Author: Namadhu Arasu

அரசியல்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்

இன்று பரப்புரையை தொடங்கும் தவெக தலைவர் விஜய்… 

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், திருச்சியில் இருந்து தனது அரசியல் பரப்புரை சுற்றுப்பயணத்தை இன்று தொடங்குகிறார்.
தமிழ் திரைத்துறையில் உச்ச நடிகராக திகழும் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சித் தொடங்கியுள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, ஆட்சி அரியணை ஏறும் இலக்குடன் விஜய் தீவிரமாக பணியாற்றி வருகிறார்.
இதுவரை மாநாடுகள் மூலம் மட்டுமே தொண்டர்களை சந்தித்த அவர் திருச்சியில் இருந்து தனது அரசியல் பரப்புரை பயணத்தை இன்று தொடங்குகிறார்.
திருச்சி மரக்கடை பகுதியில் காலை 10.35 மணியளவில் பரப்புரை மேற்கொள்ளும் விஜய், அரியலூர் பழைய பேருந்து நிலையம் அருகே பிற்பகல் 1 மணி முதல் 3 மணி வரை பிரசாரம் செய்யவுள்ளார்.
பின்னர், பெரம்பலூர் மாவட்டம் செல்லும் விஜய், குன்னம் பேருந்து நிலையம் அருகே மாலை 4 மணியளவிலும், பெரம்பலூர் வானொலித் திடல் பகுதியில் மாலை 5 முதல் 7 மணி வரையிலும் மக்கள் மத்தியில் பரப்புரை மேற்கொள்கிறார்.
நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி
விஜயின் பரப்புரை பயணத்திற்கு பல்வேறு நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி அளித்துள்ள நிலையில், காவல்துறை கட்டுப்பாடுகளை கட்சியினர் ராணுவக் கட்டுப்பாடுடன் பின்பற்ற வேண்டுமென விஜய் வலியுறுத்தியுள்ளார்.
மக்கள் சந்திப்பு பயணம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள விஜய், மனசாட்சி உள்ள மக்களாட்சி அமைக்கும் உன்னத நோக்குடன் தவெக களமாடி வருவதாக தெரிவித்துள்ளார்.
வாகை சூடும் வரலாறு திரும்புகிறது; உங்க விஜய் நான் வரேன்” என்ற மக்கள் சந்திப்பு பயணத்தை தமிழ்நாடு முழுவதும் மேற்கொள்ள இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசியலிலேயே இதுவரை இல்லாத வகையில் பாதுகாப்பு நிபந்தனைகளை தவெக மீது மட்டும் காவல்துறை விதித்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ள விஜய், அரசியல் நிலைப்பாடு கடந்து தவெக தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வரும்போதும், திரும்பி செல்லும்போதும் விஜயின் வாகனத்தை பின் தொடர வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
கர்ப்பிணிகள், கைக்குழந்தையுடன் இருக்கும் பெண்கள், முதியவர்கள், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பள்ளி மாணவர்கள் நேரில் பங்கேற்பதை தவிர்க்க வேண்டுமெனவும், பட்டாசு வெடிப்பது உள்ளிட்ட அனைத்து வரவேற்பு நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டுமெனவும் அறிவுறுத்தியுள்ளார்.
போக்குவரத்திற்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தக் கூடாது எனவும், பிறர் மனம் புண்படும் வகையில் பேசுவதோ அல்லது நடந்து கொள்வதோ கூடாது என்றும் கூறியுள்ளார்.
உரிய அனுமதியின்றி பிளக்ஸ் பேனரோ, அலங்கார வளைவுகளோ, கொடி கம்பங்களோ அமைக்கக்கூடாது என அறிவுறுத்தியுள்ள ஆனந்த், கட்டடங்கள், மின் விளக்கு கம்பங்கள், மரங்கள், வாகனங்கள், சிலைகள் மற்றும் அவற்றை சுற்றி அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளின் அருகில் செல்லக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, திருச்சியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வரும் சூழலில், விஜயின் பரப்புரை வாகனம் சென்னை பனையூரில் இருந்து திருச்சி புறப்பட்டு சென்றது.

Read More
சினிமாதமிழ்நாடு

‘பேட் கேர்ள்’ விமர்சனம் -திரை விமர்சனம்

தமிழில் ஒரு பெண்ணின் வாழ்க்கையை ஒரு பெண்ணின் பார்வையில் ஒரு பெண் இயக்குநரின் வாயிலாக சொன்ன படங்கள் எதுவென்று யோசித்து பார்த்தால் அப்படி இதுவரை சொல்லிக்கொள்ளும்படியான எந்தப் படமும் இல்லை என்பதே பதிலாகும். ‘ஆட்டோகிராஃப்’, ‘அட்டகத்தி’ போன்ற படங்கள் ஆண்களின் வாழ்க்கையை ஆணின் பார்வையில் பேசின. ஆனால், ஒரு பெண்ணின் காதல்களையும், தன்னுடைய ஒவ்வொரு பருவத்திலும் அவள் எதிர்கொள்ளும் விஷயங்களையும் ஒரு பெண்ணே பேசும் படைப்பாக வந்துள்ளதுதான் இந்த ‘பேட் கேர்ள்’ படம்.
ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மூன்று கட்டங்கள்தான் ஒன்லைன் என்றாலும் கூட முன்பு குறிப்பிட்ட ‘ஆட்டோகிராஃப்’ ‘அட்டகத்தி’, ‘பிரேமம்’ பாணியிலான திரைக்கதை உத்தியை பயன்படுத்தாமல் முற்றிலும் புதிய கோணத்தில் அணுகியிருப்பது சிறப்பு. நாயகியின் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் சில கேள்விகளை அப்படியே ஆடியன்ஸின் பார்வையில் விட்டிருப்பதும் கூட நல்ல உத்தி.

படத்தின் முதல் காட்சியிலிருந்தே நம்மை உள்ளிழுத்துக் கொள்ளும் வகையில் எழுதப்பட்டிருக்கும் திரைக்கதை படத்தின் பலம். நாயகியின் மன ஓட்டங்களும், அவர் எதிர்கொள்ளும் சிக்கல்களும் பார்வையாளர்களுக்கும் அதே உணர்வை கடத்துகின்றன. பதின் பருவத்தை கடந்து வருபவர்கள் எதிர்கொள்ளும் பல சிக்கல்களை படம் வெளிப்படையாக பேசுகிறது. படத்தில் பேசப்படும் விஷயங்களை நிச்சயமாக ஆண்களும் தங்களோடு தொடர்புப்படுத்திக் கொள்ள முடியும்.
கதை நாயகியான ரம்யா (அஞ்சலி சிவராமன்) என்ற பெண்ணின் வாழ்க்கையின் மூன்று பருவங்களை, அதில் அவர் சந்திக்கும் ஆண்கள், அவருடைய காதல்கள், பதின்பருவ ஏக்கங்கள் ஆகியவற்றை பேசுகிறது படம்.
குறிப்பிட்ட சமூக உணர்வுகளை புண்படுத்துவதாகவும், பதின்பருவ பிள்ளைகள் மனதில் நஞ்சை விதைக்கும் முயற்சி எனவும் இப்படத்துக்கு எதிராக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. நீதிமன்றம் வரை சென்று சென்சாரில் பல ‘கட்’களை பெற்று ஒருவழியாக திரையரங்குகளில் வெளியாகியுள்ளது ‘பேட் கேர்ள்’.
படத்தின் குறிப்பிட்டு பாராட்டப்படவேண்டியவர்கள் ஒளிப்பதிவாளர்களான ப்ரீத்தா ஜெயராமன், ஜெகதீஷ் ரவி, பிரின்ஸ் ஆண்டர்சன் ஆகியோர். நாயகியின் ஒவ்வொரு பருவத்திலும் ஒளிப்பதிவில் வெரைட்டி காட்டி அதற்கான மனநிலையை பார்வையாளர்களுக்கு ‘செட்’ செய்வதில் ஒளிப்பதிவாளர்களின் பங்கு அசர வைக்கிறது. அமித் திரிவேதியின் பின்னணி இசை படத்துக்கு தேவையான இடங்களில் ஒலித்து கதையின் போக்குக்கு உதவியிருக்கிறது.

படத்தின் குறையென்று பார்த்தால் ஒட்டுமொத்த படத்தையும் ஒருவித சீரியஸ் தன்மையிலேயே சொல்ல முயன்றிருப்பது ஒரு கட்டத்தில் சலிப்பை ஏற்படுத்தி விடுகிறது. ஒரு பெண்ணின் வாழ்க்கையை வெவ்வேறு கட்டங்களாக சொல்லும்போது சில கலகலப்பான தருணங்களே இல்லையா என்ற கேள்வி எழுவதை தவிர்க்க இயலவில்லை.

இதைத் தாண்டி குடும்ப அமைப்புகளில் பெண்களால் பெண்கள் மீது நடத்தப்படும் உளவியல் தாக்குதல்கள், ஒருபக்கம் தன் மகளிடம் கடுமை காட்டி ஒடுக்க முயலும் ஒரு பெண், இன்னொரு பக்கம் சமூகம் என்னும் கட்டமைப்பில் பாதிக்கப்பட்டவராக இருக்கும் முரண் போன்ற பல்வேறு நுணுக்கமான விஷயங்களை காட்டியதிலும், இதுவரை தமிழ் சினிமாவில் பெண்கள் குறித்த உருவாக்கப்பட்டிருந்த கற்பிதங்களை உடைத்த விதத்திலும் இயக்குநர் வர்ஷா பரத் ஜெயித்திருக்கிறார்.
ஆண்களைப் பற்றி ஆண்களே சொல்லும், பெண்களின் கதையையும் ஆண்களே சொல்லும் ஒரு திரைச்சூழலில் ஒரு பெண்ணின் வாழ்க்கைப் பாதையையும், சமூகம் மற்றும் குடும்பத்தால் அவள் எதிர்கொள்ளும் ஒடுக்குமுறைகளையும் ஒரு பெண்ணே பேசும் இந்த ‘புரட்சிகர’ முயற்சி நிச்சயம் வரவேற்கப்படவேண்டியதே!

Read More
அரசியல்இந்தியாதமிழ்நாடுநிகழ்ச்சிகள்

குடியரசு துணைத் தலைவர்ஆனார்-சி.பி.ராதாகிருஷ்ணன்..

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் 100 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.
குடியரசு துணைத் தலைவராக பதவி வகித்த ஜெகதீப் தன்கர் தனது உடல்நிலையை காரணம் காட்டி கடந்த 21ஆம் தேதி திடீரென பதவியை ராஜினாமா செய்தார். அவரது பதவி விலகலை குடியரசுத் தலைவர் உடனடியாக ஏற்றுக் கொண்டார். இதனையடுத்து, புதிய குடியரசு துணைத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் செப்டம்பர் 9ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் தமிழரான சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இந்தியா கூட்டணி சார்பில் தெலங்கானாவைச் சேர்ந்த உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி களத்தில் இருந்தார்.

இதனால் வாக்குப் பதிவு நடைபெறுவது உறுதியானது. குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க அனைத்து எம்.பி.க்களும் உரிமை உள்ளது. மக்களவையில் மொத்தமுள்ள 543 உறுப்பினர்களில் ஓர் இடம் பதவி காலியாக உள்ளது. மாநிலங்களவையில் மொத்தமுள்ள 245 உறுப்பினர் பணியிடங்களில் 6 இடங்கள் காலியாக உள்ளன. ஒரு அவைகளிலும் சேர்த்து மொத்தமாக 781 உறுப்பினர்கள் உள்ளனர். 7 எம்.பி.க்களை கொண்டுள்ள பிஜு ஜனதா தளம், 4 எம்.பி.க்களைக் கொண்டுள்ள பாரதிய ராஷ்ரிய சமீதி ஆகியவை தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தன. 11 எம்.பி.க்களை வைத்துள்ள ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் பாஜகவுக்கு ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்தது.
வாக்கு எண்ணிக்கை முடிவில், குடியர்சுத் துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றிபெற்றதாக தேர்தல் நடத்தும் அதிகாரி பி.சி.மோடி அறிவித்தார். மொத்தமாக 98.2 சதவிகித வாக்குகள் பதிவாகின. சி.பி.ராதாகிருஷ்ணன் 452 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அவரை எதிர்த்து இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட சுதர்சன் ரெட்டி 300 வாக்குகளைப் பெற்று தோல்வி அடைந்தார். விரைவில் சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்பு விழா நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read More
இந்தியாதமிழ்நாடுதொழில்நுட்பம்வணிகம்

வங்கிக் கணக்கில் இது முக்கியம்…கவனம் தேவை!

வருமான வரித்துறை பெரிய அளவிலான பண பரிவர்த்தனைகளை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. சேமிப்புக் கணக்குகளில் டெபாசிட் தொகை, சொத்து வாங்குதல் மற்றும் விற்பனை, வெளிநாட்டுச் செலவுகள், கிரெடிட் கார்டு பில் செலுத்துதல், மின்சாரக் கட்டணங்கள் போன்றவற்றை தீவிரமாகக் கண்காணிக்கிறது. வரி ஏய்ப்பைத் தடுப்பதே இதன் நோக்கம் ஆகும். எனவே, யாராவது சந்தேகத்திற்கிடமான பண பரிவர்த்தனைகளைச் செய்தால் அவர்களுக்கு நேரடியாக நோட்டீஸ் அனுப்பப்படும்.
உங்களுடைய வங்கிக் கணக்கில் இந்த விஷயங்களில் எல்லாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் வருமான வரித் துறை நோட்டீஸ் வீடு தேடி வரும்.
வங்கிகள், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் அதிக மதிப்புள்ள பரிவர்த்தனைகளை வருமான வரித் துறைக்கு தெரிவிக்க வேண்டும். உதாரணமாக, ஒரு வருடத்தில் ஒரு சேமிப்புக் கணக்கில் ரூ. 10 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட வைப்புத்தொகை இருந்தால் உடனடியாகப் புகாரளிக்கப்படும். நடப்புக் கணக்கில் ரூ. 50 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட வைப்புத்தொகை இருந்தாலும் கவனிக்கப்படும்.
சொத்து பரிவர்த்தனைகள் ரூ. 30 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்டதாக இருந்தால் பதிவு அலுவலகம் தானாகவே அந்தத் தகவலைப் பகிர்ந்து கொள்ளும். ரூ. 1 லட்சத்திற்கு மேல் தொகைக்கு கிரெடிட் கார்டு பில் ரொக்கமாக செலுத்தப்பட்டாலோ அல்லது ரூ. 10 லட்சத்திற்கு மேல் தொகைக்கு ஆன்லைனில் அல்லது காசோலை மூலம் செலுத்தப்பட்டாலோ அதுவும் கண்காணிக்கப்படும்.
தகவல்கள் அனைத்தும் படிவம் 26AS மற்றும் வருடாந்திர தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கும். நீங்கள் தாக்கல் செய்யும் வருமான வரி ரிட்டன் மற்றும் இந்தத் தகவல்கள் பொருந்தவில்லை என்றால் சந்தேகம் எழும். குறிப்பாக, வருடாந்திர செலவுகள் அதிகமாக இருந்தாலும் வருமானம் குறைவாக இருந்தால் வருமான வரித் துறை நோட்டீஸ் பெறுவதற்கான அதிக வாய்ப்பு உள்ளது. மேலும், ஒரு வருடத்தில் ரூ. 1 கோடிக்கு மேல் பணம் எடுப்பவர்களுக்கு 2 சதவீத TDS கட்டாயமாகும். மேலும் வரி தாக்கல் செய்யாதவர்களுக்கு 5 சதவீதம் வரை வரி விதிக்கப்படுகிறது.
ஒவ்வொரு பெரிய பரிவர்த்தனைக்கும் சரியான பதிவுகளை வைத்திருப்பது முக்கியம். வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்வதற்கு முன் படிவம் 26AS மற்றும் வருடாந்திர தகவல் அறிக்கை (AIS) ஆகியவற்றைச் சரிபார்க்க வேண்டும். உங்கள் வருமானம் வரம்புகளுக்குள் இருந்தாலும் நீங்கள் பெரிய பரிவர்த்தனைகளைச் செய்தால் வரிகளை தாக்கல் செய்வது கட்டாயமாகும். அவ்வாறு செய்வதன் மூலம் தேவையற்ற வரி நோட்டீஸ்களின் அபாயத்தைத் தவிர்க்கலாம்.

Read More
தமிழ்நாடுதொழில்நுட்பம்

பி.டி.எப்.(PDF) பாஸ்வேர்டை நீக்குவது எப்படி?

ஒரு ஃபைலுக்குப் பாஸ்வேர்டு போட்டிருந்தால், அதை விரைவாக அணுகுவதோ? அல்லது பிறருடன் பகிர்ந்து கொள்வதோ கடினமாகலாம். பாஸ்வேர்டை மறந்துவிட்டாலோ அல்லது அடிக்கடி பயன்படுத்தும்போது ஒவ்வொரு முறையும் பாஸ்வேர்டை உள்ளிட வேண்டிய நிலை வந்தாலோ இது ஒரு சிக்கலாக மாறும். நீங்கள் சரியான முறையில் அணுகுவதற்கு அனுமதி உள்ளவராக இருந்தால், ஒரு பிடிஎஃப் பைலில் உள்ள பாஸ்வேர்டை பாதுகாப்பான, சட்டப்பூர்வமான வழிகளில் நீக்க முடியும்.
பிடிஎஃப் பைலின் உரிமையாளராக நீங்கள் இருந்தால் அல்லது அதைப் பயன்படுத்துவதற்கு அனுமதி பெற்றிருந்தால் மட்டுமே பாஸ்வேர்டை நீக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும். உரிய அனுமதி இல்லாமல் பாதுகாப்பை நீக்குவது தனிப்பட்ட ரகசியத்தன்மை மற்றும் அறிவுசார் சொத்துரிமைகளை மீறிய செயலாகும். நீங்கள் உருவாக்கிய பிடிஎஃப் பைலுக்கு இனி பாஸ்வேர்டு பாதுகாப்பு தேவையில்லை. அடிக்கடி பைலை அணுகும்போது ஒவ்வொரு முறையும் பாஸ்வேர்டு உள்ளிடாமல் இருக்க. ஆவணத்தை சக ஊழியர்கள் அல்லது மாணவர்களுடன் எளிதாகப் பயன்படுத்துவதற்காகப் பகிரும்போது நீங்கள் பாஸ்வேர்டை நீக்கலாம்.

1. அடோப் அக்ரோபட் ப்ரோ (Adobe Acrobat Pro)

முக்கியமான ஆவணங்களுக்கு இது மிகவும் நம்பகமான கருவியாகும். பாஸ்வேர்டு பாதுகாப்பு உள்ள PDF ஃபைலை அடோப் அக்ரோபட் ப்ரோவில் திறக்கவும். ஃபைலைத் திறக்க பாஸ்வேர்டை உள்ளிடவும். File > Properties > Security என்பதற்குச் செல்லவும். “Security Method” என்பதன் கீழ், No Security என்பதைத் தேர்வு செய்யவும். ஃபைலை சேமிக்கவும். இப்போது அந்த ஃபைலை பாஸ்வேர்டு இல்லாமல் திறக்கலாம். இந்த முறை ஆவணத்தின் நம்பகத்தன்மையைக் காக்கிறது.

2. ஆன்லைன் PDF அன்லாக் டூல்ஸ்

Smallpdf, iLovePDF, PDF2Go போன்ற பல நம்பகமான ஆன்லைன் தளங்கள் PDF பாஸ்வேர்டை நீக்கும் சேவையை வழங்குகின்றன. பாஸ்வேர்டு பாதுகாப்பு உள்ள PDF ஃபைலை அந்த இணையதளத்தில் பதிவேற்றவும். கேட்கப்படும்போது பாஸ்வேர்டை உள்ளிடவும். இணையதளம் ஃபைலை அன்லாக் செய்து, பாஸ்வேர்டு நீக்கப்பட்ட புதிய ஃபைலை பதிவிறக்கம் செய்ய அனுமதிக்கும். மிகவும் ரகசியமான ஃபைல்களை ஆன்லைனில் பதிவேற்றுவதைத் தவிர்க்கவும். முக்கியமான தகவல்களுக்கு ஆஃப்லைன் மென்பொருளைப் பயன்படுத்துவதே நல்லது.

3. கூகுள் குரோம் ஷார்ட்கட்
நீங்கள் ஏற்கனவே ஒருமுறை பிடிஎஃப் பைலைத் திறந்திருந்தால், கூகுள் குரோம் ஒரு விரைவான வழியை வழங்குகிறது. பாஸ்வேர்டை உள்ளிட்டு, பிடிஎஃப் பைலை குரோம் பிரவுசரில் திறக்கவும். பிரிண்ட் (Print) ஆப்ஷனை (Ctrl+P) கிளிக் செய்யவும். சேமிக்கும் இடமாக “Save as PDF” என்பதைத் தேர்வு செய்யவும். புதிய ஃபைலைச் சேமிக்கவும். இப்போது இந்த ஃபைலில் பாஸ்வேர்டு இருக்காது.

Read More
அறிவியல்ஆன்மீகம்தமிழ்நாடு

இன்று சந்திர கிரகணம்..

சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே பூமி வரும் நிகழ்வு சந்திர கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. அப்போது, பூமியின் நிழல் சந்திரனில் விழுகிறது. இதன் காரணமாக, நிலவு, சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும். இது மிகவும் அரிய சந்திர கிரகணம் என்று விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியா, சீனாவில் இந்தச் சந்திர கிரகணம் முழுமையாகத் தெரியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று இரவு 8.58 மணிக்குத் தொடங்கும் சந்திர கிரகணம், இரவு 11 மணிக்கு முழு சந்திர கிரகணமாக மாறி நிலவு ரத்த சிவப்பாகக் காட்சியளிக்க உள்ளது. நாளை (திங்கட்கிழமை) அதிகாலை 2 மணி வரை சந்திர கிரகணம் நிகழ இருக்கிறது. இந்தச் சந்திர கிரகணத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற கோயில்களின் நடை அடைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் நடை இன்று பிற்பகல் 2 மணிக்கு அடைக்கப்பட்டு, மறுநாள் காலை 5 மணிக்கு நடை திறக்கப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் நடை இன்று காலை 9 மணிக்குச் சாத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சை பெரிய கோயில் நடை இன்று மாலை 4 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை அடைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலின் நடை இன்று மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 8.30 மணி வரை சாத்தப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் மாதம் 7ஆம் தேதியான இன்று இரவு 9:56:08 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 1:26:08 மணிக்கு முடிவடையும். இன்று இரவு ரத்த கலரில் நிலவு தென்படும்.
சந்திர கிரகணம் ஏன் ஏற்படுகிறது?
பூமி சூரியனை சுற்றி வரும் பாதையிலும், சந்திரன் பூமியை சுற்றி வரும் பாதையிலும் சில நேரங்களில் சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும். அப்போது, சூரிய ஒளி பூமியில் விழுந்தாலும் சந்திரன் மீது விழாது. இதனால் சந்திர கிரகணம் ஏற்படுகிறது.
கிரகண காலத்தில் யாரும் உணவு, தண்ணீரை உட்கொள்ளக்கூடாது என சொல்லப்படுகிறது. இப்படி செய்வதால் ஜீரண சக்தி பலவீனமடைந்து நோய்வாய்ப்படுவார்கள் என்பது ஐதீகம். பிறகு கிரகணம் முடிந்தவுடன் குளித்துவிட்டு சாப்பிட வேண்டும். கிரகண காலத்தில் அனைத்து உணவு மற்றும் தண்ணீரிலும் துளசி இலைகள் அல்லது அருகம்புல் இலைகளை போட்டு வைக்க வேண்டும்.
கிரகண நாளில் எந்த சுப காரிய நிகழ்வையும் நடத்தக்கூடாது. கிரகணத்தின் போது நகங்களை வெட்டுவது, முடியை சீவுவது, பல்துலக்குவது போன்ற செயல்களை தடுக்கவும். கிரகணத்தின் போது தூங்க கூடாது என்பது நம்பிக்கை.
இரவு 8.58 மணிக்கு தொடங்கும் சந்திர கிரகணம், நாளை அதிகாலை 2 மணி வரை நிகழ இருக்கிறது. இதனை முன்னிட்டு, திருச்செந்தூர் முருகன் கோயில் நடை இன்று பிற்பகல் 2 மணிக்கு அடைக்கப்பட்டு, மறுநாள் காலை 5 மணிக்கு நடை திறக்கப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் நடை இன்று காலை 9 மணிக்கு சாத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சை பெரிய கோயில் நடை இன்று மாலை 4 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை அடைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலின் நடை இன்று மாலை 6 மணி முதல் மறு நாள் காலை 8.30 மணி வரை சாத்தப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருத்தணி முருகன் கோயில் வழக்கம் போல நடை திறக்கப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை இன்று பிற்பகல் 3.30 மணி முதல் நாளை அதிகாலை 3 மணி வரை நடை அடைக்கப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Read More
இந்தியாஉலகம்தமிழ்நாடுவணிகம்

ஜிஎஸ்டி வரி அதிரடி குறைப்பு..எந்தெந்த பொருட்கள் விலை குறையும்…

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 5, 12, 18, 28 என நான்கு அடுக்காக இருந்த ஜிஎஸ்டியை இனி 2 அடுக்குகளாக குறைக்க ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இதன்மூலம், பல்வேறு பொருட்களின் விலை குறைய உள்ளதாகவும், ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் வரும் 22ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாகவும் அவர் கூறினார்.
ஜிஎஸ்டி கவுன்சில் 2 அடுக்குகளாக குறைக்கும் சீர்திருத்தம் 22ஆம் தேதி அமலுக்கு வருகிறது; 353 பொருட்கள் விலை குறையும், ஆடம்பரப் பொருட்களுக்கு 40 சதவீத வரி விதிக்கப்படும்.
ஜிஎஸ்டி-யை 2 அடுக்குகளாக குறைக்க ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இது வரும் 22-ஆம் தேதி அமலுக்கு வரும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அதேநேரம், ஆடம்பர பொருட்கள், புகையிலை பொருட்களுக்கு 40 விழுக்காடு வரி விதிக்கப்பட உள்ளது. வரி சீர்திருத்தத்தால் 353 பொருட்களின் விலை குறைய உள்ளது.
விற்பனை மற்றும் சேவை வரிகள் ஒருங்கிணைக்கப்பட்டு, கடந்த 2017ஆம் ஆண்டில் ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்தது. இந்நிலையில், ஜிஎஸ்டி வரியில் முக்கிய சீர்திருத்தங்கள் செய்யப்பட உள்ளதாகவும், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது மக்களுக்கு பரிசு காத்திருப்பதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில் அறிவித்திருந்தார். இந்நிலையில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 56-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.
அன்றாடம் பயன்படுத்தும் பால், சென்னா, பன்னீர், ரொட்டி, இந்திய பிரட்டுகள் ஆகியவற்றுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாகக் கூறினார். இதேபோல, மாணவர்களுக்கான நோட்டு புத்தகம், பென்சில், அழிப்பான், மேப், தனிநபர் காப்பீடு, மருத்துவக் காப்பீடு, 33 உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் புற்றுநோய், அரிய வகை நோய் மற்றும் நாள்பட்ட நோய்களுக்கான மருந்துகளுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து முற்றிலும் விலக்கு அளிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
தேங்காய் எண்ணெய், சோப், ஷாம்பு, பற்பசை, மிதிவண்டி, மேசை, நாற்காலி, சர்க்கரை, காபி, வெண்ணெய், நெய், சாஸ், சாக்லெட், பிஸ்கெட், உலர் பழங்கள், மார்பிள், பார்வையை சரி செய்யும் கண்ணாடிகள், புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான சாதனங்கள், சமையல் பாத்திரங்கள், மருத்துவ கருவிகள் உள்ளிட்டவற்றுக்கான ஜிஎஸ்டி பல்வேறு விதமாக இருந்த நிலையில், அவை 5 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளன.
ஏசி, 32 அங்குல தொலைக்காட்சிகள், சிறிய வகை கார்கள், 350 சிசி-க்கு குறைவான திறன் கொண்ட இருசக்கர வாகனங்கள், சிமெண்ட், பேருந்து, மோட்டார் வாகன உதிரிபாகங்கள், மூன்று சக்கர வாகனங்கள், சரக்கு வாகனங்கள் உள்ளிட்டவை 28 விழுக்காடு வரியில் இருந்து 18 விழுக்காடு வரிக்கு மாற்றப்பட்டுள்ளன.
5, 18 விழுக்காடு ஜிஎஸ்டி அடுக்குகளுடன் சிறப்பு வரிவிதிப்பாக 40 சதவீத வரி விதிப்பு அறிமுகம் செய்யப்படுவதாக நிதியமைச்சர் தெரிவித்தார். அதன்படி, கார்பனேற்றப்பட்ட குளிர்பானங்கள், எஸ்.யு.வி. ரக கார்கள், சொகுசு கார்கள், தனிநபர்களுக்கான விமானங்கள் உள்ளிட்டவற்றுக்கு 40 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படும். புகையிலை, பான் மசாலா, சிகரெட் ஆகியவற்றின் மீதும் 40 விழுக்காடு வரி விதிக்கப்படும் என்று அறிவித்தார்.
மறுசீரமைக்கப்பட்ட ஜிஎஸ்டி விகிதத்துக்கு ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், 12 சதவீதத்திற்கு கீழ் வரி விதிக்கப்பட்டிருந்த 99 சதவீத பொருள்கள் 5 சதவீதத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதேபோல், 28 சதவீதம் வரி விதிக்கப்பட்டிருந்த 90 சதவீத பொருட்கள் 18 சதவீத வரி விதிப்புக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் தெரிவித்தார்.
இதன்மூலம் ஒட்டுமொத்தமாக 353 பொருட்களின் விலை குறைய உள்ளது. 38 பொருட்களின் விலை அதிகரிக்க உள்ளது. ஜிஎஸ்டி வரி சீர்திருத்தத்தால் 93 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்படலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரம், ஆடம்பரப் பொருட்கள், புகையிலைப் பொருட்களுக்கு 40 விழுக்காடு ஜிஎஸ்டி வரி விதிப்பதன் மூலம் 45 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
புதிய ஜிஎஸ்டி வரி முறையால் குடிமக்களின் வாழ்க்கை மேம்படும் என்றும் சிறு வணிகர்கள் வணிகம் செய்வது எளிதாகும் என்றும் பிரதமர் மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார்.

Read More
இந்தியாதமிழ்நாடுவணிகம்

அதிரடியாக குறைந்த கேஸ் சிலிண்டர் விலை.. 

சென்னையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை சற்று குறைந்து, புதிய விலைப்பட்டியல் வெளியாகியுள்ளது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.
பெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டர் விலையை சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப நிர்ணையித்துக் கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. ஒவ்வொரு மாதமும் சர்வதேச சந்தை நிலரத்திற்கு ஏற்ப இந்த விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
அந்தவகையில் சர்வதேச சந்தை நிலவரத்தை பொறுத்து நாட்டில் வீடு மற்றும் வணிக பயன்பாட்டிற்கான சமையல் சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாதந்தோறும் ஒன்றாம் தேதி நிர்ணயித்து வருகின்றன.
இந்த நிலையில், எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை குறைந்துள்ளது. அந்த வகையில், சென்னையில் கடைகளில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை 51 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், 1789 ரூபாயாக இருந்த வணிக சிலிண்டர் விலை, தற்போது 1738 ரூபாயாக குறைந்துள்ளது. இதே போன்று, மற்ற மெட்ரோ நகரங்களான டெல்லி, கொல்கத்தா, மும்பையிலும் வர்த்தகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைந்துள்ளது.
சென்னையில், வீட்டில் பயன்படுத்தப்படும் சிலிண்டர் விலை எவ்வித மாற்றமும் இன்றி, 868 ரூபாய் 50 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

Read More
தமிழ்நாடுதொழில்நுட்பம்

ஒன்வேயில் போனால் இனி அபராதம்… கண்காணிப்புக்காக சென்னையில் டிராக்கிங் கேமரா..

சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை (GCTP) மேலும் 170 அதிநவீன தானியங்கி எண் தகடு அங்கீகார (ANPR) கேமராக்களை நிறுவ உள்ளது. இதற்கான திட்டத்திற்கு ₹3.74 கோடி மதிப்பிலான டெண்டர் கோரப்பட்டுள்ளது. இந்த கேமராக்கள், விதிகளை மீறும் வாகனங்களைக் கண்டறிந்து, மின்னணு அபராதங்களை (e-challans) உருவாக்கி, மத்திய போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்புடன் ஒருங்கிணைக்கும். இந்த திட்டங்கள் குறித்த தகவல்கள் டைம்ஸ் ஆஃப் இந்தியா இணையபக்கத்தில் வெளியாகியுள்ளது.
சென்னையில் ஒருவழிப் பாதையில் போனால் இனி தப்ப முடியாது. சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறினால் ரூ.3.74 கோடி மதிப்பிலான புதிய கேமராக்கள் மூலம் அபராதம் விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
புதிய கேமராக்கள்: நகரின் முக்கிய சந்திப்புகளிலும், பெரிய சாலைகளிலும் இந்த புதிய கேமராக்கள் பொருத்தப்படும். இவை சாலைக்கு எதிர்த் திசையில் வரும் வாகனங்களை தானாகவே பதிவு செய்யும்.

தரவு ஒருங்கிணைப்பு: பதிவான ஆதாரங்கள் காவல் துறையின் அமலாக்க அமைப்புடனும், வாஹன்/சாரதி (Vahan/Sarathi) தரவுத்தளத்துடனும் இணைக்கப்படும்.

கேமராக்களின் திறன்: இந்த கேமராக்கள் அதிவேகத்தில் (மணிக்கு 150 கி.மீ வரை) செல்லும் வாகனங்களின் எண் தகடுகளைக் கூட துல்லியமாகப் பதிவு செய்யும் திறன் கொண்டவை. பல்வேறு ஒளி நிலைகளிலும் (பகல், இரவு, குறைந்த வெளிச்சம்) சிறப்பாகச் செயல்படும். மேலும், நீதிமன்றத்தில் செல்லுபடியாகும் ஆதாரங்களை இவை உருவாக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மத்திய கட்டுப்பாட்டு மையம்: இந்த திட்டம், நுண்ணறிவு போக்குவரத்து மேலாண்மை அமைப்பின் கீழ் இயங்கும் நகரத்தின் மத்திய கட்டுப்பாட்டு மையத்துடன் ஒருங்கிணைக்கப்படும். இதன் மூலம் தடையற்ற கண்காணிப்பு உறுதி செய்யப்படும்.

விதிகளின் மீறல் மற்றும் அபராதங்கள்:

சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை கடந்த ஆண்டு அண்ணாநகர் மற்றும் நகரின் சில பகுதிகளில் ANPR கேமராக்களை நிறுவியது. அதன் மூலம், ஒருவழிப் பாதையில் வந்ததற்காக 74,000-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இவற்றில், சுமார் 35% வழக்குகள் கேமராக்கள் மூலம் கண்டறியப்பட்டன.

அதிகபட்ச மீறல்கள்: கிழக்கு மண்டலத்தில் அதிக எண்ணிக்கையிலான விதிமீறல்கள் பதிவாகியுள்ளன. அதற்கு அடுத்தபடியாக வடக்கு மற்றும் தெற்கு மண்டலங்களில் விதிமீறல்கள் காணப்பட்டன.

பிரச்சனைக்குரிய பகுதிகள்:

வடக்கு சென்னை: தம்பு செட்டி தெரு, ரெட்டேரி சந்திப்பு, மாதவரம் ரவுண்டானா.

தெற்கு சென்னை: வடபழனி சந்திப்பு, எல்.பி. சாலை சிக்னல், 200 அடி ரேடியல் சாலை.

கிழக்கு சென்னை: பார்னபி சாலை சந்திப்பு, வள்ளுவர்கோட்டம் சந்திப்பு, பி.எஸ். சிவசாமி சாலை.

இருப்பினும், மோட்டார் வாகன விபத்து வழக்குகளில் நிபுணத்துவம் பெற்ற வழக்கறிஞர் வி.எஸ்.சுரேஷ், “கேமராக்கள் மட்டுமே குற்றவாளிகளைக் கட்டுப்படுத்தாது” என்று கருத்துத் தெரிவித்தார். மேலும், “பெரும்பாலான கேமராக்கள் முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை. அவை பெரும்பாலும் சீட் பெல்ட் மற்றும் சிக்னல் விதிமீறல்களுக்கு அபராதம் விதிக்கவே பயன்படுத்தப்படுகின்றன. அதே சமயம், அதிவேகமாகச் செல்பவர்கள் அபராதம் இன்றி தப்பிவிடுகின்றனர்” என்றும் அவர் கூறினார்.

Read More
ஆன்மீகம்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்

சென்னையில் இன்று விநாயகர் சிலைகள் கரைப்பு 

சென்னையில் இன்று விநாயகர் சிலைகள் கரைப்பு – பாதுகாப்பு பணியில் 16,000 போலீசார்
சென்னையின் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்ட 1519 விநாயகர் சிலைகள் இன்று கடற்கரையில் கரைக்கப்படுகின்றன. சுமார் 16,000 போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பட்டினப்பாக்கம், நீலாங்கரை, புது வண்ணாரப்பேட்டை மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் ஆகிய இடங்களில் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த புதன் கிழமை விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டப்பட்டது
அதை தொடர்ந்து கடந்த 3 நாளாக பூஜைகள் நடந்தன…
சென்னையில் இன்று விநாயகர் சிலைகள் கரைப்பு 

Read More