gas

இந்தியாதமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்வணிகம்

கேஸ் சிலிண்டர் விலை அதிரடியாக உயர்வு…

19 கிலோ வணிக சிலிண்டர் விலை ரூ.203 உயர்ந்து ரூ.2,246.50 ஆக உள்ளது.

மத்திய கிழக்கு போரால் விநியோகம் பாதிப்பு. விலை உயர்வால் அதிர்ச்சி.

ஹோட்டல்கள், தேநீர் கடைகளில் உணவு பொருட்கள் விலை மேலும் அதிகரிக்கும்.மத்திய கிழக்கில் நிலவி வரும் போரால் சிலிண்டர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விலை உயர்வு வியாபாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மாதத்தின் முதல்நாளான இன்று வணிக சிலிண்டர் விலை 203 ரூபாய் அதிகரித்துள்ளது.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை நிர்ணயித்து வருகின்றன. இதில் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை மாதத்தின் முதல் தேதியில் மாற்றி அமைத்து வருகிறது.இன்று (ஏப்ரல் 1) வணிக சிலிண்டரின் விலை அதிரடியாக அதிகரித்துள்ளது. அந்த வகையில், 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டரின் விலை ரூ.203 உயர்ந்து ரூ.2,246.50 ஆக அதிகரித்துள்ளது.சிலிண்டர் தட்டுப்பாட்டால் ஏற்கனவே ஹோட்டல்கள், தேநீர் கடைகளில் உணவு பொருட்களின் விலை அதிகரித்துள்ள நிலையில், இன்று வணிக சிலிண்டர் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.இதன் காரணமாக, விலை மேலும் அதிகரிக்கும் என்று அச்சம் எழுந்துள்ளது. வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

Read More
இந்தியாதமிழ்நாடுநிகழ்ச்சிகள்வணிகம்

சிலிண்டர் தட்டுப்பாடு – அரசு ஆலோசனை

மேற்கு ஆசியப் பகுதியில் நிலவி வரும் போர்ச் சூழல், இந்திய எரிசக்தித் துறையில் பெரும் சவால்களை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து சர்வதேச அளவில் எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக, இந்தியாவிலும் வணிக ரீதியிலான எரிவாயு சிலிண்டர் விநியோகம் கடும் தட்டுப்பாட்டைச் சந்தித்துள்ளது. இந்த விநியோகத் தடையால் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள உணவகங்கள் மற்றும் சிறு தொழில்கள் ஸ்தம்பிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.குறிப்பாக, கர்நாடக மாநிலத்தில் நிலவும் கடும் தட்டுப்பாடு காரணமாக இரண்டாவது நாளாக இன்றும் பெரும்பாலான உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்திலும் இதே போன்ற அச்சம் நிலவி வரும் சூழலில், பல முன்னணி உணவகங்களில் ஒரு நாளைக்குத் தேவையான எரிவாயு மட்டுமே கையிருப்பில் உள்ளதாகத் தெரிகிறது. நிலைமை சீரடையாவிட்டால் வணிகத்தை முற்றிலுமாக நிறுத்த வேண்டிய சூழல் ஏற்படும் என உணவக உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். எனினும், தமிழகத்தைப் பொறுத்தவரை அடுத்த 20 நாட்களுக்குத் தேவையான வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்கள் போதிய அளவில் கையிருப்பில் இருப்பதாக மாநில அரசு பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளது.

இந்த நெருக்கடியான நிலையைச் சமாளிக்க மத்திய அரசு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. 1955-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் கீழ் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் எரிபொருட்களின் விநியோகம் மற்றும் விற்பனையை முறைப்படுத்தவும், சமமான விநியோகத்தை உறுதி செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. பதுக்கல் உள்ளிட்ட முறைகேடுகளைத் தடுத்து, பொதுமக்களுக்கும் வணிகர்களுக்கும் எரிபொருள் கிடைப்பதை இந்தச் சட்டம் உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாகத் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், எரிவாயு தட்டுப்பாட்டால் தமிழகத்தின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களும், பொதுமக்களும் பாதிக்கப்படாமல் இருப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும், சிலிண்டர் தட்டுப்பாட்டால் முடங்கியுள்ள உணவகங்களுக்குத் தேவையான மாற்று ஏற்பாடுகளைச் செய்து தருமாறும், தடையற்ற சேவையை வழங்கத் தேவைப்படும் கூடுதல் மின்சாரத்தை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் அவர் அந்த கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

Read More
இந்தியாதமிழ்நாடுவணிகம்

அதிரடியாக குறைந்த கேஸ் சிலிண்டர் விலை.. 

சென்னையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை சற்று குறைந்து, புதிய விலைப்பட்டியல் வெளியாகியுள்ளது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.
பெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டர் விலையை சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப நிர்ணையித்துக் கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. ஒவ்வொரு மாதமும் சர்வதேச சந்தை நிலரத்திற்கு ஏற்ப இந்த விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
அந்தவகையில் சர்வதேச சந்தை நிலவரத்தை பொறுத்து நாட்டில் வீடு மற்றும் வணிக பயன்பாட்டிற்கான சமையல் சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாதந்தோறும் ஒன்றாம் தேதி நிர்ணயித்து வருகின்றன.
இந்த நிலையில், எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை குறைந்துள்ளது. அந்த வகையில், சென்னையில் கடைகளில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை 51 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், 1789 ரூபாயாக இருந்த வணிக சிலிண்டர் விலை, தற்போது 1738 ரூபாயாக குறைந்துள்ளது. இதே போன்று, மற்ற மெட்ரோ நகரங்களான டெல்லி, கொல்கத்தா, மும்பையிலும் வர்த்தகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைந்துள்ளது.
சென்னையில், வீட்டில் பயன்படுத்தப்படும் சிலிண்டர் விலை எவ்வித மாற்றமும் இன்றி, 868 ரூபாய் 50 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

Read More