cmvijay

தமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்வணிகம்

100 நாட்களில் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு.. தமிழ்நாடு அரசு 

00 நாட்களில் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடுகளை ஈர்த்துள்ளதாக தமிழ்நாடு அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.
சென்னையில் நடைபெற்ற வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் விஜய் முன்னிலையில் 67 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டிற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன்மூலம், 100 நாட்களில் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடுகளை ஈர்த்துள்ளதாக தமிழ்நாடு அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.
ஜெர்மனி, அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட 15 நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் பங்கேற்ற இந்த மாநாட்டில், முதலமைச்சர் விஜய் முன்னிலையில் 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 67 ஆயிரத்து 452 கோடி ரூபாய் முதலீட்டில், தமிழ்நாட்டின் 20 மாவட்டங்களில் தொழில் தொடங்கும் வகையிலும், ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 998 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையிலும் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
ராக்கெட் தயாரிக்கும் தனியார் நிறுவனமான ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் மற்றும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய வகையிலான ராக்கெட் தயாரிக்கும் அக்னிகுல் காஸ்மோஸ் ஆகிய 2 நிறுவனங்கள் தூத்துக்குடியில் முதலீடு செய்யவுள்ளன. இதேபோல, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 5 ஆயிரத்து 143 கோடி ரூபாயில் டயர் உற்பத்தி ஆலையை அமைக்க ஜே.கே.டயர் நிறுவனமும், 300 கோடியில் HVAC கம்ப்ரசர் உற்பத்தி ஆலையைத் தொடங்க ஜெர்மனியின் BITZER நிறுவனமும் ஒப்பந்தம் செய்துள்ளன.

Read More
அரசியல்சினிமாதமிழ்நாடுதொழில்நுட்பம்வணிகம்

ஜனநாயகன் திரைப்படத்தின் கதை…(Movie Review)

சிறைக் கைதியான தளபதி வெற்றிகொண்டான் (விஜய்) தனது மறைந்த நண்பரின் மகளைப் பாதுகாப்பதையும், நாட்டின் ஜனநாயகத்திற்கு எதிராகச் செயல்படும் சக்திவாய்ந்த தீவிரவாதிகளை எதிர்த்துப் போராடி தமிழகத்தை மதக்கலவரத்தில்

Read More
TVKஅரசியல்தமிழ்நாடுமாவட்டம்வணிகம்

2026 – 2027-ம் நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் ஆகஸ்ட் 5-ல் தாக்கல்

மாநிலத்​தின் புதிய முதல்​வ​ராகக் கடந்த மே 10-ம் தேதி பதவி​யேற்​றுக் கொண்​டார். முதல்​வர் விஜய் உட்பட 35 அமைச்​சர்​கள் தற்​போது அமைச்​சர​வை​யில் இடம் பெற்​றுள்​ளனர். ஆட்​சி​யமைக்க ஆதர​வளித்த

Read More
அரசியல்சினிமாதமிழ்நாடுநிகழ்ச்சிகள்

இனி கவர்ன்மென்ட் ஹாஸ்பிடல்ல கியூவில் நிக்க தேவை இல்லை: CM விஜய்

முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், தமிழ்நாடு ஹெல்த் பவுண்டேஷனின் இணைய தளமான ‘நலம் டி.என்.’ (Nalam TN) என்ற தளத்தைத் தொடங்கி வைத்தார். இத்தளம் பெரு நிறுவனங்கள்,

Read More
அரசியல்சினிமாதமிழ்நாடுநிகழ்ச்சிகள்

கரூர் செல்கிறார் முதலமைச்சர் விஜய்.. 32 பேருக்கு கருணை அடிப்படையில் அரசுப் பணி

முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக இன்று கரூர் செல்லும் விஜய், 32 பேருக்கு கருணை அடிப்படையில் அரசுப் பணி வழங்குகிறார். கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம்

Read More
அரசியல்தமிழ்நாடுமாவட்டம்வணிகம்

தமிழ்நாட்டில் தனி நபரின் கடன் ரூ. 1.28 லட்சமாக உயர்ந்துள்ளது” – வெள்ளை அறிக்கையை வெளியிட்ட நிதி அமைச்சர்

முதலமைச்சர் ச. ஜோசப் விஜய், “தமிழ்நாடு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடிக்கு மேல் கடன் உள்ளது. அரசின் கஜானாவை சுத்தமாக துடைத்து வழித்து வைத்துவிட்டுச் சென்றுள்ளனர்.

Read More
அரசியல்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்மாவட்டம்

தவெக அரசு அமைந்த பின்… முதன்முதலாக தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் 

தவெக அரசு பொறுப்பேற்ற பின், தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் முதன்முதலாக இன்று நடைபெறவுள்ளது. முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு கடந்த மாதம் 10ஆம்

Read More
அரசியல்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்

100-க்கும் மேற்பட்ட டெண்டர்கள் ரத்து… அதிகாரிகள் சஸ்பெண்ட்… தமிழ்நாடு அரசு அதிரடி

தமிழ்நாடு அரசு மே 13 முதல் 22 வரை வெளியிடப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட குறுகிய கால டெண்டர்களை நிர்வாக காரணங்களால் ரத்து செய்தது, சில அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்
பொதுப்பணித் துறை, மின்சாரத் துறை உள்ளிட்ட துறைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட குறுகிய கால டெண்டர்களை தமிழ்நாடு அரசு ரத்து செய்துள்ளது.
அவசர மற்றும் அவசியமான தேவைகளுக்காக வழக்கமான கால அவகாசத்தைக் குறைத்து குறுகிய கால டெண்டர்கள் வழங்கப்படும். ஆனால், முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைந்த பிறகு குறுகிய டெண்டர்கள் மூலம் பணிகளை மேற்கொள்ளக் கூடாது என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, பல்வேறு குறுகிய கால டெண்டர்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், சென்னை மாநகராட்சி மற்றும் ஊரக வளர்ச்சித் துறையில் குறுகிய கால டெண்டர் வெளியிட்ட அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.இந்நிலையில், மே 13 முதல் மே 22 ஆம் தேதி வரை வெளியிடப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட டெண்டர்களை தமிழ்நாடு அரசு ரத்து செய்துள்ளது.

Read More