மொத்தமாக இழுத்து மூடப்பட்ட அட்டாரி-வாகா எல்லை.. இந்தியா தந்த காலக்கெடு முடிந்தது!
மொத்தமாக இழுத்து மூடப்பட்ட அட்டாரி-வாகா எல்லை.. இந்தியா தந்த காலக்கெடு முடிந்தது!
மொத்தமாக இழுத்து மூடப்பட்ட அட்டாரி-வாகா எல்லை.. இந்தியா தந்த காலக்கெடு முடிந்தது!
911 பாகிஸ்தானியர்கள் வெளியேறினர், 1,617 இந்தியர்கள் திரும்பினர் கடந்த புதன் கிழமை மட்டும் அட்டாரி-வாகா எல்லை வழியாக மொத்தம் 125 பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேறினர். கடந்த ஏழு நாட்களில் நாட்டை விட்டு வெளியேறிய மொத்த பாகிஸ்தானியர்களின் எண்ணிக்கை 911 ஆகும். இதேபோல், பஞ்சாபின் அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லை கடக்கும் புள்ளி வழியாக 152 இந்திய நாட்டினரும், நீண்டகால இந்திய விசாவுடன் 73 பாகிஸ்தானிய நாட்டினரும் இந்தியாவுக்குள் நுழைந்துள்ளனர். 1 வாரத்தில் மொத்தமாக 1,617 இந்தியர்கள் நாடு திரும்பினர். இந்த நிலையில்தான் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான அட்டாரி-வாகா எல்லை மொத்தமாக மூடப்பட்டு உள்ளது. இந்தியா விதித்த காலக்கெடு நேற்றோடு முடிந்த நிலையில் எல்லை மொத்தமாக மூடப்பட்டது. இந்தியா முடிவு பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா 5 முக்கியமான முடிவுகளை எடுத்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பிற உயர் அதிகாரிகள் பங்கேற்ற பாதுகாப்பு அமைச்சரவைக் குழு (சிசிஎஸ்) கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
Read More