TVKஅரசியல்தமிழ்நாடுமாவட்டம்வணிகம்

2026 – 2027-ம் நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் ஆகஸ்ட் 5-ல் தாக்கல்

மாநிலத்​தின் புதிய முதல்​வ​ராகக் கடந்த மே 10-ம் தேதி பதவி​யேற்​றுக் கொண்​டார். முதல்​வர் விஜய் உட்பட 35 அமைச்​சர்​கள் தற்​போது அமைச்​சர​வை​யில் இடம் பெற்​றுள்​ளனர். ஆட்​சி​யமைக்க ஆதர​வளித்த கூட்​டணி கட்​சிகளுக்​கும் அமைச்​சர​வை​யில் வாய்ப்பு வழங்​கப்​பட்​டது.

புதி​தாக ஆட்​சிப் பொறுப்​பேற்​றுள்ள தவெக அரசின் முதல் சட்​டப்​பேர​வைக் கூட்​டம் ஆளுநர் உரை​யுடன் கடந்த ஜூன் 19-ம் தேதி தொடங்​கியது. அன்​றைய கூட்​டத்​தில் தமிழக அரசு தயாரித்த உரையை எந்த மாற்​ற​மும் இன்றி முழு​மை​யாக ஆளுநர் அர்​லேகர் வாசித்​தார். அதன்​பின் அலு​வல் ஆய்​வுக் குழு​வில் எடுக்​கப்​பட்ட முடி​வின்​படி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்​கும் தீர்​மானத்​தின் மீதான விவாதம் ஜூன் 23-ம் தேதி வரை நடத்​தப்​பட்​டது. பின்பு சட்​டப்​பேரவை தேதி குறிப்​பி​டா​மல் ஒத்தி வைக்​கப்​பட்​டது.

தமிழக சட்​டப்​பேர​வை​யில் 2026 -2027 நிதி ஆண்​டுக்​கான தவெக அரசின் முதல் பட்​ஜெட் ஆகஸ்ட் 5-ம் தேதி தாக்​கல் ஆகிறது. மறு​நாள் வேளாண் நிதி​நிலை அறிக்கை சமர்ப்​பிக்​கப்​படு​கிறது என்று சட்​டப்​பேர​வைத் தலை​வர் ஜேசிடி பிர​பாகர் அறி​வித்​துள்​ளார்.

தமிழகத்​தில் நடந்து முடிந்த சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) வெற்றி பெற்றது. ஆட்சி அமைக்க போதிய பலம் இல்லாததால்,காங்​கிரஸ், இடதுசாரி கட்சிகள், விடுதலைச் சிறுத்தை கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு அளித்தன. அதன்பின் தவெக ஆட்சி அமைத்தது.

நடப்பு நிதி ஆண்​டுக்​கான (2026-27) பட்​ஜெட்டை ஆகஸ்ட் முதல் வாரத்​தில் தாக்​கல் செய்ய தமிழக அரசு முடிவு செய்​தது. அதற்​கேற்ப பட்​ஜெட் தயாரிப்பு பணி​கள் ஏற்​கெனவே முடுக்​கி​விடப்​பட்​டுள்​ளன. பட்​ஜெட்​டில் இடம்​பெற வேண்​டிய புதிய திட்​டங்​கள், ஏற்​கெனவே செயல்​பாட்​டில் உள்ள திட்​டங்​களின் முன்​னேற்​றம், பல்​வேறு துறை​களின் செயல்​பாடு​கள் உள்​ளிட்​டவை குறித்து முதல்​வர் விஜய் தலை​மை​யில் கடந்த ஜூலை 2-ம் தேதி தொடங்கி துறை​கள் வாரி​யான ஆலோ​சனைக் கூட்​டங்​கள் நடத்​தப்​பட்டு வரு​கின்​றன. இந்​தக் கூட்​டங்​கள் ஜூலை 28-ம் தேதி வரை நடை​பெறவுள்​ளன.

இதைத்​தொடர்ந்து பட்​ஜெட் தாக்​கல் செய்​வது தொடர்​பாக அமைச்​சர​வைக் கூட்​டம் சென்னை முதல்​வர் விஜய் தலை​மை​யில் சென்னை தலை​மைச் செயல​கத்​தில் கடந்த ஜூலை 16-ம் தேதி நடை​பெற்​றது. இந்​தக் கூட்​டத்​தில் பட்​ஜெட்​டில் இடம்​பெற வேண்​டிய சிறப்​பம்​சங்​கள், தேர்​தல் வாக்​குறு​தி​களில் உடனே நிறைவேற்​றக் கூடிய அறி​விப்​பு​கள், மகளிர் உரிமைத்​தொகை உயர்வு உள்​ளிட்ட பல்​வேறு அம்​சங்​கள் குறித்து விரி​வாக விவா​திக்​கப்​பட்​டன. அவற்​றில் சில திட்​டங்​களுக்கு ஒப்​புதல் பெறப்​பட்​டுள்​ள​தாக​வும் தகவல்​கள் வெளி​யாகி​யுள்​ளன. மேலும், பட்​ஜெட் கூட்​டத் தொடருக்கு அமைச்​சர்​கள் முழு​மை​யாக தயா​ராகி வரவேண்டும் எனவும் முதல்​வர் விஜய் தரப்​பில் அறி​வுறுத்​தப்​பட்​டது.

இந்​நிலை​யில் தமிழக சட்​டப்​பேரவை மீண்​டும் ஆகஸ்ட் 5-ம் தேதி நடை​பெறும் எனவும், அன்​றைய தினம் பட்​ஜெட் தாக்​கல் செய்​யப்பட உள்​ள​தாக​வும் அறி​விப்பு வெளி​யாகி​யுள்​ளது. இதுகுறித்து சபாநாயகர் ஜேசிடி பிர​பாகர் சென்னை தலை​மைச் செயல​கத்​தில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: தமிழக சட்​டப்​பேர​வைக் கூட்​டம் ஆகஸ்ட் 5-ம் தேதி காலை 10 மணிக்கு கூடும். அன்​றைய தினம் திருத்​தப்​பட்ட பட்​ஜெட் தாக்​கல் செய்​யப்​படும்.