“தமிழகத்தின் ஒவ்வொரு குடும்பத்தின் மீது ரூ.2.63 லட்சம் கடன் சுமை”… நிதியமைச்சர் பகீர் தகவல்…
தமிழகத்தின் ஒவ்வொரு குடும்பத்தின் தலையிலும் 2,63,976 ரூபாய் கடன் சுமை உள்ளதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளர். நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், கடந்த 10 ஆண்டுகா அதிமுக ஆட்சியின் நிதிநிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக ஆட்சியின் 5 ஆண்டுகளில் அன்றாட செலவுகளுக்கே கடன் வாங்கும் நிலை இருந்ததாக குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், மாநில அரசின் கடன் செலுத்தும் தன்மை குறைந்ததால், வட்டி விகிதம் அதிகரித்து விட்டது. 2020 – 2021 இடைக்கால பட்ஜெட்டின்படி தமிழகத்தின் கடன் சுமை ரூ.5,70,189 கோடி இருந்தது. கடனை அதிக அளவில் சார்ந்திருக்கும் வகையில் தமிழக அரசின் நிதிநிலை உள்ளது. சரியான வரி வசூலித்து வளர்ச்சி பாதையில் மாநிலத்தை கொண்டு செல்ல வேண்டும். சரியான அளவு வரி, சரியான நபர்களிடம் வசூலிக்கப்பட வேண்டும் என்பதே எங்களது நோக்கம். வாகன வரி கடந்த 15 ஆண்டுகளாக மாற்றப்படவில்லை.
கடந்த 5 ஆண்டுகளில் ரூ.1.50 லட்சம் கோடி அளவிற்கு வருவாய் பற்றாக்குறையை சரி செய்ய பயன் படுத்தப்பட்டுள்ளது. 3 லட்சம் கோடி ரூபாய் பொதுக்கடனில் 1.50 லட்சம் கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறையை சரி செய்ய பயன்படுத்தப்பட்டது. கொரோனாவுக்கு முன்பே தமிழக நிதிநிலையில் பாதிப்பு ஏற்படத் தொடங்கியது. மகாராஷ்டிரா, கர்நாடக மாநிலங்களில் கொரோனா காரணமாக பெரிய அளவில் நிதிநிலை பாதிப்பு ஏற்படவில்லை என்றார்.
