நடிகர் டில்லிகணேஷ் மறைவு திரை உலகுக்கு பெரிய இழப்பு….
மறைந்த பிரபல நடிகர் டெல்லி கணேஷின் கடைசி நிமிடங்கள் குறித்து அவரது மகனும் நடிகருமான மஹா பேசியுள்ளார்.
பிரபல நடிகர் டெல்லி கணேஷ் நேற்று இரவு 11 மணியளவில் தூக்கத்திலேயே காலமானார். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் டெல்லி கணேஷ். திரைப்படங்கள் மட்டுமின்றி, சின்னத்திரை நாடகங்களிலும் டெல்லி கணேஷ் நடித்துள்ளார். சென்னை ராமாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று இரவு காலமானார்.
இந்நிலையில், டெல்லி கணேஷின் கடைசி நிமிடங்கள் குறித்து அவரது மகனும் நடிகருமான மஹா பேசியுள்ளார்.அதில், ‘அப்பாவுக்கு 80 வயது. அவருக்கு வயது முதிர்வின் காரணமாக சில உடல் பிரச்சினைகள் இருந்தது’ என்று தெளிவுபடுத்தியுள்ளார்.
மேலும் பேசியுள்ள மகா, ‘நேற்றிரவு வழக்கம்போல் மாத்திரை கொடுக்க சென்றோம். அப்போது அவரின் உடலில் இருந்து எந்த அசைவும் இல்லை. மருத்துவரை அழைத்து சோதனை செய்தபோதுதான், அப்பா உயிரிழந்தது தெரியவந்தது.எனது அக்காவுடன் நேற்றிரவு எப்போதும் போல நன்றாகத்தான் பேசிக்கொண்டு இருந்தார் அப்பா. ஆனால், திடீரென இப்படி ஆகிவிட்டது. எங்களுக்கு மீள முடியாத இழப்பு இது’ என மஹா உருக்கமாக பேசியுள்ளார்.
Read More