அரசியல்

ஜீரோ பட்ஜெட்டில் பயனடைபவர்கள் சாமானியர்கள் இல்லை… நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்…

ஜீரோ வரியால் சாமானியர்கள் பயனடையவில்லை என்றும் கார்ப்பரேட் நிறுவனம், பணக்காரர்கள்தான் பயனடைந்ததாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார். வரி போடாமல் இருப்பது பணக்காரர்களுக்கு சாதமானது என தெரிவித்த அவர், வரியே வசூலிக்காவிட்டால் எப்படி ஆட்சி நடத்த முடியும்? என்றும் ஜீரோ வரி என்பது அர்த்தமற்ற நடைமுறையாக உள்ளதென குறிப்பிட்டார்.

சரியான வரியை சரியான நபர்களிடம் வசூலித்து, வளர்ச்சி பாதையில் மாநிலத்தைக் கொண்டு செல்ல வேண்டும் என்றார். மாநில வரி வருவாய் திமுக ஆட்சியில் 11.4 சதவிகிதமாக உயர்ந்தது. 2011-16 இல் அதிமுக ஆட்சியில் 9 சதவிகிதமாக இருந்தது. 2016 – 21 இல் மாநில வரி வருவாய் வளர்ச்சி 4.4 சதவிகித சரிவை சந்தித்துள்ளதாக தெரிவித்தார்.

தமிழக அரசுக்கு வருமானம் மிகவும் சரிந்து விட்டதாக கூறிய அவர், வருமானம் சரிந்துள்ளதை ரிசர்வ் வங்கி, நிதிக்குழு உள்ளிட்ட அமைப்புகள் குறிப்பிட்டுள்ளதாகவும், தமிழக மோட்டார் வாகனங்களுக்கான வரி கடந்த 15 ஆண்டுகளாக மாற்றப்படாமல் இருப்பதால் குறைவாக உள்ளது என்றார். பிற மாநிலங்களைவிட தமிழ்நாட்டில் மோட்டாட்ர வாகன வரி குறைவாக உள்ளதாகவும் நிதியமைச்சர் குறிப்பிட்டார்.