primeminister

இந்தியாஉலகம்தமிழ்நாடுவணிகம்

ஜிஎஸ்டி வரி அதிரடி குறைப்பு..எந்தெந்த பொருட்கள் விலை குறையும்…

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 5, 12, 18, 28 என நான்கு அடுக்காக இருந்த ஜிஎஸ்டியை இனி 2 அடுக்குகளாக குறைக்க ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இதன்மூலம், பல்வேறு பொருட்களின் விலை குறைய உள்ளதாகவும், ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் வரும் 22ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாகவும் அவர் கூறினார்.
ஜிஎஸ்டி கவுன்சில் 2 அடுக்குகளாக குறைக்கும் சீர்திருத்தம் 22ஆம் தேதி அமலுக்கு வருகிறது; 353 பொருட்கள் விலை குறையும், ஆடம்பரப் பொருட்களுக்கு 40 சதவீத வரி விதிக்கப்படும்.
ஜிஎஸ்டி-யை 2 அடுக்குகளாக குறைக்க ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இது வரும் 22-ஆம் தேதி அமலுக்கு வரும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அதேநேரம், ஆடம்பர பொருட்கள், புகையிலை பொருட்களுக்கு 40 விழுக்காடு வரி விதிக்கப்பட உள்ளது. வரி சீர்திருத்தத்தால் 353 பொருட்களின் விலை குறைய உள்ளது.
விற்பனை மற்றும் சேவை வரிகள் ஒருங்கிணைக்கப்பட்டு, கடந்த 2017ஆம் ஆண்டில் ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்தது. இந்நிலையில், ஜிஎஸ்டி வரியில் முக்கிய சீர்திருத்தங்கள் செய்யப்பட உள்ளதாகவும், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது மக்களுக்கு பரிசு காத்திருப்பதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில் அறிவித்திருந்தார். இந்நிலையில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 56-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.
அன்றாடம் பயன்படுத்தும் பால், சென்னா, பன்னீர், ரொட்டி, இந்திய பிரட்டுகள் ஆகியவற்றுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாகக் கூறினார். இதேபோல, மாணவர்களுக்கான நோட்டு புத்தகம், பென்சில், அழிப்பான், மேப், தனிநபர் காப்பீடு, மருத்துவக் காப்பீடு, 33 உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் புற்றுநோய், அரிய வகை நோய் மற்றும் நாள்பட்ட நோய்களுக்கான மருந்துகளுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து முற்றிலும் விலக்கு அளிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
தேங்காய் எண்ணெய், சோப், ஷாம்பு, பற்பசை, மிதிவண்டி, மேசை, நாற்காலி, சர்க்கரை, காபி, வெண்ணெய், நெய், சாஸ், சாக்லெட், பிஸ்கெட், உலர் பழங்கள், மார்பிள், பார்வையை சரி செய்யும் கண்ணாடிகள், புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான சாதனங்கள், சமையல் பாத்திரங்கள், மருத்துவ கருவிகள் உள்ளிட்டவற்றுக்கான ஜிஎஸ்டி பல்வேறு விதமாக இருந்த நிலையில், அவை 5 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளன.
ஏசி, 32 அங்குல தொலைக்காட்சிகள், சிறிய வகை கார்கள், 350 சிசி-க்கு குறைவான திறன் கொண்ட இருசக்கர வாகனங்கள், சிமெண்ட், பேருந்து, மோட்டார் வாகன உதிரிபாகங்கள், மூன்று சக்கர வாகனங்கள், சரக்கு வாகனங்கள் உள்ளிட்டவை 28 விழுக்காடு வரியில் இருந்து 18 விழுக்காடு வரிக்கு மாற்றப்பட்டுள்ளன.
5, 18 விழுக்காடு ஜிஎஸ்டி அடுக்குகளுடன் சிறப்பு வரிவிதிப்பாக 40 சதவீத வரி விதிப்பு அறிமுகம் செய்யப்படுவதாக நிதியமைச்சர் தெரிவித்தார். அதன்படி, கார்பனேற்றப்பட்ட குளிர்பானங்கள், எஸ்.யு.வி. ரக கார்கள், சொகுசு கார்கள், தனிநபர்களுக்கான விமானங்கள் உள்ளிட்டவற்றுக்கு 40 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படும். புகையிலை, பான் மசாலா, சிகரெட் ஆகியவற்றின் மீதும் 40 விழுக்காடு வரி விதிக்கப்படும் என்று அறிவித்தார்.
மறுசீரமைக்கப்பட்ட ஜிஎஸ்டி விகிதத்துக்கு ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், 12 சதவீதத்திற்கு கீழ் வரி விதிக்கப்பட்டிருந்த 99 சதவீத பொருள்கள் 5 சதவீதத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதேபோல், 28 சதவீதம் வரி விதிக்கப்பட்டிருந்த 90 சதவீத பொருட்கள் 18 சதவீத வரி விதிப்புக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் தெரிவித்தார்.
இதன்மூலம் ஒட்டுமொத்தமாக 353 பொருட்களின் விலை குறைய உள்ளது. 38 பொருட்களின் விலை அதிகரிக்க உள்ளது. ஜிஎஸ்டி வரி சீர்திருத்தத்தால் 93 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்படலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரம், ஆடம்பரப் பொருட்கள், புகையிலைப் பொருட்களுக்கு 40 விழுக்காடு ஜிஎஸ்டி வரி விதிப்பதன் மூலம் 45 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
புதிய ஜிஎஸ்டி வரி முறையால் குடிமக்களின் வாழ்க்கை மேம்படும் என்றும் சிறு வணிகர்கள் வணிகம் செய்வது எளிதாகும் என்றும் பிரதமர் மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார்.

Read More
இந்தியாஉலகம்வணிகம்

வரி விதிப்பு நடவடிக்கை, கச்சா எண்ணெய் குறித்து ட்ரம்ப் விமர்சனம்: ஐக்கிய அரபு அமீரக அதிபருடன் மோடி ஆலோசனை

இந்திய இறக்குமதி பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று அறிவித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பாகிஸ்தானுடன் இணைந்து தெற்காசியாவிலேயே மிக பெரிய கச்சா எண்ணெய் கிடங்கு அமைக்கப்படும் என்றும் கூறியுள்ளார். இந்த சூழலில், ஐக்கிய அரபு அமீரக அதிபருடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார்.

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும். இந்த வரி விதிப்பு இன்று (ஆகஸ்ட் 1) முதல் அமலுக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று முன்தினம் அறிவித்தார். மேலும், ரஷ்யாவிடம் இருந்து ராணுவ தளவாடங்கள், கச்சா எண்ணெய் ஆகியவற்றை வாங்குவதால் இந்தியாவுக்கு கூடுதலாக அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவித்தார். இது மட்டுமின்றி, தாமிரம் மற்றும் அது தொடர்பான பொருட்களின் இறக்குமதிக்கு 50 சதவீத வரிவிதிப்பு அமல்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.
தற்போது இறக்குமதி வரி உயர்த்தப்பட்டுள்ளதால், அமெரிக்காவில் தாமிர பொருட்களின் விலை அதிகரித்து, இந்தியாவின் ஏற்றுமதி பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
2024-25 நிதி ஆண்டில் 360 மில்லியன் டாலர் மதிப்பிலான தாமிர பொருட்களை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று தனது சமூக வலைதள பதிவில், ‘பாகிஸ்தானுடன் இப்போதுதான் ஒரு முக்கிய ஒப்பந்தத்தை முடிவு செய்துள்ளோம். அதன்படி, பாகிஸ்தானும், அமெரிக்காவும் இணைந்து மிகப்பெரிய கச்சா எண்ணெய் இருப்பை உருவாக்க இருக்கிறோம். இது தெற்காசியாவிலேயே மிகப்பெரியதாக இருக்கும். இதற்காக தகுதியுள்ள எண்ணெய் நிறுவனங்களை தேர்வு செய்து வருகிறோம். யாருக்கு தெரியும், ஒருநாள் பாகிஸ்தானிடம் இருந்துகூட இந்தியா கச்சா எண்ணெய் வாங்கும் நிலை வரலாம்’ என்று தெரிவித்துள்ளார்.

இந்த சூழலில், ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் முகமது பின் ஜாயத் அல் நயானை பிரதமர் மோடி, தொலைபேசியில் தொடர்புகொண்டு முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார். இரு நாட்டு மக்களின் பொதுவான நலனுக்காக இரு தரப்பு ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்துவது குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தினர். இரு நாடுகள் இடையே பல்வேறு துறைகளில் உள்ள பரஸ்பர ஒத்துழைப்பின் முன்னேற்றங்கள் குறித்தும் விவாதித்தனர்.

இந்தியாவில் நீண்டகாலம் தொடர்ந்து பிரதமராக பதவி வகித்த 2-வது நபர் என்ற சாதனையை பிரதமர் மோடி படைத்துள்ளார். அவரது சேவை தொடர வேண்டும் என்றும் அல் நயான் வாழ்த்தினார் என மத்திய அரசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்திய பொருட்களுக்கு ட்ரம்ப் 25 சதவீத வரி விதித்த நிலையில், கச்சா எண்ணெய் மற்றும் வர்த்தக வரி குறித்து ஐக்கிய அரபு
அமீரக அதிபருடன், பிரதமர் மோடி பேசி இருக்கலாம். அமெரிக்காவின் வரி விதிப்புக்கு பதில் நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு சில முக்கிய வியூகங்களை வகுக்கும் வகையிலும் பிரதமர் மோடி பேசியிருக்கலாம் என்று டெல்லி வட்டாரங்கள் கூறின.

மக்களவையில் அமைச்சர் விளக்கம்: இதற்கிடையே, அமெரிக்காவின் வரி விதிப்பு அறிவிப்பு தொடர்பாக மக்களவையில் எதிர்க்கட்சியினர் நேற்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்து மத்திய வர்த்தகம், தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் பேசியதாவது:

உலகின் மிக பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில் 11-வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 5-வது இடத்துக்கு முன்னேறி உள்ளது. விவசாயிகள், குறு, சிறு, நடுத்தர தொழில்கள், கார்ப்பரேட் நிறுவனங்களின் கடின உழைப்பு மற்றும் மத்திய அரசின் பொருளாதார சீர்திருத்தங்களால் இந்த சாதனை சாத்தியமானது.

உலகின் நம்பிக்கை நட்சத்திரமாக இந்தியா திகழ்வதாக சர்வதேச நிதி அமைப்புகள், சர்வதேச பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். பொருளாதார ரீதியாக நாட்டின் நலன்களை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்தியா – அமெரிக்கா இடையே பலசுற்றுபேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. 10-15 சதவீதம் வரி விதிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

ஆகஸ்ட் 25-ல் பேச்சுவார்த்தை: வரி விகிதம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்காவின் உயர்நிலை குழு ஆகஸ்ட் 25-ம் தேதி டெல்லி வருகிறது. அப்போது கருத்து வேறுபாடுகள் களையப்படும். அதன்பிறகு, இந்திய உயர்நிலை குழு வாஷிங்டன் செல்லும்.

இந்திய தரப்பில் மூத்த பொருளாதார ஆலோசகர் ராஜேஷ் அகர்வாலும், அமெரிக்க தரப்பில் பிரென்டனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அக்டோபர் அல்லது நவம்பரில் அமெரிக்காவுடன் முதல்கட்ட வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும்.

கடந்த ஜூலையில் தென்கொரிய பொருட்களுக்கு 25 சதவீத வரியை அமெரிக்கா விதித்தது. இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்த வரியை 15 சதவீதமாக அமெரிக்கா குறைத்துள்ளது. இதேபோல, இந்திய பொருட்கள் மீதான வரியையும் அமெரிக்க அரசு நிச்சயமாக குறைக்கும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Read More
அரசியல்இந்தியாதமிழ்நாடுநிகழ்ச்சிகள்

“தமிழ்நாட்டிற்கு ரூ. 3 லட்சம் கோடி.. காங்கிரஸைவிட 3 மடங்கு அதிக நிதி கொடுத்திருக்கிறோம்” – பிரதமர் 

கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு 3 லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு அளித்திருக்கிறது. இந்தத் தொகை காங்கிரஸ் ஆட்சியோடு ஒப்பிடும்போது 3 மடங்கிற்கும் அதிகம்” என பிரதமர் நரேந்திர மோடி தூத்துக்குடியில் பேசினார்.
பிரதமர் மோடி, இரண்டு நாள் பயணமாக இன்று தமிழ்நாட்டிற்கு வந்தார். தமிழ்நாட்டின் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. விமான நிலையத்தில் பிரதமர் மோடியை வரவேற்ற தமிழ்நாடு அமைச்சர் தங்கம் தென்னரசு வள்ளுவர் கோட்டம் நினைவுப் பரிசை வழங்கினார்.
தொடர்ந்து தூத்துக்குடி விமான நிலையப் புது முனையத் திறப்பு விழாவிற்கு வெள்ளை வேட்டி, சட்டை அணிந்துவந்தார். இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, தமிழ்நாடு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கீதா ஜீவன், எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர் தூத்துக்குடி விமான நிலையப் புது முனையத்தைத் திறந்துவைத்த பிரதமர் மோடி, “நான்கு நாள் அயல்நாட்டுப் பயணத்திற்குப் பிறகு நேரடியாக பகவான் ராமேஸ்வரனின் மண்ணில் கால் பதிக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்துள்ளது. பகவான் ராமேஸ்வரன், திருச்செந்தூர் முருகன் ஆகிய தெய்வங்களின் நல்லாசியோடு தூத்துக்குடி வளர்ச்சியின் புதிய அத்தியாயம் எழுதப்பட்டது.
உள்கட்டமைப்பு மற்றும் எரிசக்தி இவை மாநிலத்தின் முன்னேற்றத்திற்கு முதுகெலும்பு போன்றவை. இந்த 11 ஆண்டுகளில் இந்தத் துறைகளின் மீது செலுத்தப்பட்ட கவனம் தமிழ்நாட்டின் வளர்ச்சியை நமக்கு முதன்மையானது என்பதை காட்டுகிறது.
இதே மண்ணில் தான் வா.உ.சி. போன்ற தொலைநோக்காளர்கள் தோன்றினார்கள். அடிமைப்பட்டு இருந்த காலத்திலேயே கடல் வழி வாணிபத்தின் சக்தியை புரிந்துகொண்டவர் அவர். காசி தமிழ் சங்கம் போன்ற ஏற்பாடுகள் மூலம் நம் கலாச்சார மரபுகளை வளர்த்துவருகிறோம். தூத்துக்குடியின் முத்துகளை பில் கேட்ஸுக்கு பரிசாக அளித்தேன். அது அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. நமது பாண்டிய நாட்டு முத்துக்கள் உலகம் முழுக்க பாரதத்தின் பொருளாதார வல்லமையின் அடையாளமாக இருந்துவந்தது.
இன்று பாரதத்தின் வளர்ச்சியில் உலகம் தனது வளர்ச்சியை காண்கிறது. உலகில் மூன்றாவது பொருளாதார நாடாக மாறும் நமது வேகம் இன்னும் வேகமளிக்கப்போகிறது. இங்கிலாந்து ஒப்பந்தத்திற்குப் பிறகு பிரிட்டனில் விற்கப்படும் 99% பாரதத்தின் பொருட்கள் மீது எந்த வரியும் விதிக்கப்படாது. விலை மலிவாகவும், தேவை அதிகமாகவும் அங்கு இருக்கும். இங்கு அந்தப் பொருட்களின் உற்பத்தி அதிகரிக்கும். இந்த ஒப்பந்தம் நமது இளைஞர்களுக்கு அதிக ஆதாயம் கிடைக்கும்.
மேக் இன் இந்தியா, இந்தியாவில் தயாரிப்போம். இந்தியாவில் தயாரிக்கும் திட்டத்திற்கும் அரசு வலு சேர்க்கிறது. ஆபரேஷன் சிந்துரின்போது, மேக் இன் இந்தியாவின் வலுவை பார்த்திருப்பீர்கள். பயங்கரவாதிகளின் பதுங்கு இடங்களை அழித்ததில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதத்தின் பங்களிப்பு இருந்தது. நம் நாட்டில் தயாரித்த ஆயுதங்கள் பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்களை தூங்கவிடாமல் செய்கிறது.
தூத்துக்குடி புது முனைய திறப்புக்கு பிறகு தமிழ்நாட்டின் பெரும் நிறுவனங்கள், உடல்நல கட்டமைப்புகள், கல்வி ஆகியவற்றுக்கு வலு கிடைக்கும். மேலும், தூத்துக்குடி துறைமுகம் மற்றும் சாலை ஆகியவற்றையும் சிறப்படைய செய்யும். அதுமட்டுமின்றி, வர்த்தகம் வேலை வாய்ப்பு ஆகியவையும் அதிகரிக்கும்.
கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு 3 லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு அளித்திருக்கிறது. இந்தத் தொகை காங்கிரஸ் ஆட்சியோடு ஒப்பிடும்போது 3 மடங்கிற்கும் அதிகம்.
இந்திய நாட்டை நவீனப்படுத்தும் மாபெரும் வேள்வி நடைபெற்றுவருகிறது. தற்சார்பு இந்தியாவின் உயிர் நாடியாக இந்திய ரயில்வே உள்ளது. 11 ஆண்டுகளில் ரயில்வே நவீனமயமாக்கியுள்ளோம். தமிழ்நாட்டில் 77 ரயில் நிலையங்களை மேம்படுத்தியுள்ளோம். வந்தே பாரத் ரயில்கள் வரிசையில் தமிழ்நாடு மக்களுக்கு புது அனுபவம் கிடைத்துவருகிறது. தேசத்தின் முதல் தனித்தன்மை வாய்ந்த செங்குத்து தூக்குப் பாலம்; பாம்பன் பாலம் கூட தமிழ்நாட்டில் தான் உருவாக்கப்பட்டுள்ளது. மதுரை போட்டிநாயக்கநல்லூர் மின்சார ரயில்பாதை அமைக்கப்பட்டது. அதன் மூலம், வந்தே பாரத் ரயில் வாய்ப்பு கிடைக்கும்.
தமிழ்நாடு வளர்ச்சி, மேம்படுத்த தமிழ்நாடு ஆகியவையே நமது முக்கிய உறுதிப்பாடு. நாங்கள் தமிழ்நாடு வளர்ச்சியோடு தொடர்புடைய கொள்கைகளுக்கே முக்கியத்துவம் அளித்து வருகிறோம்” என பேசினார்.

Read More
இந்தியாதமிழ்நாடுநிகழ்ச்சிகள்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடக்கம்: 8 மசோதாக்களை அறிமுகம்

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்கவுள்ளது.
வரும் ஆகஸ்ட் 21 ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த கூட்டத்தொடரில், 8 மசோதாக்களை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கடந்த கூட்டத் தொடரில் அறிமுகம் செய்யப்பட்டு நாடாளுமன்ற கூட்டுக்குழுவிற்கு அனுப்பப்பட்ட வருமான வரி மசோதா, இந்த கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லியில் நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், அவரை பதவி நீக்கம் செய்யவும் தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து ஆலோசிக்க நேற்று டெல்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.
இதில், பெஹல்காம் தாக்குதல், இந்தியா-பாகிஸ்தான் மோதலின் போது அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் தலையீடு, பிகாரில் மேற்கொள்ளப்படும் வாக்காளர்கள் பட்டியல் சிறப்பு திருத்தம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்க வேண்டும் என காங்கிரஸ் தரப்பில் வலியுறுத்தப்பட்ட நிலையில், ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதிக்க தயாராக இருப்பதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.
மேலும், தொகுதி மறுசீரமைப்பு உள்ளிட்ட பிரச்னைகளை நாடாளுமன்றத்தில் எழுப்ப இருப்பதாக திமுக எம்.பி. டி.ஆர்,பாலு தெரிவித்துள்ளார். இதே போன்று, கீழடி விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம் என அதிமுக எம்.பி. தம்பிதுரை கூறியுள்ளார். இதுபோல பல பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்தில் பேச எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளனர்.

Read More