தமிழ்நாடு

டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆம் தேதிகளில் கடற்கரைகளுக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி இல்லை..! தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அறிவித்தது தமிழக அரசு

உலகம் முழுவுவதும் இருக்கும் மக்களே வேட்டையாடி வந்த கொரோனா என்னும் கொடிய நோய் தோற்று தமிழகத்திலும் பல உயிர்களை பாரபட்சமின்றி வேட்டையாடியது.

இந்நிலையில் பெரிய போராட்டத்திற்கு பிறகு தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்குநாள் குறைந்து வருகிறது. ஆனால் உருமாறியுள்ள ஒமைக்ரான் பற்றிய அச்சம் இன்னும் விலகவில்லை. இந்தநிலையில் வருகிற 15-ஆம் தேதியுடன் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு முடிவடைய உள்ளது.

இத்தனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து இன்று உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார் .

இந்நிலையில் தமிழ்நாட்டில் தளர்வுகளுடனான ஊரடங்கு வரும் 31ம் தேதி வரை நீட்டித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில் கூறிருப்பதிவது :

  • டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆம் தேதிகளில் கடற்கரைகளுக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.
  • சமுதாய, அரசியல் கூட்டங்கள், கலாச்சார நிகழ்வுகள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் நிகழ்வுகளுக்கான தடை தொடரும்.
  • ஜனவரி 3ஆம் தேதி முதல் 6 – 12ஆம் வகுப்புகளுக்கு சுழற்சி முறை ரத்து : வழக்கம்போல் பள்ளிகள் இயங்கும்.
  • அனைத்து கல்லூரிகள், தொழில்நுட்ப பயிற்சி நிறுவனங்கள் அனைத்தும் சுழற்சி முறையின்றி இயல்பாக செயல்படும்.
  • அனைத்து நீச்சல் குளங்களும் செயல்பட அனுமதி

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது