சுதந்திர தினம்-Independence Day 2025
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15ம் தேதி அன்று, இந்தியாவில் சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது
.சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடிக் ஏற்றினார் முதல்வர் ஸ்டாலின்
பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து விடுதலை பெற்று, சுதந்திர நாடாக இந்தியா மாறியதைக் குறிக்கிறது. சுதந்திர தினம் என்பது தேசிய தினமாகும். சுதந்திர தின கொண்டாட்டங்கள் இந்தியாவின் தலைநகரான டெல்லியில் கோலாகலமாக நடைபெறும். இந்தியப் பிரதமர் டெல்லியில், செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். அதை தொடர்ந்து ராணுவ அணிவகுப்பு மற்றும் களை நிகழ்சிகள் நடைபெறும்.
பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெறுவதற்காக பல சுதந்திரப் போராளிகள் செய்த தியாகங்களை நினைவுபடுத்தும் வகையில் இந்தியாவின்79 ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது
சுதந்திர தினத்திற்கும், குடியரசு தினத்திற்கும் இடையே உள்ள வேறுபாடு
சுதந்திர தினம் என்பது நம் நாடு ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெற்ற நாள். அந்நாளில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் இருந்து இந்திய மக்கள் பிரதிநிதிகளுக்கு ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. முதல் சுதந்திர தினத்தன்று குடியரசுத் தலைவர் இல்லை. லார்ட் மவுண்ட்பேட்டன் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்தார். அது ஆங்கிலேய அலுவலகம் அகற்றப்படுவதற்கு முன்பு, குடியரசுத் தலைவர் பதவிக்கு சமமான பதவியாக இருந்தது.
இந்தியா சுதந்திரம் பெற்ற நாளை சுதந்திர தினமாகவும், அரசியலமைப்பு சட்டம் ஏற்கப்பட்டு குடியரசாக அறிவிக்கப்பட்ட நாள் குடியரசு தினமாகவும் கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினத்தன்றும், குடியரசு தினத்தன்றும் ஒரே மாதிரியாக கொடி ஏற்றப்படும் என்று நீங்கள் நினைத்திருப்பீர்கள்.
சுதந்திர தினத்தன்று, பிரதமர் கொடி ஏற்றுவார். குடியரசு தினத்தன்று, குடியரசுத் தலைவர் கொடியை அவிழ்ப்பார். இரண்டும் ஒரே மாதிரியாக இருந்தாலும், இரண்டு விழாக்களுக்கு முக்கிய வேறுபாடுகள் உள்ளன. பொதுவாக இரண்டையுமே ஏற்றுவதாகத்தான் குறிப்பிடுவோம். ஆனால் அது தவறு. காலனி ஆதிக்கத்திலிருந்து விடுபட்ட புதிய தேசத்தின் எழுச்சியைக் குறிக்கும் வகையில் சுதந்திர தினத்தன்று தேசியக் கொடி, கம்பத்தின் கீழிருந்து ஏற்றப்பட்டது. அதனால் அந்த சுதந்திரம் பெற்ற நாளின் நினைவாக கம்பத்தின் கீழிருந்து கொடி ஏற்றப்படும்.
குடியரசு தினமான ஜனவரி 26 அன்று மூவர்ணக் கொடியை அவிழ்க்கும்போது, கொடி மூடப்பட்டு கம்பத்தின் உச்சியில் கட்டப்பட்டிருக்கும். இந்திய குடியரசுத் தலைவர் மூவர்ணக் கொடியை அவிழ்த்து விடுவார்.
