Author: Namadhu Arasu

அரசியல்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்

10, 12ம் வகுப்பு மாணவர்களை இன்று கவுரவிக்கிறார் விஜய்; விருது வழங்கும் விழாவுக்கு ஏற்பாடு

த.வெ.க., தலைவர் விஜய் 10, 12ம் வகுப்புகளில் சிறந்த மதிப்பெண்களை பெற்ற மாணவ, மாணவிகளை இன்று (மே 30) சந்தித்து கவுரவிக்க உள்ளார்.
தமிழகம், புதுச்சேரியில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு முடிவுகள், சமீபத்தில் வெளியாகின. இந்த தேர்வுகளில், சட்டசபை தொகுதி வாரியாக, அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேரில் அழைத்து பாராட்ட உள்ளார்.
இன்று(மே 30) சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள ஹோட்டலில் விஜய் கல்வி விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 600க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் அவர்களின் பெற்றோர் என 2000க்கும் மேற்பட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.

இதில், சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் உள்ள 88 சட்டசபை தொகுதிகளை சேர்ந்த மாணவர்கள் பாராட்டப்பட உள்ளனர். பெற்றோர் முன்னிலையில், மாணவர்களுக்கு சான்றிதழ், ஊக்கத்தொகை ஆகியவற்றை, த.வெ.க., தலைவர் விஜய் வழங்க உள்ளார்.

Read More
அரசியல்சினிமாதமிழ்நாடு

“அன்பு ஒருபோதும் மன்னிப்பு கேட்காது” – கன்னடம் குறித்து கருத்துக்கு கமல்ஹாசன்

தமிழில் இருந்துதான் கன்னடம் தோன்றியது என்ற கருத்துக்காக மன்னிப்புக் கேட்க முடியாது என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ள ‘தக் லைஃப்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் அண்மையில் நடைபெற்றது. விழாவில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் குறித்து பேசிய கமல்ஹாசன், “ராஜ்குமாருடைய குடும்பம் கர்நாடகாவில் இருக்கும் தனது குடும்பம்” என்றும், “அவர் விழாவுக்கு வந்திருப்பதால் தான் தன்னுடைய பேச்சை தொடங்கும் போது ‘உயிரே உறவே தமிழே’ என்று தொடங்கியதாகக்” கூறினார். மேலும், “தமிழிலிருந்து பிறந்ததுதான் கன்னடம்” என்றும் கூறினார்.
கமல்ஹாசனின் இந்த கருத்துக்கு கன்னட ரக்‌ஷன வேதிகே உள்ளிட்ட அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “கர்நாடகாவை அவமதித்தால் கமல்ஹாசனின் படங்களுக்கு தடை விதிக்கப்படும்” என்றும், “கர்நாடகாவிற்கும் அதன் மக்களுக்கும் எதிராகப் பேசினால், உங்களுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்படும்” என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் சில கன்னட அமைப்புகள் கமல்ஹாசனுக்கு எதிராக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றன.

இதேபோல் கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் கமல்ஹாசனுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், “நடிகர் கமல்ஹாசனுக்கு கன்னட மொழி குறித்த வரலாறு தெரியாது. கன்னடமொழிக்கு நீண்ட வரலாறு உண்டு. அது கமலுக்கு தெரியவில்லை. வரலாறு தெரியாமல் கமல்ஹாசன் பேசுகிறார்” என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல், “கன்னடம் குறித்து பேசியதற்கு கமல் மன்னிப்பு கேட்க வேண்டும்; மன்னிப்பு கேட்கவில்லை என்றால் Thug Life படத்தை கர்நாடகாவில் தடை செய்வோம்” என்று கர்நாடக அமைச்சர் சிவராஜ் தெரிவித்தார்.
இந்த நிலையில் தான், தமிழில் இருந்துதான் கன்னடம் தோன்றியது என்ற கருத்துக்காக மன்னிப்புக் கேட்க முடியாது என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கேரளாவில் நடைபெற்ற புரமோஷன் நிகழ்வில் பேசிய கமலஹாசன், “அவர்கள் இந்த விஷயத்தில் குழப்பத்தில் உள்ளனர். நான் பேசியவை அனைத்தும் அன்பு மிகுதியால் வந்தவை. மொழி குறித்த வரலாறுகளை வரலாற்று அறிஞர்கள் எனக்கு கற்பித்துள்ளனர். மற்ற மாநிலங்களை போல் இல்லாமல் தமிழ்நாட்டில் மட்டும் தான் ரெட்டி சமூகத்தை சேர்ந்தவர், தமிழர், கர்நாடகாவை சேர்ந்த அய்யங்கார் என பலர் முதல்வர்களாகி உள்ளனர். வேறு எந்த மாநிலத்திலும் இதுபோல் நடந்தது இல்லை.
advertisement
கர்நாடகாவில் பிறந்தது தமிழகத்தில் முதலமைச்சர் ஆகியவருக்கு ஒருமுறை பிரச்சினை என்று வந்தபோது கன்னடர்கள் ஆதரவு கொடுத்தததுடன், அந்த முதலமைச்சரை மீண்டும் கர்நாடகத்துக்கே வருமாறு அழைத்தனர். எனவே தக் லைஃப் படத்தையும் மற்றும் கமல்ஹாசனையும் மக்கள் பார்த்துக்கொள்வார்கள். மொழிகள் குறித்து பேச அரசியல்வாதிகளுக்கு தகுதி இல்லை. அதற்கான கல்வியறிவு அவர்களுக்கு இல்லை. இது எனக்கும் பொருந்தும். எனவே இந்த விஷயம் குறித்த விவாதத்தை வரலாற்று அறிஞர்களிடம், மொழி வல்லுநர்களிடம் விட்டுவிடலாம். நான் பேசியது சிவராஜ்குமார் மீதான அன்பில் வந்தவை. நாங்கள் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
advertisement
வடபகுதியைச் சேர்ந்தவர்கள் பார்வையில் இருந்தால் பார்த்தால் அவர்கள் சொல்வது அவர்களுக்கு சரியாக இருக்கும். அதுவே, தென்குமரி பக்கம் இருந்து பார்த்தால் நான் சொன்னது தான் சரியாக இருக்கும். இதில் மூன்றாவது கோணம் உள்ளது. அது நான் சொன்னதுபோல் வரலாற்று ஆய்வாளர்களின் பார்வை. அவர்கள் இந்த இரண்டுமே சரி என்பார்கள். ஆனால், கன்னடர்கள் நமது குடும்பத்தை சேர்ந்தவர்களா அல்லது வடக்கில் இருந்து வந்த மொழியை சேர்ந்தவர்களா எனபதை வரலாற்று அறிஞர்கள் முடிவு செய்வார்கள். இது பதில் இல்லை, விளக்கம். அன்பு ஒருபோதும் மன்னிப்பு கேட்காது” என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
“அன்பு ஒருபோதும் மன்னிப்பு கேட்காது” – கன்னடம் குறித்து கருத்துக்கு கமல்ஹாசன் விளக்கம்!
அதேபோல், “கன்னடம் குறித்து பேசியதற்கு கமல் மன்னிப்பு கேட்க வேண்டும்; மன்னிப்பு கேட்கவில்லை என்றால் Thug Life படத்தை கர்நாடகாவில் தடை செய்வோம்” என்று கர்நாடக அமைச்சர் சிவராஜ் தெரிவித்தார்.
இந்த நிலையில் தான், தமிழில் இருந்துதான் கன்னடம் தோன்றியது என்ற கருத்துக்காக மன்னிப்புக் கேட்க முடியாது என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கேரளாவில் நடைபெற்ற புரமோஷன் நிகழ்வில் பேசிய கமலஹாசன், “அவர்கள் இந்த விஷயத்தில் குழப்பத்தில் உள்ளனர். நான் பேசியவை அனைத்தும் அன்பு மிகுதியால் வந்தவை. மொழி குறித்த வரலாறுகளை வரலாற்று அறிஞர்கள் எனக்கு கற்பித்துள்ளனர். மற்ற மாநிலங்களை போல் இல்லாமல் தமிழ்நாட்டில் மட்டும் தான் ரெட்டி சமூகத்தை சேர்ந்தவர், தமிழர், கர்நாடகாவை சேர்ந்த அய்யங்கார் என பலர் முதல்வர்களாகி உள்ளனர். வேறு எந்த மாநிலத்திலும் இதுபோல் நடந்தது இல்லை.
கர்நாடகாவில் பிறந்தது தமிழகத்தில் முதலமைச்சர் ஆகியவருக்கு ஒருமுறை பிரச்சினை என்று வந்தபோது கன்னடர்கள் ஆதரவு கொடுத்தததுடன், அந்த முதலமைச்சரை மீண்டும் கர்நாடகத்துக்கே வருமாறு அழைத்தனர். எனவே தக் லைஃப் படத்தையும் மற்றும் கமல்ஹாசனையும் மக்கள் பார்த்துக்கொள்வார்கள். மொழிகள் குறித்து பேச அரசியல்வாதிகளுக்கு தகுதி இல்லை. அதற்கான கல்வியறிவு அவர்களுக்கு இல்லை. இது எனக்கும் பொருந்தும். எனவே இந்த விஷயம் குறித்த விவாதத்தை வரலாற்று அறிஞர்களிடம், மொழி வல்லுநர்களிடம் விட்டுவிடலாம். நான் பேசியது சிவராஜ்குமார் மீதான அன்பில் வந்தவை. நாங்கள் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
வடபகுதியைச் சேர்ந்தவர்கள் பார்வையில் இருந்தால் பார்த்தால் அவர்கள் சொல்வது அவர்களுக்கு சரியாக இருக்கும். அதுவே, தென்குமரி பக்கம் இருந்து பார்த்தால் நான் சொன்னது தான் சரியாக இருக்கும். இதில் மூன்றாவது கோணம் உள்ளது. அது நான் சொன்னதுபோல் வரலாற்று ஆய்வாளர்களின் பார்வை. அவர்கள் இந்த இரண்டுமே சரி என்பார்கள். ஆனால், கன்னடர்கள் நமது குடும்பத்தை சேர்ந்தவர்களா அல்லது வடக்கில் இருந்து வந்த மொழியை சேர்ந்தவர்களா எனபதை வரலாற்று அறிஞர்கள் முடிவு செய்வார்கள். இது பதில் இல்லை, விளக்கம். அன்பு ஒருபோதும் மன்னிப்பு கேட்காது” என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

Read More
குற்றம்தமிழ்நாடு

ஞானசேகரன் மீது நிரூபிக்கப்பட்ட 11 பிரிவுகள் என்னென்ன? முழு விவரம்…

தமிழ்நாட்டையே உலுக்கிய அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஞானசேகரனை குற்றவாளி என சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் 23ம் தேதி அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக மறுநாளே மாணவி அளித்த புகாரின்படி ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தால் 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டது. இந்த குழு ஞானசேகரன் மற்றும் 29 சாட்சியங்களிடம் விசாரணை நடத்தி, கடந்த பிப்ரவரி மாதம் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.
இந்த நிலையில், ஞானசேகரனுக்கு எதிரான வழக்கில் சென்னை மகளிர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அப்போது ஞானசேகரன் மீது பதியப்பட்ட 11 புகாரிலும், அவர் குற்றவாளி என நீதிபதி ராஜலட்சுமி தீர்ப்பளித்தார். மேலும் ஞானசேகரனுக்கு தண்டனை விவரம் ஜூன் 2ம் தேதி அறிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்தார்.
ஞானசேகரன் மீது நிரூபிக்கப்பட்ட 11 குற்றச்சாட்டு சட்டப்பிரிவுகளின் விவரம்:
1. 329 – மாணவியிடம் விருப்பத்துக்கு மாறாக அத்துமீறி நடத்தல்
2. 126(2) – மாணவியை செல்ல விடாமல் சட்டவிரோதமாக தடுத்து நிறுத்துதல்.
3. 87 – மாணவியை வலுக்கட்டாயமாக கடத்தி ஆசைக்கு இணங்க வைத்தல்.
4. 127(2) – மாணவியை உடலில் காயத்தை ஏற்படுத்துதல்.
5. 75(2) – மாணவியை விருப்பத்துக்கு மாறாக பாலியல் வன்கொடுமை செய்தல்.
6. 76 – மாணவியை கடுமையாக தாக்குதல்
7. 44 மாணவியின் தனிநபர் அந்தரங்கத்தில் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்துதல்.
8. 351(3) மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்தல்.
9. 238(B) பாலியல் வன்கொடுமை தொடர்பான ஆதாரங்களை அழித்தல்.
தகவல் தொழில்நுட்ப சட்டம்:
10. 66(E) தகவல் சட்டப்பிரிவு: தனிநபர் அந்தரங்க உரிமைகளை மீறுதல்
11. தமிழ்நாடு பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச்சட்டம் பிரிவு 4.
ஞானசேகரன் மீதான பாலியல் வன்கொடுமை, ஆதாரங்களை அழித்தல், பெண்ணை சட்டவிரோதமாக கட்டுப்பாட்டில் வைத்தல், நிர்வாணப்படுத்துதல் உள்ளிட்ட 11 குற்றச்சாட்டுகளையும் அரசு தரப்பு நிரூபித்துள்ளதாக நீதிபதி தெரிவித்தார்.
ஞானசேகரன் மீதான பாலியல் வன்கொடுமை, ஆதாரங்களை அழித்தல், பெண்ணை சட்டவிரோதமாக கட்டுப்பாட்டில் வைத்தல், நிர்வாணப்படுத்துதல் உள்ளிட்ட 11 குற்றச்சாட்டுகளையும் அரசு தரப்பு நிரூபித்துள்ளதாக நீதிபதி தெரிவித்தார்.
இதற்கு பதில் அளித்த அரசு தரப்பு, பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்து காட்டுமிராண்டித்தனமான குற்றம் புரிந்துள்ளார் என்றும் இது அரிதிலும் அரிதான வழக்கு என்றும் தெரிவித்தது. எனவே ஞானசேகரனுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது
இதையடுத்து, ஞானசேகரனை குற்றவாளி என மீண்டும் தெரிவித்த நீதிபதி, அவருக்கான தண்டனை விவரம் ஜூன் 2ம் தேதி அறிவிக்கப்படும் என்றார். இதனையடுத்து ஞானசேகரன் மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

Read More
இந்தியாதமிழ்நாடுநிகழ்ச்சிகள்

ஷோபனா, நல்லி குப்புசாமிக்கு பத்ம பூஷண்: 68 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கினார் குடியரசுத் தலைவர்

குடியரசுத் தலை​வர் மாளி​கை​யில் நேற்று பத்ம விருதுகள் வழங்​கப்​பட்​டன. அப்​போது தமிழகத்தை சேர்ந்த நடிகை ஷோப​னா, தொழிலதிபர் நல்லி குப்​பு​சாமிக்கு பத்ம பூஷண் விருதுகள் வழங்​கப்​பட்​டன. தமிழகத்தை சேர்ந்த பறை இசைக் கலைஞர் வேலு ஆசான், மிருதங்க கலைஞர் குரு​வாயூர் துரை, புதுச்​சேரியை சேர்ந்த தவில் இசைக் கலைஞர் தட்​சிணா​மூர்த்​திக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்​கப்​பட்​டது. ஒட்​டுமொத்​த​மாக 68 பேருக்கு பத்ம விருதுகள் அளிக்​கப்​பட்​டன.

கல்​வி, இலக்​கி​யம், அறி​வியல், விளை​யாட்​டு, சுகா​தா​ரம், தொழில், வர்த்​தகம், பொறி​யியல், பொது விவ​காரங்​கள், குடிமைப் பணி மற்​றும் சமூக சேவை உள்​ளிட்ட துறை​களில் சாதனை படைத்​தவர்​களுக்கு ஆண்​டு​தோறும் பத்ம விருதுகள் வழங்​கப்​படு​கின்​றன. இந்த ஆண்​டுக்​கான விருதுகள் கடந்த ஜனவரி 25-ம் தேதி அறிவிக்​கப்​பட்​டது. இதன்​படி பத்ம விபூஷண் விருதுக்கு 7 பேரும், பத்ம பூஷண் விருதுக்கு 19 பேரும், பத்மஸ்ரீ விருதுக்கு 113 பேர் என மொத்​தம் 139 பேருக்கு விருதுகள் அறிவிக்​கப்​பட்​டன.
முதல்​கட்​ட​மாக கடந்த ஏப்​ரல் 28-ம் தேதி 71 பேருக்கு குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு பத்ம விருதுகளை வழங்​கி​னார். மீதம் உள்ள 68 பேருக்கு நேற்று பத்ம விருதுகள் வழங்​கப்​பட்​டன. குடியரசுத் தலை​வர் மாளி​கை​யில் நடை​பெற்ற விழா​வில் குடியரசு துணைத் தலை​வர் ஜெகதீப் தன்​கர், பிரதமர் நரேந்​திர மோடி, மத்​திய அமைச்​சர்​கள் அமித்​ஷா, ஜெய்​சங்​கர் உள்​ளிட்​டோர் கலந்து கொண்​டனர்.
ஓய்வு பெற்ற நீதிபதி ஜெகதீஷ் சிங் கேகர், குமி​தினி லாகியா (மறைவு), சாரதா சின்ஹா (மறைவு) ஆகியோ​ருக்கு பத்ம விபூஷண் விருதுகளை குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு வழங்​கி​னார். மறைந்த பத்ம விபூஷண் விரு​தாளர்​கள் சார்​பில் குடும்​பத்​தினர் விருதுகளை பெற்​றுக் கொண்​டனர்​.

பத்ம பூஷண் விருதுதமிழகத்தை சேர்ந்த நடிகை ஷோபனா சந்திரசேகர், தொழிலதிபர் நல்லி குப்புசாமி மற்றும் பிபக் தேப்ராய், கைலாஷ் நாத் தீக்சித், ஜாலின் கோஸ்வாமி, மனோகர் ஜோஷி (மறைவு), ஆனந்த் நாக், சாத்வி ரிதம்பரா ஆகியோருக்கு பத்ம பூஷண் விருதுகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார்.

பத்மஸ்ரீ விருது: தமிழகத்தை சேர்ந்த பறை இசைக் கலைஞர் வேலு ஆசான், மிருதங்க கலைஞர் குரு​வாயூர் துரை, எழுத்​தாளர் சீனி விஸ்​வ​நாதன், எம்​.டி. ஸ்ரீநி​வாஸ், தெருக்​கூத்து கலைஞர் புரிசை கண்​ணப்ப சம்​பந்​தன், புதுச்​சேரியை சேர்ந்த தவில் இசை கலைஞர் தட்​சிணா​மூர்த்தி மற்​றும் நாராயணன் (மறைவு), சாஜன் பாஜங்​கா, நீரஜா பாலி​யா, அஜய், ஹர்​சந்​திரன் சிங், பீம் சிங், செலான் ஏக்​நாத், விலாஸ் கஜனன்​ராவ், மகாவீர் நாயக், சோனியா நில்​யானந்த், அசூல் ராமச்​சந்​திர பாலவ், வி.ஆர்​.பஞ்​ச​முகி, லாவ்​ஜி​பாய், சுவாமி பிர​திபிலானந்​தா, பிர​சாந்த் பிர​காஷ், நாகேந்​திர​நாத் ராய், அசோக் லஷ்மண் சரப், அரவிந்த் சர்​மா, அசுதோஷ் சர்​மா, சுபாஷ் கெலுலால் சர்​மா, ஹர்​விந்​தர் சிங், சந்​திர​காந்த் சோம்​பு​ரா, வெங்​கப்பா அம்​பாஜி சுகலேகர், கேரளாவை சேர்ந்த கால்​பந்து விளை​யாட்டு வீரரும் நடிகரு​மான விஜயன், ஆகியோ​ருக்கு பத்ம ஸ்ரீ விருதுகளை குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு வழங்​கி​னார்.

அமெரிக்கவாழ் தமிழர்: சென்னையை பூர்விகமாக கொண்ட சேதுராமன் பஞ்சநாதன் அமெரிக்க அரசின் தேசிய அறிவியல் அறக்கட்டளை தலைவராக பணியாற்றி வருகிறார். குடியரசுத் தலைவர் முர்முவிடம் இருந்து பத்மஸ்ரீ விருதினை அவர் பெற்றுக் கொண்டார்.

Read More
குற்றம்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கு.. இன்று தீர்ப்பு – ஞானசேகரனுக்கு என்ன தண்டனை..

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கு
சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மிகவும் புகழ்பெற்றது. இந்த கல்லூரிக்கு உள்மாநிலம் மட்டுமின்றி ஆயிரக்கணக்கான மாணவர்கள் வந்து படிக்கின்றனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23 ஆம் தேதி இரவு அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் படித்து வந்த மாணவி ஒருவர், தனது ஆண் நண்பருடன் பேசி பேசிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த இரண்டு பேர் மாணவனை மிரட்டி அனுப்பி உள்ளனர். பின்னர் மாணவியை தனியாக அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளி ஞானசேகரனுக்கு இன்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவி சென்னை கோட்டூர்புரம் அணைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில், அடையாற்றை சேர்ந்த ஞானசேகரன் என்பவரை கைது செய்தனர். இதனை தொடர்ந்து சென்னை உயர் நிதிமன்ற உத்தரவின்படி, மூன்று பெண் ஐ.பி,எஸ் அதிகாரிகள் குழு இந்த வழக்கை விசாரித்து வந்தது.
மூன்று பெண் ஐ.பி,எஸ் அதிகாரிகள் குழு:
இந்த விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.ஞானசேகரன் மீது ஏற்கெனவே திருட்டு ஆள்கடத்தல், வீடு புகுந்து கொள்ளையடித்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து இந்த வழக்கை தீவிரப்படுத்தினர். மேலும் அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கில் சி.பி,ஐ விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்கட்சியான அதிமுக வலியுறுத்தி வந்தது.

ஆனால் தமிழக அரசு சி.பி,ஐ விசாரணை தேவை இல்லை என்று நீதிமன்றத்தில் அறிக்கை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.இதனையடுத்து மீண்டும் ஒரு பெண் அளித்த புகாரில் ஞாசேகரன் மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து சைதாப்பேட்டை நீதிமன்ற காவலில் உள்ள ஞான சேகரனை சி.பி.ஐ அதிகாரிகள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர்.

இன்று தீர்ப்பு வழங்கும் நீதிமன்றம்
இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் சென்னையிலுள்ள மகளிர் நீதிமன்றத்தில் விசாரணையை தொடங்கியது.அப்போது தனக்கு எதிராக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரங்கள் இல்லாதவை என்றும் ஞானசேகரன் தரப்பில் முறையிடப்பட்டு ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால் அந்த மனுவை மகளிர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதனை தொடர்ந்து சென்னை அள்ளிகுளம் வளாகத்தில் உள்ளா உள்ள மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி வேறு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டதால் வழக்கு சென்னை போக்ஸோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி முன்பாக விசாரணைக்கு வந்தது.இதை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு உடனடியாக சாட்சி விசாரணை தொடங்கியது.

ஞானசேகரனுக்கு என்ன தண்டனை?
அரசு தரப்பில் 29 சாட்சியங்களும் 100-க்கும் மேற்பட்ட ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டன.அதில் ஞானசேகரனுக்கு எதிராக குற்றங்கள் அனைத்தும் நிருப்பிக்கப்பட்டு இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் ஞானசேகரனுக்கு எதிரான அறிவியல் ரீதியிலான ஆதாரங்கள் உள்ளதாக கூறியதால் அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று வாதிடப்பட்டது. இருதரப்பும் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ததை எடுத்து வழக்கின் தீர்ப்பை நீதிபதி ஒத்திவைத்தார். இந்த நிலையில் மே 28 ஆம் தேதி வழங்கப்படும் தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேருக்கும் சாகும் வரை ஆயுத தண்டனை விதித்து கோவை மகளிர் சிறப்பு நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்தது. அதே போல் அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகருக்கு சென்னை மகளிர் நீதிமன்றம் அதிகபட்ச தண்டனை வழங்குமா என்ற எதிர்பார்ப்பும் அனைவரின் மத்தியில் எழுந்துள்ளது

Read More
இந்தியாதமிழ்நாடுநிகழ்ச்சிகள்வணிகம்

NSE-ல் சென்னை மாநகராட்சி நிதிப் பத்திரங்கள்… 4 மடங்கு சப்ஸ்கிரிப்ஷன்- அடுத்த 3 நகரங்கள்

சென்னை மாநகராட்சியின் 200 கோடி ரூபாய் மதிப்பிலான நகர்ப்புற நிதிப் பத்திரங்கள் தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டன. இதுதொடர்பான நிகழ்வை மணி அடித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர் பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, சட்டமன்ற உறுப்பினர்கள் மோகன், துணை மேயர் மகேஷ்குமார், தலைமை செயலாளர் முருகானந்தம் ஐஏஎஸ், தேசிய பங்குச் சந்தை தலைமை பொருளாதார வல்லுநர் தீர்த்தங்கர் பட்நாயக் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நகர்ப்புற நிதிப் பத்திரங்கள் மூலம் கடனுக்கான வட்டி செலுத்துவது குறையும். இன்றியமையாத உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள நிதி திரட்டப்படும். சென்னை மாநகராட்சியின் பொருளாதார நிலை மேம்படும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் சென்னை மாநகராட்சி நிதிப் பத்திரங்களை சப்ஸ்கிரைப் செய்வதில் பொதுமக்கள் பெரிய அளவில் ஆர்வம் காட்டியுள்ளனர். 4.21 மடங்கு அளவிற்கு அதிகமாக சப்ஸ்கிரிப்ஷன் கிடைத்துள்ளது. கிட்டதட்ட 421 கோடி ரூபாய் என்று சொல்லலாம்.
இந்த நிதிப் பத்திரங்களை வாங்கியவர்களுக்கு ஆண்டு வட்டியாக 7.97 சதவீதம் கிடைக்கும். இது வங்கிகளில் ஃபிக்சிட் டெபாசிட் முதலீடுகளுக்கு வழங்கப்படும் வட்டியை காட்டிலும் அதிகம் என்பது கவனிக்கத்தக்கது. இந்த சப்ஸ்கிரிப்ஷன் தொடர்பாக தமிழக அரசின் நிதித்துறை துணைச் செயலாளர் ரிஷப் ஐஏஎஸ் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில், இது முதல்முறை அரங்கேறியுள்ளது. உள்ளாட்சி நிர்வாகத்தின் மீதான நம்பிக்கையை அதிகப்படுத்தும் வகையில் அமைந்திருப்பதாக தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி நிதிப் பத்திரங்கள் 10 ஆண்டுகள் செல்லுபடியாகும் வகையில் அளிக்கப்பட்டுள்ளது.
நான்கு மடங்கு சப்ஸ்கிரிப்ஷன்
இதுபோன்ற நிதிப் பத்திரங்களை எதிர்காலத்திலும் வெளியிட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கேட்டுக் கொண்டுள்ளனர். இந்த பத்திரங்களை 4 மடங்கிற்கும் மேல் சப்ஸ்கிரைப் செய்திருப்பது உள்ளாட்சி நிர்வாகத்தின் மீதும், தமிழக அரசின் மீதும் வைத்திருக்கும் நம்பிக்கையை பறைசாற்றுகிறது. அடுத்தகட்டமாக கோவை, திருப்பூர், திருச்சி ஆகிய மாநகராட்சிகளும் தேசிய பங்குச் சந்தையில் நிதிப் பத்திரங்களை வெளியிடும் திட்டத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நகரங்கள் ஒவ்வொன்றிலும் தலா 100 கோடி ரூபாய் மதிப்பில் நிதிப் பத்திரங்கள் வெளியிடவுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ஜே.குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.

Read More
அரசியல்இந்தியாதமிழ்நாடு

ராஜ்ய சபா எம்.பி தேர்தல் தேதி அறிவிப்பு:தமிழகத்தில் புதிதாக வாய்ப்பு பெறும் 6 பேர் யார்?

6 மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் வருகின்ற ஜூன் 19-ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஜூன் 9 ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல், வேட்புமனுவைத் திரும்பப் பெற ஜூன் 12 கடைசி நாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட 6 உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடையவுள்ள நிலையில், வருகின்ற ஜூன் 19-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மாநிலங்களவை உறுப்பினர்கள் பா.ம.க-வின் அன்புமணி ராமதாஸ், தி.மு.க.-வின் எம். சண்முகம், முகமது அப்துல்லா, பி. வில்சன், அ.தி.மு.க-வின் என். சந்திரசேகரன், மதிமுகவின் வைகோ ஆகியோரின் பதவிக் காலம் வருகின்ற ஜூலை 24 ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ளது.
ஒரு மாநிலங்களவை உறுப்பினரை தேர்ந்தெடுக்க 34 எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்க வேண்டும். அந்த வகையில், தமிழ்நாட்டில் தற்போதைய நிலையில் தி.மு.க. கூட்டணிக்கு 159, அ.தி.மு.க. கூட்டணிக்கு 75 என்ற அளவில் எம்.எல்.ஏ.க்கள் பலம் உள்ளது. இதைவைத்து பார்க்கும்போது, தி.மு.க.வுக்கு 4 மாநிலங்களவை உறுப்பினர்களும், அ.தி.மு.க.வுக்கு 2 மாநிலங்களவை உறுப்பினர்களும் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. தற்போது, தி.மு.க.வில் வைகோ, அப்துல்லா, வில்சன், சண்முகம் ஆகியோரின் பதவிக்காலம் முடிவடைய இருக்கிறது. அ.தி.மு.க.வில் சந்திரசேகரனின் பதவிக்காலம் முடிவடைகிறது. கடந்த முறை பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ம.க. உறுப்பினர் டாக்டர் அன்புமணி ராமதாசின் பதவிக்காலமும் முடிவடைகிறது.

எம்.பி.யாகும் கமல்ஹாசன்:

தி.மு.க. சார்பில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுவது ஏற்கெனவே உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும், வழக்கறிஞர் வில்சன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் மீண்டும் திமுக சார்பில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படுமா? அதிமுக சார்பில் தே.மு.தி.கவுக்கு மாநிலங்களவை இடம் கொடுக்கப்படுமா? அன்புமணி மீண்டும் போட்டியிடுவாரா? என்பது விரைவில் தெரியவரும். தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளில் இருந்து யார் வேட்பாளர்களாக தேர்வு செய்யப்பட உள்ளனர் என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

Read More
தமிழ்நாடுநிகழ்ச்சிகள்மாவட்டம்

அடையாறு ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தீவிரம்: அனகாபுத்தூரில் 200 குடும்பங்கள் வெளியேற்றம்

சென்னையில் அடையாறு ஆற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், அனகாபுத்தூரில் 200 குடும்பங்களை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது.
மாதக்கணக்கில் தேக்கமடைந்தும், தொடர் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும், நீர்வளத் துறை (WRD), சென்னை மாநகராட்சி, சென்னை நதி சீரமைப்பு அறக்கட்டளை, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் (TNUHDB) மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் அடங்கிய அரசு அமைப்புகள், அனகாபுத்தூரில் அடையாறு ஆற்றின் கரையோரத்தில் உள்ள நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.
பல குடியிருப்பாளர்களை ஒத்துழைக்கச் செய்வதற்கான முயற்சிகளை அதிகாரிகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். அனகாபுத்தூர் பகுதியில் மொத்தம் 400 ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டன. இப்பணியின் முந்தைய கட்டங்களில் தோபிகானா பகுதியில் இருந்த வணிக நிறுவனங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. குவைத்-இ-மில்லத் நகரில் இருந்து ஏற்கனவே 200 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட நிலையில், தற்போது எஞ்சியுள்ள 200 குடியிருப்பாளர்களை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது.

நேற்று (மே 25) மாலை நிலவரப்படி, 116 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டனர். மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படியே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், பருவமழை தொடங்குவதற்குள் இப்பணி நிறைவடையும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். எதிர்காலத் திட்டங்கள் குறித்து அதிகாரிகள் கூறுகையில், அடையாறு பாலம் அருகே உள்ள மல்லிப்பூ நகர் அடுத்த பெரிய சவாலாக இருக்கும் என்றும், அங்கு 1,200க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணி, பரந்த சுற்றுச்சூழல் மற்றும் வெள்ளத் தடுப்பு இலக்குகளுடன் ஒத்துப்போனாலும், அவ்வப்போது பதற்றமான சூழ்நிலைகள் நிலவிய வண்ணம் உள்ளன. நேற்று முன்தினம் ஒரு குழுவினர் ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கும், அரசு வழங்கிய மாற்று இடங்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

இத்தகைய எதிர்ப்புகளை பேச்சுவார்த்தைகள் மற்றும் உறுதியளிப்புகள் மூலம் சமாளிக்கும் முயற்சிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த முயற்சி சென்னையின் நதி சீரமைப்பு மற்றும் வெள்ளத் தடுப்பு உத்தியின் ஒரு முக்கிய அங்கமாக இருக்கும் நிலையில், அடையாறு ஆற்றின் கரைகளை மீட்டெடுத்து புனரமைப்பதன் மூலம், நகரத்தின் வெள்ள பாதிப்பை குறைக்கவும், நிலையான நகர்ப்புற வாழ்விடத்தை மேம்படுத்தவும் முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Read More
சினிமாதமிழ்நாடு

விஜய் சேதுபதி திரைப்படம் ‘ஏஸ்’? – திரை விமர்சனம் 

சிறையில் இருந்து வெளியே வரும் போது நல்லவனாக வாழ விரும்புகிறார் ஹீரோ ,வெளியே வந்ததும் அங்கு காதல் மலர்கிறது, அவருக்கு நண்பனாக யோகிபாபு, இந்த படத்தில் காமெடி ஒர்க்கவுட் ஆகி இருக்கிறது. நீண்ட இடைவேளைக்கு பின் போலீஸ் ஆஃபீசர் ஆகா வலம் வரும் வில்லன் ,நன்றாக பண்ணி இருக்கிறார், இன்னுமொரு தாதா வில்லன், அவரும் அருமையாக பண்ணி உள்ளார்
,காதலிக்காக வங்கியில் கொள்ளை அடிக்கிறார், இடையே அவருக்கு லாட்டரியும் பாரிஸு விழுகிறது , இதை எப்படி கையாளுகிறார்,எப்படி வில்லன் கதையை முடிக்கிறார், காதலியை கைப்பற்றுகிறார் என்பதே கதை ,direction , போட்டோகிராபி அருமை,விறுவிறுப்பாக போகிறது,விஜய் சேதுபதி action ஹீரோ ஆக மிரட்டுகிறார் .kk

Read More
அரசியல்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்

நிதி ஆயோக் கூட்டம் – இன்று டெல்லி செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் முதல்முறையாக பங்கேற்கவிருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடப்பு நிதியாண்டிற்கான நிதி ஆயோக் நிர்வாகக்குழு கூட்டத்தில் பங்கேற்க இன்று காலை 9.30 மணிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லி புறப்படுகிறார்.
டெல்லியில் உள்ள பொதிகை தமிழ்நாடு இல்லத்தில் இன்று தங்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைநகரில் பணியாற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மற்றும் தமிழ்நாடு கேடரை சேர்ந்த ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளை சந்திக்கவுள்ளார்.
நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் முதல்முறையாக பங்கேற்கவிருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடப்பு நிதியாண்டிற்கான நிதி ஆயோக் நிர்வாகக்குழு கூட்டத்தில் பங்கேற்க இன்று காலை 9.30 மணிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லி புறப்படுகிறார்.
டெல்லியில் உள்ள பொதிகை தமிழ்நாடு இல்லத்தில் இன்று தங்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைநகரில் பணியாற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மற்றும் தமிழ்நாடு கேடரை சேர்ந்த ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளை சந்திக்கவுள்ளார்.
பின்னர், ஜனாதிபதி மாளிகையில் பிரதமர் மோடி தலைமையில் நாளை நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். கூட்டத்தில், கல்வி நிதி உள்ளிட்ட தமிழ்நாட்டிற்கு தேவையான நிலுவையில் இருக்கும் நிதியை விடுவிக்க வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மத்திய – மாநில அரசுகளிடையே நிலவும் பிரச்சனைகள், ஆளுநர்களின் செயல்பாடுகள் குறித்தும் கருத்துகளை முன்வைத்து பேசுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கூட்டத்தின் இடையே, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கர்நாடகா முதல்வர் சித்தராமையா உள்ளிட்ட இந்தியா கூட்டணி முதல்வர்களை சந்தித்து பேச உள்ளார். மேலும் தனது நண்பரும் ஆந்திர பிரதேச முதல்வருமான சந்திர பாபு நாயுடுவையும் சந்திக்க உள்ளார்.
இதையடுத்து, டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு சனிக்கிழமை மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்புவார் என கூறப்பட்டுள்ளது.

Read More