்கு விண்ணப்பிப்பதற்கு முன்பு பல்வேறு கடன் வழங்குனர்கள் வழங்கும் கடன் ஆஃபர்களை ஒப்பிட்டு பார்த்து உங்களுக்கான ஒன்றை தேர்வு செய்வது அவசியம்.

Read More