Covid19இந்தியா

இந்தியாவில் ஒரேநாளில் 2.59 லட்சம் பேர் கோவிட் தொற்றில் இருந்து குணம்…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2.59 லட்சம் பேர் கோவிட் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,72,433 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,18,03,318 ஆனது. கடந்த 24 மணி நேரத்தில், 2,59,107 பேர் நலமடைந்ததால், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 3,97,70,414 ஆனது. தற்போது 15,33,921 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கோவிட் காரணமாக 1,008 பேர் மரணமடைந்ததால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,98,983 ஆக உயர்ந்தது. இந்தியாவில் இதுவரை 167.87 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது. கடந்த 24 மணி நேரத்தில் 55,10,693 டோஸ் தடுப்பூசி போடப்பட்டது. ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 9,692 ஆக உயர்ந்தது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.