சென்னையில் வாகன நிறுத்த கட்டணம் வசூலிப்பதில் கொள்ளையா? புதிய நடைமுறைக்கு மாறும் மாநகராட்சி
கட்டணம் வசூலிப்பது தவறு இதுபற்றி ஆங்கில ஊடகம் ஒன்று அண்மையில் செய்தியும் வெளியிட்டது. அந்த செய்தியில் சட்டவிரோதமாக பைக் மற்றும் கார் மற்றும் பெரிய வாகனங்களுக்கு அதிக கட்டணம் வசூலிப்பதாகவும், இந்த விவாகரத்தில் மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா என்று கேள்வி எழுப்பி இருந்தது. பல்வேறு சமூக ஆர்வலர்களும் மாநகராட்சி ஒப்பந்தம் முடிந்த பின்னர் டெக்ஸோ கட்டணம் வசூலிப்பது தவறு என்றும் முறைகேட்டிற்கே வழிவகுக்கும் என்றும் புகார்கள் கூறினார்கள். வாய்மொழி அனுமதி இந்நிலையில் சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன், குறிப்பிட்ட செய்தி நிறுவனத்திடம், டெக்ஸோவின் ஒப்பந்தம் கடந்த 2024ம் ஆண்டு டிசம்பரிலேயே காலாவதியாகி விட்டதாக கூறியிருக்கிறார். எனினும் டிசம்பர் வரை மாநகராட்சிக்கு 1.75 கோடி வருவாய் கிடைத்தால், தொடர்ந்து கட்டணம் வசூலிக்க வாய்மொழி உத்தரவு வழங்கினாராம். டெக்ஸோ ஒரு அரசு நிறுவனம் என்றும், ஒப்பந்தம் இறுதியாகும் வரை வசூலிக்க அனுமதி அளித்துள்ளதாகவும் ஆணையர் குமரகுருபரன் விளக்கம் அளித்துள்ளார். சில இடங்களில் தங்கள் ஊழியர்கள் அதிக விலைக்கு சட்டவிரோதமாக பார்க்கிங் கட்டணம் வசூலித்தது தொடர்பாக சென்னை மாநகராட்சி தமிழ்நாடு முன்னாள் படைவீரர் கழகத்திடம் விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாம்.
மாநகராட்சி மீது புகார் இதனிடையே முறையான டெண்டர்கள் இல்லாமல் இதுபோன்ற பணிகளை அனுமதிப்பது சட்டவிரோத செயல்களை சாதாரண விஷயமாகி விடும் என்றும், சட்டவிரோதமாக பணம் வசூலித்த நபர்கள் மீது மாநகராட்சி போலீஸ் புகார்களை பதிவு செய்ய வேண்டும். டெக்ஸ்கோ மேற்பார்வையாளர்கள் மற்றும் மேலாளர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், சென்னை மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது. வாகன நிறுத்தம் இடங்கள் சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறுகையில், “சென்னையில் மெரினா கடற்கரை சர்வீஸ் ரோடு, ஜார்ஜ் டவுன் ரட்டன் பஜார், அண்ணாநகர், என்.எஸ்.சி. போஸ் ரோடு, பெசன்ட் நகர், நுங்கம்பாக்கம் காதர் நவாஸ்கான் ரோடு, புரசைவாக்கம், தியாகராய நகர் ஜி.என்.செட்டி ரோடு, மயிலாப்பூர் தெப்பக்குளம், சேத்துப்பட்டு நிக்கலஸ் ரோடு ஆகிய இடங்களில் வாகன நிறுத்த கட்டணம் தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு முன்னாள் படைவீரர் கழக (டெக்ஸ்கோ) நிறுவன பணியாளர்கள் மூலம் வசூலிக்கப்பட்டு
காருக்கு 20 ரூபாய் ஒரு மணி நேரத்துக்கு இருசக்கர வாகனத்துக்கு ரூ.5-ம், கார்களுக்கு ரூ.20-ம், பஸ் மற்றும் வேன்களுக்கு ரூ.60-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. கையடக்க கருவி மூலமாக டிஜிட்டல் பண பரிவர்த்தனை மூலமாக வாகன நிறுத்தக்கட்டணம் வசூல் செய்யப்பட்டு கட்டணத் தொகை நேரடியாக வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. வாகன பதிவு எண் கட்டாயம் இந்தநிலையில் வாகன நிறுத்த கட்டணம் வசூல் செய்யப்படும் பணியை ஒழுங்குமுறைப்படுத்த மென்பொருளில் பல்வேறு திருத்தங்கள் விரைவில் மேற்கொள்ளப்படும். அதன்படி, வாகன நிறுத்த கட்டணம் வசூல் செய்யப்பட்டதற்காக வழங்கப்படும் ரசீதில் வாகனத்தின் பதிவு எண்ணை பதிவு செய்வது கட்டாயம். கியூ-ஆர் குறியீடு மூலமாக ரசீதின் உண்மைத் தன்மையை கண்டறிய வழிவகை செய்யப்படும். பணப் பரிவர்த்தனை மூலமாக கட்டணம் செலுத்தும் புதிய முறையினை கையடக்க கருவியிலிருந்து ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வங்கிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அடையாள அட்டை கட்டாயம் வாகன நிறுத்த கட்டணம் வசூல் செய்யும் பணியாளர்கள் கட்டணம் வசூலிக்கும் போது உரிய அடையாள அட்டை அணிந்திருக்க வேண்டும். சென்னை மாநகராட்சி மற்றும் டெக்ஸ்கோ சின்னம் பொறிக்கப்பட்ட மேலங்கி அணிந்திருக்க வேண்டும். பொதுமக்கள் வாகன நிறுத்த கட்டணம் செலுத்தும் போது பணத்துக்கு பதிலாக டிஜிட்டல் வழியாக மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும். வாகன நிறுத்த கட்டணம் வசூல் தொடர்பாக 1913 என்ற தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
