Author: Namadhu Arasu

அரசியல்இந்தியா

மோடி தலைமையில் இன்று கூடுகிறது மத்திய அமைச்சரவை

மோடி தலைமையில் இன்று கூடுகிறது மத்திய அமைச்சரவை
பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டமும் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், ஆபரேஷன் சிந்தூர், இந்தியாவின் பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது.

Read More
இந்தியாதமிழ்நாடுவிளையாட்டு

விராட்கோலி ஓய்வு – டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த பேட்ஸ்மேனாக இருப்பது…

123 டெஸ்ட் போட்டிகள், 210 இன்னிங்ஸ்கள், 9230 ரன்கள், 30 சதங்கள்… இவை வெறும் புள்ளிவிவரங்கள் அல்ல. இந்திய அணி வெளிநாடுகளில் வெற்றிக் கொடி நாட்டிய காலகட்டத்தில், இந்தியாவின் பேட்டிங் வரிசையின் ஆன்மாவாகவும், முதுகெலும்பாகவும் அவர் திகழ்ந்தார். அணியை நிலைநிறுத்துவதிலும், எதிரணியை நொறுக்குவதிலும் அவரது பங்கு அளப்பரியது. அவரது ஆட்டம் பலரது வாழ்க்கையில் அர்த்தத்தையும், மகிழ்ச்சியையும் கொடுத்தது. டெண்டுல்கரைப் போலவே, கோலியும் ஒரு விளையாட்டு வீரரைத் தாண்டி, ஒரு தேசத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக, உணர்வுப்பூர்வமான பிணைப்பாக இருந்தார். அவரது பேட்டிங் புள்ளிவிவரங்கள் ஒருபுறம் ரசிகர்களை பிரமிக்க வைத்தாலும், மறுபுறம் அணி தோல்வியடையும்போது அதே ரசிகர்களின் விமர்சனங்களையும் சந்திக்க நேர்ந்தது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலியின் மரபு மிகவும் தெளிவானது. அவர் இந்திய மண்ணில் மட்டுமல்ல, உலக அரங்கிலும் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழ்கிறார். கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு ஏற்பட்ட ஒரு சரிவு அவரது புள்ளிவிவரங்களை சற்று குறைத்திருக்கலாம். ஒரு காலத்தில் அனைத்து பேட்டிங் சாதனைகளையும் முறியடித்து, யாரும் நெருங்க முடியாத உச்சத்தை எட்டுவார் என்று கணிக்கப்பட்ட விராட்கோலி, விதிவசத்தால் அந்த இலக்கை அடைய முடியாமல் போனாலும், இன்று அதிக ரன் குவித்த இந்தியாவின் நான்காவது வீரராக விடைபெறுகிறார்.

தமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்

பெரும்பாக்கம் பணிமனையில் மின்சார பேருந்துகள் தயார்-அடுத்த மாதம் முதல் சேவை தொடங்கும்…

ஜூன் மாதம் முதல் சென்னையில் மின்சாரப் பேருந்துகள் அறிமுகப்படுத்தப்படவுள்ள நிலையில், மின்சாரப் பேருந்துகள் இயக்கப்படவுள்ள 5 பணிமனைகளில் ஒன்றான பெரும்பாக்கத்தில் உள்ள மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் (எம்.டி.சி) பணிமனைக்கு புதிய மின்சாரப் பேருந்துகள் வரத் தொடங்கியுள்ளன.

625 தாழ்தள மின்சாரப் பேருந்துகளை கொள்முதல் செய்தல், வழங்குதல், இயக்குதல், பராமரித்தல் ஆகியவற்றை மொத்த செலவு ஒப்பந்த (Gross Cost Contracting – GCC) அடிப்படையில் அசோக் லேலண்டின் துணை நிறுவனமான OHM Global Mobility Pvt Ltd-க்கு எம்.டி.சி வழங்கியுள்ளது. உலக வங்கி ஆதரவுடன் சென்னை நகரக் கூட்டாண்மைத் திட்டத்தின் கீழ் இந்த மின்சாரப் பேருந்துகள் கொள்முதல் செய்யப்படவுள்ளன.

மின்சாரப் பேருந்துகள் விநியோகம் தொடங்கப்பட்டுவிட்டதாக எம்.டி.சி-யின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். “மின்சாரப் பேருந்து இயக்கம் படிப்படியாக செயல்படுத்தப்படும். முதற்கட்டமாக, 625 மின்சார பேருந்துகள் சென்னையில் இயக்கப்படும்,” என்று அவர் கூறினார். 625 மின்சாரப் பேருந்துகளில், 400 ஏசி அல்லாத பேருந்துகளாகவும், 225 ஏசி பேருந்துகளாகவும் இருக்கும். வியாசர்பாடி, பெரும்பாக்கம், சென்ட்ரல், பூந்தமல்லி, தண்டையார்பேட்டை ஆகிய 5 பேருந்து பணிமனைகளில் இருந்து இந்த மின்சாரப் பேருந்துகள் இயக்கப்படும் என்றார்.

முதலில் வியாசர்பாடி பணிமனை மூலம் ஏசி அல்லாத பேருந்துகளும், பெரும்பாக்கம் பணிமனை மூலம் ஏசி மற்றும் ஏசி அல்லாத பேருந்துகள் என இரண்டும் இயக்கப்படும் என்று அந்த அதிகாரி தெரிவித்தார். மின்சாரப் பேருந்து இயக்கத்திற்குத் தேவையான உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள், மின்சாரப் பேருந்துகளுக்கான சார்ஜிங் நிலையங்கள் அமைப்பது உட்பட, 5 பணிமனைகளிலும் நடைபெற்று வருகின்றன என்று அந்த அதிகாரி கூறினார். இந்த மாத இறுதிக்குள் இப்பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும், அடுத்த மாதம் முதல் மின்சாரப் பேருந்து சேவையைத் தொடங்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம் என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.

இரண்டாம் கட்டமாக, 400 ஏசி பேருந்துகள் உட்பட 600 மின்சார தாழ்தள பேருந்துகளை மொத்த செலவு ஒப்பந்த (GCC) அடிப்படையில் கொள்முதல் செய்ய எம்.டி.சி டெண்டர் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அறிவியல்இந்தியாஉலகம்தமிழ்நாடு

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி; நாட்டு மகள்களுக்கு சமர்ப்பணம்” – பிரதமர் நரேந்திர மோடி

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத இலக்குகளை இந்திய ராணுவம் தாக்கி அழித்தது. இதைத்தொடர்ந்து எல்லையில் இரு நாட்டுப் படைகள் நேரடி மோதலில் ஈடுபட்டதால் போர் பதற்றம் நிலவியது. இந்திய ராணுவத்தின் பதிலடியில் நிலைகுலைந்த பாகிஸ்தான், சமரச பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது. இரு நாட்டு ராணுவ தளபதிகள் இடையிலான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டிய நிலையில் நேற்று முன்தினம் மாலை 5 மணி முதல் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டன.
இதனால், இரு நாட்டு எல்லையோரத்தில் அமைதி திரும்பியது. இந்நிலையில், இந்தியா, பாகிஸ்தான் ராணுவத் தலைமை இயக்குநர்கள் இடையே இன்று பேச்சுவார்த்தையும் நடைபெற்று முடிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
ஆபரேஷன் சிந்தூர் துவங்கி முடிந்துள்ள நிலையில், முதல்முறையாக பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார். அவர் கூறியதாவது, “ராணுவ வீரர்களுக்கு வீர வணக்கம். நமது பலத்தை கடந்த சில நாட்களாக காட்டி வருகிறோம். ராணுவ வீரர்கள், விஞ்ஞானிகள், உளவுத்துறை ஆகியோருக்கு நன்றி. ஆபரேஷன் சிந்தூர் இந்திய மகள்களிடம் சமர்ப்பணிக்கிறேன்.
இப்படி ஒரு தாக்குதல் நடக்கும் என தீவிரவாதிகள் கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். இவ்வளவு பெரிய முடிவுகளை இந்தியா எடுக்கும் என தீவிரவாதிகள் எதிர்பார்க்கவில்லை. நமது பெண்களின் குங்குமத்தின் அழித்ததற்காக தீவிரவாத முகாம்களின் தலைமையகங்கள் அழிக்கப்பட்டுள்ளன. தீவிரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கையை மே 7 ஆம் தேதி ஒட்டுமொத்த உலகமே கண்டது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்களை தாக்கினோம். முற்ட்கே, பாகவல்பூர் பகுதிகளில் இருந்த தீவிரவாத முகாம்கள் தரைமட்டமாக்கப்பட்டன. தீவிரவாதத்தை இந்தியா வேட்டையாடியதை உலகமே கண்டது. தீவிரவாதத்தை எதிர்க்க முப்படைகளுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டது.
தீவிரவாதிகளை ஒடுக்குவதற்கு பதில், பாகிஸ்தான், இந்தியாவை தாக்கியது. பாகிஸ்தான் நமது எல்லைகளை தாக்கியது. நாம் பாகிஸ்தான் இதயத்தை தாக்கினோம். இந்தியா மீது தாக்குதல் நடத்தியதன் மூலம் பாகிஸ்தான் உலக நாடுகள் முன் அம்பலமாகிவிட்டது. பாகிஸ்தானில் தீவிரவாதிகள் சுதந்திரமாக நடமாடி வருகிறார்கள். இந்தியாவின் சாமான்ய மக்களின் இடங்களை பாகிஸ்தான் ராணுவம் தாக்கியது. ஆனால், நாம் பாகிஸ்தானுக்குள் சென்றே பதிலடி கொடுத்துள்ளோம். பாகிஸ்தானின் ஏவுகணைகள் சீட்டு கட்டு போல் சுக்கு நூறாக வீழ்த்தப்பட்டன.
அணு ஆயுதத்தை கொண்டு தாக்குவோம் என்ற பூச்சாண்டியை எப்போதும் ஏற்றுக்கொள்ளவே மாட்டோம். அணு ஆயுத சோதனைக்கு எல்லாம் பயப்பட மாட்டோம். நாட்டு மக்களை காப்பதற்காக எந்த எல்லைக்கும் செல்ல தயார். இந்தியாவின் எதிர் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் பாகிஸ்தான் அமைதியை தேடியது. பாகிஸ்தான் அதிகாரிகள்தான் இந்திய அதிகாரிகளை தொடர்பு கொண்டு சண்டை நிறுத்தம் கேட்டனர்.

சினிமாதமிழ்நாடு

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை பார்த்துவிட்டு இயக்குனருக்கு ஃபோன் போட்ட ரஜினிகாந்த்..

சசிகுமார் நடிப்பில் அபிஷன் இயக்கத்தில் வெளியான டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இப்படத்தை சமீபத்தில் பார்த்த ரஜினிகாந்த் இயக்குனர் அபிஷனுக்கு போன் போட்டு மனதார பாராட்டியுள்ளார். இதைப்பற்றி இயக்குனர் தனது சோஷியல் மீடியா பக்கத்தில் தெரிவித்துள்ளார்
தற்போது கூலி திரைப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக போய்க்கொண்டு இருக்கின்றது. ஆகஸ்ட் 14 ஆம் தேதி கூலி திரைப்படம் திரையில் வெளியாகின்றது. இதற்கிடையில் ரஜினி தனது அடுத்த படத்திற்கான இயக்குனர் தேடலிலும் ஈடுபட்டு வருகின்றார். தலைவர் 173 படத்திற்காக சில இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகின்றார் ரஜினி.
இந்நிலையில் இவ்வாறு செம பிசியாக இயங்கி வரும் ரஜினிகாந்த் பல நல்ல படங்களையும் பார்த்து அப்படக்குழுவை மனதார பாராட்டுவதையும் வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் சமீபத்தில் சசிகுமார் நடிப்பில் அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் வெளியான டூரிஸ்ட் பேமிலி படத்தை பார்த்துவிட்டு மனதார பாராட்டியிருக்கிறார் ரஜினி.
கடந்த மே 1 ஆம் தேதி வெளியான டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் ஒரு சிறந்த பீல் குட் படமாக இருக்கின்றது. எந்த வித நெகட்டிவ் விமர்சனங்களும் இன்றி ஒட்டுமொத்த ரசிகர்களாலும் இப்படம் கொண்டாடப்பட்டு வருகின்றது. வசூலும் மிகப்பெரிய அளவில் உள்ளது. இந்நிலையில் பிளாக்பஸ்டர் வெற்றியை நோக்கி நகரும் டூரிஸ்ட் பேமிலி படத்தை ரஜினிகாந்த் சமீபத்தில் பார்த்துள்ளார்.
படத்தை பார்த்துவிட்டு உடனே இயக்குனர் அபிஷனுக்கு போன் செய்திருக்கின்றார் ரஜினி. படம் சிறப்பாக இருப்பதாக இயக்குனரை ரஜினி மனதார பாராட்டியிருக்கிறார். இதனை இயக்குனர் அபிஷன் தனது சோஷியல் மீடியா பக்கத்தில் தெரிவித்திருக்கின்றார். படத்தை பார்த்த ரஜினி, சூப்பர் சூப்பர் சூப்பர்..என பாராட்டியதாக அபிஷன் தெரிவித்துள்ளார். மேலும் சூப்பர்ஸ்டார் தனக்கு போன் போட்டு வாழ்த்தியுள்ளார் என்பதை தன்னால் நம்பவே முடியவில்லை என கூறியுள்ளார் அபிஷன் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More
இந்தியாதமிழ்நாடுவணிகம்விளையாட்டு

ஐ.பி.எல் மீண்டும் தொடக்கம்: மே 13-ம் தேதிக்குள் வீரர்களை ஒன்று திரட்டுமாறு உரிமையாளர்களிடம் கூறிய பி.சி.சி.ஐ

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI), பஞ்சாப் கிங்ஸ் தவிர அனைத்து ஐ.பி.எல் (IPL) அணிகளும் செவ்வாய்க்கிழமைக்குள் அந்தந்த இடங்களுக்குத் திரும்புமாறு கேட்டுக் கொண்டுள்ளது. புதிய அட்டவணையை வகுத்து விரைவில் ஐ.பி.எல் போட்டிகளை மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் உரிமையாளர்களுக்கு வாய்மொழியாகத் தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது. வெளிநாட்டு வீரர்களின் பயணத் திட்டங்கள் குறித்து தெரிவிக்குமாறும் உரிமையாளர்களிடம் பி.சி.சி.ஐ கேட்டுக் கொண்டுள்ளது.
வெள்ளிக்கிழமை ஐ.பி.எல் போட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்ட உடனேயே, பெரும்பாலான வெளிநாட்டு வீரர்கள் மற்றும் அணி ஊழியர்கள் அதே நாள் மாலையில் தங்கள் வீட்டிற்குச் சென்றனர். இப்போது, ஐ.பி.எல் அணிகள் அவர்களை மீண்டும் விமானத்தில் அழைத்து வர ஏற்பாடுகளைச் செய்து வருகின்றன. பி.சி.சி.ஐ அணி உரிமையாளர்களை செவ்வாய்க்கிழமைக்குள் அறிக்கை செய்யச் சொன்னதற்கான காரணம், திட்டமிடப்பட்ட மே 25 ஆம் தேதிக்குள் ஐ.பி.எல் போட்டிகளை முடிக்க விரும்புவதற்கு என்பது புரிந்து கொள்ளப்படுகிறது. இன்னும் 12 ஆட்டங்கள் மீதமுள்ள நிலையில், தினமும் 2 போட்டிகளுடன் லீக்கை மீண்டும் தொடங்க பி.சி.சி.ஐ திட்டமிட்டுள்ளது.

இந்தியாஉலகம்தமிழ்நாடு

இந்தியா – பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் இடையே இன்று பேச்சுவார்த்தை..

இந்தியா – பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் இடையே இன்று பேச்சுவார்த்தை..
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக, ’ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் தீவிரவாதிகள் முகாம்களை இந்திய ராணுவம் தாக்கி அழித்தது. இதன்பிறகு, இந்தியாவின் மேற்கு எல்லையில் டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் கொண்டு பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயன்றது. அவற்றை தடுத்து நிறுத்தி இந்திய படைகள் தாக்கி அழித்தன. இதைத் தொடர்ந்து, சண்டையை நிறுத்த இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன.
இந்த நிலையில், இரு நாடுகளின் ராணுவ அதிகாரிகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது. இதில் அமைதியை தொடர்வது குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, நமது அனைத்து விமானிகளும் நாடு திரும்பி விட்டதாக ஏர் மார்ஷல் ஏ.கே.பாரதி கூறினார். சண்டை நிறுத்தம் அமலில் இருந்தாலும், ராஜஸ்தானின் ஜெய்சால்மர், பார்மர் உள்ளிட்ட சில பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சார விநியோகம் நிறுத்தப்பட்டு, எச்சரிக்கை சைரன் ஒலிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Read More
இந்தியாஉலகம்தமிழ்நாடுதொழில்நுட்பம்

இந்தியாவை காத்த சுதர்சன சக்கரம்.. பாகிஸ்தானை கதிகலக்கிய எஸ்-400 பாதுகாப்பு சிஸ்டம்!

பாகிஸ்தானுடைய தொடர் அத்துமீறல் நடவடிக்கைகளையும் இந்தியாவை நோக்கி வரக்கூடிய நூற்றுக்கணக்கான ஏவுகணைகளையும் முற்றிலுமாக அழிக்கிறது இந்தியாவுடைய சுதர்சன சக்கரம். எஸ்-400 ஏவுகணைகளை கொண்ட வான் பாதுகாப்பு அமைப்பு தான் இந்திய வான் பரப்பை பாதுகாக்க கூடிய ஒரு அரண்.
ரஷ்யாவிடம் இருந்து 36,000 கோடி ரூபாய் செலவில் இந்த பாதுகாப்பு அரணை இந்தியா கொள்முதல் செய்திருக்கிறது. இந்திய வான் பரப்பை முற்றிலுமாக கண்காணித்து அதை பாதுகாப்பது தான் இந்த எஸ்-400 ஏவுகணையின் முக்கியமான பணி. ஏறக்குறைய 600 கிலோ மீட்டருக்கு முன்னதாகவே இந்தியாவை நோக்கி ஒரு ஏவுகணை செலுத்தப்பட்டால் அதை முன்கூட்டியே கண்டறிந்து அதை தொடர்ச்சியாக பின்தொடர்ந்து அதை இடைமறித்து தாக்கக்கூடிய திறன் பெற்ற இந்த எஸ்-400 ஏவுகணை.
நூற்றுக்கணக்கான பாகிஸ்தான் ஏவுகணைகளை நடுவானில் அழித்து இந்திய வான் பரப்பை பாதுகாத்து வருகிறது சுதர்சன சக்கர வான் பாதுகாப்பு கவச அமைப்பு.
பாகிஸ்தானுடைய தொடர் அத்துமீறல் நடவடிக்கைகளையும் இந்தியாவை நோக்கி வரக்கூடிய நூற்றுக்கணக்கான ஏவுகணைகளையும் முற்றிலுமாக அழிக்கிறது இந்தியாவுடைய சுதர்சன சக்கரம். எஸ்-400 ஏவுகணைகளை கொண்ட வான் பாதுகாப்பு அமைப்பு தான் இந்திய வான் பரப்பை பாதுகாக்க கூடிய ஒரு அரண்.
ரஷ்யாவிடம் இருந்து 36,000 கோடி ரூபாய் செலவில் இந்த பாதுகாப்பு அரணை இந்தியா கொள்முதல் செய்திருக்கிறது. இந்திய வான் பரப்பை முற்றிலுமாக கண்காணித்து அதை பாதுகாப்பது தான் இந்த எஸ்-400 ஏவுகணையின் முக்கியமான பணி. ஏறக்குறைய 600 கிலோ மீட்டருக்கு முன்னதாகவே இந்தியாவை நோக்கி ஒரு ஏவுகணை செலுத்தப்பட்டால் அதை முன்கூட்டியே கண்டறிந்து அதை தொடர்ச்சியாக பின்தொடர்ந்து அதை இடைமறித்து தாக்கக்கூடிய திறன் பெற்ற இந்த எஸ்-400 ஏவுகணை.
அதாவது 400 கிலோ மீட்டர் தொலைவு வரைக்கும் இந்த ஏவுகணையின் பரப்பளவு இருக்கும். கிட்டத்தட்ட 600 கிலோ மீட்டருக்கு முன்னாடி வரக்கூடிய ஒரு ஏவுகணையை கண்டறிந்து, 400 கிலோ மீட்டர் தொலைவிலேயே இடைமறித்து அதை அழிக்கும். இந்திய எல்லையில் இப்போது மூன்று எஸ்-400 நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
எஸ்-400 ஒரு ஆயுதம் கிடையாது. ஒரு மிகப்பெரிய கட்டமைப்பு. ஒவ்வொரு ஆயுதமும் பல கிலோமீட்டரை கண்காணிக்க கூடிய திறன் பெற்றது. அந்த வகையில ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியையும் பஞ்சாபின் பதான்கோட் எல்லை பகுதியையும், ராஜஸ்தான் குஜராத் எல்லைப் பகுதியையும் இந்த கட்டமைப்புகள் மூலம் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டுவருகின்றன.
நேற்று பாகிஸ்தான் இந்த எல்லைப் பகுதிகளை குறிவைத்து தான் தொடர்ச்சியாக நூற்றுக்கணக்கான ஏவுகணைகளையும் டிரோன்களையும் அனுப்பி பாகிஸ்தான் தாக்க முயற்சித்தது. இதனை எஸ்-400 வான் பாதுகாப்பு கவச அமைப்பு மூலம் அசால்டாக முறியடித்த இந்திய ராணுவம். எனவே, இந்த எஸ்-400 வான் பாதுகாப்பு கவச அமைப்பு இந்தியாவின் பாதுகாப்பு அரணாக, சுதர்சன சக்கரமாக திகழ்கிறது என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது.

Read More
இந்தியாஉலகம்தமிழ்நாடு

பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறை… காஷ்மீர் அலர்ட்- ஆபரேஷன் சிந்தூர் அதிரடி!

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியை தொடங்கியுள்ள இந்திய ராணுவம், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் நிலைகள் மீது அதிரடி காட்டி வருகிறது. இந்நிலையில் எல்லையில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
நேற்று நள்ளிரவில் “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் பதிலடி தாக்குதலை பாகிஸ்தானிற்கு எதிராக இந்திய ராணுவம் தொடங்கியுள்ளது. கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதிக்கு சுற்றுலா பயணிகள் சென்றிருந்த நிலையில், அவர்களை திடீரென சுற்றி வளைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் காஷ்மீரை சேர்ந்த குதிரை ஓட்டி மற்றும் சுற்றுலா பயணிகள் என மொத்தம் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் இந்தியர்களை பெரிதும் கொந்தளிப்பில் ஆழ்த்தியது. பஹல்காம் தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் கிளை அமைப்பாக கருதப்படும் ”தி ரெசிஸ்டண்ட் ஃப்ரன்ட்” அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டது. இந்த அமைப்புகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்து போதிய உதவிகள் செய்து வந்ததால் அந்நாட்டின் மீது கோபம் திரும்பியது.
பயங்கரவாதிகளுக்கு உரிய பதிலடி கொடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இதையொட்டி ரகசிய பிளானை இந்திய ராணுவம் தயாரித்து வந்தது. முன்னதாக ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளித்து பிரதமர் மோடி உத்தரவிட்டார். இன்றைய தினம் நாடு முழுவதும் போர் ஒத்திகை நிகழ்வு நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. எனவே போர் ஒத்திகை முடிந்த பின்னர் தான் பதிலடி தாக்குதல் தொடங்கும் என்று இந்திய மக்கள் நினைத்திருப்பர். பயங்கரவாதிகள் கூட அப்படித்தான் கருதியிருக்கக் கூடும். ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் நேற்று நள்ளிரவு பாகிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகளின் 9 நிலைகள் மீது இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த பதிலடி திட்டத்திற்கு ”ஆபரேஷன் சிந்தூர்” என்று மத்திய அரசு பெயர் வைத்துள்ளது. இந்த சூழலில் இந்திய ராணுவத்தின் பதிலடி தாக்குதல் மற்றும் போர் பதற்றம் காரணமாக, ஜம்மு காஷ்மீரில் உள்ள பள்ளி, கல்லூரிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு, சம்பா, கத்வா, ரஜோரி, பூஞ்ச் ஆகிய பகுதிகளில் கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

Read More
இந்தியாஉலகம்

இந்தியா நடத்திய அதிரடி தாக்குதல்..! 26 தீவிரவாதிகள் பலி

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகளின் முகாம்களை குறிவைத்து இந்தியா நள்ளிரவில் அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது.

ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரிலான தாக்குதலில் 26 தீவிரவாதிகள் பலி. மேலும் 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானில் உள்ள லஷ்கர் இ தொய்பாவின் தலைமையகம் உள்ள முரித்கேயில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.

மேலும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பு செயல்படும் பர்னாலா, முஷாஃபராபாத்திலும் அதிரடி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஜெய்ஸ் இ முகமது செயல்படும் பஹவல்பூர், தெஜ்ரா காலன், கோட்லியில் இரு இடங்கள், முஷாராபாத் என தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பின் கோட்லி, சிகல்கோட் பகுதிகளிலும் இந்திய படை தாக்குதல் நடத்தியுள்ளது.

ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பின் கோட்லி, சிகல்கோட் பகுதிகளிலும் இந்திய படை தாக்குதல் நடத்தியுள்ளது.A

Read More