Army

இந்தியாஉலகம்தமிழ்நாடுதொழில்நுட்பம்

இந்தியாவை காத்த சுதர்சன சக்கரம்.. பாகிஸ்தானை கதிகலக்கிய எஸ்-400 பாதுகாப்பு சிஸ்டம்!

பாகிஸ்தானுடைய தொடர் அத்துமீறல் நடவடிக்கைகளையும் இந்தியாவை நோக்கி வரக்கூடிய நூற்றுக்கணக்கான ஏவுகணைகளையும் முற்றிலுமாக அழிக்கிறது இந்தியாவுடைய சுதர்சன சக்கரம். எஸ்-400 ஏவுகணைகளை கொண்ட வான் பாதுகாப்பு அமைப்பு தான் இந்திய வான் பரப்பை பாதுகாக்க கூடிய ஒரு அரண்.
ரஷ்யாவிடம் இருந்து 36,000 கோடி ரூபாய் செலவில் இந்த பாதுகாப்பு அரணை இந்தியா கொள்முதல் செய்திருக்கிறது. இந்திய வான் பரப்பை முற்றிலுமாக கண்காணித்து அதை பாதுகாப்பது தான் இந்த எஸ்-400 ஏவுகணையின் முக்கியமான பணி. ஏறக்குறைய 600 கிலோ மீட்டருக்கு முன்னதாகவே இந்தியாவை நோக்கி ஒரு ஏவுகணை செலுத்தப்பட்டால் அதை முன்கூட்டியே கண்டறிந்து அதை தொடர்ச்சியாக பின்தொடர்ந்து அதை இடைமறித்து தாக்கக்கூடிய திறன் பெற்ற இந்த எஸ்-400 ஏவுகணை.
நூற்றுக்கணக்கான பாகிஸ்தான் ஏவுகணைகளை நடுவானில் அழித்து இந்திய வான் பரப்பை பாதுகாத்து வருகிறது சுதர்சன சக்கர வான் பாதுகாப்பு கவச அமைப்பு.
பாகிஸ்தானுடைய தொடர் அத்துமீறல் நடவடிக்கைகளையும் இந்தியாவை நோக்கி வரக்கூடிய நூற்றுக்கணக்கான ஏவுகணைகளையும் முற்றிலுமாக அழிக்கிறது இந்தியாவுடைய சுதர்சன சக்கரம். எஸ்-400 ஏவுகணைகளை கொண்ட வான் பாதுகாப்பு அமைப்பு தான் இந்திய வான் பரப்பை பாதுகாக்க கூடிய ஒரு அரண்.
ரஷ்யாவிடம் இருந்து 36,000 கோடி ரூபாய் செலவில் இந்த பாதுகாப்பு அரணை இந்தியா கொள்முதல் செய்திருக்கிறது. இந்திய வான் பரப்பை முற்றிலுமாக கண்காணித்து அதை பாதுகாப்பது தான் இந்த எஸ்-400 ஏவுகணையின் முக்கியமான பணி. ஏறக்குறைய 600 கிலோ மீட்டருக்கு முன்னதாகவே இந்தியாவை நோக்கி ஒரு ஏவுகணை செலுத்தப்பட்டால் அதை முன்கூட்டியே கண்டறிந்து அதை தொடர்ச்சியாக பின்தொடர்ந்து அதை இடைமறித்து தாக்கக்கூடிய திறன் பெற்ற இந்த எஸ்-400 ஏவுகணை.
அதாவது 400 கிலோ மீட்டர் தொலைவு வரைக்கும் இந்த ஏவுகணையின் பரப்பளவு இருக்கும். கிட்டத்தட்ட 600 கிலோ மீட்டருக்கு முன்னாடி வரக்கூடிய ஒரு ஏவுகணையை கண்டறிந்து, 400 கிலோ மீட்டர் தொலைவிலேயே இடைமறித்து அதை அழிக்கும். இந்திய எல்லையில் இப்போது மூன்று எஸ்-400 நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
எஸ்-400 ஒரு ஆயுதம் கிடையாது. ஒரு மிகப்பெரிய கட்டமைப்பு. ஒவ்வொரு ஆயுதமும் பல கிலோமீட்டரை கண்காணிக்க கூடிய திறன் பெற்றது. அந்த வகையில ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியையும் பஞ்சாபின் பதான்கோட் எல்லை பகுதியையும், ராஜஸ்தான் குஜராத் எல்லைப் பகுதியையும் இந்த கட்டமைப்புகள் மூலம் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டுவருகின்றன.
நேற்று பாகிஸ்தான் இந்த எல்லைப் பகுதிகளை குறிவைத்து தான் தொடர்ச்சியாக நூற்றுக்கணக்கான ஏவுகணைகளையும் டிரோன்களையும் அனுப்பி பாகிஸ்தான் தாக்க முயற்சித்தது. இதனை எஸ்-400 வான் பாதுகாப்பு கவச அமைப்பு மூலம் அசால்டாக முறியடித்த இந்திய ராணுவம். எனவே, இந்த எஸ்-400 வான் பாதுகாப்பு கவச அமைப்பு இந்தியாவின் பாதுகாப்பு அரணாக, சுதர்சன சக்கரமாக திகழ்கிறது என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது.

Read More
இந்தியா

கொரோனாவை எதிர்கொள்ளும் போராட்டத்திற்கு ராணுவம் ரெடி – மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்!

கொரோனா வைரஸ் தடுப்புப் பணிக்காக அனைத்து மாநிலங்களுக்கும் உதவுவதற்கு ராணுவம் தயாராக இருப்பதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸின்

Read More