சினிமா

மக்களோடு மக்களாக வரிசையில் நின்று திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்த நடிகை சமந்தா..!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரபல தமிழ் நடிகை சமந்தா நேற்று சுவாமி தரிசனம் செய்துள்ளார் .

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னனி நடிகையாகி வலம் வருபவர் நடிகை சமந்தா. சிரித்த நட்டகளாக நடிகை சமந்தாவிற்கு நிறைய நல்ல விஷயங்கள் நடந்து வ்ருவதை நம்மால் காண முடிகிறது.

கை நிறைய படங்களும் தனது அசாத்திய நடிப்பிற்காக பல விருதுகளையும் நடிகை சமந்தா பெற்று வருகிறார் . இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை சமந்தா நேற்று சுவாமி தரிசனம் செய்துள்ளார் .

பின்னர் தரிசனம் முடிந்து வெளியில் வந்த சமந்தாவை சூழ்ந்த ரசிகர்கள், அவருடன் மகிழ்ச்சியாக செல்ஃபி எடுத்துக் கொண்டனர். இதையடுத்து அவரிடம் பத்திரிகையாளர்கள் பேச முயன்ற போது சமந்தா பதில் ஏதும் அளிக்காமல் கடந்து சென்றார்.

நாக சைதன்யாவை விவாகரத்து செய்த பிறகு திருப்பதி ஏழுமலையானை சமந்தா தரிசிப்பது இதுவே முதல் முறையாகும். விஐபி தரிசனத்தில் செல்லாத சமந்தா 300 ரூபாய் டிக்கெட்டில் பொதுமக்களுடன் சேர்ந்து சென்று தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.