centralgovt

இந்தியாஉலகம்தமிழ்நாடுதொழில்நுட்பம்வணிகம்

ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் செல்ல இந்தியா உட்பட 5 நாடுகளுக்கு ஈரான் அனுமதி

ஹார்​முஸ் ஜலசந்தி வழி​யாக இந்​தியா, சீனா, ரஷ்யா உட்பட 5 நட்பு நாடு​களின் சரக்கு கப்​பல்​கள் செல்ல ஈரான் அனு​மதி வழங்​கி​யுள்​ளது. இதற்கிடையே, போர் நிறுத்தம் ஏற்படுத்த ட்ரம்ப் அறிவித்த 15 அம்ச திட்டம் நியாயமற்றது. பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா ஏற்பாடு செய்யவில்லை என்று ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.

அமெரிக்​கா, இஸ்​ரேல் கூட்​டுப்படைகள் மற்​றும் ஈரான் ராணுவத்​துக்கு இடையே கடந்த பிப்.28-ம் தேதி முதல் போர் நடை​பெற்று வரு​கிறது. இதன் காரண​மாக ஹார்​முஸ் ஜலசந்தி வழி​யாக கச்சா எண்​ணெய், எல்​பிஜி எரிபொருள் கொண்டு செல்​லும் கப்​பல்​கள் செல்ல தடை விதிக்​கப்​பட்​டிருந்​தது. ஒரு சில கப்​பல்​கள் மீது ஈரான் ஏவு​கணை மற்​றும் ட்ரோன் தாக்​குதல் நடத்​தி​யது. இதனால் நூற்​றுக்​கணக்​கான சரக்கு கப்​பல்​கள் அங்கு காத்​துக் கிடந்​தன.இந்​திய கப்​பல்​களுக்கு அனு​மதி வழங்​கும்​படி ஈரான் அரசுடன் இந்​திய அரசு பேச்​சு​வார்த்தை நடத்​தி​யது. இதே​போல, ஈரானின் நட்பு நாடு​களும் பேச்​சு​ நடத்தின. இதையடுத்து இந்​தி​யா, பாகிஸ்​தான், சீனா, ரஷ்யா மற்றும் ஈராக் ஆகிய நட்பு நாடு​களின் கப்​பல்கள் ஹார்​முஸ் ஜலசந்தி வழி​யாக செல்ல ஈரான் அனு​மதி வழங்​கி​யுள்​ளது.

இதுகுறித்து ஈரான் வெளி​யுறவுத் ​துறை அமைச்சர் சையத் அப்​பாஸ் அராக்சி கூறும்போது, ‘‘ஈரான் போர் சூழலில் உள்​ளது. மேற்கு ஆசியா போர்க்​கள​மாக உள்​ளது. இதனால், இங்கு எதிரி நாடு​களின் கப்​பல்​கள் செல்ல அனு​ம​திக்க முடி​யாது. மற்​றவர்​களுக்கு ஹார்​முஸ் ஜலசந்​தி திறந்​தே உள்​ளது’’ என்​றார்​.

‘உச்ச தலைவராக நியமிக்க ஆசை’ – அமெரிக்க தலைநகர் வாஷிங்​டனில் ஆளும் குடியரசுக் கட்சி சார்​பில் நேற்று முன்​தினம் நடந்த நிகழ்ச்​சி​யில் அதிபர் ட்ரம்ப் கூறிய​தாவது: அமெரிக்​கா – ஈரான் இடையே அமை​திப் பேச்​சு​வார்த்தை நடை​பெறு​கிறது. ஈரானின் உச்ச தலை​வ​ராக என்னை நியமிக்க அவர்​கள் விரும்​பு​கின்​றனர். ஆனால் நான் மறுத்​து​விட்​டேன். அமெரிக்க பிர​தி​நி​தி​களு​டன் ஈரான் பிர​தி​நி​தி​கள் பேச்​சு​வார்த்தை நடத்தி வரு​கின்​றனர்.அமெரிக்கா​வுடன் வெகு​விரை​வாக அமைதி ஒப்​பந்​தத்தை ஏற்​படுத்த ஈரான் விரும்​பு​கிறது. ஆனால், ஈரான் பிர​தி​நி​தி​களால் இதை வெளிப்​படை​யாக கூற முடிய​வில்​லை. ஈரான் ஆட்​சி​யாளர்​கள், ராணுவதளப​தி​கள் அடுத்​தடுத்து கொல்லப்​பட்டு வரு​கின்​றனர். உயிர்பயம் காரண​மாக ஒப்​பந்​தத்தை விரைந்து இறுதி செய்ய ஈரான் பிர​தி​நி​திகள் ஆர்​வம் காட்​டு​கின்​றனர். ஆனால் இதை பகிரங்​க​மாக அறி​வித்தால் சொந்த நாட்டு மக்​கள் அடித்துக் கொன்​று​விடு​வார்​கள் என்று அஞ்​சுகின்​றனர். ஒரு​வேளை, ஒப்பந்​தத்தை ஏற்க மறுத்து, போரை நிறுத்த ஈரான் மறுத்தால் அந்த நாடு நரக​மாக மாறும். இவ்​வாறு ட்ரம்ப் கூறினார்.

போரை நீண்ட காலம் நீட்​டிக்க ட்ரம்ப் விரும்​ப​வில்​லை. அடுத்த சில வாரங்​களில் போர் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க அரசு வட்​டாரங்​கள் தெரி​வித்​துள்​ளன. இதற்கிடையே, 5 நாட்​கள் போர் நிறுத்​தம் அமலில் இருக்கும் என்று ட்ரம்ப் கடந்த 23-ம் தேதி அறிவித்​தார். போரை முடிவுக்கு கொண்டுவர, 15 அம்ச திட்டத்தையும் அறிவித்தார்.

Read More
இந்தியாஉலகம்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்வணிகம்

 பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு..!

பெட்ரோல் டீசல் மீதான கலால் வரி குறைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி தலா ரூ. 10 குறைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதாவது பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.13-ல் இருந்து ரூ.3 ஆக குறைத்தும், 10 ரூபாயாக இருந்த டீசல் மீதான கலால் வரியை முழுமையாக நீக்கியுள்ளது மத்திய அரசு.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வால் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்ட வரி குறைக்கப்பட்டுள்ளது. வரி குறைப்பின் பலன் எண்ணெய் நிறுவனங்களுக்கு செல்வதால் பெட்ரோல், டீசல் விலை குறையவோ, உயரவோ செய்யாது. எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலையே நீடிக்கும்.

Read More
இந்தியாஉலகம்தமிழ்நாடுவணிகம்

ஜிஎஸ்டி வரி அதிரடி குறைப்பு..எந்தெந்த பொருட்கள் விலை குறையும்…

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 5, 12, 18, 28 என நான்கு அடுக்காக இருந்த ஜிஎஸ்டியை இனி 2 அடுக்குகளாக குறைக்க ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இதன்மூலம், பல்வேறு பொருட்களின் விலை குறைய உள்ளதாகவும், ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் வரும் 22ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாகவும் அவர் கூறினார்.
ஜிஎஸ்டி கவுன்சில் 2 அடுக்குகளாக குறைக்கும் சீர்திருத்தம் 22ஆம் தேதி அமலுக்கு வருகிறது; 353 பொருட்கள் விலை குறையும், ஆடம்பரப் பொருட்களுக்கு 40 சதவீத வரி விதிக்கப்படும்.
ஜிஎஸ்டி-யை 2 அடுக்குகளாக குறைக்க ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இது வரும் 22-ஆம் தேதி அமலுக்கு வரும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அதேநேரம், ஆடம்பர பொருட்கள், புகையிலை பொருட்களுக்கு 40 விழுக்காடு வரி விதிக்கப்பட உள்ளது. வரி சீர்திருத்தத்தால் 353 பொருட்களின் விலை குறைய உள்ளது.
விற்பனை மற்றும் சேவை வரிகள் ஒருங்கிணைக்கப்பட்டு, கடந்த 2017ஆம் ஆண்டில் ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்தது. இந்நிலையில், ஜிஎஸ்டி வரியில் முக்கிய சீர்திருத்தங்கள் செய்யப்பட உள்ளதாகவும், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது மக்களுக்கு பரிசு காத்திருப்பதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில் அறிவித்திருந்தார். இந்நிலையில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 56-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.
அன்றாடம் பயன்படுத்தும் பால், சென்னா, பன்னீர், ரொட்டி, இந்திய பிரட்டுகள் ஆகியவற்றுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாகக் கூறினார். இதேபோல, மாணவர்களுக்கான நோட்டு புத்தகம், பென்சில், அழிப்பான், மேப், தனிநபர் காப்பீடு, மருத்துவக் காப்பீடு, 33 உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் புற்றுநோய், அரிய வகை நோய் மற்றும் நாள்பட்ட நோய்களுக்கான மருந்துகளுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து முற்றிலும் விலக்கு அளிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
தேங்காய் எண்ணெய், சோப், ஷாம்பு, பற்பசை, மிதிவண்டி, மேசை, நாற்காலி, சர்க்கரை, காபி, வெண்ணெய், நெய், சாஸ், சாக்லெட், பிஸ்கெட், உலர் பழங்கள், மார்பிள், பார்வையை சரி செய்யும் கண்ணாடிகள், புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான சாதனங்கள், சமையல் பாத்திரங்கள், மருத்துவ கருவிகள் உள்ளிட்டவற்றுக்கான ஜிஎஸ்டி பல்வேறு விதமாக இருந்த நிலையில், அவை 5 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளன.
ஏசி, 32 அங்குல தொலைக்காட்சிகள், சிறிய வகை கார்கள், 350 சிசி-க்கு குறைவான திறன் கொண்ட இருசக்கர வாகனங்கள், சிமெண்ட், பேருந்து, மோட்டார் வாகன உதிரிபாகங்கள், மூன்று சக்கர வாகனங்கள், சரக்கு வாகனங்கள் உள்ளிட்டவை 28 விழுக்காடு வரியில் இருந்து 18 விழுக்காடு வரிக்கு மாற்றப்பட்டுள்ளன.
5, 18 விழுக்காடு ஜிஎஸ்டி அடுக்குகளுடன் சிறப்பு வரிவிதிப்பாக 40 சதவீத வரி விதிப்பு அறிமுகம் செய்யப்படுவதாக நிதியமைச்சர் தெரிவித்தார். அதன்படி, கார்பனேற்றப்பட்ட குளிர்பானங்கள், எஸ்.யு.வி. ரக கார்கள், சொகுசு கார்கள், தனிநபர்களுக்கான விமானங்கள் உள்ளிட்டவற்றுக்கு 40 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படும். புகையிலை, பான் மசாலா, சிகரெட் ஆகியவற்றின் மீதும் 40 விழுக்காடு வரி விதிக்கப்படும் என்று அறிவித்தார்.
மறுசீரமைக்கப்பட்ட ஜிஎஸ்டி விகிதத்துக்கு ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், 12 சதவீதத்திற்கு கீழ் வரி விதிக்கப்பட்டிருந்த 99 சதவீத பொருள்கள் 5 சதவீதத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதேபோல், 28 சதவீதம் வரி விதிக்கப்பட்டிருந்த 90 சதவீத பொருட்கள் 18 சதவீத வரி விதிப்புக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் தெரிவித்தார்.
இதன்மூலம் ஒட்டுமொத்தமாக 353 பொருட்களின் விலை குறைய உள்ளது. 38 பொருட்களின் விலை அதிகரிக்க உள்ளது. ஜிஎஸ்டி வரி சீர்திருத்தத்தால் 93 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்படலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரம், ஆடம்பரப் பொருட்கள், புகையிலைப் பொருட்களுக்கு 40 விழுக்காடு ஜிஎஸ்டி வரி விதிப்பதன் மூலம் 45 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
புதிய ஜிஎஸ்டி வரி முறையால் குடிமக்களின் வாழ்க்கை மேம்படும் என்றும் சிறு வணிகர்கள் வணிகம் செய்வது எளிதாகும் என்றும் பிரதமர் மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார்.

Read More
இந்தியாதமிழ்நாடுநிகழ்ச்சிகள்வணிகம்வணிகம்

குறையும் ஜிஎஸ்டி..! எந்தெந்த பொருட்களுக்கு …

டூத் பேஸ்ட், காலணி, ரெடிமேட் ஆடைகள், வாஷிங் மெஷின் உள்ளிட்ட பொருட்களின் ஜிஎஸ்டியை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் 4 அளவுகளில் ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறது. அதாவது, 5, 12, 18 மற்றும் 28 விழுக்காடு என்ற வகையில் ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டு வருகிறது. இதில், 12 விழுக்காடு என்ற வகையை ரத்து செய்ய மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாக கூறப்பட்ட நிலையில், அதன் கீழ் வரும் பொருட்களுக்கான வரியை 5 விழுக்காடாக குறைக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, டூத் பேஸ்ட், காலணி, ரெடிமேட் ஆடைகள், வாஷிங் மெஷின் மீதான வரி குறைக்கப்பட வாய்ப்புள்ளது. குக்கர், குடை, தையல் இயந்திரம், வாட்டர் ஹீட்டர் உள்ளிட்ட பொருட்களுக்கான ஜிஎஸ்டியும் 12 விழுக்காட்டில் இருந்து 5 சதவிகிதத்திற்கு குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலம், பெருவாரியான வீட்டு உபயோகப் பொருட்களின் விலை குறையும் என கூறப்படுகிறது. இம்மாதத்தில் நடைபெற உள்ள 52 ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இது தொடர்பான முடிவு எடுக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

Read More