Author: Namadhu Arasu

இந்தியாதமிழ்நாடு

பாரதியாரின் முழு படைப்புகளின் தொகுப்புகள்! பிரதமர் நரேந்திர மோடி இன்று வெளியிடுகிறார்

பாரதியாரின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் அவரது படைப்புகளின் முழு தொகுப்பை இன்று பிரதமர் நரேந்திர மோடி வெளியிடுகிறார்.

இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, “சிறந்த தமிழ்க் கவிஞரும், சுதந்திரப் போராட்ட வீரருமான சுப்பிரமணிய பாரதியின் முழுமையான படைப்புகளின் தொகுப்பை இன்று பிற்பகல் 1 மணியளவில் தில்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் மோடி வெளியிடுகிறார். சுப்பிரமணிய பாரதியின் எழுத்துக்கள் மக்களிடையே தேசபக்தியை ஊட்டியது. இந்திய கலாசாரம் மற்றும் நாட்டின் ஆன்மிக பாரம்பரியத்தின் சாரத்தை வெகுஜன மக்கள் தொடர்புபடுத்தக்கூடிய மொழியில் மக்களிடம் அவர் எடுத்துச் சென்றார்.

மகாகவியின் முழுமையான படைப்புகளின் 23 தொகுதிகள் சீனி. விசுவநாதனால் தொகுக்கப்பட்டு அல்லயன்ஸ் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இதில் மகாகவி சுப்பிரமணிய பாரதியின் எழுத்துகளின் பதிப்புகள், விளக்கங்கள், ஆவணங்கள், பின்னணித் தகவல்கள் மற்றும் தத்துவ விளக்கங்கள் போன்றவை அடக்கம்” என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சி மத்திய கலாச்சாரத் துறையின் கீழான சாகித்ய அகாடமி சார்பில் நடைபெறுகிறது. இந்நூலை சீனி விஸ்வநாதன் தொகுத்திருக்கிறார். நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்களான நிர்மலா சீதாராமன், கஜேந்திரசிங் ஷெகாவாத், எல்.முருகன் மற்றும் ராவ் இந்திரஜித் சிங் ஆகியோர் பங்கேற்கின்றனர். மறுபுறம் தமிழகத்தில் பாரதியார் சிலைக்கு முதல்வர் மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்துகிறார். இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் செய்தி குறிப்பில், “மகாகவி பாரதியார் 143-வது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் அரசின் சார்பில் அமைச்சர் பெருமக்கள், 11.12.2024 அன்று காலை 9.30 மணியளவில் சென்னை, மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் அமைந்துள்ள அவர் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்துகிறார்கள்.

Read More
தமிழ்நாடு

கனமழை எச்சரிக்கை: மயிலாடுதுறையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மயிலாடுதுறை மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Read More
சினிமா

‘கோல்டன் ஸ்பேரோ’ பாடல்..!100 மில்லியன் பார்வையாளர்களைகடந்தது

கடந்த 2017-ம் ஆண்டில் ராஜ்கிரண், ரேவதி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான ‘ப.பாண்டி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநர் அவதாரம் எடுத்தார் நடிகர் தனுஷ். அந்த திரைப்படம் வசூல் ரீதியில் வெற்றி அடைந்தது. இயக்குநராகவும் தனுஷ் வெற்றியடைந்திருந்தார். அதை தொடர்ந்து இரண்டாவதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க தனது 50ஆவது படமான ராயன் படத்தை தானே இயக்கி நடித்தார். ராயன் வெளியாகி மக்கள் மத்தியில் சூப்பர் ஹிட் அடித்தது. மிரளவைக்கும் ஆக்சன் காட்சிகளுடன் ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் படம் பார்வையாளர்களை ஈர்த்தது.
தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் நிலவுக்கு என்மேல் என்னடி கோவம் படத்தின் ‘கோல்டன் ஸ்பேரோவ்’ பாடல் 100 மில்லயன் பார்வையாளர்களை கடந்துள்ளது..
ராயன் படத்தின் வெற்றிக்கு பிறகு தனுஷ் இயக்கிவரும் படம் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’. இளம் நடிகர், நடிகைகளை படத்தில் களமிறக்கி 2கே கிட்ஸின் காதலை சொல்லும் ராம்காம் பாணியில் இந்த படம் உருவாகிவருகிறது, படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் தன்னுடைய சகோதரி கார்த்திகா மகன் பவிஷை ஹீரோவாக்கியுள்ளார் தனுஷ். அனிகா சுரேந்திரன், பிரியா வாரியர், மேத்யூ தாமஸ் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

தந்தை கஸ்தூரிராஜா தயாரிக்க, மகன் தனுஷ் இயக்க, பேரன் பவிஷ் நாயகனாக உருவெடுத்துள்ளார். NEEK படத்தின் ‘கோல்டன் ஸ்பாரோவ்’ பாடல் ஆகஸ்ட் 30ம் தேதி வெளியானது. படத்தின் இந்த முதல் பாடல் வெளியாகி இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய ஹிட் அடித்தது. பிரியங்கா மோகன் கேமியோ பெர்பாமன்ஸ் செய்திருக்கும் இந்த பாடலை சுபலட்சுமி, ஜிவி பிரகாஷ் குமார், தனுஷ் மற்றும் அறிவு சேர்ந்து பாடியுள்ளனர், இந்த பாடலின் வரிகளை எழுதியவர் அறிவு.

Read More
தமிழ்நாடு

தொடர்ந்து அவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “சுரங்க ஏல அனுமதிக்கு மாநில அரசு எந்தவிதமான எதிர்ப்பையும் பதிவு செய்யவில்லை” என மத்திய அரசு கூறியிருப்பதை சுட்டிக்காட்டிப் பேசிய அவர், பத்து மாத காலங்களாக திமுக அரசு என்ன செய்து கொண்டிருந்தது எனவும் ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.

இதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இந்த திட்டத்திற்குத் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும், மத்திய அரசு ஏலமே விட்டிருந்தாலும் இந்த திட்டத்தம் நான் முதலமைச்சராக இருக்கும் வரை செயல்படுத்த விடமாட்டேன் எனவும், அதையும் மீறி வந்தால் நான் முதலமைச்சர் பொறுப்பில் இருக்க மாட்டேன் எனவும் சூளுரைத்தார்.

Read More
தமிழ்நாடு

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட டங்ஸ்டன் ஏலம் திரும்பப் பெறும் தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பிவைப்பு.

மதுரை அரிட்டாபட்டியில் மத்திய அரசு வழங்கியிருக்கும் டங்ஸ்டன் கனிம சுரங்க அனுமதியைத் திரும்பப் பெற வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட அரசினர் தீர்மானம் கடும் விவாதத்திற்குப் பிறகு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

டங்ஸ்டன் சுரங்க ஏலம் தொடர்பான தீர்மானத்தை சட்டமன்றத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் முன்மொழிந்து பேசினார். அதனைத் தொடர்ந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் ஈஸ்வரன், மதிமுக, விசிக, பாமக, மனிதநேய மக்கள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் அரசினர் தீர்மானத்திற்கு முழு ஆதரவைத் தெரிவித்தனர்.

Read More
சினிமாதமிழ்நாடு

புஷ்பா 2 விமர்சனம்..

இயக்கம்: சுகுமார் சென்னை: இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், பகத் ஃபாசில், ராஷ்மிகா மந்தனா, ராவ் ரமேஷ், ஜகபதி பாபு, ஸ்ரீலீலா, அனுசுயா, சுனில் உள்ளிட்ட பலர் நடிப்பில் இன்று வெளியான புஷ்பா 2 திரைப்படம் உலகளவில் ரசிகர்களை கொண்டாட்ட மோடுக்கு கொண்டு சென்றுள்ளது. தியேட்டர் எக்ஸ்ப்ரீயன்ஸ் காட்சிகளை அடிக்கடி அடுக்கி 200 ரூபாய் மற்றும் அதற்கு மேல் காசு கொடுத்து டிக்கெட் வாங்கிய ரசிகர்களை படக்குழுவினர் திருப்திப்படுத்தி அனுப்புகின்றனர். புஷ்பா திரைப்படம் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றுத் தந்தது. இந்த படத்திலும் அதைவிட அதிக மெனக்கெடலுடன் அல்லு அர்ஜுன் நடித்துள்ளார். ஆனால், அவர் மட்டுமே படம் முழுக்க ஓவர் பர்ஃபார்ம் பண்ணுவது போலவும், மற்ற நடிகர்களின் கதாபாத்திரங்கள் மொத்தமாக வலுவிழந்து காணப்படுவதும் புஷ்பா 2 படத்தை ஒரு சிறந்த படம் என சொல்லவிடாமல் செய்கிறது.

Read More
தமிழ்நாடு

வங்கக் கடலில் நாளை மீண்டும் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு

வங்கக் கடலில் நாளை புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி ஃபெஞ்சல் புயலாக வலுப்பெற்று, புதுச்சேரி அருகே கரையை கடந்தது. இதன் காரணமாக புதுச்சேரி மற்றும் வட தமிழ்நாட்டில் பலத்த சேதம் ஏற்பட்டது. இதையடுத்து, தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

Read More
ஆன்மீகம்

ராசி பலன்-டிசம்பர் 1 முதல் 15 வரை… 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும் 

மேஷம்:எண்ணம்போல ஏற்றம் வரக்கூடிய காலகட்டம். அலுவலகத்தில் உங்கள் திறமை பேசப்படும். சிலருக்கு பணிசார்ந்த அயல்நாட்டுப் பயண வாய்ப்பு வரலாம். குடும்பத்தில் நிம்மதி நிலவும். வாழ்க்கைத் துணையுடன் விலகி இருந்த நிலை மாறும். இளம் வயதினர் பெற்றோர், பெரியோருடன் மனம்விட்டுப் பேசுங்கள். சுபகாரியங்களில் சுயமுடிவைத் தவிருங்கள். ஆடை, ஆபரணம் சேரும். வீடு, வாகனம் மாற்ற சந்தர்ப்பம் வரலாம். ரியல் எஸ்டேட் தொழில் செழிக்கும். அரசு, அரசியலில் உள்ளோர் ஆதரவு அதிகரிக்கப் பெறுவீர்கள். கலை, படைப்புத் துறையினர்க்கு வாய்ப்புகள் தேடிவரும். அதில் கவனம் தவறாமை முக்கியம். தலைவலி, வயிறு உபாதை, பூச்சி தொல்லை வரலாம். துர்க்கையைத் துதியுங்கள். வாழ்க்கை செழிக்கும்.
ரிஷபம்: முயற்சிகள் பலனளிக்கும் காலகட்டம். பணியிடத்தில் மாற்றமும் ஏற்றமும் வரும். இருக்கும் பணியை விட்டுவிட்டுப் புதிதாகத் தேடுவதை இக்காலகட்டத்தில் தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் ஒற்றுமை உருவாகும். பூர்வீக சொத்து சேரும். சுபகாரியத் தடைகள் விலகும். வரவு சீராகும். வீண் செலவுகளைத் தவிர்த்து சேமிக்கப் பழகுவது நல்லது. ஆடை, ஆபரணம் சேரும். செய்யும் தொழிலில் முழுமையான முயற்சிகள் அவசியம். அரசு, அரசியலில் உள்ளோர்க்கு வாக்கில் நிதானம் முக்கியம். கலை, படைப்புத் துறையினர் நிதானத்தைக் கடைப்பிடியுங்கள். வாகனப் பயணத்தில் வேகம் வேண்டாம். ஒற்றைத் தலைவலி, பற்களில் உபாதை வரலாம். ஏழுமலையானை வணங்குங்கள். ஏற்றங்கள் உறுதியாகும்.
மிதுனம்: தற்பெருமையைத் தவிர்த்தால், தடைகள் எல்லாம் தகரக்கூடிய காலகட்டம். பணியிடத்தில் உங்கள் வாக்குக்கு செல்வாக்கு உயரும். எதிர்பாரா இடமாற்றம் வரலாம். இல்லத்தில் இனிமை நிலவும். அதை நிலைக்கச் செய்ய வாழ்க்கைத் துணையுடன் மனம்விட்டுப் பேசுங்கள். வீடு, வாகனம் புதுப்பிக்க வாங்க சந்தர்ப்பம் வரும். ஆடை, ஆபரணம் சேரும். செய்யும் தொழிலில் நேரடி கவனம் செலுத்துங்கள். அந்நிய தேச வர்த்தகத்தில் தஸ்தாவேஜுகளை பத்திரமா வையுங்கள். அரசு, அரசியலில் உள்ளோர் மீது வீண்பழி வரலாம், கவனமாக இருங்கள். கலைஞர்கள், படைப்பாளிகள் முயற்சியால் வெல்லலாம். வாகனத்தில் செல்லும்போது லாகிரி வேண்டாம். வயிறு, முதுகு, கண் உபாதைகள் வரலாம். மாருதியை வணங்குங்கள். மகிழ்ச்சி அதிகரிக்கும்.
கடகம்: சிந்தித்து செயல்பட்டால், சிறப்புகள் சேரக்கூடிய காலகட்டம். பணியிடத்தில் மேலதிகாரிகள் ஆதரவு கிட்டும். பலகால இடமாற்றத் தடைகள் நீங்கும். குடும்பத்தில் அன்யோன்யம் அதிகரிக்கும். வாரிசுகளிடம் கடுமை வேண்டாம். உங்கள் உடல்நலத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். வளர்ப்புப் பிராணிகளிடம் விலகி இருங்கள். கொடுக்கல் வாங்கலை உடனுக்குடன் குறித்து வையுங்கள். செய்யும் தொழிலில் சீரான வளர்ச்சி உண்டாகும். கூட்டுத் தொழிலில் கவனமாக இருங்கள்.அரசு, அரசியலில் உள்ளோர் அமைதி காப்பதே நல்லது. கலைஞர்கள் படைப்பாளிகள் எதிர்பாலரிடம் எச்சரிக்கையாக இருங்கள். இரவுப் பயணம் தவிருங்கள். எலும்பு, மூட்டு, பற்கள், நரம்பு உபாதைகள் வரலாம். இஷ்டமகானை ஆராதியுங்கள். இனியவை எல்லாம் சேரும்.
சிம்மம்: சிந்தனையை சிதறவிடாமல் இருக்க வேண்டிய காலகட்டம். அலுவலகத்தில் எதிலும் நேரடி கவனமும் நிதானமும் அவசியம். பொறுப்புகளில் திட்டமிடல் முக்கியம். குடும்பத்தில் அமைதி நிலவும். இளம் வயதினர், பெற்றோர் பெரியோர் வாக்குக்கு முக்கியத்துவம் கொடுங்கள். வாரிசுகளால் பெருமை சேரும். கடன்களை நேரடியாகப் பைசல் செய்வது நல்லது. செய்யும் தொழிலில் சட்டத்தை மதித்தல் முக்கியம். புதிய முதலீடுகளில் அவசரம் வேண்டாம். அரசு, அரசியலில் உள்ளோர் வாக்குறுதிகளில் நிதானமாக இருங்கள். கலை,படைப்புத் துறையினர் சோம்பலை விரட்டுங்கள். வாகனப் பழுதை உடனுக்குடன் சீர் செய்யுங்கள். கண்கள்,காது, மூக்கு, தொண்டை உபாதைகள் வரலாம். கணபதியை வணங்குங்கள். இஷ்டங்கள் ஈடேறும்.
கன்னி: வாக்கில் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம். பணியிடத்தில் துணிவைவிட பணிவுதான் நல்லது. பொறுப்புச் சுமை அதிகரித்தாலும் புலம்பல் கூடாது. எதிர்பாரா இடமாற்றம் வந்தால் ஏற்பதே ஏற்றம் தரும். குடும்பத்தில் நிம்மதி நிலவும். வாழ்க்கைத் துணையுடன் அன்யோன்யம் அதிகரிக்கும். ரத்த பந்தங்கள் உடல்நலத்தில் கவனம் செலுத்துங்கள். வாரிசுகளால் பெருமை சேரும். செய்யும் தொழிலில் சீரான போக்கு நிலவும்.அரசு, அரசியல் துறையினர், பிறருக்கு ஜாமீன் தருவதைத் தவிருங்கள். கலை, படைப்புத் துறையினரின் கனவுகள் நனவாகத் தொடங்கும். இரவுப் பயணம் இயன்றவரை தவிருங்கள். ரத்தநாளம், மறைமுக உறுப்பு, அலர்ஜி உபாதைகள் வரலாம். நரசிம்மரை வணங்குங்கள். நல்லவை நடக்கும்.
துலாம்: திட்டமிட்டும் நேரம் தவறாமலும் செயல்பட்டால், நன்மைகள் அதிகரிக்கத் தொடங்கும் காலகட்டம். பணியிடத்தில் நேரம்தவறாமை மிகமிக முக்கியம். சிலருக்கு இடமாற்றம் வந்தாலும் அதனால் பெருமைகளும் சேரும். வீட்டில் விடியல் வெளிச்சம் பரவும். அடுத்தடுத்து விசேஷங்கள் வரத்தொடங்கும். வாழ்க்கைத் துணையுடன் மனம் விட்டுப் பேசினால், நல்லவை தொடரும். வரவு அதிகரிக்கும்போது, சேமிப்பை உயர்த்திக் கொள்வது புத்திசாலித்தனம். செய்யும் தொழிலில் சீரான லாபம் தொடரும். ஒப்பந்தங்களை நேரடியாக கவனியுங்கள். அரசு, அரசியலில் உள்ளோர்க்கு ஆதரவு நிலைக்கும். கலைஞர்கள் முயற்சிகள் பலிதமாகும். பயணத்திற்கு முன் போதுமான ஓய்வு முக்கியம். எலும்புத் தேய்மானம், அஜீரணம், தூக்கமின்மை வரலாம். அனுமனை வணங்குங்கள், ஆனந்தம் அதிகரிக்கும்.
விருச்சிகம்: கர்வம் தவிர்த்தால், சர்வமும் நன்மையாகும் காலகட்டம். அலுவலகத்தில் எல்லாம் தெரியும் எண்ணம் எப்போதும் வேண்டாம். வீட்டில் விசேஷங்கள் வரத் தொடங்கும். வாக்கில் இனிமை இருந்தால் வாழ்க்கையும் இனிக்கும். குடும்பத்துப் பெரியவர்கள் உடல்நலத்தில் இருந்த பிரச்னைகள் தீரும். ஆடை, ஆபரணம், சொத்து சேரும். செய்யும் தொழிலில் லாபம் சீராகும். அரசு, அரசியலில் உள்ளோர்க்கு பதவி, பாராட்டுகள் கிட்டலாம். கலைஞர்கள் படைப்பில் முழுகவனம் செலுத்துங்கள். வாகனப் பழுதை உடனுக்குடன் சரிசெய்யுங்கள். குலதெய்வத்தை தினமும் கும்பிடுங்கள். காது, மூக்கு, தொண்டை, உணவுக்குழாய் உபாதைகள், நரம்பு உபாதைகள் வரலாம். ரங்கநாதரை வணங்குங்கள். வாழ்க்கை ரம்யமாகும்.
தனுசு: பொறுப்பு உணர்வுடன் பொறுமையாகச் செயல்படவேண்டிய காலகட்டம். அலுவலகத்தில் எல்லாம் தெரியும் எண்ணமும் ஏனோதானோ செயல்களும் கூடாது. பிறரை நம்பி பணியிட ரகசியங்களைப் பகிரவேண்டாம். கோப்புகளை பத்திரமாக வையுங்கள். இல்லத்தில் சீரான போக்கு நிலவும். வார்த்தைகளில் நிதானம் மிக முக்கியம். வாரிசுகளிடம் வீண் தர்க்கம் வேண்டாம். பணவரவுக்கு ஏற்ப செலவுகளும் சேர்ந்து வரும். கடன் வாங்க, கொடுக்க வேண்டாம். சிக்கனத்தைக் கடைப்பிடியுங்கள். செய்யும் தொழிலில் முழு கவனம் முக்கியம். அரசு, அரசியலில் உள்ளோர் வாக்குறுதிகள் எதுவும் தரவேண்டாம். கலை, படைப்புத் துறையினர் தலைகனத்தை இறக்கிவிட்டு செயல்படுங்கள். பயணப்பாதையில் உடைமைகள் பத்திரம். அடிவயிறு, முதுகு, கழிவு உறுப்பு உபாதைகள் வரலாம். பெருமாள், தாயாரை வணங்குங்கள். பெருமைகள் நிலைக்கும்.
மகரம்: நிலையான பாதையும் நிம்மதியான சூழலும் ஏற்படக்கூடிய காலகட்டம். அதே சமயம் பணியிடத்தில் பொறுமையும் பொறுப்பு உணர்வும் அவசியம். பதவி, இடமாற்றங்களை இன்முகத்தோடு ஏற்றுக்கொள்வது நல்லது. இல்லத்தில் இனிமை இடம்பிடிக்கும். தம்பதியரிடையே அன்யோன்யம் உருவாகும். வாரிசுகள் வாழ்வில் சுப தடைகள் நீங்கும். பண வரவு சீராக இருக்கும். அதை சுப செலவாகவோ, சொத்தாகவோ சேமிப்பது நல்லது. செய்யும் தொழில் செழிப்பாகும். புதிய முதலீடு, தற்போதைக்கு வேண்டாம். அரசு, அரசியலில் மாற்றமும் ஏற்றமும் உண்டு. கலைஞர்கள் திறமைக்கு ஏற்ப வாய்ப்புகள் வரும். வாகனத்தில் வேகத்தைத் தவிருங்கள். கழுத்து, மூட்டு, பாதம், முதுகுத்தண்டுவட உபாதைகளை உடனே கவனியுங்கள். ரங்கநாதரை வணங்குங்கள். வாழ்க்கை ரம்யமாகும்.
கும்பம்: தன்னம்பிக்கையோடு செயல்பட்டால், உயர்வுகள் வரும் காலகட்டம். அலுவலகத்தில் உங்கள் திறமைகள் பளிச்சிடும். பிறரால் பழி வரலாம், கவனம் முக்கியம். குடும்பத்தில் குதூகல சூழல் உருவாகும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும். அசையும், அசையா சொத்து சேரும். ரத்தபந்த உறவுகளால் ஆதாயம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களை இரவல் தரவோ, பெறவோ வேண்டாம். செய்யும் தொழிலில் ஏற்றமும் மாற்றமும் ஏற்படும். அரசு, அரசியலில் உள்ளோர்க்கு மேலிடத்துப் பாராட்டு மகிழ்ச்சி தரும். கலை,படைப்புத் துறையினருக்கு வாய்ப்புகள் தொடர்ச்சியாக வரும். பயணத்தில் வித்தைகாட்டல் கூடாது. அடிவயிறு, நரம்பு உபாதைகள் வரலாம். இஷ்ட அம்மனை வணங்குங்கள். எண்ணங்கள் ஈடேறும்.
மீனம்: அவசரமும் அலட்சியமும் தவிர்க்க வேண்டிய காலகட்டம். பணியிடத்தில் கவனச்சிதறல் கூடாது. பிறரின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடுவதைத் தவிருங்கள். புறம் பேசுவது, கேட்பது கூடவே கூடாது. மேலதிகாரிகளிடம் வாக்குவாதம் வேண்டாம். குடும்பத்தில் நிலவிய குழப்பம் மறையும். சுபகாரியத் தடைகள், குலதெய்வ வழிபாட்டால் நீங்கும். பூமியால் ஆதாயம் உண்டு. செய்யும் தொழில் வளர்ச்சிப் பாதையில் செல்லும். அரசுக்கு உரிய வரி முதலானவற்றை தவறாமல் செலுத்துங்கள். அரசு, அரசியல் சார்ந்தவர்கள் மேலிடத்தின் அனுமதி பெறாத செயல்களைத் தவிருங்கள். கலைஞர்கள், படைப்பு ரகசியத்தைப் பகிரவேண்டாம். வாகனப் பழுதை உடனுக்குடன் கவனியுங்கள். அலர்ஜி, படபடப்பு, ஜீரண உபாதைகள் வரலாம். ஏழுமலையானைக் கும்பிடுங்கள். வாழ்க்கை ஏற்றம்பெறும்.

Read More