இந்தியாவுக்கு 25%லிருந்து … 50%சதவிகித வரி-அமெரிக்க அதிபர் டிரம்ப்…
இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதியாகும் பொருட்கள் மீது ஆகஸ்ட் 1ஆம் தேதியான வெள்ளிக்கிழமை முதல், 25 விழுக்காடு வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்திருந்தார். மேலும் ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்வதால் கூடுதல் அபராதம் விதிக்கப்படும் என்றும் டிரம்ப் எச்சரித்திருந்தார்.
இதுகுறித்து தனது சமூகவலைதளத்தில் பதிவிட்ட அதிபர் டிரம்ப், இந்தியா, அமெரிக்காவுக்கு நல்ல நண்பராக இருந்து வந்தாலும், வேறு எந்த நாடும் வசூலிக்காத அளவுக்கு அமெரிக்கப் பொருள்களுக்கு அதிக வரி வசூலிப்பதாகக் குற்றம்சாட்டினார். வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு மிகக் கடுமையான பணமற்ற வர்த்தகத் தடைகளை இந்தியா கொண்டிருப்பதாகவும் சாடினார்.
இந்தியப் பொருட்கள் மீதான 25 சதவிகித வரி விதிப்பு வரும் 7 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என அமெரிக்கா அறிவித்திருந்த நிலையில், தற்போது கூடுதலாக 25 சதவிகித வரியை இந்தியா மீது விதிப்பதாக அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளார்.
இந்தியப் பொருட்கள் மீதான 25 சதவிகித வரி விதிப்பு வரும் 7 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என அமெரிக்கா அறிவித்திருந்த நிலையில், தற்போது கூடுதலாக 25 சதவிகித வரியை இந்தியா மீது விதிப்பதாக அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளார்.
அதன்படி தற்போது, ஏற்கனவே விதிக்கப்பட்ட 25 சதவிகித வரியுடன் கூடுதலாக 25 சதவிகித வரியை இந்தியா மீது விதிப்பதாக அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளார். இதன் மூலம், அமெரிக்கா, இந்தியா மீது தற்போது 50 சதவிகித வரியை விதித்துள்ளது.
இந்தியா மீது 50 சதவிகித வரி விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒப்புதல் வழங்கி அறிவிப்பு வெளியிட்டார். இதற்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், “இந்தியா தனது தேசிய நலன்களைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும். அமெரிக்கா விவகாரத்தில் இந்தியாவும் அதே நிலைபாட்டை எடுக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
