Author: Namadhu Arasu

தமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்

மக்களைத் தேடி இனி அதிகாரிகள் வருவார்கள்: ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை தொடங்கிவைத்து முதல்வர்

உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நேற்று தொடங்கிவைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், மக்களைத் தேடி இனி அதிகாரிகள் வருவார்கள் என்று கூறினார்.

காமராஜர் பிறந்தநாளையொட்டி, சிதம்பரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் காமராஜர் படத்துக்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்திய முதல்வர் ஸ்டாலின், தொடந்து பரமேஸ்வரநல்லூர் பகுதியில் அமைக்கப்பட்ட அரங்கில் பேசியதாவது: 2021-ம் ஆண்டுக்கு முன்பு ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என அனைத்துத் தொகுதிகளிலும் மனுக்களைப் பெற்றோம். ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ என்று தனித் துறையை உருவாக்கி, அந்த மனுக்களுக்கு 100 நாட்களில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. திமுக ஆட்சியின் மீது நம்பிக்கைவைத்து, பல்லாயிரக்கணக்கான மனுக்களை மக்கள் வழங்கினர். அதற்காக ‘முதல்வரின் முகவரி’ என்ற தனித் துறையை உருவாக்கி, மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டது.
அதன் பிறகு ‘மக்களுடன் முதல்வர்’ என்ற திட்டத்தை தொடங்கி, தமிழ்நாடு முழுவதும் 5 ஆயிரம் இடங்களில் முகாம்கள் நடத்தி, பல லட்சம் மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டது. தற்போது தொடங்கப்பட்டுள்ள ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் முகாம்கள் நடைபெறும். தன்னார்வலர்கள் வீடுவீடாக வந்து மக்களின் குறைகளைக் கேட்டு, 46 சேவைகளுக்கான விண்ணப்பங்களை வழங்க உள்ளனர்.
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் மட்டும் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் வழங்கப்படும். தகுதி உள்ள மகளிர்க்கு கண்டிப்பாக மகளிர் உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த திட்டத்தின்கீழ் சேவைகளைச் செய்ய மக்களைத் தேடி அதிகாரிகள், அலுவலர்கள் வருவார்கள். இந்த மேடையில் மார்க்சிய இயக்கத் தலைவர்கள், காந்திய வழித் தலைவர்கள், அம்பேத்கர் வழித் தலைவர்கள் ஒற்றுமையாக அமர்ந்திருக்கிறோம். இதைத்தான் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்று சொல்கிறேன். இதேபோல, தமிழ்நாடு ஓரணியில் நிற்கும்போது, டெல்லி காவி அணியின் கனவுத் திட்டமும் பலிக்காது.
இளையபெருமாளுக்கு மரியாதை.. அகில இந்திய தீண்டாமை ஒழிப்பு கமிட்டி தலைவராக இளையபெருமாள் இருந்தபோது, நாடு முழுவதும் பயணித்து, பட்டியலின மக்களின் மீதான சாதியக் கொடுமைகளை ஆய்வுசெய்து, அறிக்கையை உருவாக்கினார். அவர் அளித்த அறிக்கை, சாதி அமைப்பை துல்லியமாகப் பதிவு செய்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில்தான் தமிழகத்தில் பல்வேறு சமூகத்தைச் சேர்ந்த 29 அர்ச்சகர்கள், வெவ்வேறு கோயில்களில் பணியாற்றி வருகிறார்கள்.

1998-ல் அம்பேத்கர் பெயரிலான தமிழக அரசு விருதை முதன்முதலாக இளையபெருமாளுக்கு அப்போதைய முதல்வர் கருணாநிதி வழங்கினார். சிதம்பரத்தில் நூற்றாண்டு அரங்கம் மற்றும் சிலையை தற்போது திறந்து வைத்திருப்பது, திராவிட மாடல் அரசு அவருக்கு செலுத்தும் நன்றியாகும். இவ்வாறு முதல்வர் பேசினார்.

நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்ஆர்கே.பன்னீர்செல்வம், சி.வெ.கணேசன், சாமிநாதன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், முன்னாள் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, கடலூர் எம்.பி. விஷ்ணு பிரசாத், எம்எல்ஏ-க்கள் கடலூர் கோ.ஐயப்பன், நெய்வேலி சபா ராஜேந்திரன், பண்ருட்டி வேல்முருகன், காட்டுமன்னார்கோவில் சிந்தனைச்செல்வன், மாவட்ட ஆட்சியர் சிபிஆதித்யா செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

46 சேவைகள்… முதல்வர் தொடங்கிவைத்துள்ள ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் பட்டா மாற்றம், பிறப்பு-இறப்பு சான்றிதழ், மின் இணைப்பு, வேளாண் மானியம், மகளிர் உதவித்தொகை உள்ளிட்ட 46 சேவைகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்படும். பொதுமக்கள் இந்த முகாமில் வழங்கும் மனுக்களுக்கு அதிகபட்சமாக 45 நாட்களில் தீர்வுகாண இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மகளிர் உதவித்தொகை பெற விரும்புவோர் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்றும் அரசுத் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்துக்காக நகர்புறப் பகுதிகளில் 3,768 முகாம்களும், ஊரகப் பகுதிகளில் 6,232 முகாம்களும் நடத்தப்பட உள்ளன.

Read More
தமிழ்நாடுநிகழ்ச்சிகள்

வேலைவாய்ப்பற்ற மயிலாடுதுறை இளைஞர்களே! உதவித்தொகை பெற இதுதான் கடைசி தேதி: முழு விபரம்

வேலைவாய்ப்பற்ற மயிலாடுதுறை இளைஞர்களே உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவுசெய்துள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியுள்ள பதிவுதாரர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். மேலும் 29.08.2025 அன்றுக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பித்து பயனடையுமாறு அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கேட்டுக்கொண்டுள்ளார்.

யார் தகுதியானவர்கள்?
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தில் பயன்பெற, 30.06.2025 அன்று ஐந்து வருடங்கள் முடிவடைந்த (மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை முறையாக புதுப்பித்துள்ள) பதிவுதாரர்கள் தகுதியுடையவர்கள் ஆவர். இதில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், மேல்நிலை வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்கள் ஆகியோர் அடங்குவர்.

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு சலுகைகள்
மாற்றுத்திறனாளிகளைப் பொறுத்தவரை, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள் அல்லது பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், மேல்நிலை வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்று 30.06.2025 அன்று ஒரு வருடம் முடிவடைந்த பதிவுதாரர்கள் தகுதியுடையவர்கள். மாற்றுத்திறனாளிகளுக்கு வருமானம் மற்றும் வயது உச்ச வரம்பு ஏதும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுப்பிரிவினருக்கான உதவித்தொகை விவரம்
பத்தாம் வகுப்பு தேர்ச்சியின்மை (SSLC-Failed) உள்ளவர்களுக்கு மாதம் ரூ.200/-

பத்தாம் வகுப்பு தேர்ச்சி (SSLC-Passed) பெற்றவர்களுக்கு மாதம் ரூ.300/-

மேல்நிலை வகுப்பு தேர்ச்சி (HSC-Passed) பெற்றவர்களுக்கு மாதம் ரூ.400/-

பட்டப்படிப்பு தேர்ச்சி (DEGREE-Passed) பெற்றவர்களுக்கு மாதம் ரூ.600/-
இந்த உதவித்தொகை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கணக்கிடப்பட்டு பயனாளியின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.

வயது மற்றும் வருமான வரம்பு (பொதுப்பிரிவினருக்கு)
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பிரிவினர் 45 வயதுக்குள்ளும், இதர பிரிவினர் 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.

குடும்பத்தின் அதிகபட்ச ஆண்டு வருமானம் ரூ.72,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை விவரம்:
பத்தாம் வகுப்பு தேர்ச்சியின்மை மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.600/-

மேல்நிலை வகுப்பு தேர்ச்சி (HSC-Passed) பெற்றவர்களுக்கு மாதம் ரூ.750/-

பட்டப்படிப்பு தேர்ச்சி (DEGREE-Passed) பெற்றவர்களுக்கு மாதம் ரூ.1000/-

மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை ஒவ்வொரு மாதமும் நேரடியாக அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
தகுதியற்றவர்கள் யார்?
ஏற்கனவே மூன்று ஆண்டுகள் உதவித்தொகை பெற்றவர்கள்.

பொறியியல், மருத்துவம், விவசாயம் மற்றும் சட்டம் போன்ற தொழில் சார்ந்த பட்டப் படிப்புகள் முடித்தவர்கள்.

அரசுப்பணியில் உள்ளவர்கள் அல்லது தனியார் துறையில் ஒருமுறையாவது பணியில் சேர்ந்து ஊதியம் பெற்றவர்கள் அல்லது பெறுபவர்கள்.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறுபவர்கள் மற்றும் அரசின் வேறு ஏதேனும் திட்டத்தில் உதவித்தொகை பெறுபவர்கள்.

எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் தற்போது பயில்பவர்கள்.
விண்ணப்பிக்கும் முறை
தகுதியுடைய பதிவுதாரர்கள், தேவையான அனைத்து அசல் மற்றும் நகல் ஆவணங்களுடன் நேரில் விண்ணப்பிக்கலாம்.

தேவையான ஆவணங்கள்
வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை

பள்ளி, கல்லூரிகளின் மதிப்பெண் சான்றிதழ் மற்றும் மாற்றுச்சான்றிதழ்

குடும்ப அட்டை
ஆதார் அட்டை
சாதிச்சான்றிதழ்
தேசியமயமாக்கப்பட்ட ஏதேனும் ஒரு வங்கியில் தங்கள் பெயரிலுள்ள வங்கிக் கணக்குப் புத்தகம்
அணுக வேண்டிய முகவரி
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்,

2வது தெரு, பாலாஜி நகர்,

பூம்புகார் சாலை,

மயிலாடுதுறை-1.

விண்ணப்பப் படிவத்தை அலுவலகத்தில் இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம் அல்லது https://tnvelaivaaippu.gov.in/download.html என்ற இணையதள பக்கத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இணையதளத்தில் பதிவிறக்கம் செய்பவர்கள் 04364-299790 என்ற அலுவலக தொலைபேசி எண்ணை தொடர்புகொண்டு உரிய அறிவுரை பெற்று பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை 29.08.2025-க்குள் சமர்ப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி தகுதியுள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயனடையுமாறு மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.

Read More
தமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்

மனுக்கள் மீது உடனடி தீர்வு – ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் இன்று முதல்…

’உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்க இருக்கும் நிலையில், முகாம் நடத்துவதற்கு முன்பாக தன்னார்வலர்கள் மூலம் மக்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசின் செய்தித் தொடர்பாளர் அமுதா தெரிவித்துள்ளார்.
மக்கள் வசிக்கும் பகுதிகளிலேயே அரசின் சேவைகளை கொண்டு செல்லும் விதமாக ’உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்த உள்ளது. இந்த திட்டம் குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அரசின் செய்தித் தொடர்பாளர் அமுதா, ’உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை முதலமைச்சர் சிதம்பரத்தில் தொடங்கி வைக்க இருப்பதாகக் கூறினார்.
இந்த திட்டத்தின் கீழ் நகர்ப்புறங்களில் 3738 முகாம்கள், ஊரகப் பகுதிகளில் 6232 முகாம்கள் என நவம்பர் மாதம் வரை 10 ஆயிரம் முகாம்கள் நடத்தப்பட உள்ளதாகவும், நகர்ப்புறத்தில் 43 சேவைகள், ஊரகப் பகுதிகளில் 46 சேவைகள் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் ஆவணங்களை முறையாக மக்கள் கொண்டுவந்தால் உடனடியாக மனு மீது தீர்வு காணப்படும் என்றும் அமுதா கூறினார்.கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்களும் ’உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களில் பெறப்படும் என்றும் மகளிர் உரிமைத் தொகை பெறாத பெண்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து முகாம்களில் கொடுக்கலாம் என்றும் தெரிவித்தார்.முகாம்களில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்று கூறிய அமுதா, இந்தத் திட்டத்திற்காக பிரத்யேகமாக “உங்களுடன் ஸ்டாலின்” இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Read More
தமிழ்நாடுநிகழ்ச்சிகள்

ரேஷன் கார்டில் மற்றம் செய்ய விரும்புவோர் இன்று நடக்கும் முகாமில் மாற்றம் செய்யலாம்…

தமிழகத்தில், 2.26 கோடி ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். இதில் ஏ.ஏ.ஒய்., மற்றும் பி.எச்.எச்., ரேஷன் கார்டுகளில் 3 கோடியே 65 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர்.உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கீழ் வழங்கப்படும் ரேஷன் கார்டு மூலமாகத்தான் மகளிர் உரிமைத் திட்டம் போன்ற நலத்திட்டங்களை மக்கள் பெற முடிகிறது.
இந்த நிலையில் பொது விநியோகத் திட்டப் பயனாளிகள் தங்கள் ரேஷன் கார்டுகளில் பெயர் நீக்கம், சேர்த்தல், முகவரி சான்று, தொலைபேசி எண் பதிவு ஆகியவற்றை மேற்கொள்ள வருகின்ற சனிக்கிழமை (12ஆம் தேதி) அன்று பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில்,பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை குடும்ப அட்டைதாரர்கள் எளிதில் பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் சென்னையைப் பொறுத்தவரை மண்டல அலுவலகங்களிலும் மக்கள் குறைதீர் முகாம் பிரதி மாதமும் இரண்டாம் சனிக்கிழமை நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது.
ஜூலை 2025 மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் 12.07.2025 அன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறவுள்ளது.
குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு / மாற்றம் செய்தல் மற்றும் அங்கீகாரச் சான்று உள்ளிட்ட பொது விநியோகத் திட்டம் தொடர்பான சேவைகள் மேற்கொள்ளப்படும்.
சென்னையிலுள்ள 19 மண்டல அலுவலகப் பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இச்சேவையினைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பிற மாவட்டங்களில் மண்டல, வட்ட வழங்கல் அதிகாரிகள் அளவில் இந்த குறைதீர் முகாம்கள் நடத்தப்படும்.

Read More
சினிமாதமிழ்நாடுநிகழ்ச்சிகள்

வேள்பாரி” நாவல் வெளியீட்டு விழாவில் ரஜினி பேச்சு…

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் “வீரயுக நாயகன் வேள்பாரி” நாவல் ஒரு லட்சம் பிரதிகளை கடந்ததை கொண்டாடும் வகையில் வெற்றி விழா நடைபெற்றது.
இந்த வெற்றி விழாவில் நாவல் ஆசிரியரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி.யுமான சு.வெங்கடேசன் வெற்றி விழா உரை நிகழ்த்த சிறப்பு விருந்தினர்களான நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கர், தமிழ்நாடு நிதித்துறைச் செயலாளர் உதயசந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதில் நடிகர் ரஜினி பேசுகையில், “தமிழ் சினிமாவை மாற்றியவர்களில் முக்கியமானவர்கள் பாரதிராஜா, மணிரத்னம் பிறகு ஷங்கர். இயக்குநர் ஷங்கர் படங்களை பொறுத்தவரை, அதில் வெறும் பிரமாண்டம் மட்டும் இருக்காது, சமூக நீதி இருக்கும், தத்துவம் இருக்கும். சமூகத்துக்கு நல்ல ஒரு அறிவுரை இருக்கும். அவருடன் 3 படங்கள் பண்ணேன். 3 படங்களும் வெற்றிப்படங்கள். ‘வேள்பாரி’ உரிமையை ஷங்கர் வாங்கியிருக்கிறார்.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் “வீரயுக நாயகன் வேள்பாரி” நாவல் ஒரு லட்சம் பிரதிகளை கடந்ததை கொண்டாடும் வகையில் வெற்றி விழா நடைபெற்றது.
இந்த வெற்றி விழாவில் நாவல் ஆசிரியரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி.யுமான சு.வெங்கடேசன் வெற்றி விழா உரை நிகழ்த்த சிறப்பு விருந்தினர்களான நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கர், தமிழ்நாடு நிதித்துறைச் செயலாளர் உதயசந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதில் நடிகர் ரஜினி பேசுகையில், “தமிழ் சினிமாவை மாற்றியவர்களில் முக்கியமானவர்கள் பாரதிராஜா, மணிரத்னம் பிறகு ஷங்கர். இயக்குநர் ஷங்கர் படங்களை பொறுத்தவரை, அதில் வெறும் பிரமாண்டம் மட்டும் இருக்காது, சமூக நீதி இருக்கும், தத்துவம் இருக்கும். சமூகத்துக்கு நல்ல ஒரு அறிவுரை இருக்கும். அவருடன் 3 படங்கள் பண்ணேன். 3 படங்களும் வெற்றிப்படங்கள். ‘வேள்பாரி’ உரிமையை ஷங்கர் வாங்கியிருக்கிறார்.
ஜெயகாந்தன் எனக்கு பிடித்த எழுத்தாளர். பிரமாணர்கள் குறித்து அவர் கதை எழுதினாள் அங்கே தான் பிறந்தாரோ என தோன்றும். அந்த அளவுக்கு எழுதுவார். யாருக்காக அழுதான் புத்தகத்தை படித்து 3 நிமிடம் அவருக்காக அழுதேன். வந்தார்கள் வென்றார்கள் படித்தால் கண்களில் ரத்தம் வரும்” என்றார்.
அனுபவசாலிகள் இல்லை என்று சொன்னால் எந்த இயக்குமும், எந்த கட்சியும் தேறாது. அவர்கள் தூண்கள் மட்டுமல்ல. சிகரங்கள் கூட” என்று நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் நடந்த விழாவில் பேசியுள்ளார்.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் “வீரயுக நாயகன் வேள்பாரி” நாவல் ஒரு லட்சம் பிரதிகளை கடந்ததை கொண்டாடும் வகையில் வெற்றி விழா நடைபெற்றது.
இந்த வெற்றி விழாவில் நாவல் ஆசிரியரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி.யுமான சு.வெங்கடேசன் வெற்றி விழா உரை நிகழ்த்த சிறப்பு விருந்தினர்களான நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கர், தமிழ்நாடு நிதித்துறைச் செயலாளர் உதயசந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அனுபவசாலிகள் இல்லை என்று சொன்னால் எந்த இயக்குமும், எந்த கட்சியும் தேறாது. அவர்கள் தூண்கள் மட்டுமல்ல. சிகரங்கள் கூட” என்று நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் நடந்த விழாவில் பேசியுள்ளார்.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் “வீரயுக நாயகன் வேள்பாரி” நாவல் ஒரு லட்சம் பிரதிகளை கடந்ததை கொண்டாடும் வகையில் வெற்றி விழா நடைபெற்றது.
இந்த வெற்றி விழாவில் நாவல் ஆசிரியரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி.யுமான சு.வெங்கடேசன் வெற்றி விழா உரை நிகழ்த்த சிறப்பு விருந்தினர்களான நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கர், தமிழ்நாடு நிதித்துறைச் செயலாளர் உதயசந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அனுபவசாலிகள் இல்லை என்று சொன்னால் எந்த இயக்குமும், எந்த கட்சியும் தேறாது. அவர்கள் தூண்கள் மட்டுமல்ல. சிகரங்கள் கூட’ என்றும் சொல்லலாம் என இருந்தேன். ஆனால் அதை மறந்துவிட்டேன். அதனால் இந்த முறை வரும்போது கவனமாக இருக்க வேண்டும் என நினைத்தேன். சரியாக பேச வேண்டும் என நினைத்தேன்.
சிவகுமார், கமல்ஹாசனை கூப்பிடாமல், 75 வயதிலும், கூலிங் க்ளாஸ் போட்டு, ஸ்லோமோஷனில் நடந்துவரும் என்ன கூப்பிட்டுள்ளார்கள் என நினைப்பார்கள். அதனால் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என முடிவு செய்தேன். ஜெயகாந்தன் எனக்கு பிடித்த எழுத்தாளர். பிரமாணர்கள் குறித்து அவர் கதை எழுதினாள் அங்கே தான் பிறந்தாரோ என தோன்றும். அந்த அளவுக்கு எழுதுவார். யாருக்காக அழுதான் புத்தகத்தை படித்து 3 நிமிடம் அவருக்காக அழுதேன். வந்தார்கள் வென்றார்கள் படித்தால் கண்களில் ரத்தம் வரும்” என்றார்.

Read More
அறிவியல்ஆன்மீகம்தமிழ்நாடு

இன்று குரு பூர்ணிமா… என்ன செய்ய வேண்டும் …

குரு பூர்ணிமா என்பது ஆனி மாத பௌர்ணமி தினத்தில் கொண்டாடப்படும் ஒரு புனிதமான பண்டிகையாகும். குருமார்கள், ஆசிரியர்கள், மற்றும் வழிகாட்டிகளைப் போற்றும் நாளாக இது அனுசரிக்கப்படுகிறது. “குரு” என்ற சமஸ்கிருத சொல்லுக்கு “அறியாமை என்னும் இருளை நீக்கி அறிவொளியைப் புகட்டுபவர்” என்று பொருள்.
இந்து மதத்தில் மட்டுமல்லாமல், பௌத்த மற்றும் சமண மதங்களிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக குரு பூர்ணிமா கொண்டாடப்படுகிறது. மகாபாரதத்தை எழுதிய மகரிஷி வேத வியாசரின் பிறந்த நாளாகவும் இது கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், மாணவர்கள் தங்கள் குருக்களின் ஆசிகளைப் பெறவும், அவர்களுக்கு மரியாதை செலுத்தவும் செய்கிறார்கள்.
ஒவ்வொரு வருடமும் ஆனி மாதத்தில் வரும் பௌர்ணமி “குரு பூர்ணிமா” அல்லது “வியாச பூர்ணிமா” என்று அழைக்கப்படுகிறது. ஒரு வருடத்தில் வரும் மிக முக்கியமான பெளர்ணமிகளில் ஆனி மாதத்தில் வரும் குரு பூர்ணிமாவும் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த பெளர்ணமி மட்டும் குருவிற்கு மரியாதை செலுத்தும் குரு பூர்ணிமாவாக கொண்டாடப்படுவதற்கு மிக முக்கியமான காரணம் சொல்லப்படுகிறது. வியாசர் அவதரித்த திருநாளையே குரு பூர்ணிமாவாக கொண்டாடுகிறோம். இப்படி போற்றும் அளவிற்கு வியாசர் அப்படி என்ன செய்தார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
சன்னியாச ஆசிரமத்தில், ஒவ்வொரு சன்னியாசியும் ஒவ்வொரு விதமான முறையில் துறவு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பார்கள். “குடீசகர்கள்” என்று அழைக்கப்படும் சன்னியாசிகள் ஒரு குடிசையிலேயே வாழ்ந்து கொண்டிருப்பார்கள். “பஹுதகர்கள்” என்று அழைக்கப்படும் இன்னொரு விதமான துறவிகள், அதிக நீர் உள்ள நதிக்கரையிலேயே வாழ்ந்து கொண்டிருப்பார்கள். “பரிவ்ராஜகர்கள்” என்று அழைக்கப்படும் ஒரு விதமானவர்கள், பயணம் செய்து கொண்டே இருப்பார்கள். ஒரு இடத்தில் (ஊரில்) மூன்று அல்லது சில குறிப்பிட்ட நாட்கள் தான் தங்குவார்கள்.
பரிவ்ராஜகர்கள் ஞானத்தை அடைந்திருப்பார்கள். குரு-சிஷ்ய பரம்பரையில் வந்திருப்பார்கள். தாங்கள் தங்கும் கிராமத்திலோ நகரத்திலோ பிச்சை எடுத்து தான் உணவு உட்கொள்வார்கள். சன்னியாசிகளுக்குப் பற்றின்மை எனும் பண்பு மிகவும் முக்கியமானது. ஒரே இடத்தில் அதிக நாட்கள் தங்கினால் அந்த இடத்திலோ, அங்கு வாழும் மக்களின் மேலோ மற்றும் அங்கு வாழும் மக்களுக்கு இவர்கள் மீதோ பற்று வந்துவிடும். அதனால் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு சஞ்சாரம் செய்து கொண்டே இருப்பார்கள். ஆனால் மழைக் காலத்திலோ ஊர் ஊராக சஞ்சரிக்க முடியாது. ஏனெனில் மழைக் காலத்தில் புதிதாகப் புட்கள், செடிகள் துளிர் விடும்; புழு பூச்சிகள் மண்ணிலிருந்து வெளி வரத் தொடங்கும். துறவிகளுக்கு அகிம்சை என்ற பண்பும் மிகவும் முக்கியமானது.
புட்களையும், செடிகளையும், புழு பூச்சிகளையும் மிதியாமல் சஞ்சரிப்பது கடினம் என்பதால், மழைக்காலம் தொடங்கி, முடியும் வரை (நான்கு மாதங்கள்) ஒரே இடத்தில் தங்கி விடுவார்கள். குறிப்பாக இயற்கை சீர் கெடாமல் இருந்த பண்டைக் காலத்தில், ஆனி மாத பவுர்ணமி அன்று தான் மழைக் காலமும் தொடங்கும். அவர்கள் எந்த ஊரில் மழைக்காலம் தொடங்கும் பொழுது இருக்கிறார்களோ அதே ஊரிலேயே நான்கு மாதங்களும் தங்கி விடுவார்கள். அவ்வூரில் வாழும் மக்கள் சன்னியாசிகளிடம் நான்கு மாதங்களில் வேதாந்த உபதேசம் செய்யுமாறு வேண்டிக் கொள்வார்கள். அந்தந்த ஊர் மக்களே அவருக்குத் தேவையான குடிசையை அமைத்து கொடுத்து பிச்சைக்கும் ஏற்பாடு செய்வார்கள்.
வாழ்க்கை முழுவதும் ஒவ்வொருவரும் வேதாந்தத்தில் ஈடுபட்டு, குரு மற்றும் ஈஸ்வரனை வழிபட வேண்டும். சன்னியாசி தான் ஞானத்தை பெற்றதற்கு நன்றியை வெளிபடுத்தும் வகையிலும், “தான் துவங்க இருக்கும் வேதாந்த உபதேசம் தடையில்லாமல் முடிவடையவும், வியாச பகவானை ஆராதித்துப் பூஜை செய்யும் இந்நாள், குரு பவுர்ணமி என்றும் வியாச பவுர்ணமி என்றும் அழைக்கப்படுகிறது. இந்நாளில் துறவிகள் மட்டுமில்லாமல், ஞான மற்றும் மோட்ச சாஸ்திரத்தை அறிய முற்படும் அனைவரும் தங்களது குருவையும், வியாச பகவானையும் ஆராதிக்க வேண்டும். வியாச பகவானை நிமித்தமாக வைத்து, (சிவ பெருமான் அல்லது ஸ்ரீமன் நாராயணன்) தொடங்கி, தங்களுடைய இப்பொழுதைய குரு வரை குரு பரம்பரையில் உள்ள அனைவரையும் இந்நாளில் வழிபட வேண்டும்.

Read More
இந்தியாதமிழ்நாடுவிளையாட்டு

இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை அலற விட்ட ஆகாஷ் தீப்!49 ஆண்டு கால சாதனையை தகர்த்தது !

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் வீழ்த்திய ஆகாஷ் தீப் 49 ஆண்டு கால சாதனையை தகர்த்துள்ளார்.
பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 337 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 587 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 407 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 2வது இன்னிங்சை விளையாடிய இந்திய அணி 427/6 என்ற நிலையில் டிக்ளேர் செய்தது.
ஆட்டநாயகன் கேப்டன் சுப்மன் கில்
இதனால் 608 என்ற இமாலய இலக்குடன் ஆடிய இங்கிலாந்து அணி 68 ஓவரில் 271 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் இந்திய அணி 337 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. மேலும் பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் முதன் முறையாக வெற்றியை ருசித்துள்ளது. முதல் இன்னிங்சில் இரட்டை சதம் (269 ரன்கள்), 2வது இன்னிங்சில் சதம் (161 ரன்) விளாசிய இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் ஆட்டநாயகன் விருது வென்றார்.
ஆகாஷ் தீப் 10 விக்கெட்
இந்திய அணி பாஸ்ட் பவுலர் ஆகாஷ் தீப் முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகளும், 2 இன்னிங்சில் 6 விக்கெட்டுகள் என மொத்தம் 10 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். ஆகாஷ் தீப் ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுகளும், ஒரு டெஸ்ட்டில் 10 விக்கெட்டுகளும் வீழ்த்துவது இதுவே முதன் முறையாகும். மற்றொரு பவுலர் முகமது சிராஜ் முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுகளும், 2வது இன்னிங்சில் 1 விக்கெட்டும் வீழ்த்தி வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கினார்.

ஆகாஷ் தீப் பெரும் சாதனை

இங்கிலாந்து மண்ணில் களம் கண்ட முதல் டெஸ்ட் போட்டியிலேயே 10 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆகாஷ் தீப் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரராகியுள்ளார். குறிப்பாக அவர் 49 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு பெரிய சாதனையைப் படைத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்தின் முதல் ஐந்து பேட்ஸ்மேன்களில் நான்கு பேரை (பென் டக்கெட், ஜோ ரூட், ஆலி போப் மற்றும் ஹாரி புரூக்) ஆகியோரை ஒரே இன்னிங்ஸில் அவுட்டாக்கிய‌ முதல் பந்துவீச்சாளர் என்ற பெருமையை ஆகாஷ் தீப் பெற்றுள்ளார்.
சிறந்த இந்திய பவுலர்
மைக்கேல் ஹோல்டிங் 1976ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்தின் முதல் 4 பேட்ஸ்மேன்களை அவுட்டாகியிருந்த நிலையில், ஆகாஷ் தீப் அவரது சாதனையை முறியடித்துள்ளார். மேலும் இங்கிலாந்து மண்ணில் சிறப்பாக பந்து வீசிய முதல் இந்திய பந்துவீச்சாளர் (187/10) என்ற பெருமையை ஆகாஷ் தீப் பெற்றார்.

முன்னாள் வீரர் சேத்தன் சர்மாவின் 10/188 சிறந்த பவுலிங்கை ஆகாஷ் தீப் முறியடித்துள்ளார். முகமது ஷமி போன்று பந்துவீசுவதால் ‘குட்டி’ ஷமி என அழைக்கப்படும் ஆகாஷ் தீப்புக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Read More
ஆன்மீகம்தமிழ்நாடு

திருச்செந்தூர் முருகன் கோயில் கும்பாபிஷேகம்

திருச்செந்தூர் முருகன் கோயில் கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது.திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில், முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவது தலமாக விளங்குகிறது. நூற்றாண்டுகளாக தமிழ் பக்தர்களின் ஆன்மீக ஈர்ப்பை தக்கவைத்திருக்கின்ற இத்தலத்தில், ஜூலை 7ம் தேதி கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. புணிதநீர் தரிசனம் மற்றும் கும்பாபிஷேக தருணத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோஷம் எழுப்பி முழங்கினர்.
அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த வாரம் முழுவதும் யாகசாலை பூஜைகள், மந்திரோச்சாடனங்கள் நடைபெற்றன. இன்று அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் பெருகத் தொடங்கியது. குடமுழுக்கு நிகழ்வின் போது புனிதநீர் ராஜகோபுரத்தின் மீது ஊற்றப்பட்டது. அதே நேரத்தில் ட்ரோன்களின் உதவியுடன் கோயிலின் வளாகம் முழுவதும் திரட்டிய புனிதநீர் பக்தர்களின் மீது தெளிக்கப்பட்டது. பக்தர்கள் “அரோகரா அரோகரா” என உரக்க முழங்கி, “வெற்றிவேல் வீரவேல்” எனக் கைகொட்டி ஆரவாரம் செய்தனர்.
சிறப்பு அம்சம் என்னவென்றால், இந்த ஆண்டின் கும்பாபிஷேக நிகழ்ச்சி தமிழ் மந்திரங்களோடும் நடத்தப்பட்டது. இதற்கு பெரிய வரவேற்பும், பாராட்டும் கிடைத்தது. இதன்மூலம், தமிழில் பக்தியையும் ஆன்மீக பாரம்பரியத்தையும் பரப்ப வேண்டிய முயற்சி வெற்றிகரமாக அமைந்தது.
பாதுகாப்பு நடவடிக்கையாக 6,000க்கும் மேற்பட்ட போலீசார் பணியில் ஈடுபட்டனர். எமர்ஜென்சி மருத்துவ குழுக்கள், தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் இருந்தன. பக்தர்கள் இடைவிடாது அலைமோதியதால், கோயில் நிர்வாகமும் அறநிலையத்துறை அமைச்சகமும் சிறப்பு பேருந்துகள், ரயில்கள் ஏற்பாடு செய்திருந்தது. சென்னை, கோவை, மதுரை, சேலம், திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பக்தர்கள் திரண்டனர்.
ராஜகோபுரம், மற்ற கோபுரங்கள் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டிருந்தது. வண்ண விளக்குகள், பூச்சோலை அலங்காரங்கள், பழங்கள், மஞ்சள்-குங்குமக் கப்புகள் என பக்திப் பரவசம் பொங்கியது. இன்று முழுவதும் முருகன் பாட்டுக்கள், பன்னிரு திருமுறை பாடல்கள் ஒலிபரப்பானது. இந்த நிகழ்வை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு முருகன் கோயில்களிலும் சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடைபெற்றன. வெளிநாட்டுப் பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் திருச்செந்தூருக்கு வந்தனர். முருகப்பெருமானின் அருளைப் பெற தங்களது நேரத்தையும் சக்தியையும் செலுத்தி பக்தர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். மிகுந்த பக்தி உணர்வோடு நடந்த இந்த கும்பாபிஷேகம், தமிழர் ஆன்மிக மரபின் பெருமையை மீண்டும் ஒளிர வைத்தது.

Read More
குற்றம்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்

போலீஸ் அதிகாரிகளின்கீழ் செயல்படும் தனிப்படைகள் அனைத்தும் கலைப்பு: டிஜிபி சங்கர் ஜிவால்

விசாரணை என்ற பெயரில் கோயில் காவலாளி போலீஸாரால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் எதிரொலியாக, போலீஸ் அதிகாரிகளின்கீழ் செயல்படும் தனிப்படைகளை கலைத்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

திருப்புவனம் கோயில் காவலாளி அஜித்குமார் மீதான போலீஸாரின் தாக்குதலில் அவர் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து உயர் போலீஸ் அதிகாரிகளின்கீழ் செயல்படும் தனிப்படைகளை கலைத்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவவிட்டுள்ளார். இதுதொடர்பாக மண்டல ஐஜிக்கள், காவல் ஆணையர்கள், மாவட்ட எஸ்பிக்கள் உள்ளிட்டோருக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் துணை ஆணையர்கள். போலீஸ் எஸ்பிக்கள், டிஎஸ்பிக்கள் உள்ளிட்டோரின்கீழ் செயல்படும் சிறப்பு (தனிப்படை) படைகள் நிரந்தரமாக செயல்படக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏதாவது குற்ற வழக்குகள் நடைபெற்றால் அதில் துப்பு துலக்குவதற்காக மட்டுமே துணை ஆணையர்கள், டிஎஸ்பிக்கள் உள்ளிட்ட அதிகாரிகள் தங்களுக்குகீழ் பணியாற்ற தனிப்படைகளை அமைத்துக் கொள்ளலாம் என்று புதிய உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த தனிப்படையை அமைப்பதற்கும் மண்டல ஐஜிக்கள் மற்றும் காவல் ஆணையர்கள் ஆகியோரிடம் உரிய அனுமதி பெற வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தி உள்ளார். அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு அதிகாரிகளின்கீழ் இயங்கும் நூற்றுக்கணக்கான தனிப்படை போலீஸாரை மாற்றுப் பணிகளில் ஈடுபடுத்த வேண்டும் என்றும் டிஜிபி அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே விசாரணை கைதிகளை போலீஸார் தேவை இல்லாமல் துன்புறுத்தக் கூடாது என அனைத்து மாவட்ட போலீஸாருக்கும் சட்டம்- ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
காவல் நிலையத்துக்கு யாரும் புகார் அளிக்க வந்தால் உடனடியாக விசாரித்து வழக்குக்கு தகுந்தவாறு சிஎஸ்ஆர் அல்லது எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும். தேவையில்லாமல் லத்தியை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். காவலர்கள் முதல் அதிகாரிகள் வரை சுய ஒழுக்கம் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

விசாரணை கைதிகளை தேவையில்லாமல் துன்புறுத்தக் கூடாது. அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தேவையில்லாத கஸ்டெடி இருக்கக் கூடாது. முழுமையான ரெக்கவரி என்ற பெயரில் துன்புறுத்தல் கூடாது.

விசாரணை மரணம் அல்லது விசாரணையின்போது வன்முறை இருக்க கூடாது. காவல் நிலையங்களில் பாலியல் தொடர்பான துன்புறுத்தல்கள் இருக்கக் கூடாது. காவலர்கள் சகிப்புத்தன்மையுடன் பணியாற்ற வேண்டும். கட்டப்பஞ்சாயத்து போன்ற செயல்களில் ஈடுபட கூடாது. இவ்வாறு கூறியுள்ளார்.

Read More
இந்தியாதமிழ்நாடுநிகழ்ச்சிகள்வணிகம்வணிகம்

குறையும் ஜிஎஸ்டி..! எந்தெந்த பொருட்களுக்கு …

டூத் பேஸ்ட், காலணி, ரெடிமேட் ஆடைகள், வாஷிங் மெஷின் உள்ளிட்ட பொருட்களின் ஜிஎஸ்டியை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் 4 அளவுகளில் ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறது. அதாவது, 5, 12, 18 மற்றும் 28 விழுக்காடு என்ற வகையில் ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டு வருகிறது. இதில், 12 விழுக்காடு என்ற வகையை ரத்து செய்ய மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாக கூறப்பட்ட நிலையில், அதன் கீழ் வரும் பொருட்களுக்கான வரியை 5 விழுக்காடாக குறைக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, டூத் பேஸ்ட், காலணி, ரெடிமேட் ஆடைகள், வாஷிங் மெஷின் மீதான வரி குறைக்கப்பட வாய்ப்புள்ளது. குக்கர், குடை, தையல் இயந்திரம், வாட்டர் ஹீட்டர் உள்ளிட்ட பொருட்களுக்கான ஜிஎஸ்டியும் 12 விழுக்காட்டில் இருந்து 5 சதவிகிதத்திற்கு குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலம், பெருவாரியான வீட்டு உபயோகப் பொருட்களின் விலை குறையும் என கூறப்படுகிறது. இம்மாதத்தில் நடைபெற உள்ள 52 ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இது தொடர்பான முடிவு எடுக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

Read More