விளையாட்டு

இந்தியா-வெஸ்ட் இண்டிஸ் அணிகள் மோதும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்..! சோகக்கடலில் மூழ்கிய ரசிகர்கள்..! முழு விவரம் இதோ

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் ஒருநாள் கிரிக்கெட் தொடர், ரசிகர்கள் இன்றி அகமதாபாத்தில் நடைபெறவுள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் தொடர் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது.

India vs West Indies: Happy #Unfriendshipday says Rohit Sharma to Kieron  Pollard - myKhel

இந்நிலையில் மனித உயிர்களை வேட்டையாடும் கொரோனா என்னும் கொடிய நோயின் தொற்று பரவலை கருத்தில் கொண்டு அகமதாபாத்தில் நடைபெறும் ஒரு நாள் தொடரில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என குஜராத் கிரிக்கெட் சங்கம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

அதே சமயத்தில் கொல்கத்தாவில் நடைபெறவுள்ள டி20 தொடரில் 75 சதவீத ரசிகர்களுக்கு மேற்கு வங்க அரசு அனுமதி வழங்கியுள்ள்ளது .

மேலும் பிப்ரவரி 6 ஆம் தேதி தொடங்கும் ஒரு நாள் தொடரில் தனது ஆயிரமாவது ஆட்டத்தை இந்திய அணி விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.