Author: Namadhu Arasu

தமிழ்நாடு

தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் – கரும்பு டன்னுக்கு ரூ.3500 வழங்கப்படும்-live

தமிழ்நாடு அரசு வேளான் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் தாக்கல் செய்து வருகிறார்.
வேதாரண்யம் முல்லை, நத்தம் புளி, கப்பல்பட்டி முருங்கை, நல்லூர் வரகு மற்றும் ஆயக்குடி கொய்யாவிற்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

4 ஆண்டுகளில் 35 வேளான் விளை பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளன என அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அறிவிப்பு.

மேலும் மலர்கள் சாகுபடி செய்யும் உழவர்களுக்கு மானியம் வழங்கிட ரூ.8.51 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். பாரம்பரிய மலரான மல்லிகை சாகுபடியை அதிகரிக்க ரூ.1.60 கோடியும், ஒதுக்கப்பட்டுள்ளது.

மதுரை மல்லிக்கான சிறப்பு திட்டத்திற்கான கீழ் 3000 ஏக்கரில் மல்லி பயிர் செய்ய ஊக்குவிக்கப்படும் எனவும், ரோஜா மலர் சாகுபடியை ஊக்குவிக்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பனை மேம்பாட்டு இயக்கம் ரூ.1.65 கோடி ஒதுக்கீடு
பனைமரங்களில் எண்ணிக்கையை அதிகரிக்க, பனை சார்ந்த தொழில்களை ஊக்குவிக்க ரூ.1.65 கோடி ஒதுக்கீடு.

தென்காசி, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கள்ளக்குறிச்சி, சேலம் மாவட்டங்களில் அவகாடீ சாகுபடியை ஊக்குவிக்க ரூ.69 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
டெல்டா அல்லாத மாவட்டங்களில் பயிர் சாகுபடி அதிகரிக்க சிறப்பு தொகுப்பு திட்டமாக ரூ.102 கோடி ஒதுக்கீடு.

புதிய ரக பலாப்பழங்கள் சாகுபடியை பரவலாக்கம் செய்யத்திட்டம். மேலும் பாரம்பரிய காய்கறி ரகங்களின் சாகுபடியை 2,500 ஏக்கரில் மேற்கொள்ள ரூ.2.4 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் முந்திரி உற்பத்தியை அதிகரிக்கவும் முந்திரி சார்ந்த தொழில் நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்கவும் முந்திரி தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் நலனை பாதுகாக்கவும் முந்திரி வாரியம் அமைக்க ரூ. 10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

புதிய பலா ரகங்களை பரவலாக்கவும், பலாவில் ஊடுபயிர் சாகுபடியை மேற்கொள்ளவும், பலா மதிப்புக் கூட்டுதலுக்கான பயிற்சி வழங்கவும் ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
கரும்பு விவசாயிகளுக்கு ஒரு டன்னுக்கு ரூ.3500 வழங்கப்படும் என அறிவிப்பு.

கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக வழங்க ரூ.297 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கரும்பு சாகுபடி மேம்பாட்டுத் திட்டத்திற்காக ரூ.10.63 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் துவரம் பருப்பு சாகுபடிக்கு ரூ. 80 லட்சம் ஏக்கரில் துவரை பயிரிட ஊக்குவிக்கப்படும்.
உயர் விளைச்சல் ஈட்டும் விவசாயிகளுக்கு ரூ.2.50 லட்சம் முதல் பரிசாக வழங்கப்படும்.

மேலும் 100 விவசாயிகளை நெல் உற்பத்தியில் சாதனை படைத்துள்ள நாடுகளுக்கு அழைத்து செல்லப்படுவார்கள் என அறிவிப்பு. இதற்காக ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இயற்கை சீற்றங்களால் ஏற்படும் இழப்பிற்கு பயிர் காப்பிட்டு திட்டத்திற்கு ரூ.841 கோடி ஒதுக்கீடு.

எண்ணெய் வித்து உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.108 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ரூ.22 கோடி மதிப்பில் மழைவாழ் உழவர் முன்னேற்றத் திட்டம்
நெல் சாகுபடிப் பரப்பை அதிகரித்து உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைய நெல் சிறப்புத் தொகுப்பு திட்டத்திற்காக ரூ.160 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மக்காச்சோள சாகுபடிப் பரப்பு, உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறனை அதிகரிக்க, ‘மக்காச்சோள உற்பத்தி மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ.40.27 கோடி ஒதுக்கீடு,

மேலும் ரூ.22 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் மலைவாழ் உழவர்கள் பயனடையும் வகையில், மழைவாழ் உழவர் முன்னேற்றத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஹெக்டேருக்கு ரூ.2000 வீதம் விவசாயிகளுக்கு வழங்கப்படும்
கோடை உழவை 3 லட்சம் ஏக்கராக அதிகரிக்க ரூ.24 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஹெக்டேருக்கு ரூ.2000 வீதம் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

நெல் விவசாயிகளுக்கு 4 ஆண்டுகளில் ரூ.1452 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும் விவசாயிகளுக்கு 46 லட்சம் தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளன.

எஸ்.சி., எஸ்.டி விவசாயிகளுக்கான 60 – 70% மானியம் வழங்கும் திட்டத்தில் 15,800 பேர் பயனடைந்துள்ளனர். மேலும் 95 லட்சத்து 68,000 ஏக்கர் பரப்பளவு பாசன வசதி பெற்றுள்ளது என அமைச்சர் அறிவிப்பு.
2023 – 24இல் ரூ.3.58 லட்சம் கோடி கடன்
இதுவரை 30 லட்சம் விவசாயிகளுக்கு ரூ. 5,242 கோடி பயிர் காப்பீடு செய்யப்பட்டுள்ளதாகவும், விவசாயிகளுக்கு வணிக வங்கிகள் மூலம் 2023 – 24இல் ரூ.3.58 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அறிவித்துள்ளார்.

நெல் சாகுபடி பரப்பை அதிகரிக்க குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்புக்காக ரூ.58 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும், 1000 உழவர் நல சேவை மையங்கள் அமைக்க ரூ.42 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் அறிவிப்பு.

Read More
தமிழ்நாடுநிகழ்ச்சிகள்

தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் மருத்துவ காப்பீடு…

தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பாக ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் உறுப்பினர்களுக்கான மருத்துவ காப்பீடு முகாம் (By Chettinad Hospital) இன்று காலை 10 மணி அளவில் இனிதே துவங்கியது.
உறுப்பினர்கள் வருகை தந்து காப்பீடு அட்டையிணை பெற்று மகிழ்ச்சியுடன் சென்றனர்.

Read More
சினிமாதமிழ்நாடுநிகழ்ச்சிகள்

இளையராஜாவின் அரை நூற்றாண்டு திரையிசை பயணத்தை கொண்டாட அரசு முடிவு – மு.க.ஸ்டாலின்

இசைஞானி இளையராஜாவின் அரை நூற்றாண்டு காலத் திரையிசைப் பயணத்தை கொண்டாட அரசு முடிவெடுத்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இசைஞானி என ரசிகர்களால் கொண்டாடப்படும் இளையராஜா சில மாதங்களுக்கு முன்பு சிம்பொனி இசையை 35 நாட்களில் எழுதி முடித்ததாகக் கூறி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். தான் இசையமைத்த ‘வேலியண்ட்’ என பெயரிடப்பட்ட சிம்பொனி இசையை லண்டனில் மார்ச் 8 ஆம் தேதி அரங்கேற்ற உள்ளதாகவும் அவர் அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இளையராஜாவின் ஸ்டுடியோவிற்கு நேரில் சென்று நினைவுப்பரிசு வழங்கி சிம்பொனி இசை நிகழ்ச்சிக்காக வாழ்த்து தெரிவித்தார். அதிமுக, காங்கிரஸ், விசிக, பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் திரைபிரபலங்களும் இளையராஜாவிற்கு நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.
அதன்பின்னர் இளையராஜா தான் இசையமைத்த சிம்பொனி இசையை லண்டனில் கடந்த 8 ஆம் தேதி அரங்கேற்றம் செய்து ஆசியாவின் முதல் சிம்பொனி கலைஞர் என்ற சாதனையை படைத்தார்.

சிம்பொனி இசை அரங்கேற்றத்தை முடித்துவிட்டு சென்னை திரும்பிய அவருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அரசு சார்பில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் சென்று இளையராஜாவிற்கு மாலை அணிவித்து வரவேற்றார். பாஜக, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள், திரையுலகினரும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Read More
தமிழ்நாடு

TN Budget 2025 | 2025 – 26 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் 

தமிழக அரசின் 2025 – 26-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட் குறித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாட்டின் பரவலான வளர்ச்சியை உறுதி செய்திடும் வகையில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
2025-26 ஆம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்படுகிறது. நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு காலை 9.30 மணிக்கு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார். அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் நிலையில், திமுக அரசின் முழுமையான பட்ஜெட் இதுவாகும்.

எனவே புதிய அறிவிப்புகள், சலுகைகள் இடம் பெறுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. குறிப்பாக மகளிர் உரிமைத் தொகையாக மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்பட்டு வரும் நிலையில், அது உயர்த்தப்படுமா, பயனாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசு எட்டாவது ஊதியக் குழுவை அமைத்துள்ள நிலையில், தமிழக அரசு என்ன செய்யப் போகிறது என அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இதேபோல அரசுப் பணிகளில் உள்ள காலி இடங்களை நிரப்புவதற்கு சிறப்பு அறிவிப்பு ஏதேனும் வெளியாகுமா என இளைஞர்கள் காத்திருக்கின்றனர். பால் கொள்முதலை அதிகரிக்க அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று விவசாயிகள் கேட்டுக் கொண்டனர்.
திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் பல கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக தெரிவித்திருந்தது. உதாரணமாக பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றுவோம், பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரமாக்குவோம் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகள் இடம்பெற்றிருந்தன.
ஆனால் நிதிநிலைமையை காரணம் காட்டி மேற்குறிப்பிட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. அதுமட்டுமல்லாமல் காலி பணியிடங்கள் நிறைவேற்றப்படாததால் பல்வேறு துறைகளில் அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பணிச்சுமையால் அவதிப்படுகின்றனர்.
மத்திய அரசின் நிதிப் பங்களிப்பு போதுமானதாக இல்லாத நிலையில், நிதி சிக்கலையும் எதிர்கொள்ள வேண்டிய நிலையில், தமிழ்நாடு அரசு உள்ளது. குறிப்பாக புதிய கல்வி கொள்கையை ஏற்காத காரணத்தால் 2 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு நிறுத்தி விட்டது. இதன் காரணமாக கல்வித்துறைக்கு வரும் நிதியாண்டில் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டிய நிலை உருவாகி உள்ளது.
பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. சபாநாயகர் அப்பாவு தற்போது பேசி வருகிறார். இவரைத் தொடர்ந்து நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ளார்.

எதிர்க்கட்சிகள் அறையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். பட்ஜெட் கூட்டத்தொடரில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று ஆலோசனைகள் வழங்கப்படும் எனத் தெரிகிறது.

‘ததும்பி வழியும் தமிழ்ப் பெருமிதம்’ உலகை வெல்லும் உயர் தொழில்நுட்பம்..! என்ற வாசகத்துடன் திருவள்ளுவர் சிலையுடன் மற்றொரு தமிழ்நாடு பட்ஜெட் புகைப்படத்தை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
பிரம்மாண்ட திரையில் ஒளிபரப்பு
இந்நிலையில் இன்று தாக்கல் செய்யப்படும் தமிழக பட்ஜெட் 2025 பொதுமக்கள் நேரலையில் பார்க்கும் வகையில் மாநிலம் முழுவதும் 936 இடங்களில் பிரம்மாண்ட திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் ஒளிபரப்புவதன் மூலம் மக்கள் உடனுக்குடன் பட்ஜெட் அறிவிப்புகளை தெரிந்து கொள்ள முடியும். இப்படி ஒரு ஏற்பாடு முதல் முறை செய்யப்பட்டுள்ளது.

Read More
சினிமாதமிழ்நாடு

இந்த ஆண்டில் இதுவரை வெளியான 45 தமிழ் படங்களில் 4 படங்கள் மட்டும் தான் ஹிட்.. என்ன படங்கள்?

2025-ம் ஆண்டு தொடங்கி 3-வது மாதத்தில் இருக்கிறோம். இதுவரை தமிழ் சினிமாவில் வெளியான பல படங்கள் தோல்வியை தழுவின. சில படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.
அந்த வகையில் இந்த ஆண்டு இதுவரை 45 படங்கள் தமிழில் வெளியானதாகவும், அதில் 4 படங்கள் மட்டுமே வசூல் ரீதியாக வெற்றியடைந்துள்ளதாகவும், தயாரிப்பாளர் தனஞ்செயன் கூறியுள்ளார். அது என்ன படங்கள் என்பது குறித்து பார்ப்போம்.
சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், சந்தானம், அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்த படம் ‘மதகஜராஜா’. கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்குப் பின் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. ரூ.15 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் மொத்தமாக ரூ.50 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் மணிகண்டன், குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஜனவரி 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘குடும்பஸ்தன்’. நக்கலைட்ஸ் யூடியூப் குழுவினரின் வெள்ளித்திரை முயற்சியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ரூ.8 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் ரூ.30 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த பிப்ரவரி 6-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘விடாமுயற்சி’. த்ரிஷா, அர்ஜுன், உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படம் அனிருத் இசையமைத்துள்ளார். படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றபோதிலும், திரையரங்குகள், டிஜிட்டல் ரைட்ஸ் உள்ளிட்டவற்றில் வசூல் ஈட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் பிப்ரவரி 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘டிராகன்’. அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர், மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படத்துக்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார். ரூ.36 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் ரூ.50 கோடியை தாண்டி வசூலித்து வருகிறது.

Read More
தமிழ்நாடுநிகழ்ச்சிகள்

தொகுதி மறுவரையறை விவகாரம்.. கர்நாடகா, ஆந்திராவுக்கு சென்ற தமிழக அரசின் குழுக்கள்!

தொகுதி மறுவரையறை தொடர்பாக சென்னையில் நடக்க உள்ள கூட்டத்தில் பங்கேற்கும்படி கர்நாடக முதலமைச்சருக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்தார்.
புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை செய்ய எதிர்ப்புத் தெரிவித்து, சென்னையில் கடந்த 5ஆம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடந்தது. அப்போது, தென் மாநில கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய கூட்டு நடவடிக்கை குழுவை அமைப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானத்தின் அடிப்படையில், தொகுதி மறுவரையறையால் பாதிக்கப்படும் மாநிலங்களில் உள்ள கட்சிகளின் தலைவர்களை திமுக பிரமுகர்கள் சந்தித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக பெங்களூரு சென்ற அமைச்சர் பொன்முடி, திமுக எம்பி அப்துல்லா அடங்கிய குழு, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவை சந்தித்து, தென் மாநிலக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்தது.
அப்போது, கர்நாடக முதலமைச்சரிடம் தொலைபேசியில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வரும் 22ஆம் தேதி சென்னையில் நடக்கும் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்தார். அதற்கு பதில் அளித்த சித்தராமையா, ஜனநாயகத்தை பலவீனப்படுத்தும், கூட்டாட்சிக்கு எதிரான மத்திய அரசின் கொள்கைகளை எதிர்க்க கர்நாடக அரசு முழு ஆதரவு அளிக்கும் என உறுதியளித்தார். மேலும், தொகுதி மறுசீரமைப்பு மட்டுமின்றி, தென்மாநில மக்களின் நலனைப் பாதிக்கும் மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலினிடம் சித்தராமையா கேட்டுக் கொண்டார்.
இதனிடையே, ஆந்திர மாநிலத்திற்கு சென்ற அமைச்சர் எ.வ.வேலு, நாடாளுமன்ற உறுப்பினர் வில்சன் ஆகியோர், தெலுங்கு தேசம் கட்சியின் மாநிலத் தலைவர் பல்லா ஸ்ரீநிவாச ராவை சந்தித்தனர். அப்போது, நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை தொடர்பாக சென்னையில் நடைபெற உள்ள கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் பங்கேற்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் அழைப்பு விடுத்தனர்.
இதன் பின்னர், ஆந்திர முன்னாள் முதலமைச்சரும், ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்த அமைச்சர் எ.வ.வேலு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை வழங்கி அழைப்பு விடுத்தார். இதேபோல, டெல்லியில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி., டெரிக் ஓ பிரையனை சந்தித்த திமுக எம்.பி., கனிமொழி உள்ளிட்டோர், சென்னையில் வரும் 22-ஆம் தேதி நடைபெறவுள்ள தொகுதி மறுவரையறை குறித்த கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார்.

Read More
ஆன்மீகம்தமிழ்நாடு

மாசிமகம் கோலாகலம்… கும்பகோணம் மகாமக குளத்தில் தீர்த்தவாரி!

கும்பகோணத்தில் உள்ள மகாமக குளத்தில் தீர்த்தவாரி விமரிசையாக நடைபெற்றது.
கும்பகோணத்தில் 12 சைவத் திருக்கோயில்கள், 5 வைணவக் கோயில்கள் இணைந்து, 10 நாட்களுக்கு மாசி மகப்பெருவிழா கொண்டாடப்பட்டது. இதன் முக்கிய நிகழ்வான மாசிமகத்தை ஒட்டி, மகாமக குளத்தின் நான்கு கரைகளிலும் 12 சிவாலயங்களில் இருந்து உற்சவர்கள் பஞ்சமூர்த்திகளுடன் எழுந்தருளினர். அப்போது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் குளத்தில் புனிதநீராடி, சாமி தரிசனம் செய்தனர்.

இதனிடையே, கடலூர் வெள்ளி கடற்கரையில், மாசி மகத்தை ஒட்டி, ஆயிரக்கணக்கான மக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். மயிலாடுதுறை காவிரி துலாக்கட்ட தீர்த்த படித்துறையிலும் நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினர்.

Read More
Uncategorized

1-9 வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு… முழு ஆண்டு தேர்வு அட்டவணை இதோ

தமிழ்நாட்டில் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான 2024-25 கல்வியாண்டு முழு ஆண்டுத் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தனியார் பள்ளி, தொடக்க கல்வி, பள்ளிக்கல்வி இயக்குநர்கள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான முழு ஆண்டுத் தேர்வு அட்டவணை வெளியிடப்படுகிறது.
அதன்படி அரசு /அரசு உதவி பெறும் / தனியார் பள்ளிகளுக்கு 1 முதல் 5 ஆம் வகுப்பு மற்றும் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 2024-25ஆம் கல்வியாண்டிற்கான முழு ஆண்டுத் தேர்வு கால அட்டவணை இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது

Read More
தமிழ்நாடுதொழில்நுட்பம்

நோயாளிகளுக்கான சிகிச்சைகளை முன்கூட்டியே கணிக்கும் ‘டிஜிட்டல் ட்வின்’ தொழில்நுட்பம்: சென்னை ஐஐடி பேராசிரியர் தகவல்

நோயாளிகளுக்கு அடுத்த 6 மாதங்களுக்கு என்னென்ன சிகிச்சைகளை வழங்க வேண்டும் என்பதை முன்கூட்டியே கணிக்கும் வகையிலான ‘டிஜிட்டல் ட்வின்’ தொழில்நுட்பம் குறித்து சென்னை ஐஐடி ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருவதாக, அந்நிறுவனத்தின் பேராசிரியர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

சேபியன்ஸ் ஹெல்த் பவுண்டேஷன் சார்பில் உலக சிறுநீரக தினத்தையொட்டி ‘சிறுநீரக நோயில் ஏஐ தொழில்நுட்பம்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம், சென்னை ஆழ்வார்பேட்டையில் நேற்று நடைபெற்றது. சேபியன்ஸ் ஹெல்த் பவுண்டேஷன் தலைவர் ராஜன் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக நடிகர் சித்தார்த் கலந்துகொண்டு, உடலில் உப்பு அளவை குறைப்பதற்கான வழிகாட்டுதல்கள் அடங்கிய சேபியன்ஸ் கையேட்டினை வெளியிட்டார்.

கருத்தரங்கை தொடங்கி வைத்து ராஜன் ரவிச்சந்திரன் பேசும்போது, ‘‘செயற்கை நுண்ணறிவு என்பது நோயாளிகளின் கண்காணிப்புக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்குமே தவிர நோயாளிக்கும், மருத்துவருக்கும் இடையேயான உறவை அது மாற்றியமைக்காது.
சிறுநீரக பாதிப்பை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை அளிப்பதன் மூலம் அவற்றை பாதுகாக்க முடியும். சிறுநீரகத்தை பாதுகாக்க உணவில் உப்பு சேர்ப்பதை குறைத்துக்கொள்ள வேண்டும். தினந்தோறும் 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்யவேண்டும். உடல் எடையை கட்டுப்பாடாக வைத்திருக்க வேண்டும். புகைப்பிடிப்பதை தவிர்த்து, ஆண்டுக்கு ஒருமுறையாவது ரத்த அழுத்தம், சர்க்கரை அளவை பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்’’ என்றார்.

சென்னை ஐஐடி பேராசிரியர் ஆர்.கிருஷ்ணகுமார் பேசும்போது, ‘‘செயற்கை நுண்ணறிவு என்றவுடன் நம் மனதில் எழும் முதல் கேள்வி, ஏஐ வந்தால் நம் வேலை போய்விடுமா என்பதுதான். ஆனால், மருத்துவத்துறையில் ஏஐ தொழில்நுட்பமானது மருத்துவரின் ஒரு உதவியாளரைபோல செயல்படும்.

இதன்மூலம் மருத்துவ செயல்முறைகளை நுணுக்கமாக நம்மால் மேம்படுத்த முடியும். மற்ற பாகங்கள் பாதிக்கப்படாதவாறு ஏஐ தொழிநுட்பத்தின் உதவியுடன் மூளை கட்டிகளை அகற்ற முடியும். ஐஐடியில் ‘டிஜிட்டல் ட்வின்’ எனப்படும் புதிய ஏஐ தொழில்நுட்பம் குறித்து ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

இதன்மூலம் கணினியில் விர்சுவலாக (மெய்நிகராக) நோயாளியை உருவாக்கி, அதன் வாயிலாக மருத்துவர்கள் தங்களது நோயாளிகளை கண்காணிக்க முடியும். நோயாளிகளின் உடல்நிலைக்கு ஏற்ப மருத்துவர்கள் இதைத்தான் செய்ய வேண்டும் என்பதை டிஜிட்டல் ட்வின் முன்கூட்டியே கணித்துவிடும் என்பதால், அடுத்த 6 மாதங்களுக்கு என்னென்ன மருந்துகள், சிகிச்சைகள் அளித்தால், நோயாளியின் உடல்நிலை முன்னேற்றம் அடையும் என்பதை டிஜிட்டல் ட்வின் மூலம் மருத்துவர்களால் தெரிந்துகொள்ள முடியும்’’ என்றார்.

இந்நிகழ்வில் சென்னை வர்த்தக மற்றும் தொழில்துறை சபையின் தலைவர் ராம்குமார் சங்கர், இசையமைப்பாளர் சங்கர் கணேஷ், நாடக கலைஞர் மாது பாலாஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Read More
உலகம்

“போர் நிறுத்தத்துக்கு உக்ரைன் தயார்; புதினும் சம்மதிப்பார்” – ட்ரம்ப் தகவல்

வாஷிங்டன்: “தற்காலிக போர் நிறுத்தத்துக்கு உக்ரைன் தயாராக உள்ளது. ரஷ்ய அதிபர் புதினும் இதற்கு சம்மதிப்பார் என நம்புகிறேன்” என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் அமெரிக்கப் பிரதிநிதிகளுடன் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆலோசனை மேற்கொண்டார். இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் உக்ரைன் அரசு 30 நாட்கள் போர் நிறுத்தத்துக்கு தயாராக இருப்பதாகக் கூறியது. இதனைத் தொடர்ந்தே ட்ரம்ப்பின் அறிக்கையும் வெளியாகியுள்ளது.
இந்தப் போர் நிறுத்தம் தொடர்பாக ட்ரம்ப் கூறும்போது, “ரஷ்யா – உக்ரைன் இடையே கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெறும் போரின் காரணமாக இரு தரப்பிலும் ராணுவ வீரர்கள், பொதுமக்கள் என உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. இது நிறுத்தப்பட வேண்டும். அதற்கு தற்காலிக போர் நிறுத்தம் மிகவும் அவசியம்.
இந்த போர் நிறுத்தத்துக்கு உக்ரைன் ஒப்புக் கொண்டுள்ளது. ரஷ்யாவும் ஒப்புக்கொள்ளும் என்று நான் நம்புகிறேன். இந்த போர் நிறுத்த அவசியத்தை உணர்ந்து ரஷ்யா அதனை ஏற்கும்படி நம்மால் செய்ய முடிந்தால் அது மிகப்பெரிய விஷயம். ஒருவேளை அப்படிச் செய்ய முடியாமல் போனால், இன்னும் நிறைய மக்கள் கொல்லப்படுவார்கள்” கூறியுள்ளார்.

மூன்று ஆண்டுகளாக நீடிக்கும் போரை நிறுத்துவது தொடர்பாக ரஷ்யாவுடன் உடனடியாக பேச்சுவார்த்தை மேற்கொள்ள தயாராக இருப்பதாக உக்ரைன் தெரிவித்துள்ளது கவனிக்கத்தக்கது.

இந்தப் பேச்சுவார்த்தை பற்றி அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ கூறும்போது, “இன்று நாங்கள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை எட்டுவதற்கான உடனடி அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்கும்படி உக்ரைனை சம்மதிக்க வைத்துள்ளோம்” என்று ஊடகங்களிடன் கூறினார்.

மேலும் எக்ஸ் பக்கத்தில் இது பற்றி குறிப்பிடும்போது, “உக்ரைனின் இந்த தயார் நிலை, போர் நிறுத்தத்துக்கான விருப்பம் நீடித்த அமைதிக்கு அருகில் எடுத்துவைக்கப்பட்டுள்ள அடியாகும். அமெரிக்க அதிபரின் தலைமையில், சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மானின் உதவியாலும் உக்ரைன் அமைதியை மீட்டெடுக்கும் சூழல் உருவாகியுள்ளது. இப்போது எல்லாம் ரஷ்யாவின் கைகளில்தான் உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

இது மட்டுமல்லாது போர் நிறுத்தத்துக்கு தயார் என்று கூறியுள்ளதால் உக்ரைனுக்கு நிறுத்திவைத்திருந்த உளவுத் தகவல் பகிர்தல் சேவை, பாதுகாப்பு சேவை ஆகியனவற்றை மீண்டும் வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.A

Read More