எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோர் மீது பதிவு செய்துள்ள வழக்குகள் என்னென்ன?
எஸ்.பி வேலுமணி, உள்ளிட்ட 7 பேர் மீது 10 நிறுவனங்கள் மீதும் லஞ்ச ஒழிப்பு துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது.
2014 முதல் அதிமுக ஆட்சி முடியும் வரை பல கோடி ரூபாய்க்கான அரசு கான்ட்ராக்டுகளும், டென்டர்களும் எஸ்.பி.வேலுமணி, தனது அதிகாரத்தை பயன்படுத்தி, தான் சம்பந்தப்பட்ட நிறுவங்களுக்கு பல கோடி ரூபாய் லாபத்தை கொடுத்துள்ளார் என்ற குற்றச்சாட்டே முதன்மையானது.
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்பட 7 பேர், 10 நிறுவனங்கள் என மொத்தம் 17 பேர் மீது லஞ்ச ஒழிப்பு துறை சார்பாக முதல் தகவல் அறிக்கை நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்திய தண்டனை சட்டத்தின்படி, கூட்டுச்சதி, மோசடி, நம்பிக்கை மோசடி, ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் இரண்டு பிரிவுகள், அரசு ஊழியர் லஞ்சம் பெற்றுக் கொண்டு சாதகமாக செயல்படுதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின்கீழ் வழக்கு செய்யப்பட்டு, லஞ்ச ஒழிப்பு துறையினரால் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
