neet

இந்தியாதமிழ்நாடுதொழில்நுட்பம்

நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு.. 23 லட்சம் மாணவர்கள் எழுதவுள்ளனர்!

நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு இன்று நடைபெறுகிறது.
நீட் தேர்வை இன்று நாடு முழுவதும் சுமார் 23 லட்சம் மாணவர்களும், தமிழ்நாட்டில் ஒன்றரை லட்சம் மாணவ மாணவியரும் எழுதவுள்ளனர். தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திருச்சி, நெல்லை, கோவை, சேலம், தஞ்சை உள்ளிட்ட 31 மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் 41 மையங்களில் நீட் தேர்வு நடைபெறவுள்ளது.
பிற்பகல், 2.30 மணிக்கு தொடங்கும் நீட் தேர்வு மாலை 5.20 மணி வரை தேர்வு நடைபெறவுள்ள நிலையில், தேர்வர்களுக்கு பல்வேறு வகையான கட்டுப்பாடுகளை தேசிய தேர்வு முகமை விதித்துள்ளது. பிற்பகல் 1.30 மணிக்கே தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு வரவேண்டும் என்றும், மோதிரம், வளையல், கம்மல், மூக்குத்தி, செயின் உள்ளிட்டவைகளை அணியக்கூடாது என்றும், ஆண் தேர்வர்கள் முழுக்கை சட்டை அணியக் கூடாது எனவும், பெண் தேர்வர்கள் துப்பட்டா அணியக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் அலைபேசி, ஹெட்போன், இயர்போன், பேனா, கால்குலேட்டர், பெல்ட், உணவு, வாட்டர் பாட்டில் உள்ளிட்ட எந்த பொருளுக்கும் தேர்வு மையத்தில் அனுமதி இல்லை எனவும், தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டால் 3 ஆண்டுகள் தடை விதிக்கப்படும் எனவும் தேசிய தேர்வு முகமை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Read More
அரசியல்தமிழ்நாடு

நீட் தேர்வு: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று கூடுகிறது அனைத்துக்கட்சி கூட்டம்… புறக்கணிப்பதாக அதிமுக அறிவிப்பு

தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு சட்ட மசோதா தொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறவுள்ள சட்டப்பேரவை கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தை புறக்கணிப்பதாக அதிமுக அறிவித்துள்ளது.
2021 செப்டம்பரில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ‘தமிழ்நாடு மருத்துவ பட்டப் படிப்புகளுக்கான சேர்க்கை சட்டம் – 2021’ என்ற மசோதாவை மறுபரிசீலனை செய்யுமாறு ஆளுநர் திருப்பி அனுப்பினார். தொடர்ந்து, 2022 பிப்ரவரி 8ஆம் தேதி சட்டப்பேரவையில் மீண்டும் இந்த மசோதா ஆளுநரால் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டு நிலுவையில் இருந்து வந்தது.

இந்நிலையில், இந்த மசோதாவிற்கு மத்திய அரசு ஒப்புதல் தர மறுத்துவிட்டதாக, கடந்த 4ஆம் தேதி பேரவையில் முதலமைச்சவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
மேலும், இதில் அடுத்த கட்டமாக எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து, சட்டப்பேரவை அனைத்துக் கட்சி தலைவர்களுடன் கலந்தாலோசனை கூட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்தார். அதன்படி, இன்று மாலை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் சட்டமன்ற கட்சி தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

Read More
அரசியல்தமிழ்நாடு

நீட் தேர்வுக்கு எதிராக தமிழக மக்கள் இடுகின்ற ஒவ்வொரு கையெழுத்தும் தமிழக கல்வி உரிமை போராட்டத்தில் உயிர் எழுத்தாக நிலைத்திருக்கும் – அமைச்சர் உதயநிதி

நீட் விலக்கு கேட்டு திமுக நடத்திய கையெழுத்து இயக்கத்தில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கடந்த காலங்களில் தமிழ்நாட்டின் பொது பிரச்சனைகளுக்கு அனைத்து கட்சிகளும்

Read More