திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கோலாகலம்!!
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் 8ம் நாளான இன்று தேரோட்டம் தொடங்கியது; கோவிந்தா கோஷத்துடன் ஏராளமான பக்தர்கள் குவிந்து தேரை வடம்பிடித்து இழுத்து வருகின்றனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 8வது நாளான இன்று மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி தாயாருடன் தேரில் எழுந்தருளினார் .
மகா ரத உற்சவத்தில் பங்கேற்று தரிசனம் செய்தால் மறு ஜன்மம் இருக்காது என்பது நம்பிக்கை. அந்த வகையில் 4 மாட வீதியில் வலம் வந்த மகா ரதம் – பக்தர்கள் கோவிந்தா கோஷம் எழுப்பியபடி பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
