Author: Namadhu Arasu

இந்தியாஉலகம்தமிழ்நாடுவணிகம்

அமெரிக்காவின் 50% சதவீத வரி விதிப்பால் இந்தியாவின் பொருளாதாரம் எந்த அளவில் பாதிக்கப்படும்….

இன்று முதல் இந்தியப் பொருள்கள் மீது அமெரிக்கா 50% இறக்குமதி வரி விதிப்பு அமலுக்கு வந்தது, இந்திய பொருளாதாரத்திற்கு பெரும் தாக்கம்.
எந்த உடன்பாடும் எட்டப்படாத நிலையில், இந்தியப் பொருள்கள் மீது 25 சதவிகித வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்தார். மேலும் கடந்த 7 ஆம் தேதி முதல் இந்தியப் பொருள்கள் மீதான 25 சதவிகித வரி அமலுக்கு வந்தது. அது மட்டுமின்றி, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதால், இந்தியாவிற்கு அபராதமாக, கூடுதலாக 25 விழுக்காடு வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்தார்.
உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து புதின் உடன் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், இந்தியா மீதான அபராத வரி நிறுத்தி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், டிரம்ப் அறிவித்தபடி, இந்திய நேரப்படி இன்று காலை 9.30 மணி முதல், இந்தியப் பொருள்கள் மீதான 50 சதவிகித இறக்குமதி வரி அமலுக்கு வந்தது.
இறக்குமதி வரி செலுத்தும் நிறுவனம், அதன் செலவை ஈடு செய்யும் வகையில், பொருள்களின் விலையை உயர்த்தி அதனை முழுதாகவோ அல்லது பகுதியாகவோ வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலிக்கும். இதனால், பொருள்களின் விலை அதிகரிக்கும்.
அதிக வரி விதிப்பதன் மூலம், தானாக பொருள்களின் விலை அதிகரிக்கும். இதன் காரணமாக வாடிக்கையாளர்கள் அந்தப் பொருளை அதிக விலை கொடுத்து வாங்குவதைத் தவிர்ப்பார்கள். இதனால், உற்பத்தியாளர்கள் தங்கள் பொருள்களை வியாபாரம் செய்ய முடியாமல் நட்டத்தைச் சந்திப்பார்கள்.
நிறுவனம் நட்டத்தைச் சந்திக்கும் போது முதல் படியாக அதனைச் சமாளிக்க தனது ஊழியர்களின் அளவைக் குறைக்கும். அந்த வேலையை நம்பியிருந்த குடும்பத்தின் பொருளாதாரம் கேள்விக்குறியாகும்.
ஒரு நாட்டின் மீது அதிக வரிவிதிக்கப்பட்டு, வாடிக்கையாளர்களும் அதனை அதிக விலை கொடுத்து வாங்க முன்வராமல் போக, இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் அதே பொருள்களை குறைந்த வரி கொண்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும். இதன் மூலம், போட்டி நாடுகள் தங்கள் பொருள்களை அந்த நாட்டிற்கு அதிகமாக ஏற்றுமதி செய்து லாபம் அடையும்.
பொதுவாக ஒருநாட்டின் செல்வம் அதன் ஏற்றுமதியின் மூலம் அதிகரிக்கும். எந்த நாடு அதிக ஏற்றுமதி செய்கிறதோ அந்த நாட்டின் செல்வம் அதிகரிக்கும். அதே ஏற்றுமதி குறையும்போது, நாட்டின் வருமானமும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு அந்த நாட்டின் பொருளாதாரத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்.

Read More
தமிழ்நாடுநிகழ்ச்சிகள்வணிகம்

கடைகள் 24 மணி நேரமும் திறந்திருக்க அனுமதி.. மாநகர காவல் ஆணையர், டிஜிபிக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்!

கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் 24 மணி நேரமும் திறந்திருக்க அனுமதி அளித்து அரசு பிறப்பித்த உத்தரவு குறித்து அனைத்து காவல்நிலையங்களுக்கும் தெரிவிக்குமாறு டிஜிபி மற்றும் சென்னை மாநகரக் காவல் ஆணையர் ஆகியோருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொதுமக்களின் நலன் கருதி, 10 அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்களை பணியமர்த்தியுள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள், வாரத்தின் 7 நாட்களும் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவு கடந்த ஜூன் 4ஆம் தேதி முடிவடைந்த நிலையில் மேலும் 3 ஆண்டுகளுக்கு அனுமதியை நீட்டித்து அரசு உத்தரவிட்டது.
இந்த நிலையில், 24 மணி நேரமும் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் திறந்திருக்க அனுமதி அளித்த அரசு உத்தரவை மீறி இரவு நேரங்களில் கடைகளை மூடும்படி காவல்துறை மிரட்டுவதாக உயர்நீதிமன்றத்தில் டெல்லியை தலைமை இடமாக கொண்டு செயல்படும் தேசிய ஓட்டல்கள் சங்கம் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

Read More
அரசியல்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்

ரூ.5000… தீபாவளி பரிசு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு திட்டம்…

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.5,000 ரொக்கப் பரிசு வழங்குவதற்குச் சுமார் ரூ.10,000 கோடி நிதி தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும், இந்த நிதியைத் திரட்டுமாறு நிதித்துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
இதற்கான அறிவிப்பை தீபாவளி பண்டிகையின்போது முதலமைச்சர் அறிவிப்பார் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. இந்த அறிவிப்பு வெளியாகும் பட்சத்தில், தமிழகத்தில் உள்ள சுமார் 2.20 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் பயனடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே சுதந்திர தின உரையின்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “தீபாவளிக்கு நாட்டு மக்களுக்கு மிகப்பெரிய பரிசு காத்திருக்கிறது. அத்தியாவசியப் பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்படும்” என்று அறிவித்திருந்தார். இந்த அறிவிப்புக்கு போட்டியாகவும், தமிழக அரசு தனது பொங்கல் பரிசு அறிவிப்பை, தீபாவளி பண்டிகை வரும் அக்டோபரில் வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த 2025ஆம் ஆண்டு பொங்கலின்போது, நிதி நெருக்கடி காரணமாகப் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரொக்கப் பணம் வழங்கப்படவில்லை என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் விளக்கமளித்திருந்தார். அரசின் இந்த முடிவுக்கு எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, தி.மு.க.வின் கூட்டணிக் கட்சிகளும் அதிருப்தி தெரிவித்திருந்தன. இந்தக் குறையைப் போக்கும் விதமாகவே, இந்த முறை பொங்கலுக்கு அதிகத் தொகையை வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
வரவிருக்கும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள ரேசன் அட்டைதாரர்களுக்கும் ரூ.5,000 ரொக்கப் பரிசு வழங்கத் தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த அறிவிப்பு, வருகிற தீபாவளி பண்டிகையின்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read More
இந்தியாஉலகம்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்

அமெரிக்காவின் 50 சதவீத வரிவிதிப்பு-இன்று முதல்-

இந்தியா மீது விதிக்கப்பட்ட 50 சதவீத வரி, இன்று இரவு முதல் அமலுக்கு வரும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.
இந்தியப் பொருட்கள் மீதான அமெரிக்காவின் 50 சதவிகித வரி, இன்று முதல் அமலுக்கு வரவுள்ளதாக, அமெரிக்க அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. America First என்ற கொள்கையை கடைப்பிடித்து வரும் அமெரிக்க அதிபர் டிரம்ப், மற்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு பதிலடி வரி விதிக்கப்படும் என அறிவித்துள்ளார்.
அமெரிக்கா இந்தியா மீது 50 சதவிகித வரி விதித்தது, ஜவுளி உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர்.

அமெரிக்கா விதித்த 50% வரி, இந்திய ஜவுளி மற்றும் ஆடைத் துறையை கடுமையாக பாதிக்கும் என கூறப்படுகிறது.

திருப்பூர் ஜவுளி உற்பத்தியாளர்கள், வரி விதிப்பால் மாதம் ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை எதிர்பார்க்கின்றனர்.
இதில் அதிகபட்சமாக இந்தியாவுக்கும் பிரேசிலுக்கும் 50 சதவிகித வரி விதிக்கப்பட்டுள்ளது. கடுமையான வரிவிதிப்புக்கு மத்தியிலும் உள்ளூர் விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்களின் நலனை காக்க அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்கும் என, பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார். அமெரிக்கா அறிவித்துள்ள 50 சதவிகித வரி, இந்தியாவின் ஜவுளி மற்றும் ஆடைத் துறையை கடுமையாக பாதிப்பதுடன் அமெரிக்காவில் நகைகளின் விலையையும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
கடல் உணவுகள், வாகன உதிரி பாகங்கள், மெத்தை, படுக்கை விரிப்புகள் என சுமார் 55 சதவிகித இந்திய ஏற்றுமதிப் பொருட்கள் இந்த வரிவிதிப்பால் பாதிக்கப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் அத்தியாவசியத் தேவையாக இருக்கும் மருந்துகள் மற்றும் மருந்து மூலப்பொருட்களுக்கு இந்த வரி விதிப்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல், சில எலெக்ட்ரானிக் பொருட்கள், கச்சா எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருட்களுக்கும் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்திய ஜவுளிகளுக்கு டிரம்ப் வரியை கடுமையாக உயர்த்திய நிலையில், அந்நிதிச்சுமையை பகிர்ந்து கொள்ள வேண்டும் என அங்குள்ள வாடிக்கையாளர்கள் நெருக்கடி கொடுப்பதாக திருப்பூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் கவலையுடன் கூறுகின்றனர்.
திருப்பூர் ஜவுளி உற்பத்தியாளர்கள், வரி விதிப்பு அமலுக்கு வருவதற்கு முன்பே பெரும்பாலான சரக்கை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்துவிட்டதாக தெரிவித்தனர். வரி விதிப்பால் விலை அதிகமாகும் என்பதால் தங்களுக்கு 5 முதல் 25 சதவீதம் வரை சலுகை கொடுக்க அமெரிக்க வாடிக்கையாளர்கள் நெருக்கடி கொடுப்பதாகவும் கூறுகின்றனர்.
வரி விதிப்பினால், திருப்பூர் உற்பத்தியாளர்களுக்கு மாதந்தோறும் ஆயிரத்து 300 கோடி ரூபாய் முதல் ஆயிரத்து 500 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படும் என்றும், தேசிய அளவில் 4 ஆயிரம் கோடி ரூபாய் முதல் 4 ஆயிரத்து 200 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். நம்மை விட வரி குறைவு என்பதால் வங்கதேசம், வியட்நாம், கம்போடியா, பாகிஸ்தான் ஏற்றுமதிகளுக்கு லாபமும் வாய்ப்பும் அதிகரிக்கும், என்றும் அவர்கள் கூறினர்

Read More
அரசியல்இந்தியாஉலகம்தமிழ்நாடு

இந்தியா மீது வரி விதிப்பு ரஷ்யாவுக்கு நெருக்கடி கொடுக்க-ஜே.டி.வான்ஸ்

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கியதற்காக இந்தியா மீது விதிக்கப்பட்ட 25% கூடுதல் வரி, உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுப்பதற்கான ஒரு முயற்சி என அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தெரிவித்துள்ளார்
ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர, ரஷ்யாவின் மீது அழுத்தம் கொடுக்கவே இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது மறைமுக வரி விதிக்கப்பட்டதாக அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் எண்ணெய் வணிகத்திற்கு கடினமான சூழலை உருவாக்கவே, இந்த ‘பொருளாதார நெருக்கடி’ மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.
அமெரிக்காவின் என்.பி.சி. நியூஸ் தொலைகாட்சியில் ஒளிபரப்பான ‘மீட் தி பிரஸ்’ நிகழ்ச்சியில் உக்ரைன் போர் தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கையில் ஜே.டி வான்ஸ் இவ்வாறு தெரிவித்தார். ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த வான்ஸ், “ரஷ்யாவை உக்ரைனில் குண்டுவீசுவதை நிறுத்தவைக்க, டிரம்ப் ‘ஆக்ரோஷமான பொருளாதார நெம்புகோல்’ (aggressive economic leverage) முறையைப் பயன்படுத்தியுள்ளார். இதில், இந்தியாவின் மீது விதிக்கப்பட்ட மறைமுக வரி விதிப்புகளும் அடங்கும்,” என்று கூறினார்.
ரஷ்ய கச்சா எண்ணெயை இந்தியா கொள்முதல் செய்ததால், அதன் மீது 25% கூடுதல் வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்த 3 நாட்களுக்குப் பிறகு இந்த கருத்து வெளியாகி உள்ளது. இந்த வரி விதிப்புடன் சேர்த்து, இந்திய தயாரிப்புகளுக்கு அமெரிக்காவில் விதிக்கப்படும் மொத்த வரி 50% ஆக உயர்ந்துள்ளது. இது உலக அளவில் எந்தவொரு நாட்டிற்கும் விதிக்கப்பட்ட அதிகபட்ச வரியாகும்.

அமெரிக்காவின் இந்நடவடிக்கையை, ‘நியாயமற்றது’ என்று வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் கூறுகையில், “இந்த வரிவிதிப்பு ஒரு தவறான கண்ணோட்டத்தில் எண்ணெய் விவகாரமாக சித்தரிக்கப்படுகிறது” என்றார்.
ரஷ்ய கச்சா எண்ணெயை அதிகளவில் இறக்குமதி செய்யும் சீனா, ஐரோப்பிய நாடுகளுக்கு இந்த வரி விதிக்கப்படாத நிலையில், இந்தியா மீது மட்டும் இந்த வரி விதிக்கப்பட்டது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பினார். “எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பொருட்களை இந்தியாவில் இருந்து வாங்குவதில் உங்களுக்கு சிக்கல் இருந்தால், அதை வாங்க வேண்டாம். யாரும் உங்களை கட்டாயப்படுத்தவில்லை. ஆனால், ஐரோப்பா அமெரிக்காவும் வாங்குகின்றன” என ஜெய்சங்கர் கூறியிருந்தார்.

இதனிடையே, ரஷ்ய அதிபர் புதின் உடன் அலாஸ்காவில் நடைபெற்ற சந்திப்புக்குப் பிறகு, உக்ரைன் போரை முடிவுக்குக்கொண்டு வருவதற்கான மத்தியஸ்தம் செய்ய முடியும் என அமெரிக்கா நம்புவதாக வான்ஸ் தெரிவித்தார். ரஷ்யா போரை நிறுத்தினால், மீண்டும் உலக பொருளாதாரத்தில் இணைக்கப்படும் என்ற செய்தியை டிரம்ப் தெளிவுபடுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ரஷ்ய எண்ணெய் கொள்முதல் தொடர்பாக இந்தியா மீது விதிக்கப்பட்ட அமெரிக்க வரி அழுத்தங்கள், இந்தியா-ரஷ்யா இடையிலான கூட்டாண்மையை பாதிக்காது என்பதை இரு நாடுகளும் மாஸ்கோவில் நடைபெற்ற சந்திப்பில் உறுதி செய்தன. அதிபர் புதின் இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவுக்கு வருகை தர உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More
ஆன்மீகம்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்

ஆன்மிக பக்தர்களுக்கு இலவசமாக ஒரு மாதம் சுற்றுலா.!

தமிழக அரசின் ஆன்மிக திட்டங்கள்
அறநிலையத்துறை சார்பாக பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் கோயில்களுக்கு ஆன்மிக சுற்றுலா அழைத்து செல்லப்படுகிறது. ராமேஸ்வரம் – காசி, ஆடி மாதம் அம்மன் கோயில் சுற்றுலா உள்ளிட்ட பல திட்டங்கள் நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில் தற்போது புரட்டாசி மாதம் முழுவதும் பக்தர்களை சுற்றுலா அழைத்து செல்லப்படுகிறது. இது தொடர்பாக அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

2025-2026 ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற அறிவிப்பினை நிறைவேற்றிடும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சென்னை. காஞ்சிபுரம், விழுப்புரம், மயிலாடுதுறை, திருச்சி, தஞ்சாவூர், மதுரை. தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய மண்டலங்களில் அமைந்துள்ள முக்கிய வைணவத் திருக்கோயில்களுக்கு புரட்டாசி மாதத்தில் தொடங்க இருக்கும் ஆன்மிகப் பயணத்தில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் தெரிவித்துள்ளார்.
அறநிலையத்துறை சார்பில், புரட்டாசி மாதத்தில் வைணவத் திருக்கோயில்களுக்கு ஆன்மிகப் பயணமாக அழைத்துச் செல்லப்பட உள்ளனர். சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மண்டலங்களில் இருந்து நான்கு கட்டங்களாக இந்தப் பயணம் மேற்கொள்ளப்படும்.
தமிழ்நாட்டில் மக்கள் தெய்வ வழிபாட்டை தொன்று தொட்டுப் போற்றி வருவதோடு, பல்வேறு திருக்கோயில்களுக்கு ஒரே நாளில் சென்று வழிபடுவதை பெரும்விருப்பமாகவும் கொண்டுள்ளனர். இதனைக் கருத்தில் கொண்டு 2025-2026 ஆம் நிதியாண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையின்போது,

“புரட்டாசி மாதத்தில் பிரசித்தி பெற்ற வைணவத் திருக்கோயில்களுக்கு ஆண்டுதோறும் 60 வயது முதல் 70 வயதிற்கு உட்பட்ட 1,000 பக்தர்களை ஆன்மிகப் பயணமாக அழைத்துச் செல்லும் திட்டம் கடந்த ஆண்டு முதல் அரசு நிதி மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாண்டு அரசு நிதியில் 2,000 பக்தர்கள் வைணவத் திருக்கோயில்களுக்கு ஆன்மிகப் பயணம் அழைத்துச் செல்லப்படுவர். இதற்கான செலவினத்தொகை ரூ.50 இலட்சம் அரசு நிதியாக வழங்கப்படும்” என அறிவிக்கப்பட்டது.
புரட்டாசி மாத வைணவ கோயில் சுற்றுலா
இந்த அறிவிப்பினை நிறைவேற்றிடும் வகையில், சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சி. மதுரை, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய மண்டலங்களில் அமைந்துள்ள முக்கிய வைணவத் திருக்கோயில்களுக்கு புரட்டாசி மாதத்தில் மேற்கொள்ளும் ஆன்மிகப் பயணத்தில் 2,000 மூத்த குடிமக்கள் கட்டணமின்றி அழைத்துச் செல்லப்பட உள்ளனர். புரட்டாசி மாத வைணவத் திருக்கோயில்களுக்கான ஆன்மிகப் பயணமானது நான்கு கட்டங்களாக, அதாவது 20.09.2025, 27.09.2025, 04.10.2025, 11.10.2025 ஆகிய நாட்களில் அந்தந்த மண்டலங்களிலிருந்து தொடங்கப்பட உள்ளன.
யாரெல்லாம் இலவச பயணத்தில் பங்கேற்கலாம்
இந்த ஆன்மிகப் பயணத்தில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் இந்து மதத்தை சார்ந்தவராகவும், 60 வயதிற்கு மேல் 70 வயதிற்குட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.2,00,000/-க்கு மிகாமல் இருப்பதோடு, அதற்கான வருமான சான்றிதழை வட்டாட்சியரிடமிருந்து பெற்று இணைக்க வேண்டும். போதிய உடல் தகுதி உள்ளதற்கான மருத்துவ சான்றுடன், ஆதார் கார்டு நகல் இணைக்கப்பட வேண்டும்.

இந்த ஆன்மிகப் பயணத்திற்கான விண்ணப்ப படிவங்களை அந்தந்த மண்டல இணை ஆணையர் அலுவலகங்களில் நேரில் பெற்றோ அல்லது www.hrce.tn.gov.in என்ற இந்து சமய அறநிலையத்துறை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்தோ விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை உரிய சான்றுகளுடன் இணைத்து சம்பந்தப்பட்ட மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் 25.09.2025-க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இலவச பயணத்திற்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்
சமய மேலும், இது தொடர்பான விபரங்களுக்கு இந்து அறநிலையத்துறையின் இணையதளத்திலோ அல்லது 1800 425 1757 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம். ஆகவே, புரட்டாசி மாதத்தில் வைணவத் திருக்கோயில்களுக்கு ஆன்மிகப் பயணம் செல்ல விரும்பும் பக்தர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு இறை தரிசனம் பெறலாம் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

Read More
Bigboss 2025தமிழ்நாடுநிகழ்ச்சிகள்

பிக்பாஸ் சீசன் 9: மீண்டும் விஜய் சேதுபதி

Bigboss நிகழ்ச்சியின் 3-வது சீசன் அக்டோபர் மாதம் தொடங்கும் என்ற தகவல் வெளியாகி இருந்தது. இந்த சீசனையும் விஜய் சேதுபதியே தொகுத்து வழங்குவார் என்று என்று கூறப்பட்ட நிலையில், தற்போது சீசன் தொடங்குவது எப்போது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
ரியாலிட்டி ஷோக்கள் அதிகம் ஒளிபரப்பாகி வரும் விஜய் டிவியில் கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்ட நிகழ்ச்சி பிக்பாஸ். சமூக வலைதளம், சினிமா மற்றும் சின்னத்திரையில், பிரபலமான நபர்களை தேலுவு செய்து எவ்வித வெளியுலக தொடர்பும் இல்லாத ஒரு வீட்டில் வைத்து நடத்தப்படும் இந்த கேம்ஷோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க பலரும் தற்போது சினிமா மற்றும் சின்னத்திரையில் நடித்து வருகின்றனர்.

இதுவரை 8 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், கடந்த 7 சீசன்களை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். அவர் போட்டியாளர்களிடம் பேசும் விதம், அவர்களுக்கு போட்டு காட்டும் குறும்படங்கள், மற்றும் அட்வைஸ்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருந்தது. இதன் காரணமாகவே வார இறுதி எபிசோடுகளை பார்க்க ரசிகர்கள் குவிந்து வந்தனர். ஆனால் கடந்த 8-வது சீசனில் கமல்ஹாசன் விலகியதை தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி தொகுப்பாளராக களமிறங்கினார்.

கமல்ஹாசன் அளவுக்கு இல்லை என்றாலும், விஜய் சேதுபதியும், தனது தொகுப்பாளர் திறமையை நிரூபித்திருந்தார். இந்த சீசனில், முத்துக்கிருஷ்ணன் சாம்பியன் பட்டம் வென்ற நிலையில், அடுத்து 9-வது சீசன் தொடங்க உள்ளது. இந்த சீசன் எப்போது தொடங்கும் என்பது பலரின் கேள்வியாக இருந்து வந்த நிலையில், ஜியோஸ்டார் நிறுவனத்தின் தென்னிந்திய தலைமை செயல் அதிகாரி கிருஷ்ணன் குட்டி தந்தி டிவிக்கு அளித்த பிரத்யோக பேட்டியில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9-வது சீசன், அக்டோபர் மாதம் தொடங்கும் என்று தெரிவித்திருந்தார்.
இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9-வது சீசன் வரும் அக்டோபர் 5-ந் தேதி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் இந்த 9-வது சீசனில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இருக்கும் உமைரை போட்டியாளராக களமிறக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read More
இந்தியாதமிழ்நாடுவணிகம்

புதிய ஜிஎஸ்டி-இனி 2 வரி அடுக்குகள் மட்டுமே…

வரும் செப்டம்பர் 3 மற்றும் 4ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் வரி விதிப்பு சீர்திருத்தங்கள் பற்றிய முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது.
ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் அமல்படுத்தப்பட உள்ளதாக பிரதமர் மோடி அறிவித்தார்.
நடைபெற்ற ஜிஎஸ்டிக்கான வரி சீரமைப்புக்கான மாநில அமைச்சர்களின் குழு, புதிய ஜிஎஸ்டி வரி சீர்திருத்தங்கள் தொடர்பான மத்திய அரசின் பரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளித்தது.
தன்படி, 5, 12, 18 மற்றும் 28 சதவீதம் என தற்போது உள்ள நான்கு அடுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்புமுறை எளிமையாக்கப்படுகிறது. நான்கு அடுக்கு வரி விதிப்பில் இருந்து 12 மற்றும் 28 சதவீதம் ஆகிய இரு அடுக்குகள் நீக்கப்படவுள்ளன. இனிமேல் 5 மற்றும் 18 ஆகிய இரு அடுக்குகள் மட்டுமே ஜிஎஸ்டி வரிவிதிப்பில் இருக்கும். இது, வரும் 3, 4 தேதிகளில் நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இறுதி செய்யப்படவுள்ளது.

Read More
அரசியல்தமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்

விண்ணப்பித்த அன்றே பயிர்க்கடன் – முதல்வர்

விவசாயிகள் பயிர்க்கடன் பெற ஆன்லைனில் விண்ணப்பித்த அன்றே கடன் பெறும் திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

Read More
இந்தியாசினிமாதமிழ்நாடு

ரஜினியின் கூலி-இது எப்படி இருக்கு ..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் அதிகாலையிலேயே பல்வேறு இடங்களில் வெளியான நிலையில், பலதரப்பட்ட ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் விமர்சனங்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், காலை 9 மணி காட்சி
கூலி கதை: சைமன் (நாகார்ஜுனா) ஹாரிபரில் தயாள் (செளபின் சாஹிர்) தலைமையில் விலையுயர்ந்த வாட்ச்களை விற்பனை செய்வது போல இன்னொரு மிகவும் மோசமான பிசினஸை செய்து வருகிறார். அவர் கொன்று குவிக்கும் ஆட்களை அப்புறப்படுத்தும் பணி ராஜசேகருக்கு (சத்யராஜ்) வழங்கப்பட தனது 3 மகள்களின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக அந்த மோசமான வேலையை செய்கிறார். மேலும், அங்கே நடக்கும் விஷயங்களை அம்பலப்படுத்த நினைக்கும் அவரை கொன்று விடுகின்றனர். தனது நண்பனை கொன்றவர்களை கண்டுபிடித்து பழிவாங்க களமிறங்கும் தேவா தனது நண்பனின் 3 மகள்களையும் காப்பாற்ற போராட கடைசியில் என்ன ஆனது என்பது தான் கூலி படத்தின் கதை.
ரஜினிகாந்தை செம மாஸாக காட்ட வேண்டும் என்கிற செக் பாக்ஸை பக்காவாக டிக் செய்திருக்கும் லோகேஷ் கனகராஜ் பான் இந்தியா படமாக கூலி…..

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கிறார் என்ற அறிவிப்பு வெளியான முதல் நாளில் இருந்தே ‘கூலி’ படத்துக்கான ஹைப் மிகப் பெரிய அளவில் உருவாகிவிட்டது. காரணம், தமிழின் தற்கால இயக்குநர்களில் ஒருவராக லோகேஷ் தனக்கென ஒரு இடத்தை பிடித்துவிட்டதுதான். அவருடன் ரஜினி என்கிற ஒரு மிகப் பெரிய பிராண்ட் இணையும்போது படம் குறித்த எதிர்பார்ப்பு கடந்த இரண்டு ஆண்டுகளாக எக்கச்சக்கமாக எகிறிவிட்டிருந்தது. அத்தகைய எதிர்பார்ப்பை ‘கூலி’ திரைப்படம் நிறைவேற்றியதா என்று பார்க்கலாம்.

சென்னையில் மேன்ஷன் ஒன்றை நடத்தி வருபவர் தேவா (ரஜினிகாந்த்). தனது இளவயது நண்பர் ராஜசேகர் (சத்யராஜ்) திடீரென மரணம் அடைந்ததை அடுத்து, அவருடைய இறுதிச் சடங்குக்கு வரும் தேவாவை அவமானப்படுத்தி அனுப்பிவிடுகிறார் ராஜசேகரின் மூத்த மகள் ப்ரீத்தி (ஸ்ருதிஹாசன்).

தனது நண்பனின் சாவுக்கு உண்மையான காரணம் என்ன என்பதை துப்பறியத் தொடங்கும் தேவாவுக்கு மிகப் பெரிய கடத்தல் கும்பலின் தலைவனான சைமன் (நாகர்ஜுனா) பற்றியும், அவரது வலது கரமாக செயல்படும் தயாளன் (சவுபின் சாஹிர்) பற்றியும் தெரியவருகிறது. இவர்களுக்கும் ராஜசேகருக்கும் என்ன தொடர்பு? தேவா, ராஜசேகரின் பின்னணி என்ன என்பன உள்ளிட்ட கேள்விகளுக்கு பதில் சொல்கிறது ‘கூலி’ திரைக்கதை.
வழக்கமான ரஜினி படங்களுக்கே உரிய ‘மாஸ்’
அனிருத்தின் பின்னணி இசை ‘மாஸ்’ காட்சிகளில் மட்டும் கைகொடுத்திருக்கிறது. ஆனால் மற்ற இடங்களில் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு ஒன்றும் இல்லை. பாடல்கள் ஏற்கெனவே ஹிட். ‘அரங்கம் அதிரட்டுமே’ பாடல் வரும் காட்சியில் அரங்கம் அதிர்கிறது.
முதல் பாதியிலேயே ரஜினி யார், அவரது நோக்கம்தான் என்ன என்பதை முழுமையாக வெளிப்படுத்தி, இரண்டாம் பாதியில் கேள்விகளுக்கான முடிச்சுகள் அவிழும்படி செய்திருக்கலாம். கிட்டத்தட்ட க்ளைமாக்ஸ் காட்சியில் தான் பார்வையாளர்களுக்கு முழு உண்மையும் தெரியவருகிறது. கடைசி அரை மணி நேரம் ஆமீர்கான், ரஜினி இடையிலான காட்சிகளும், அந்த ஃப்ளாஷ்பேக்கும் படமாக்கப்பட்ட விதம் சிறப்பு.
மைனஸ்: படத்தின் முதல் பாதி கூட நன்றாகவே சென்றது. ஆனால், படத்தின் 2வது பாதியில் கதை இழுத்துக் கொண்டே சென்றது தான் படத்திற்கு பெரிய தலைவலியாக மாறிவிட்டது. அதிலும், அமீர்கான் வரும் கிளைமேக்ஸ் கேமியோ எல்லாம் கூலி படத்துக்கு பெரிதாக கை கொடுக்கவில்லை. அந்த இடத்தில் லோகேஷ் கனகராஜ் ஏதோ ஃபில்லர்ஸ் போட்டது போலத்தான் உள்ளது. விக்ரம் படத்தில் சூர்யா ரோலக்ஸ் ஆக வந்து மிரட்டுவது போல அமீர்கானின் தாஹா கேரக்டரை வைத்து கூலி 2வுக்கு லீடு கொடுத்து முடித்திருந்தால் கூட தரமாக இருந்திருக்கும். அதே போல இந்த படத்தில் ரெட்ரோ பாடல்களும் பெரிதாக ரசிகர்களை கவரவில்லை. வித வித விதமாய், வித்யாசமாய் கொல்வது தான் படம் முழுக்க வருகிறது. ரெபா மோனிகா ஜான், மோனிஷா பிளெஸ்ஸிக்கு எல்லாம் எந்தவொரு வேலையும் இல்லை. ஒரு சில ட்விஸ்ட்டுகள் வொர்க்கவுட் ஆனாலும், ஏற்கனவே பல படங்களில் பார்த்த உணர்வையே அவை கொடுக்கின்றன. கிளைமேக்ஸை இன்னும் கொஞ்சம் பெட்டராக கொடுத்திருந்தால், இந்த கூலி ஹைப்புக்கு ஏற்ற வொர்த்தாக இருந்திருக்கும். ஆனாலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பு, ஆக்‌ஷன், ஸ்டைல் மற்றும் உழைப்பு கடைசி வரை ரசிகர்களை கண் சிமிட்டாமல் பார்க்க வைக்கிறது. தாராளமாக தியேட்டரில் படத்தை பார்க்கலாம். ஓவர் எதிர்பார்ப்பு வேண்டாம்!
ரஜினியின் சின்ன சின்ன மேனரிசங்களும், சவுபினின் வில்லத்தனமுமே பல இடங்களில் படத்தை காப்பாற்றுகின்றன.

Read More