mayiladuthurai

தமிழ்நாடுநிகழ்ச்சிகள்

வேலைவாய்ப்பற்ற மயிலாடுதுறை இளைஞர்களே! உதவித்தொகை பெற இதுதான் கடைசி தேதி: முழு விபரம்

வேலைவாய்ப்பற்ற மயிலாடுதுறை இளைஞர்களே உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவுசெய்துள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியுள்ள பதிவுதாரர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். மேலும் 29.08.2025 அன்றுக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பித்து பயனடையுமாறு அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கேட்டுக்கொண்டுள்ளார்.

யார் தகுதியானவர்கள்?
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தில் பயன்பெற, 30.06.2025 அன்று ஐந்து வருடங்கள் முடிவடைந்த (மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை முறையாக புதுப்பித்துள்ள) பதிவுதாரர்கள் தகுதியுடையவர்கள் ஆவர். இதில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், மேல்நிலை வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்கள் ஆகியோர் அடங்குவர்.

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு சலுகைகள்
மாற்றுத்திறனாளிகளைப் பொறுத்தவரை, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள் அல்லது பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், மேல்நிலை வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்று 30.06.2025 அன்று ஒரு வருடம் முடிவடைந்த பதிவுதாரர்கள் தகுதியுடையவர்கள். மாற்றுத்திறனாளிகளுக்கு வருமானம் மற்றும் வயது உச்ச வரம்பு ஏதும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுப்பிரிவினருக்கான உதவித்தொகை விவரம்
பத்தாம் வகுப்பு தேர்ச்சியின்மை (SSLC-Failed) உள்ளவர்களுக்கு மாதம் ரூ.200/-

பத்தாம் வகுப்பு தேர்ச்சி (SSLC-Passed) பெற்றவர்களுக்கு மாதம் ரூ.300/-

மேல்நிலை வகுப்பு தேர்ச்சி (HSC-Passed) பெற்றவர்களுக்கு மாதம் ரூ.400/-

பட்டப்படிப்பு தேர்ச்சி (DEGREE-Passed) பெற்றவர்களுக்கு மாதம் ரூ.600/-
இந்த உதவித்தொகை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கணக்கிடப்பட்டு பயனாளியின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.

வயது மற்றும் வருமான வரம்பு (பொதுப்பிரிவினருக்கு)
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பிரிவினர் 45 வயதுக்குள்ளும், இதர பிரிவினர் 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.

குடும்பத்தின் அதிகபட்ச ஆண்டு வருமானம் ரூ.72,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை விவரம்:
பத்தாம் வகுப்பு தேர்ச்சியின்மை மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.600/-

மேல்நிலை வகுப்பு தேர்ச்சி (HSC-Passed) பெற்றவர்களுக்கு மாதம் ரூ.750/-

பட்டப்படிப்பு தேர்ச்சி (DEGREE-Passed) பெற்றவர்களுக்கு மாதம் ரூ.1000/-

மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை ஒவ்வொரு மாதமும் நேரடியாக அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
தகுதியற்றவர்கள் யார்?
ஏற்கனவே மூன்று ஆண்டுகள் உதவித்தொகை பெற்றவர்கள்.

பொறியியல், மருத்துவம், விவசாயம் மற்றும் சட்டம் போன்ற தொழில் சார்ந்த பட்டப் படிப்புகள் முடித்தவர்கள்.

அரசுப்பணியில் உள்ளவர்கள் அல்லது தனியார் துறையில் ஒருமுறையாவது பணியில் சேர்ந்து ஊதியம் பெற்றவர்கள் அல்லது பெறுபவர்கள்.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறுபவர்கள் மற்றும் அரசின் வேறு ஏதேனும் திட்டத்தில் உதவித்தொகை பெறுபவர்கள்.

எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் தற்போது பயில்பவர்கள்.
விண்ணப்பிக்கும் முறை
தகுதியுடைய பதிவுதாரர்கள், தேவையான அனைத்து அசல் மற்றும் நகல் ஆவணங்களுடன் நேரில் விண்ணப்பிக்கலாம்.

தேவையான ஆவணங்கள்
வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை

பள்ளி, கல்லூரிகளின் மதிப்பெண் சான்றிதழ் மற்றும் மாற்றுச்சான்றிதழ்

குடும்ப அட்டை
ஆதார் அட்டை
சாதிச்சான்றிதழ்
தேசியமயமாக்கப்பட்ட ஏதேனும் ஒரு வங்கியில் தங்கள் பெயரிலுள்ள வங்கிக் கணக்குப் புத்தகம்
அணுக வேண்டிய முகவரி
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்,

2வது தெரு, பாலாஜி நகர்,

பூம்புகார் சாலை,

மயிலாடுதுறை-1.

விண்ணப்பப் படிவத்தை அலுவலகத்தில் இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம் அல்லது https://tnvelaivaaippu.gov.in/download.html என்ற இணையதள பக்கத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இணையதளத்தில் பதிவிறக்கம் செய்பவர்கள் 04364-299790 என்ற அலுவலக தொலைபேசி எண்ணை தொடர்புகொண்டு உரிய அறிவுரை பெற்று பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை 29.08.2025-க்குள் சமர்ப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி தகுதியுள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயனடையுமாறு மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.

Read More
ஆன்மீகம்தமிழ்நாடு

மயிலாடுதுறை காவிரி துலா உற்சவம் ,சுவாமி உலா மிக சிறப்பாக நடைபெற்றது…

மயிலாடுதுறை காவிரி ஆற்றின் துலா உற்சவ தீர்த்தவாரி திருவிழா பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் புனித நீராடினர், தருமபுரம் மற்றும் திருவாவடுதுறை ஆதீன மடாதிபதிகள் பங்கேற்பு:-

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையில் காவிரி ஆற்றை மையப்படுத்தி அனைத்து கோயில்களிலும் ஐப்பசி மாதம் நடைபெறும் துலா உற்சவம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். மயிலாடுதுறை காவிரி கரையில் மயூரநாதர் ஆலயம் வதான்யேஸ்வரர் ஆலயம் ஐயாரப்பர் ஆலயம் புனுகீஸ்வரர் ஆலயம், காசி விஸ்வநாதர் ஆலயம் தெப்பக்குளம் விஸ்வநாதர் ஆலயம் படித்துறை விஸ்வநாதர் ஆலயம் ஆகியவற்றில் கடந்த ஆறாம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான காவிரி தீர்த்தவாரி இன்று நடைபெற்றது. ஆற்றின் உள்ளே 16 தீர்க்க கிணறுகள் அமைந்துள்ளன. புனிதம் வாய்ந்த இடமாக கருதப்படும் புனித தீர்த்தமான மயிலாடுதுறை காவிரி ஆற்றில் இன்று தீர்த்தவாரி நடைபெறுவதை முன்னிட்டு இரு கரைகளிலும் அனைத்து ஆலயங்களில் இருந்து சுவாமி அம்பாள் மற்றும் பஞ்ச மூர்த்திகள் பக்தர்களுக்கு காட்சியளித்து தீர்த்தவாரி அளித்தனர். அனைத்து ஆலயங்களின் அஸ்திர தேவருக்கும் காவிரி கரையில் பால் பன்னீர் இளநீர் சந்தனம் தயிர் தேன் நெய் உள்ளிட்ட 16 வகை திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது தொடர்ந்து காவிரி ஆற்றில் தீர்த்தவாரி நடைபெற்றது. தர்மபுரம் ஆதின குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள், திருவாவடுதுறை ஆதின குரு மகா சனிமாதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக சுவாமிகள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். இதற்காக இன்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் புனித நீராட வருகை தந்துள்ளனர்.

Read More