Author: Namadhu Arasu

குற்றம்தமிழ்நாடுமாவட்டம்

தமிழகத்தில் இரு தனியார் மருத்துவமனை உரிமம் ரத்தாகிறது-சிறுநீரக மாற்று ஆப்பரேஷன் முறைகேடு

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை முறைகேடாக நடத்திய, இரண்டு தனியார் மருத்துவமனைகளின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்’ என, தமிழக அரசு அறிவித்துள்ளது.
நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையத்தில் வறுமை காரணமாக பலர் தங்களின் சிறுநீரகத்தை விற்றது, இரண்டு தனியார் மருத்துவமனைகளில் முறைகேடாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடந்தது தொடர்பான தகவல் சமீபத்தில் வெளியானது.

இது, தமிழகம் முழுதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இது குறித்து விசாரித்து, விரிவான அறிக்கை அளிக்க, தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் வினீத் தலைமையில், தமிழக அரசு குழுவை நியமித்தது.

இக்குழு கடந்த மாதம் 22ம் தேதி விசாரணையை துவக்கியது. திருச்செங்கோடு தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில், சிறுநீரக கொடையாளிகள் தொடர்பான விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

அதில், ‘மனித உறுப்பு மாற்று சட்டம் 1994’க்கு முரணாக, தனியார் மருத்துவமனைகள் தவறான முறையில் சான்றுகள் சமர்ப்பித்து, நெருங்கிய உறவினர்கள் அல்லாத கொடையாளர்களிடம் பணத்திற்கு உறுப்புகளை பெற்றது தெரிய வந்தது.
விசாரணையை முடித்து, அறிக்கையை அரசிடம் வினீத் அளித்துள்ளார். அதை அரசு பரிசீலித்து, அதில் தெரிவிக்கப்பட்ட பரிந்துரைகள் அடிப்படையில், மேல் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக, தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட அறிக்கை:
திருச்சி சிதார் மருத்துவமனை, பெரம்பலுார் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை போன்றவற்றில், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்ய, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் வழியே நடவடிக்கை எடுக்கப்படும்

விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள, இரு தரகர்களான ஆனந்தன், ஸ்டான்லி மோகன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்

மனித உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு உரிமம் பெற்ற மருத்துவமனைகளின் ஆவணங்கள் அவ்வப்போது ஆய்வு செய்யப்படும். முறைகேடுகள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்

மனித உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு ஒப்புதல் வழங்க, தற்போது மாவட்ட அளவில் மட்டுமே நான்கு அங்கீகார குழுக்கள் உள்ளன. இதை சீரமைத்து, மாவட்ட குழுக்களின் பணிகளை மேற்பார்வை செய்யும் அதிகாரம் வழங்கி, புதிதாக மாநில அளவில் குழு அமைக்கவும், ஏற்கனவே மாவட்ட அளவில் உள்ள குழுக்களை மறு சீரமைப்பு செய்யவும் உரிய ஆணைகள் அரசால் வெளியிடப்படும்
மனித உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளவர்களுக்கும், கொடையாளிகளுக்கும், தகுந்த மருத்துவ ஆலோசனைகள் மற்றும் சட்ட நடைமுறைகள் வழங்க, நிலையான இயக்க நடைமுறைகளை உருவாக்கி செயல்படுத்த, மருத்துவ கல்வி இயக்குநருக்கு அறிவுறுத்தப்படும்

உடல் உறுப்பு தானம் குறித்து மக்களிடம் விழிப்பணர்வு ஏற்படுத்த, மாவட்ட நிர்வாகங்களுக்கு உரிய ஆணைகள் பிறப்பிக்கப்படும்

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை சட்டத்தின் செயலாக்கத்தை செம்மைப்படுத்துவது தொடர்பான பரிந்துரைகள் குறித்து, உரிய ஆணைகள் அரசால் வெளியிடப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Read More
தமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்

தமிழக எம்.பி.க்களை அந்தரத்தில் அலறவிட்ட ஏர்இந்தியா-விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு…

திருவனந்தபுரத்தில் இருந்து டெல்லி புறப்பட்ட ஏர்இந்தியா விமானத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறால் 5 எம்.பி.கள் உள்பட 181 பயணிகள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், எம்.பி.யுமான கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “திருவனந்தபுரத்திலிருந்து டெல்லிக்கு வந்த ஏர் இந்தியா விமானம் AI 2455, நானும், பல எம்.பி.க்களும், நூற்றுக்கணக்கான பயணிகளும் இன்று பயங்கரமான துயரத்தை எதிர்கொண்டோம்.
தாமதமாக புறப்பட்டதாகத் தொடங்கிய பயணம், ஒரு துயரமான பயணமாக மாறியது. புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, நாங்கள் முன்னெப்போதும் இல்லாத பதற்றத்தில் சிக்கினோம். சுமார் ஒரு மணி நேரம் கழித்து, கேப்டன் விமானத்தில் சிக்னல் கோளாறு இருப்பதாக அறிவித்து சென்னைக்குத் திருப்பி விடப்பட்டார்.
கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம், தரையிறங்க அனுமதிக்காக காத்திருந்தோம், விமானியின் முதல் முயற்சியின் போது எங்கள் பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் ஓடுபாதையில் – மற்றொரு விமானம் இருந்ததாகக் கூறப்படுகிறது. அந்த நொடியில், கேப்டன் விரைவாக மேலே செல்ல முடிவு செய்ததால் விமானத்தில் இருந்த ஒவ்வொரு உயிரும் காப்பாற்றப்பட்டது. இரண்டாவது முயற்சியில் விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது.
திறமை மற்றும் அதிர்ஷ்டத்தால் நாங்கள் காப்பாற்றப்பட்டோம். பயணிகளின் பாதுகாப்பு அதிர்ஷ்டத்தை நம்பியிருக்க முடியாது. இந்த சம்பவத்தை அவசரமாக விசாரித்து, பொறுப்புணர்வை சரிசெய்யவும், இதுபோன்ற தவறுகள் மீண்டும் ஒருபோதும் நடக்காமல் பார்த்துக் கொள்ளவும் இந்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் மற்றும் இந்திய அரசின் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் ஆகியோரை நான் கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

திருவனந்தபுரத்தில் இருந்து டெல்லி புறப்பட்ட இந்த ஏர்இந்தியா விமானத்தில் MPகளான கே.சி.வேணுகோபால், கொடிகுணில் சுரேஷ், அணில் பிரகாஷ், கே.ராதாகிருஷ்ணன், ராபர்ட் புரூஸ் என 5 எம்.பி.கள் உடன் 181 பயணிகள் பயணம் செய்தனர். விமானம் உடனடியாக சென்னையில் தரையிரக்கப்பட்ட நிலையில், 2 மணி நேரம் கழித்து மாற்று விமானத்தில் அனைவரும் டெல்லி புறப்பட்டனர்.
இது தொடர்பாக ஏர் இந்தியா வெளியிட்டுள்ள விளக்கத்தில், “அன்புள்ள திரு. வேணுகோபால், தொழில்நுட்பக் கோளாறு மற்றும் மோசமான வானிலை காரணமாக சென்னைக்கு திருப்பி விடப்பட்டது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத்தான் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறோம். சென்னை விமான நிலையத்தில் முதல் தரையிறங்கும் முயற்சியின் போது, ஓடுபாதையில் மற்றொரு விமானம் இருந்ததால் அல்ல, சென்னை விமான போக்குவரத்து ஆணையத்தால் ஒரு சுற்றுப்பாதை அமைக்க அறிவுறுத்தப்பட்டது. இதுபோன்ற சூழ்நிலைகளைக் கையாள எங்கள் விமானிகள் நன்கு பயிற்சி பெற்றவர்கள், மேலும் இந்த விஷயத்தில், அவர்கள் விமானம் முழுவதும் நிலையான நடைமுறைகளைப் பின்பற்றினர். இதுபோன்ற அனுபவம் தொந்தரவாக இருக்கலாம் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம், மேலும் திருப்பி விடப்பட்டதால் உங்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம். இருப்பினும், பாதுகாப்பு எப்போதும் எங்கள் முன்னுரிமை. உங்கள் புரிதலுக்கு நன்றி” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More
அரசியல்தமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்-முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு ஹோம் டெலிவரி- ரேஷன்..

தமிழ்நாட்டில் முதியோர், மாற்றுத்திறனாளிகளின் வீட்டிற்கே ரேசன் பொருட்களை விநியோகிக்கும் ‘முதலமைச்சரின் தாயுமானவர்’ திட்டத்தை ஆகஸ்ட் 12-ம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைக்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று குடிமைப் பொருட்கள் வழங்குவதால் அரசுக்கு ரூ.30.16 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிலுள்ள முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும் ‘முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை’ ஆகஸ்ட் 12-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைக்கிறார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “அரசு வழங்கும் பல்வேறு சேவைகளை மக்களின் வீடுதேடிச் சென்றடையச் செய்யும் தமிழ்நாடு அரசின் உயரிய எண்ணத்தின் அடுத்த கட்டமாக, மாநிலத்தில் உள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத் திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும் “முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்” முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் ஆகஸ் 12-ம் தேதி சென்னையில் தொடங்கி வைக்கப்பட உள்ளது.

Read More
அரசியல்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்

மாநில கல்விக் கொள்கை-முதல்வர் ஸ்டாலின்வெளியிடுகிறார்-முதல்வர் ஸ்டாலின்

மாநில கல்விக் கொள்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிடுகிறார்.
திமுக அரசு பொறுப்பேற்ற பின் தமிழ்நாட்டிற்கென மாநிலக் கல்விக் கொள்கை உருவாக்க குழு அமைக்கப்படும் எஎன 2021-22ஆம்ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்து. அதன்படி, ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட குழு 2022ஆம் ஆண்டு அமைக்கப்பட்டிருந்தது. அந்த குழு 600 பக்கங்கள் கொண்ட அறிக்கையை கடந்த ஆண்டு ஜூலை மாதம் சமர்ப்பித்தது. இதில், இரு மொழிக் கொள்கையே பின்பற்றப்பட வேண்டும் என்றும், 3, 5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு கூடாது என என்றும் பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், பள்ளிக் கல்வியில் தமிழை முதல் மொழியாக நிலைநிறுத்த வேண்டும் என்றும், தொடக்க நிலை முதல் பல்கலைக்கழக நிலை வரை தமிழ்வழிக் கல்வியை வழங்க வேண்டும் என்றும், கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
கல்லூரி மாணவர் சேர்க்கையின்போது 12ஆம் வகுப்பு மதிப்பெண்களுடன் 11ஆம் வகுப்பு மதிப்பெண்களும் இடம்பெற வேண்டும் என்னும் இந்த கொள்கையில் வலியுறுத்தப்பட்டிருந்து. மாநிலக் கல்விக் கொள்கையில் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிடுகிறார்.

Read More
இந்தியாதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்வணிகம்

சென்னை மெட்ரோ குறித்த கேள்விக்கு இணை அமைச்சர் பதில்-ரூ.3, 000 கோடி ஒதுக்கிய மத்திய அரசு…

சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்திற்கு மத்திய அரசு ரூ 8,000 கோடிக்கும் அதிகமாக நிதியை விடுத்துள்ளதாகவும் 2025-26 ஆம் ஆண்டு மத்திய அரசு இதுவரை ரூ.3, 000 கோடி நிதி ஒதுக்கியுள்ளதாகவும் மத்திய இணை அமைச்சர் தோகன் சாஹு மக்களவையில் தகவல் தெரிவித்துள்ளார்.

நாட்டில் மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட நிதி குறித்து மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், அதற்கு பதிலளித்த நகர்ப்புற விவகாரங்களுக்கான இணை அமைச்சர் தோகன் சாஹு, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கும் வெளியிடப்பட்ட நிதியைப் பகிர்ந்து கொண்டார்.

அதன்படி, சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்டத் திட்டத்திற்காக 2024-25 ஆம் ஆண்டில் மத்திய அரசு ரூ. 5,219.57 கோடியை விடுத்தது. இதன் நெட்வொர்க் நகரத்தின் முக்கிய பகுதிகளை அதன் மூன்று வழித்தடங்களுடன் இணைக்கும் – மாதவரம் முதல் சிப்காட், லைட் ஹவுஸ் முதல் பூந்தமல்லி மற்றும் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை. 2025-2026 ஆம் ஆண்டில், மத்திய ரூ. 8,445.8 கோடியை ஒதுக்கியுள்ளது. இதில், ரூ. 3,000 கோடி இந்த ஆண்டு விடுவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்திற்கு 2025-26 ஆம் ஆண்டு மத்திய அரசு இதுவரை ரூ.3, 000 கோடி நிதி ஒதுக்கியுள்ளதாக மத்திய இணை அமைச்சர் தோகன் சாஹு மக்களவையில் தகவல் தெரிவித்துள்ளார்.
சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்திற்கு 2025-26 ஆம் ஆண்டு மத்திய அரசு இதுவரை ரூ.3, 000 கோடி நிதி ஒதுக்கியுள்ளதாக மத்திய இணை அமைச்சர் தோகன் சாஹு மக்களவையில் தகவல் தெரிவித்துள்ளார்.
சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்திற்கு 2025-26 ஆம் ஆண்டு மத்திய அரசு இதுவரை ரூ.3, 000 கோடி நிதி ஒதுக்கியுள்ளதாக மத்திய இணை அமைச்சர் தோகன் சாஹு மக்களவையில் தகவல் தெரிவித்துள்ளார்.

Read More
இந்தியாஉலகம்வணிகம்

இந்தியாவுக்கு 25%லிருந்து … 50%சதவிகித வரி-அமெரிக்க அதிபர் டிரம்ப்…

இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதியாகும் பொருட்கள் மீது ஆகஸ்ட் 1ஆம் தேதியான வெள்ளிக்கிழமை முதல், 25 விழுக்காடு வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்திருந்தார். மேலும் ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்வதால் கூடுதல் அபராதம் விதிக்கப்படும் என்றும் டிரம்ப் எச்சரித்திருந்தார்.
இதுகுறித்து தனது சமூகவலைதளத்தில் பதிவிட்ட அதிபர் டிரம்ப், இந்தியா, அமெரிக்காவுக்கு நல்ல நண்பராக இருந்து வந்தாலும், வேறு எந்த நாடும் வசூலிக்காத அளவுக்கு அமெரிக்கப் பொருள்களுக்கு அதிக வரி வசூலிப்பதாகக் குற்றம்சாட்டினார். வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு மிகக் கடுமையான பணமற்ற வர்த்தகத் தடைகளை இந்தியா கொண்டிருப்பதாகவும் சாடினார்.
இந்தியப் பொருட்கள் மீதான 25 சதவிகித வரி விதிப்பு வரும் 7 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என அமெரிக்கா அறிவித்திருந்த நிலையில், தற்போது கூடுதலாக 25 சதவிகித வரியை இந்தியா மீது விதிப்பதாக அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளார்.
இந்தியப் பொருட்கள் மீதான 25 சதவிகித வரி விதிப்பு வரும் 7 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என அமெரிக்கா அறிவித்திருந்த நிலையில், தற்போது கூடுதலாக 25 சதவிகித வரியை இந்தியா மீது விதிப்பதாக அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளார்.
அதன்படி தற்போது, ஏற்கனவே விதிக்கப்பட்ட 25 சதவிகித வரியுடன் கூடுதலாக 25 சதவிகித வரியை இந்தியா மீது விதிப்பதாக அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளார். இதன் மூலம், அமெரிக்கா, இந்தியா மீது தற்போது 50 சதவிகித வரியை விதித்துள்ளது.
இந்தியா மீது 50 சதவிகித வரி விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒப்புதல் வழங்கி அறிவிப்பு வெளியிட்டார். இதற்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், “இந்தியா தனது தேசிய நலன்களைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும். அமெரிக்கா விவகாரத்தில் இந்தியாவும் அதே நிலைபாட்டை எடுக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

Read More
குற்றம்தமிழ்நாடு

திருப்பூர் எஸ்எஸ்ஐ கொலை : தேடப்பட்டு வந்த மணிகண்டன் என்கவுண்டரில் பலி

எஸ்.எஸ்.ஐ சண்முகவேல் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான மணிகண்டன் இன்று குடிமங்கலத்தில் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டார்.
திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் பகுதியில் மடத்துக்குளம் அதிமுக எம்எல்ஏ மகேந்திரனுக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இங்கு மூர்த்தி என்பவரும், அவரது மகன்கள் தங்கபாண்டியன், மணிகண்டன் ஆகியோரும் தங்கி பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்குள் செவ்வாய் கிழமை இரவு மதுபோதையில் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது மூர்த்தியை இரண்டு மகன்களும் கடுமையாக தாக்கி, அரிவாளுடன் துரத்தியதாக தெரிகிறது.
தகவல் அறிந்து ரோந்து பணியில் இருந்த குடிமங்கலம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் அங்கு சென்றார். அவர்களை சமாதானம் செய்ய முயன்றபோது, மூவரும் இணைந்து உதவி ஆய்வாளர் சண்முகவேலை வெட்டி கொலை செய்துள்ளனர். சண்முகவேலுடன் வந்த ஓட்டுநரையும் அவர்கள் அரிவாளுடன் துரத்திய நிலையில், தப்பிச் சென்ற அவர் காவல் நிலையத்தில் தகவல் கொடுத்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்ட நிலையில், தந்தை மூர்த்தி, மகன் தங்கப்பாண்டியன் காவல்நிலையத்தில் சரண் அடைந்தனர். மற்றொரு மகனான மணிகண்டனை காவல்துறையினர் தேடி வந்தனர்.
இந்நிலையில் தலைமறைவாக இருந்த மணிகண்டன் சிக்கலூர் அருகே ஒப்பாறு ஓடையில் பதுங்கி இருந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் மணிகண்டன் பிடித்த போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றபோது, சரவணக்குமார் என்ற உதவி ஆய்வாளரை வெட்டி விட்டு தப்ப முயன்றதாகவும், அப்போது தற்காப்புக்காக போலீசார் சுட்டதில் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பலியானதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மணிகண்டனின் உடல், பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது.

Read More
இந்தியாஉலகம்வணிகம்

வரி விதிப்பு நடவடிக்கை, கச்சா எண்ணெய் குறித்து ட்ரம்ப் விமர்சனம்: ஐக்கிய அரபு அமீரக அதிபருடன் மோடி ஆலோசனை

இந்திய இறக்குமதி பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று அறிவித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பாகிஸ்தானுடன் இணைந்து தெற்காசியாவிலேயே மிக பெரிய கச்சா எண்ணெய் கிடங்கு அமைக்கப்படும் என்றும் கூறியுள்ளார். இந்த சூழலில், ஐக்கிய அரபு அமீரக அதிபருடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார்.

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும். இந்த வரி விதிப்பு இன்று (ஆகஸ்ட் 1) முதல் அமலுக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று முன்தினம் அறிவித்தார். மேலும், ரஷ்யாவிடம் இருந்து ராணுவ தளவாடங்கள், கச்சா எண்ணெய் ஆகியவற்றை வாங்குவதால் இந்தியாவுக்கு கூடுதலாக அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவித்தார். இது மட்டுமின்றி, தாமிரம் மற்றும் அது தொடர்பான பொருட்களின் இறக்குமதிக்கு 50 சதவீத வரிவிதிப்பு அமல்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.
தற்போது இறக்குமதி வரி உயர்த்தப்பட்டுள்ளதால், அமெரிக்காவில் தாமிர பொருட்களின் விலை அதிகரித்து, இந்தியாவின் ஏற்றுமதி பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
2024-25 நிதி ஆண்டில் 360 மில்லியன் டாலர் மதிப்பிலான தாமிர பொருட்களை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று தனது சமூக வலைதள பதிவில், ‘பாகிஸ்தானுடன் இப்போதுதான் ஒரு முக்கிய ஒப்பந்தத்தை முடிவு செய்துள்ளோம். அதன்படி, பாகிஸ்தானும், அமெரிக்காவும் இணைந்து மிகப்பெரிய கச்சா எண்ணெய் இருப்பை உருவாக்க இருக்கிறோம். இது தெற்காசியாவிலேயே மிகப்பெரியதாக இருக்கும். இதற்காக தகுதியுள்ள எண்ணெய் நிறுவனங்களை தேர்வு செய்து வருகிறோம். யாருக்கு தெரியும், ஒருநாள் பாகிஸ்தானிடம் இருந்துகூட இந்தியா கச்சா எண்ணெய் வாங்கும் நிலை வரலாம்’ என்று தெரிவித்துள்ளார்.

இந்த சூழலில், ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் முகமது பின் ஜாயத் அல் நயானை பிரதமர் மோடி, தொலைபேசியில் தொடர்புகொண்டு முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார். இரு நாட்டு மக்களின் பொதுவான நலனுக்காக இரு தரப்பு ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்துவது குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தினர். இரு நாடுகள் இடையே பல்வேறு துறைகளில் உள்ள பரஸ்பர ஒத்துழைப்பின் முன்னேற்றங்கள் குறித்தும் விவாதித்தனர்.

இந்தியாவில் நீண்டகாலம் தொடர்ந்து பிரதமராக பதவி வகித்த 2-வது நபர் என்ற சாதனையை பிரதமர் மோடி படைத்துள்ளார். அவரது சேவை தொடர வேண்டும் என்றும் அல் நயான் வாழ்த்தினார் என மத்திய அரசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்திய பொருட்களுக்கு ட்ரம்ப் 25 சதவீத வரி விதித்த நிலையில், கச்சா எண்ணெய் மற்றும் வர்த்தக வரி குறித்து ஐக்கிய அரபு
அமீரக அதிபருடன், பிரதமர் மோடி பேசி இருக்கலாம். அமெரிக்காவின் வரி விதிப்புக்கு பதில் நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு சில முக்கிய வியூகங்களை வகுக்கும் வகையிலும் பிரதமர் மோடி பேசியிருக்கலாம் என்று டெல்லி வட்டாரங்கள் கூறின.

மக்களவையில் அமைச்சர் விளக்கம்: இதற்கிடையே, அமெரிக்காவின் வரி விதிப்பு அறிவிப்பு தொடர்பாக மக்களவையில் எதிர்க்கட்சியினர் நேற்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்து மத்திய வர்த்தகம், தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் பேசியதாவது:

உலகின் மிக பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில் 11-வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 5-வது இடத்துக்கு முன்னேறி உள்ளது. விவசாயிகள், குறு, சிறு, நடுத்தர தொழில்கள், கார்ப்பரேட் நிறுவனங்களின் கடின உழைப்பு மற்றும் மத்திய அரசின் பொருளாதார சீர்திருத்தங்களால் இந்த சாதனை சாத்தியமானது.

உலகின் நம்பிக்கை நட்சத்திரமாக இந்தியா திகழ்வதாக சர்வதேச நிதி அமைப்புகள், சர்வதேச பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். பொருளாதார ரீதியாக நாட்டின் நலன்களை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்தியா – அமெரிக்கா இடையே பலசுற்றுபேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. 10-15 சதவீதம் வரி விதிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

ஆகஸ்ட் 25-ல் பேச்சுவார்த்தை: வரி விகிதம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்காவின் உயர்நிலை குழு ஆகஸ்ட் 25-ம் தேதி டெல்லி வருகிறது. அப்போது கருத்து வேறுபாடுகள் களையப்படும். அதன்பிறகு, இந்திய உயர்நிலை குழு வாஷிங்டன் செல்லும்.

இந்திய தரப்பில் மூத்த பொருளாதார ஆலோசகர் ராஜேஷ் அகர்வாலும், அமெரிக்க தரப்பில் பிரென்டனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அக்டோபர் அல்லது நவம்பரில் அமெரிக்காவுடன் முதல்கட்ட வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும்.

கடந்த ஜூலையில் தென்கொரிய பொருட்களுக்கு 25 சதவீத வரியை அமெரிக்கா விதித்தது. இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்த வரியை 15 சதவீதமாக அமெரிக்கா குறைத்துள்ளது. இதேபோல, இந்திய பொருட்கள் மீதான வரியையும் அமெரிக்க அரசு நிச்சயமாக குறைக்கும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Read More
அரசியல்இந்தியாஉலகம்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்

இந்தியாவிற்கு 25% வரி.. நாளை முதல் அமல்.. அமெரிக்காவின் அறிவிப்பால் அடுத்து என்ன…

இந்தியாவிற்கு 25% வரி.. நாளை முதல் அமல்.. அமெரிக்காவின் அறிவிப்பால் அடுத்து என்ன…

நாளை முதல் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களுக்கு 25 விழுக்காடு வரியுடன் ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதற்காக அபராதத் தொகை வசூலிக்கப்படும் என அந்நாட்டு அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
உலக நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்களை ஏற்படுத்துவதில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி இந்தியா உட்பட பல்வேறு நாடுகளின் மீதும் பரஸ்பர வரி விதித்த டிரம்ப், வர்த்தகப் பேச்சுவார்த்தைகளுக்கு வழிவகுக்கும் வகையில், இந்த வரி விதிப்புக்கான கெடுவை ஜூலை 31 ஆம் தேதி வரை நீட்டிப்பதாக அறிவித்தார்.
அதைத்தொடர்ந்து இந்தியா – அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. விவசாயம் மற்றும் பால் பொருட்கள் துறையில் இரு நாடுகளிடையே உடன்பாடு எட்டப்படாமல் இருந்து வந்த நிலையில், வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் 20 முதல் 25 விழுக்காடு வரி விதிக்கப்படும் என இந்தியாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார். இதற்கான காலக்கெடு முடிவடையும் நிலையில், புதிய வரிவிதிப்பு முறையை அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்தியா, அமெரிக்காவுக்கு நல்ல நண்பராக இருந்து வந்தாலும், வேறு எந்த நாடும் வசூலிக்காத அளவுக்கு அமெரிக்க பொருள்களுக்கு அதிக வரி வசூலிப்பதாகக் குற்றம்சாட்டியுள்ளார். வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு மிகக் கடுமையான பணமற்ற வர்த்தகத் தடைகளை இந்தியா கொண்டிருப்பதாகவும் சாடியுள்ளார்.
ராணுவத் தளவாடங்களை ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் வாங்கி வருவதாகவும், உக்ரைனில் போரை நிறுத்த முயலும் உலக அணுகுமுறைக்கு எதிராக ரஷ்யாவிடமிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெயையும் இந்தியா பெறுவதாகவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். இதன்காரணமாக ஆகஸ்ட் ஒன்று முதல் இந்திய பொருட்களுக்கு 25 விழுக்காடு இறக்குமதி வரி மற்றும் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்காக அபராதம் விதிக்கப்படும் என்று டிரம்ப் அறிவித்துள்ளர்
இந்நிலையில், டெல்லியில் மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஸ் கோயலை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். அதைத்தொடர்ந்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய பொருட்கள் மீதான வரியை 25 சதவீதமாக உயர்த்தி அமெரிக்கா அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளது குறித்தும் அதன் தாக்கம் குறித்தும் கவனத்துடன் ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு தரப்புக்கும் பலன் தரும் வகையில் சமநிலையிலான ஒப்பந்தம் என்ற நிலைப்பாட்டில் இந்தியா தெளிவாக இருந்ததாகவும் விவசாயிகள், தொழில்முனைவோர்,சிறுகுறு தொழில்களின் நலனை பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் அரசு முக்கியத்துவம் அளித்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வரி விதிப்பால் இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதியாகும் செல்போன்கள், வாகன உதிரி பாகங்கள், ஜவுளி, மருந்துப் பொருட்கள், வைரம் உள்ளிட்டவைகளின் விலை உயர உள்ளது. அதேநேரம், தோல், கிரானைட் ஏற்றுமதி பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியாவுடன் தொடர்ந்து வர்த்தகப் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகத் தெரிவித்தார். இருநாடுகள் இடையே வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுமா என்பது குறித்து இந்த வார இறுதிக்குள் தெரியவரும் என்றும் டிரம்ப் தெரிவித்தார்.

Read More
சினிமாதமிழ்நாடுநிகழ்ச்சிகள்

ஆடியோ லாஞ்ச்ல பாத்துக்கிறேன்-ரஜினி,மாட்டிக் கொண்ட லோகேஷ்

தமிழில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் கூலி திரைப்படமும் ஒன்று. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். இதில் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படம் வருகிற ஆகஸ்ட் 14ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. ஏற்கனவே இப்படத்தில் இருந்து மூன்று பாடல்கள் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளன. இப்படத்திற்கு அனிருத் தான் இசையமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக கலாநிதி மாறன் இப்படத்தை தயாரித்து உள்ளார். இப்படத்தின் பிரம்மாண்டமான இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா வருகிற ஆகஸ்ட் 2ந் தேதி சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் நடைபெற இருக்கிறது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூலி பட கதையை சொல்லும் முன் ரஜினியிடம் தான் ஒரு கமல் ரசிகன் என்று சொன்னாராம். அதற்கு ரஜினி ரிப்ளை கொடுத்திருக்கிறார்.உன்ன ஆடியோ லாஞ்ச்ல பாத்துக்கிறேன்… வாய்விட்டு மாட்டிக் கொண்ட லோகேஷ்; வச்சு செய்ய காத்திருக்கும் ரஜினி

Read More